ஆன்மீகவாதியா? மதவாதியா?

Saturday 21 November, 2009

எனக்கு இதுவரை புரியாத விசயங்களில் இதுவும் ஒன்று. ஆமாங்க அது என்ன ஆன்மீகவாதி மதவாதி?




எனக்கு புரிந்த சிலவற்றை பட்டியலிடுறேன் தவறு இருந்தா திருத்துங்க.

ஆன்மீகவாதிக்கும் மதவாதிக்கும் உள்ள ஒற்றுமை (நான் நினைத்து கொண்டிருப்பது)


01. இருவருக்கும் தனக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்குதுன்னு நம்பிக்கை. மதவாதி தன் மதம் சார்ந்த தனக்கு பிடித்த அல்லது அவர் மேல் தினிக்கபட்ட கடவுள் தான் அந்த சக்தி என்பது. ஆன்மீகவாதி தன் மதம் சார்ந்த ஒரு பெரியவர்/ வழிகாட்டி கூறுவதை கடவுள் என்பார்.


என் கருத்து: அட நமக்கு அப்பாற்பட்ட சக்தி இருந்தா இருந்துட்டு போகுது அத ஏன் நாம தொந்தரவு பன்ன வேண்டும் சகமனிதன் மேல் நம்பிக்கையும் பாசமும் வைப்போமே.


02. கோயிலுக்கு போவது: ஆன்மீகவாதி சொல்லும் காரணம் மன அமைதிகாக மதவாதி இறைவன் அருளுக்காக (முக்கியமாக பெரும்பாண்மையான ஆன்மீகவாதி அவர் சார்ந்த மத கோவிலுக்கு தான் போவார்.)


என் கருத்து: இதுவரை எந்த கடவுளும் அருளோ வரமோ தந்ததில்லை (கதை இத்காசங்கள் தவிர்த்து) மற்றும் மன அமைதி வேண்டுமா இயற்கையை ரசிக்க கத்துக்கங்க தானா பிரஸர் குறையும்.


03. மூடநம்பிக்கை: மதவாதி அனைத்தையும் சத்யமானவை என்றும் அதற்காக இயல்பான நிகழ்வையும் அதனுடம் சம்பந்த படுத்துவார். ஆன்மீகவாதி தனக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்து கொள்வார்.


என் கருத்து: எந்த செயலையும் ஆராய்ந்து ஏற்று கொள்ளவேண்டும். நம்மால் நிகழ்ந்த செயலுக்கு நாமே பொறுப்பேற்க்க வேண்டும் இல்லாதவற்றின் மீது பழி போடகூடாது.


04. மதவெறி: மதவாதி வெளியில் காட்டி கொள்வார் ஆன்மீகவாதி அவ்வளவாக காட்டி கொள்ளமாட்டார்.


என் கருத்து: மதத்தால் கண்டிப்பாக ஒரு பயனுமில்லை அதை சார்ந்து தொழில் செய்பவரை தவிற்த்து அனைவரும் மதத்தை தவிர்த்தால் அவர்களுக்கும் ஒரு பயனும் இல்லை.


05. இருவருக்கும் உள்ள வித்யாசம்: மதவாதி படிக்காத கூலி என்றால் ஆன்மீகவாதி software engineer. அவ்வளவுதான்.


என் கருத்து: துறையை(மதத்தை) அடையாள படுத்தி கொள்வதைவிட மனிதனாக அடையாள படுத்தி கொண்டு இயன்றதை முதலில் அருகில் உள்ளவருக்கு செய்வோமே (வித்யாசம் பார்காமல்)


மதத்தாலோ கடவுளாளோ மனிதனுக்கு எதவது பயன் இருந்தா சொல்லுங்க தெரிந்து கொள்கிறேன்.


நன்றி.


உங்கள் கருத்துகளை பதிவு செய்ங்கள்.

5 comments:

இராகவன் நைஜிரியா 22 November 2009 at 12:24 am  

வெரி குட்... வெரி நைஸ் ஆர்டிகிள்...

சக மனிதனை நேசித்தால், அன்புக் காட்டினால் அதைவிட வேறு எதுவும் தேவையில்லை.

Prasanna 22 November 2009 at 12:51 am  

மொத்ததுல அன்பே சிவம்னு சூப்பரா சொல்லிட்டீங்க :)

Bibiliobibuli 23 November 2009 at 6:44 pm  

பிரதீப்,

முதலில், சமூக அக்கறையுள்ள இப்படியான கருத்துக்களை பதிவாக்கியதற்கு (எழுத்துப்பிழைகள் முன்னேற்றம் கண்டுள்ளன) என் நன்றிகள். மதம்- மதவாதி, கடவுள்-ஆன்மீகவாதி; மதத்தை அரசியல் மற்றும் சுயலாப நோக்கில் வியாபாராமாக்குபவர்கள் மதவாதிகள். மதம் என்ற மதம் பிடித்தவர்கள். மதவாதி படிக்காத கூலிகள் மட்டுமே (?) என்ற உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. இந்தியாவில் படித்த மதவாதிகள் எத்தனையோ மதக்கலவரங்களை உருவாக்கி பல உயிர்களை காவுவாங்கவில்லையா. ஒரு சராசரி மனிதனின் வாழ்கை முன்னேற்றம், அன்றாட வாழ்கை பிரச்சனைகள் இவற்றுக்கெல்லாம் சூடம் ஏற்றி, காணிக்கை செலுத்தி, விரதம் இருந்து கடவுளிடம் மனுப்போடுபவர்கள் ஆன்மீகவாதிகள் என்பது என் கருத்து. எனக்கு மதவாதிகளிடம் சமூகக்கோபமும், ஆன்மீகவாதிகளிடம் அனுதாபமுமே உண்டு. அதென்னவோ தெரியவில்லை, நீங்கள் சிரித்துக்கொண்டு போடும் பதிவுக்கெல்லாம் நான் சீரியஸாக பதில் சொல்கிறேன் போலுள்ளது??

நிற்க, நான் வினவு தளத்தில் என் அனுபவங்கள் மூலம் ஈழத்தமிழர்களின் அவலங்களை தொடராக எழுதுகிறேன். முடிந்தால் படித்துப்பாருங்கள். உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

Anonymous 19 August 2010 at 3:27 am  

Awesome post! thank you for sharing this information. oviya-thamarai.blogspot.com really got under my
[url=http://nuscin-online.info]skin,[/url] bookmarked... Keep up the great site...

Unknown 3 September 2010 at 9:46 am  

நன்றி ரதி

மிக மிக தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். சில மாதங்களாக பதிவுலகம் பக்கம் வர முடியவில்லை.

இங்கே நான் படிக்காத கூலி மற்றும் software engineer ஏன் ஒப்பிட்டேன் என்றால் அவர்களின் வாழ்கை முறையையும் சமுகத்தில் அவர்களுக்கு கிடைக்கும் நிலையை மட்டுமே.

நன்றி

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP