Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

ஆன்மீகவாதியா? மதவாதியா?

Saturday, 21 November 2009

எனக்கு இதுவரை புரியாத விசயங்களில் இதுவும் ஒன்று. ஆமாங்க அது என்ன ஆன்மீகவாதி மதவாதி?



எனக்கு புரிந்த சிலவற்றை பட்டியலிடுறேன் தவறு இருந்தா திருத்துங்க.
மேலும் வாசிக்க >>

Read more...

கடவுளின் தேவை.

Friday, 9 October 2009

இந்த கேள்வி என்ன ரொம்ப நாளா யோச்சிக்க வைத்த கேள்வி.


ரெண்டு மாசத்துக்கு முன்பு கூட இந்த ஒரு பதிவை போட்டு: கடவுளால் மனிதனுக்கு என்ன பயன் அல்லது நன்மை? கேட்டிருந்தேங்க அனா கடவுள்ன்னு பார்த்தவுடன் பெரும்பாண்மையானவங்க கடவுள் இருகாற இல்லையாங்ற விவாதத்துக்கு வந்துட்டாங்க.


கடவுள் இருகிறார் இல்லை என்ற விவாதத்தில் இதுவரை நடுநிலையான முடிவுக்கு வரவும் இல்லை வரவும் முடியாது. அதுமட்டும் இல்லாமல் கடவுள் இருக்கிறார் இல்லை என்று பேசுவதால் எந்த பயனும் இல்லை. அதனால தான் கடவுள் இருகிறார் இல்லைங்ற பிரச்சனையை விட்டுவிட்டு கடவுளின் தேவையும் அவரால் சமுகத்திற்கு ஏற்படும் நன்மை தீமை பற்றி பார்ப்போம். 







எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்ல உண்மையில் கடவுள் இருக்காற எப்படி தெரிந்து கொள்வது இல்ல இல்லையாங்கறதை பற்றியதல்ல இந்த பதிவு. 


கடவுளின் தேவையை பற்றியது. எனக்கு தெரிந்தவரை ஒரு சிலவற்றை பட்டியலிடுகிறேன் அதில் பிழை இருந்தால் பின்னூடமிடவும் திருத்தி கொள்கிறேன்.


கடவுளின் தேவை அவசியமற்றது என்பதற்கான சில காரணங்கள்.

  1. இன்றுள்ள சூழலில் பிறப்பு மற்றும் இறப்பு இவற்றில் கடவுளின் பங்களிப்பு எதுவும் இல்லை.
  2. காத்தல் என்பதும் கடவுளால் நிகழவில்லை - அவரவர் உழைத்தால் தான் சாப்பாடு (நான் அறிந்தவரை எந்த கடவுளும் யாருக்கும் சும்மா சோறு போட்டதில்லை)
  3. நல்ல முறையில் வாழவும் நல்லவனாக வாழவும் எந்த கடவுளின் தேவையும் இல்லை - அதாவது இன்னொருவனுக்கு உதவி செய்ய எந்த கடவுளின் தேவையும் இல்லை மனம் இருந்தால் போதும்.
  4. வாழ்வியல் முறை பயில எந்த கடவுளோ _________ தேவை இல்லை சிறிய விசயத்தை உணர்ந்தால் போதும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு அதுவும் கண்டிப்பாக அனுபவம் கற்று தரும்.
  5. ஒழுக்கத்துடன் வளர்க்கவும் கடவுள் தேவையில்லை. உன்மையான அன்புடன் (செல்லமாக இல்லை) வளர்த்தால் போதும்.

கடவுளின் தேவை அவசியமானது என்பதற்கான சில காரணங்கள்.
  1. ஒரு பொழுது போக்கிற்காக கடவுளையும் கோயிலையும் பயன் படுத்தினால் போதுமானது அதாவது ஒரு பூங்காவிற்க்கோ அல்லது திரை படத்திற்க்கோ செல்வது போல் கோவிலுக்கு சென்றால் போதுமானது.
  2. விழாகளை கொண்டாட மற்றவருடன் பழக மட்டும்.
  3. ....................
நிறைய விசயங்கள் இருக்கு கடவுளின் தேவையை பற்றி விவாதிக்க.

ஒரு அரோகியமான விவாதம்/கலந்துரையாடல் கண்டிப்பாக அடுத்த நிலைக்கு உயர்த்தும்.

- நன்றி

உங்கள் கருத்துகளை மறக்காமல் பின்னூடமிடுங்கள்.
மேலும் வாசிக்க >>

Read more...

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 2

Tuesday, 11 August 2009

பதிவுலக நபர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கின்றது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்படக் கூடியவை பற்றி அறியும் சிறு முயற்சி தான் இந்த பதிவு.

விவாதத்துக்கான இரண்டாம் கேள்வி பதிவுலக்கத்துல பெருபாலும் அலசப்பட்ட கேள்விதான்.

கடவுள்/இறைவன்?

இந்த கேள்விக்கு அனைவரும் ஏற்று கொள்ளும்படி பதிலளிப்பது என்பது கடினம்தான்.

அதனால விவாதத்தின் தலைப்பை இப்படி மாத்திக்கலாம்.

கடவுளால் மனிதனுக்கு என்ன பயன் அல்லது நன்மை?

கடவுளால் பாதிக்கப்படுபவர்கள் யார் யார்? எப்படி?

கடவுளை மனிதன் உருவாக்கினான இல்லை கடவுள் மனிதனை படைத்தாரா?

கடவுள்___________________?

உங்க கருத்தை பின்னூட்டம் இடுங்க. கண்டிப்பாக இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக வளர வேண்டுமென்று ஆசை படுகிறேன்.

நன்றி வணக்கம்
மேலும் வாசிக்க >>

Read more...
Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP