பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 2

Tuesday, 11 August 2009

பதிவுலக நபர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கின்றது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்படக் கூடியவை பற்றி அறியும் சிறு முயற்சி தான் இந்த பதிவு.

விவாதத்துக்கான இரண்டாம் கேள்வி பதிவுலக்கத்துல பெருபாலும் அலசப்பட்ட கேள்விதான்.

கடவுள்/இறைவன்?

இந்த கேள்விக்கு அனைவரும் ஏற்று கொள்ளும்படி பதிலளிப்பது என்பது கடினம்தான்.

அதனால விவாதத்தின் தலைப்பை இப்படி மாத்திக்கலாம்.

கடவுளால் மனிதனுக்கு என்ன பயன் அல்லது நன்மை?

கடவுளால் பாதிக்கப்படுபவர்கள் யார் யார்? எப்படி?

கடவுளை மனிதன் உருவாக்கினான இல்லை கடவுள் மனிதனை படைத்தாரா?

கடவுள்___________________?

உங்க கருத்தை பின்னூட்டம் இடுங்க. கண்டிப்பாக இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக வளர வேண்டுமென்று ஆசை படுகிறேன்.

நன்றி வணக்கம்

74 comments:

இராகவன் நைஜிரியா 11 August 2009 at 9:12 pm  

எனக்குத் தெரிந்தது எல்லாம் உண்டு என்றால் உண்டு, அது இல்லை என்றால் இல்லை. அவ்வளவுதான்.

சிலவற்றை உணரத்தான் முடிகின்றது. அதை காண இயலுவதில்லை. சக்கரையின் இனிப்பு போன்று. அதில் கடவுளும் ஒன்று என்பது என்னோட எண்ணம்.

ஒரு படத்தில் கலைவாணர் அவர்கள் நடித்தது. அவர் ஆசிரியராக வருவார். மாணவரிடம் கேள்வி கேட்பார். கடவுள் எங்கு இருக்கின்றார் என்று. ஒரு மாணவன் பதில் சொல்லுவார்... கஷ்டம் வரும் போது கடவுள் இருக்கின்றார் என்று..

வால்பையன் 11 August 2009 at 9:31 pm  

பின்னூட்டங்கள் வரட்டும்!
ஜாயின் பண்ணிக்கிறேன்!

ஊர்சுற்றி 11 August 2009 at 10:32 pm  

முதலில், தெரிந்துகொள்வதற்காக/புரிந்துகொள்வதற்காக இந்த விசயத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு வாழ்த்துக்கள். ஏனென்றால் எல்லாவற்றையும் ஆக்கிரமித்து உள்ளது இந்த விசயம்.

கடவுளால் மனிதனுக்கு என்ன பயன் அல்லது நன்மை?
நேரடியாக எந்தப் பலனும் இல்லை. ஏனென்றால் யாரும் கடவுளைப் பார்த்ததோ பேசியதோ, பேசிக்கொண்டிருப்பதோ கிடையாது.


கடவுளால் பாதிக்கவடுபவர்கள் யார் யார்? எப்படி?
கடவுளை நம்பி தொழில் நடத்துபவர்கள். மற்றவர்களுக்கு கடவுளை மறந்தாலும் நினைத்தாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை.

கடவுள் மனிதன் உருவாக்கியதா இல்லை கடவுள் மனிதனை படைத்தாரா?
மனிதன் உருவாக்கியது. விலங்குபோல வாழ்ந்துவந்த மனிதனின் உளவியல் ரீதியான காரணங்களும், இயற்கையைப் பற்றிய பயங்களும் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக உருவகப் படுத்தி நம்ப வைத்தது.


கடவுள்___________________?

பதில்: கடவுள்___________________.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan 11 August 2009 at 10:43 pm  

பிரதீப், நீங்கள் சொல்வது போல் உலகெங்கும் அதிகமாக விவாதிப்பது இந்தத் தலைப்பைப் பற்றித் தான்!

இது அடுத்தவர் மனதை எளிதில் நோகடிக்கவும் செய்யும். எண்ணங்களைத் தூண்டியிடவும் செய்யும்.

இன்னொன்று தெரியுமா? இந்தியாவில் கேட்கும் இந்தக் கேள்விகளை அரபு நாடுகளிலோ ஒரு சில ஐரோப்பிய நாடுகளிலோ கேட்க முடியுமா? கடவுள் இருக்கிறாரா என்று கேட்கும் வேளையில் ஒரு சமூகத்தின் நம்பிக்கைகளை மட்டும் கேட்பது ஏன்?

மூட நம்பிக்கைகள் ஒழிய வேண்டும், சாதீய ஏற்ற தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அது கடவுளின் இருப்பைக் கேள்வி கேட்பதாலேயே நடக்கும் என்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை. அவரவர்க்கு ஒரு நம்பிக்கை தேவைப் படுகிறது. அதற்கு அவரவர் நம்பிக்கையை கடைப்பிடிக்கிறார்கள். இங்கே கடவுள் இல்லை என்ற பயம் இல்லாததால் தான் தமிழகமே சுரண்டப்படுகிறது. ஏதாவது ஒரு விஷயத்தில் பயம் வரவேண்டும் என்பதற்காகவே அந்தக் காலத்தில் கடவுள், நம்பிக்கை எல்லாம் வந்தது என்று நினைக்கிறேன். நன்றி!

கோவி.கண்ணன் 12 August 2009 at 8:13 am  

//உங்க கருத்தை பின்னூடம் இடுங்க. கண்டிப்பாக இது ஒரு ஆரோகியமான விவதமாக வளர வேண்டுமென்று ஆசை படுகிறேன்.//

http://govikannan.blogspot.com/2008/03/blog-post_22.html

Unknown 12 August 2009 at 8:25 am  

நன்றி திரு. இராகவன்,

//எனக்குத் தெரிந்தது எல்லாம் உண்டு என்றால் உண்டு, அது இல்லை என்றால் இல்லை. அவ்வளவுதான்.//

கடவுள் உண்டா இல்லையா என்று நான் கேட்கவேயில்லை. மறுபடியும் ஒருமுறை கேள்விகளை படியுங்கள் நன்றி.

//சிலவற்றை உணரத்தான் முடிகின்றது. அதை காண இயலுவதில்லை. சக்கரையின் இனிப்பு போன்று. அதில் கடவுளும் ஒன்று என்பது என்னோட எண்ணம்.//

இருக்கலாம். என் கேள்வி என்னவென்றால் அந்த உணர்வால் நீங்கள் பெற்ற பயன் என்ன? கடவுள் ஒன்று என்றால் ஒரு குறிபிட்ட தெய்வத்தை மட்டும் வழிவடுவது ஏன்?

//ஒரு படத்தில் கலைவாணர் அவர்கள் நடித்தது. அவர் ஆசிரியராக வருவார். மாணவரிடம் கேள்வி கேட்பார். கடவுள் எங்கு இருக்கின்றார் என்று. ஒரு மாணவன் பதில் சொல்லுவார்... கஷ்டம் வரும் போது கடவுள் இருக்கின்றார் என்று.//

இதுதான் யதார்த்தம்.
01. தன்னம்பிக்கையை குறைப்பது.
02. நம்மால் முடியாது என்று என்ன வைப்பது.
03. எதற்க்கும் அடுத்தவரை எதிர்பார்பது.
04. _______________________.

நன்றி திரு ராகவன்.

Unknown 12 August 2009 at 8:27 am  

நன்றி திரு.அருன்(வால்பையன்)

//பின்னூட்டங்கள் வரட்டும்!
ஜாயின் பண்ணிக்கிறேன்!//

காத்து கொண்டிருக்கிறேன்.

கலையரசன் 12 August 2009 at 9:47 am  

பின்னூட்டங்கள் வரட்டும்!
நானும் ஜாயின் பண்ணிக்கிறேன்!

Unknown 12 August 2009 at 11:26 am  

நன்றி ஊர்சுற்றி

//முதலில், தெரிந்துகொள்வதற்காக/புரிந்துகொள்வதற்காக இந்த விசயத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு வாழ்த்துக்கள்.//

நன்றி.

//ஏனென்றால் எல்லாவற்றையும் ஆக்கிரமித்து உள்ளது இந்த விசயம்.//

அதாவது கடவுள் தூணிலும் இருகிறார் துரும்பிலும் இருக்கிறார் என்பதுதானே (மனிதர்களிடம் இல்லையா?)

//கடவுளால் மனிதனுக்கு என்ன பயன் அல்லது நன்மை?
நேரடியாக எந்தப் பலனும் இல்லை. ஏனென்றால் யாரும் கடவுளைப் பார்த்ததோ பேசியதோ, பேசிக்கொண்டிருப்பதோ கிடையாது. //

பார்காமலோ பேசாமலோ பயன்பெற முடியாதா?

//கடவுளால் பாதிக்கவடுபவர்கள் யார் யார்? எப்படி?
கடவுளை நம்பி தொழில் நடத்துபவர்கள்.//

?????

//மற்றவர்களுக்கு கடவுளை மறந்தாலும் நினைத்தாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை.//

இதில் சிறு மாற்று கருத்து. வியாபாரம் செய்பவன் கடவுளை நன்பாவிட்டாலும் கட்வுளால் அவன் தொழில் சிறிதேனும் பாதிக்கபடுகிறாது. உதாரணம் கிருத்திகை, அம்மாவாசை மற்றும் பண்டிகைதினங்களில் மாமிசகடைகாரன் மாமிசம் குறைத்து வாங்குவது.

//கடவுள் மனிதன் உருவாக்கியதா இல்லை கடவுள் மனிதனை படைத்தாரா?
மனிதன் உருவாக்கியது. விலங்குபோல வாழ்ந்துவந்த மனிதனின் உளவியல் ரீதியான காரணங்களும், இயற்கையைப் பற்றிய பயங்களும் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக உருவகப் படுத்தி நம்ப வைத்தது.//

இருக்கலாம்........

//கடவுள்___________________?

பதில்: கடவுள்___________________.//

ஹா...ஹா....ஹா.....


நன்றி ஊர்சுற்றி

Unknown 12 August 2009 at 11:49 am  

நன்றி. செந்தில்

//இது அடுத்தவர் மனதை எளிதில் நோகடிக்கவும் செய்யும். எண்ணங்களைத் தூண்டியிடவும் செய்யும்.//

நோகடித்தல் என்பது எங்கு நிகழும் கொஞ்சம் யோசித்து பாருங்கள். நமக்கு உருவாகியிருக்கும் சில விசயங்கள் (நல்லதோ கெட்டதோ) நம்பிக்கைகளை குறைகூறினாலோ அல்லது உதசீனபடுத்தினாலோ அங்கே நிகழலாம். ஆனால் நான் இங்கு அழைத்திருப்பது அரோகியமான விவாதத்திற்க்கும் என் மற்றும் என் போன்றோர் ஐயங்களை போக்கி கொள்வதற்க்கும் தான்.

//இன்னொன்று தெரியுமா? இந்தியாவில் கேட்கும் இந்தக் கேள்விகளை அரபு நாடுகளிலோ ஒரு சில ஐரோப்பிய நாடுகளிலோ கேட்க முடியுமா?//

இன்னொன்று புரிந்து கொள்ளுங்கள் நாம் இருக்கும் சமுகமே மேம்படாத போது நாம் ஏன் மற்றவர்களை பார்க்க வேண்டும். நல்லவற்றை வேண்டுமென்றால் மற்றவரிடமிருந்து பெற்று கொள்ளளாம் தீயவை எதற்க்கு(கேள்விகூட கேட்க முடியாத சூழ்னிலை எதற்க்கு?)

//கடவுள் இருக்கிறாரா என்று கேட்கும் வேளையில் ஒரு சமூகத்தின் நம்பிக்கைகளை மட்டும் கேட்பது ஏன்?//

நீங்கள் நேரடியாகவெ கேட்கலாம் இந்துகளை மட்டும் ஏன் கேட்கின்றீர்கள் என்று? சத்தியமாக இந்துகளை மட்டும் கேட்கவில்லை இது ஒரு பொது விவாதம் எந்த சமுகத்தினரும் விவாதிக்களாம் (நம் தமிழ் சமுகத்தில் இந்துகள் அவர்களின் மூட நம்பிக்கைகள் அதிகம் இருப்பதாலும் விவாதிக்க அல்லது தர்கம் செய்ய அதிகமானோர் இருப்பதாலும் அவ்வாறு தோன்றுகிறது.)

//மூட நம்பிக்கைகள் ஒழிய வேண்டும், சாதீய ஏற்ற தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அது கடவுளின் இருப்பைக் கேள்வி கேட்பதாலேயே நடக்கும் என்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை.//

நீங்கள் கூறியவற்றின் ஆதி கடவுளாக இருப்பதால்.

//அவரவர்க்கு ஒரு நம்பிக்கை தேவைப் படுகிறது. அதற்கு அவரவர் நம்பிக்கையை கடைப்பிடிக்கிறார்கள். இங்கே கடவுள் இல்லை என்ற பயம் இல்லாததால் தான் தமிழகமே சுரண்டப்படுகிறது.//

இதை ஏற்று கொள்ளமுடியவில்லை அல்லது சரியாக புரியவில்லை சற்று விளக்கவும்.

//ஏதாவது ஒரு விஷயத்தில் பயம் வரவேண்டும் என்பதற்காகவே அந்தக் காலத்தில் கடவுள், நம்பிக்கை எல்லாம் வந்தது என்று நினைக்கிறேன்.//

இருக்கலாம்.

ஒருவிசயம் மட்டும் புரியவில்லை. கடவுள் என்ற வார்த்தையை பார்த்தவுடம் எல்லோரும் அவர் இருக்காரா இல்லையா என்று விவாதிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். மறுபடியும் ஒருமுறை கேள்விகளை படித்துவிடுங்கள்.

நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan 12 August 2009 at 12:04 pm  

பிரதீப், உங்கள் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை.

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு நம்பிக்கை.. :)

ஏன் என்று கேள்வி கேட்கும் உங்கள் எண்னத்தைப் பாராட்டுகிறேன்!

Unknown 12 August 2009 at 2:50 pm  

நன்றி செந்தில்.

ப்ரியமுடன் வசந்த் 12 August 2009 at 3:32 pm  

//கடவுளால் பாதிக்கவடுபவர்கள் யார் யார்? எப்படி?//

குறிப்பிட்டு இந்துமதக்கடவுள்களால் இயற்க்கைக்கு ஆபத்து.

இருக்குற மலைய உடைச்சுத்தானே அந்த காலத்தில இருந்து இந்தகாலம் வரை சிலைகளும் கோவில்களும் செய்துட்டு வர்றோம் அந்த மலைகளை உடைக்கும்போது அங்க இருக்குற மரம் செடிகளை வெட்டியிருப்பார்கள்தானே..

ஒரு உயிருக்கும் பாதகம் வரக்கூடாதுன்னு நினைக்கிறவர் கடவுள்

கடவுள் நாம மனசுல நினைச்சா போதும் தானே..

அப்பறம் அந்த விவேக் காமெடியில வர்றது போல சாலையோர மைல்கல்லுக்கு குங்குமம் சந்தனம் வச்சு அதனோட உண்மையான பயனை மறைக்கிறது.

இது டிரைவர்களுக்கு ஆபத்து....

ஆடு கோழி பலியிடுறதால அந்த வாயில்லா ஜீவன்களுக்கு ஆபத்து

ப்ரியமுடன் வசந்த் 12 August 2009 at 3:36 pm  

//கடவுள் மனிதன் உருவாக்கியதா இல்லை கடவுள் மனிதனை படைத்தாரா//

வரலாறுகள் உண்மையாய் இருந்தால் இந்த கேள்விக்கு பதில் கடவுள் மனிதனை படைத்தார்.

வரலாறுகள் பொய்யாயிருந்தால் இந்தகேள்விக்கு பதில் மனிதன் கடவுளை மனிதன் படைத்தான்

குறை ஒன்றும் இல்லை !!! 12 August 2009 at 7:15 pm  

கடவுள்.... உணர்ந்தவர்களுக்கு உண்மை.. மனிதன் படைப்பே இன்னும் சரியாக தெரியாத போது கடவுளின் படைப்பை ஆராய முடிய வில்லை ..

Unknown 12 August 2009 at 7:47 pm  

// கடவுள்___________________? //




அதுதான் நீங்களே சொல்லீட்டீங்களே....... " கடவுள் ஒரு கோடிட்ட வெற்றிடமுடைய கேள்விக்குறி " ன்னு.....!!!

Ganesh 12 August 2009 at 7:54 pm  

As you grow older and realise that your actions dont control your destiny ...your belief in god increases :)

Unknown 12 August 2009 at 8:38 pm  

நன்றி லவ்டேல் மேடி,

//அதுதான் நீங்களே சொல்லீட்டீங்களே....... " கடவுள் ஒரு கோடிட்ட வெற்றிடமுடைய கேள்விக்குறி " ன்னு.....!!!//

இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா?

நன்றி.

Unknown 12 August 2009 at 8:45 pm  

நன்றி திரு கனேஷ்.

//As you grow older and realise that your actions dont control your destiny ...your belief in god increases :)//

அதாவது வயதானால் கடவுளை உணர்வீர்கள் என்று சொல்ல வறீங்க.

ஒரு சின்ன மாற்றம் செஞ்சிக்கோங்க வயதானால் இல்லை வாழ்கையில் தொல்விகள் மற்றும் தொல்லைகள் மிக அதிகமாக சூழும் போது - தன்நம்பிக்கையும் திறமையும் அற்றவனுக்கு கண்டிப்பாக கடவுள் தேவைபடுவார். (அதாவது விதிபடி நடக்குது என்று சொல்வதற்க்கு)

நன்றி.

தருமி 12 August 2009 at 8:47 pm  

இங்கே கடவுள் இல்லை என்ற பயம் இல்லாததால் தான் தமிழகமே சுரண்டப்படுகிறது.//

மிகத் தவறு

Unknown 12 August 2009 at 8:50 pm  

நன்றி குறை ஒன்றும் இல்லை,

//கடவுள்.... உணர்ந்தவர்களுக்கு உண்மை.. மனிதன் படைப்பே இன்னும் சரியாக தெரியாத போது கடவுளின் படைப்பை ஆராய முடிய வில்லை ..//

கண்டிப்பாக கடவுளின் படைப்பைபற்றிய அராய்ச்சி இல்லை.
நமக்கும் நம் சமுகத்திற்க்கும் கடவுளின் பயன் என்ன மற்றும் கடவுளின் தேவை என்ன என்பதே.

நன்றி

தருமி 12 August 2009 at 8:54 pm  

//இந்தக் கடைசிக் கேள்வியை எனக்காக கொஞ்சம் நின்று நிதானமாக யோசிச்சு, அசை போட்டு, மெல்ல ஒரு முடிவுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு முக்கியமான கேள்வி; நடுநிலையோடு யோசித்தால் என் முடிவை நீங்கள் எதிர்க்க முடியாதென்ற நம்பிக்கை எனக்கு.

NO RELIGION IS UNIVERSAL. எந்த சமயமுமே உலகம் தழுவிய சமயமாக இல்லவே இல்லை.

நம் இந்திய இந்துக் கடவுளர்கள் எங்கெல்லாம் 'சஞ்சரித்தார்கள்'?
வடக்கே இமயம் - கைலாயம். தெற்கே குமரி முனை. இந்த இந்திய துணக் கண்டத்தைவிட்டு வெளியே செல்லாத கடவுளர்கள். கொஞ்சம் தாண்டியதாகக் கூறினால் 'அடுத்த நாடு' இலங்கை சொல்லலாம். காரணம் என்ன? கிரேக்க நாட்டு கடவுளர்கள் நம்ம முருகன் மாதிரி அங்கே உள்ள மலைகளில் வாசம் செய்வதான கதை. ஆபிரஹாமிய மதங்களில் வரும் சம்பவங்கள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டில் வரும் அனைத்து தீர்க்க தரிசிகளின் செயல்பாடுகளும் அரேபிய நாட்டு எல்லைகளுக்குள்ளேயே நடந்ததாகத்தான் சொல்லப் படுகிறது. அத்தனை தீர்க்க தரிசிகளில் யாருமே மற்ற கண்டங்களிலோ, ஏனைய நாடுகளிலோ பிறந்ததாகவோ, அதிசயங்கள் (திமிங்கிலத்தின் உள்ளே மூன்று நாட்கள் இருந்தது போன்று...)நடத்தியதாகவோ இல்லை.
இதற்குக் காரணம் என்ன?

மனிதர்கள் தங்களுக்குத் தெரிந்த நிலப்பரப்பில் தாங்களே உருவாக்கிக்கொண்டதே சமயங்கள்; தங்கள் சாயலில் உருவாக்கியவைகளே கடவுளர்கள்.//


இன்னமும் அப்பதிவில் உங்கள் கேள்விக்கான என் பதில்கள் இருக்கலாம்.

தமிழ் ஓவியா 12 August 2009 at 8:54 pm  

//கடவுள் மனிதன் உருவாக்கியதா இல்லை கடவுள் மனிதனை படைத்தாரா?//

இது குறித்த பெரியாரின் கருத்து என்ன என்பதைப் பார்ப்போம்.பின் விவாதிக்கிறேன்.

"கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று நான் கூறிவருவது கண்டு பார்ப்பனர் நெருப்பின் மீது நிற்பது போல் துள்ளுகிறார்கள், துள்ளிக் குதிக்கின்றார்கள். அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து நம்மீது ஏவி விடுகிறார்கள்.

பெரும், பெரும் போராட்டங்கள் நடத்தப்போவதாகப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கின்றேன்; எதிர்பார்க்கின்றேன்; போராட்டம் துவங்கினால் எனது மேற்கண்ட பிரசார வேலைக்கு உதவியாகும் என்பதோடு மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவது தான்.

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே! நான் கடவுளை "உண்டாக்கியவன் முட்டாள்" என்றால் எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ளவேண்டும்? உண்டாக்கியவன் முட்டாள் என்றால் உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கிறவனே நீ கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்கிறாயா? உனது முட்டாள்தனத்தைக் காட்டத்தான் கோபிக்கிறாய். ஆத்திரப்படுகிறாய். நிற்க, உன் ஆத்திரத்திற்குக் காரணம், ஆதாரம் என்ன?

முண்டமே! நீ நினைக்கும் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்கிறாயா? அல்லது, அது ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறாயா? அல்லது , கடவுள் யாராலும் உண்டாக்கப் படாமல், யாராலும் கண்டு பிடிக்கப்படாமல் தானாக, இயற்கையாக, கடவுள் இஷ்டப்படி கடவுளே தோன்றிற்று என்கிறாயா? நான் சொல்வதில் உனக்கு ஆத்திரம், கோபம் வருவதாயிருந்தால், எதற்காக வரும்? நான் சொல்வதைக் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால்தானே உண்டாக்கியவனை நான் முட்டாள் என்கிறேன் என்று நீ கோபிக்கவேண்டும்!

மற்றும், கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குத்தானே கோபம், ஆத்திரம் வர வேண்டும்! நீ கோபிப்பதால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை நீ ஒப்புக்கொள்கிறாய் என்று தானே அர்த்தம்! அது மாத்திரமல்லாமல் , நீ கோபிப்பதால் கடவுளையும் அவமதிக்கிறாய் என்று தானே கருத்தாகிறது!

இப்போது நீ நினைத்துப்பார் ! கடவுள் உண்டாக்கப்பட்டதா! (கிரியேஷனா? (Creation) அல்லது கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதா? (இன்வென்ஷனா? (Invention) அல்லது கடவுள் இயற்கையாய்த் தோன்றினதா? நேச்சரா? (Nature) இதை முதலில் முடிவு செய்து கொள். நான் சொல்வதன் கருத்து கடவுள் கண்டு பிடிக்கப்பட்டதுமல்ல. தானாகத் தோன்றியதுமல்ல, முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். அதை அதாவது கடவுளை ஒரு மனிதன் உண்டாக்கினான். என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக் கொண்டதாலோ தானே கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால் நீ கோபித்துக் கொள்ளவேண்டும்!

நீ இருப்பதாகக் கருதிக்கொண்டிருக்கும் கடவுள் ஒருவராலும் உண்டாக்கப்பட்டதல்ல. " தானாக சுயம்புவாகத்தோன்றியிருக்கிறது" என்பது தான் இன்று கடவுள் நம்பிக்கைகாரர்களின் கருத்து ஆக இருக்கிறது. ஆகையால் நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு அதற்காகக் கோபிப்பவனை இரட்டை முட்டாள் என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.

இப்படி நான் சொல்வதால், கடவுளால் எவன் பெரிய ஜாதி யாய் இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறானோ, அவனுக்கும் கடவுள் பேரால் பொறுக்கித் தின்ன வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கிறவனுக்கும், கடவுளால் தனது அயோக்கியத்தனங்களை மறைத்துக்கொள்ள வேண்டியவனுக்கும் தாம் கோபம் வரவேண்டும்.

அதை நான் சமாளித்துக் கொள்கிறேன். "


- பெரியார் ஈ.வெ.ரா.-உண்மை 14.-3-70

தருமி 12 August 2009 at 8:54 pm  

அழைப்புக்கு நன்றி.

Anonymous 12 August 2009 at 9:15 pm  

intha vilayatuku nan varavilai

ummar 12 August 2009 at 9:55 pm  

சோம்பேரிகளுக்கு அவன் தான் துணை
சுரு சுரு ப்பானவருக்கு அவனை நினைப்பதற்க்கு நேரம் இல்லை
அவ்வளதான்

ஊர்சுற்றி 12 August 2009 at 9:57 pm  

////மற்றவர்களுக்கு கடவுளை மறந்தாலும் நினைத்தாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை.//

இதில் சிறு மாற்று கருத்து. வியாபாரம் செய்பவன் கடவுளை நன்பாவிட்டாலும் கட்வுளால் அவன் தொழில் சிறிதேனும் பாதிக்கபடுகிறாது. உதாரணம் கிருத்திகை, அம்மாவாசை மற்றும் பண்டிகைதினங்களில் மாமிசகடைகாரன் மாமிசம் குறைத்து வாங்குவது.
//

இந்த விசயம் சரிதான். கடவுளை நம்பி தொழில் நடத்துபவர்கள் என்பதற்குப் பதிலாக, கடவுளை நம்பி நடக்கும் தொழில்கள் செய்வோர் என்று சொல்லலாமா? :)

Sathik Ali 12 August 2009 at 10:31 pm  

ஐயா பெரியவங்களே தாய்மார்களே..கடவுள் இருக்கா இல்லையா?இருக்கிறார் என்றால் எங்கிருக்கிறார்?எப்படியிருக்கிறார்? என்ற கேள்விகள் எல்லாம் அரோக்கியமான கேள்விகள் தான். ஆனால் அதற்கு முன்னே கடவுள் என்று எதைக் குறிப்பிடுகிறோம் என்று ஒரு முடிவுக்கு வாருங்கள்.கடவுள் என்ற வார்த்தை தான் பொது ஆனால் கடவுள் என்ற வார்த்தைக்கு எல்லோரும் அவரவருக்கு ஏற்ற பொருள் கொள்கின்றர்.தேடும் பொருள் என்ன என்று தெளிவாகிய பின் தான் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி வரவேண்டும்.எனவே கடவுள் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் அவர்கள் நம்பும் கடவுள் எத்தகைய இயல்புடையவர் என்று தெளிவாக சொன்னால் தான் அப்படி ஒரு கடவுள் இருக்க முடியுமா என ஆராயலாம். அது போல கடவுள் நம்பிக்கை இல்லாதவரும் பொத்தாம் பொதுவில் கடவுள் இல்லை என்று சொல்லாமல் எப்படிப்பட்ட கடவுளை தான் நம்பவில்லை என்று தான் சொல்ல முடியும்.என்ன சரி தானே.

Sathik Ali 12 August 2009 at 10:53 pm  

இறைவன காண முடியுமா?என்ற எனது இந்த பதிவில் என் கருத்து இருக்கிறது பாருங்கள்:http://sathik-ali.blogspot.com/2009/03/blog-post.html

ramesh sadasivam 12 August 2009 at 11:50 pm  

என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது.

ஒரு முறை எனக்கு வர வேண்டிய கமிஷன் தாமதமானது. அந்த தேதியில் வந்து விடும் என்கிற நம்பிக்கையில் பணம் முழுவதையும் செலவு செய்திருந்தேன்.

முதல் நாள். கையில் பணமில்லாததால் எங்கும் செல்ல முடியவில்லை. சாப்பிடவும் இல்லை.

பகல் முழுதும் கந்தர் சஷ்டி கவசம் சொன்னேன். மாலை ATM சென்று பணம் போட்டுவிட்டார்களா என்று பார்த்தால் போடவில்லை. அறைக்கு வந்து தண்ணீர் அருந்திவிட்டு தூங்கிவிட்டேன்.

அடுத்த நாளும் இதே தான். இப்படியே ஏழு நாட்கள் சென்று விட்டது. அதற்கு மேல் பொறுத்திருக்க முடியாமல் சம்பத்தப்பட்ட நிறுவனத்துக்கு செல்ல முடிவெடுத்தேன். பேருந்துக்கு காசில்லை. சூளைமேட்டிலிருந்து அண்ணா சாலை வரை நடந்தே சென்றேன். நிறுவனத்தில் பணம் இந்த முறை cheque ஆக மூன்று நாட்கள் கழித்து கொடுக்கப்படும் என்றார்கள். மீண்டும் என் அறைக்கு நடந்தே வந்தேன்.

மூன்று நாட்கள் கந்தர் சஷ்டி கவசம் சொல்வது தூங்குவது என்று கழிந்தது.

கடைசி நாள். cheque வாங்க செல்ல வேண்டும். இப்பொழுது சூளை மேட்டில் இருந்து அண்ணா சாலை வரை நடந்து செல்ல வேண்டிய சூழ்னிலை. உடல் என்பு தோல் போர்த்திய கூடாகியிருந்தது. எழுந்து குளித்து தயாரானேன். அப்பொழுது என் உடலின் கடைசி சக்தியும் செலவழிந்திருந்தது. அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாமல் முட்டிக் கால்களை பிடித்துக் கொண்டு நிமிர முடியாமல் தவித்த அந்த வினாடி, என் இதயத்திலிருந்து ஒரு சக்தி உடலெங்கும் பரவியது. எழுந்தேன். சூளைமேட்டிலிருந்து அண்ணாசாலை வரை நடந்து சென்று cheque-ஐ வாங்கினேன். நல்ல வேளையாக என் நண்பன் அங்கு வந்திருந்தான். அவனிடம் பணம் வாங்கி அதன் பிறகு உணாவருந்தினேன். குடல் புண்ணோ வேறு எந்த பாதிப்போ ஏற்படவில்லை.

இது 2004 ஆம் ஆண்டு என் வாழ்வில் நடந்த சம்பவம்.

இதை பொய்யென்று யாரும் சொல்லலாம். அல்லது அந்த சக்தி என் உடலெங்கும் பரவியது பற்றி விவாதிக்கலாம்.

ஆனால் இது என் அனுபவம். எனக்கு பிரத்தியேகமாக இறைவன் கொடுத்த அனுபவம். எனக்கு இது உண்மை யென்று தெரியும்.

இறைவனால் இந்த மனிதனுக்கு ஏற்பட்ட நன்மைகளில் ஒரு சின்ன எடுத்துக் காட்டு.

minorwall 13 August 2009 at 5:57 am  

விவாதத்துக்கு அழைப்புக்கு நன்றி.
விவாதம் என்பதை விட எல்லோருக்கும் பொதுவான எற்றுக்கொள்ளகூடியதுமான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

கடவுள் ஒருவேளை மனித இனத்தின் மூதாதையர்களாக இருந்திருக்கலாம்.வரலாற்று ரீதியாக நிறைய லிங்க் இருப்பதால்.தற்போது இருக்கும் எஞ்சிய சிலைவடிவங்களுக்கும் ஏனைய பிற வடிவமற்ற கடவுளருக்கும் சக்தி ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.நமது மூதாதையர்களுக்கு சக்தி ஏதும் இல்லாததைப்போல..

வாழ்க்கைக்கு நம்பிக்கை அவசியம்.செயல்பாட்டின் விளைவு எதிர்பார்ப்புக்கு மாறாகும்போது அவநம்பிக்கை துளிர்ப்பது மனித இயல்பு.எல்லா மனிதர்களுக்கும் தொடர்ந்து நம்பிக்கையுடன் போராடி வாழ்வை எதிர்கொள்கிற ஆற்றல் இருப்பதில்லை.அவர்களுக்கு நம்பிக்கை தரும் இடமாக இந்த ஆலயங்கள் இருக்குமானால் இருந்துவிட்டுப்போகட்டும்.

ஆனால் இந்த ஜடப்பொருள்களுக்கு சுயசக்தி ஏதும் கிடையதேன்பதுதான் உண்மை.
அங்கே சென்றால் மறுவாழ்வு கிடைக்கும் என்ற எண்ணத்துடன் செல்லும் மனிதன்
அந்த நம்பிக்கையை அவனாகவே ஊட்டிக்கொள்கிறான்.ஆனால் தெய்வங்கள் தந்ததாக நினைக்கிறான்.எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்.ஆனால் இதனை வைத்து ஆதாயம் தேடும் கும்பல் தண்டிக்கப்படவேன்டியது.அது இனமானாலும் சரி.மதமானாலும் சரி.

சமீப கால உதாரணங்களிலிருந்து உங்களுக்கு நான் ஒரு உண்மையை சுட்டிக்காட்ட
கடமைப்பட்டுள்ளேன்.

அல்லாவை கும்பிட்ட சதாம் ஹுசேனை ஜீசஸை கும்பிட்ட ஜார்ஜ் புஷ் கண்டம் பண்ணினார்.அப்போ ஜீசஸ் பெரிய ஆளுதானா?
அந்த அமெரிக்காவுக்குள்ளே புகுந்து ட்வின் டோவேர்சை தரைமட்டமாக்கிய ஒசாமா பின்லேடன் கும்பிடும் அல்லா தனது சக்தியை regain பண்ன்னுகிராரோ என்னவோ?(தொரோபோரா மலையில் ஒளிந்துகொண்டு)

இந்தியாவுடன் அடிக்கடி தனது ஊடுருவல்,தீவிரவாதத்தொல்லைகளால் சண்டையிடும் பாகிஸ்தானிகள் கும்பிடும் அல்லாஹ்வை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் இந்திய தெய்வங்கள் எல்லாம் உண்மையில் பொறுமைசாலிகள்தான்.
பிரபாகரனை அழித்துவிட்டு கொக்கரிக்கும் ராஜபக்ஷே வணங்கும் புத்தரிடம் (போதி மரத்தடி புத்தரை கற்பனை செய்து பாருங்கள்.காமெடியாக இருக்கும்)சூரசம்காரம் பண்ணி வெற்றிக்கடவுலான முருகன் தோற்றுவிட்டான் என்பதும் வரலாற்று உண்மையாகிறது.
கடவுளே இல்லைஎன்று அவ்வப்போது சொல்லத்துடித்தாலும் அரசியல் பண்றதுக்காக வெளிப்படையாக சொல்லமுடியாத இந்த கொள்கை உடைய கலைஞர் கருனாதியிடம் சகலசக்தி படைத்த கடவுளரையும் தன் பக்கம் வைத்திருக்கும் அம்மா சமீபகாலம்மாக தோற்றுக்கொண்டிருக்கும் regional politicsசை வைத்தும் சரி...

புரிந்துகொள்ள வேண்டியது இதுதான்.

பேரழிவு ஆயுதங்களை பரீட்சித்து பார்த்து தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டு ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கும் வட கொரியாவுடன் அமெரிக்கா கொண்டிருக்கும் அணுகுமுறை பேச்சுவார்த்தைதான்.க்ளிண்ட்டன் அங்கே சென்று கெஞ்சிதான் நிருபர்களை விடுவித்தார்.

பேரழிவு ஆயுதங்கள் கையிருப்பும் பொருளாதார வளமும் பொருந்திய நாடுகலாலான கூட்டமைப்பும் நட்டான்மைத்தனமும்தான் உலகத்தின் போக்கைத்தீர்மாநிக்கின்றன.(ஆட்சியாளர்கள் தீர்மானிக்கிறார்கள்.மனிதர்கள்
தீர்மானிக்கிறார்கள்.

கடவுள் வெறும் பொம்மைதான்.கற்சிலைதான்.பாவம். அவரை திட்டுவதை விட்டுவிடுங்கள்.

அப்படி சர்வ வல்லமை படைத்த ஒருவர் இருந்தால் நல்லாத்தான் இருக்கும்...(தசாவதாரம் கமல் பாணியில்)........

minorwall 13 August 2009 at 6:35 am  

விவாதத்துக்கு அழைப்புக்கு நன்றி.
விவாதம் என்பதை விட எல்லோருக்கும் பொதுவான எற்றுக்கொள்ளகூடியதுமான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

கடவுள் ஒருவேளை மனித இனத்தின் மூதாதையர்களாக இருந்திருக்கலாம்.வரலாற்று ரீதியாக நிறைய லிங்க் இருப்பதால்.தற்போது இருக்கும் எஞ்சிய சிலைவடிவங்களுக்கும் ஏனைய பிற வடிவமற்ற கடவுளருக்கும் சக்தி ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.நமது மூதாதையர்களுக்கு சக்தி ஏதும் இல்லாததைப்போல..

வாழ்க்கைக்கு நம்பிக்கை அவசியம்.செயல்பாட்டின் விளைவு எதிர்பார்ப்புக்கு மாறாகும்போது அவநம்பிக்கை துளிர்ப்பது மனித இயல்பு.எல்லா மனிதர்களுக்கும் தொடர்ந்து நம்பிக்கையுடன் போராடி வாழ்வை எதிர்கொள்கிற ஆற்றல் இருப்பதில்லை.அவர்களுக்கு நம்பிக்கை தரும் இடமாக இந்த ஆலயங்கள் இருக்குமானால் இருந்துவிட்டுப்போகட்டும்.

ஆனால் இந்த ஜடப்பொருள்களுக்கு சுயசக்தி ஏதும் கிடையதேன்பதுதான் உண்மை.
அங்கே சென்றால் மறுவாழ்வு கிடைக்கும் என்ற எண்ணத்துடன் செல்லும் மனிதன்
அந்த நம்பிக்கையை அவனாகவே ஊட்டிக்கொள்கிறான்.ஆனால் தெய்வங்கள் தந்ததாக நினைக்கிறான்.எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்.ஆனால் இதனை வைத்து ஆதாயம் தேடும் கும்பல் தண்டிக்கப்படவேன்டியது.அது இனமானாலும் சரி.மதமானாலும் சரி.

சமீப கால உதாரணங்களிலிருந்து உங்களுக்கு நான் ஒரு உண்மையை சுட்டிக்காட்ட
கடமைப்பட்டுள்ளேன்.

அல்லாவை கும்பிட்ட சதாம் ஹுசேனை ஜீசஸை கும்பிட்ட ஜார்ஜ் புஷ் கண்டம் பண்ணினார்.அப்போ ஜீசஸ் பெரிய ஆளுதானா?
அந்த அமெரிக்காவுக்குள்ளே புகுந்து ட்வின் டோவேர்சை தரைமட்டமாக்கிய ஒசாமா பின்லேடன் கும்பிடும் அல்லா தனது சக்தியை regain பண்ன்னுகிராரோ என்னவோ?(தொரோபோரா மலையில் ஒளிந்துகொண்டு)

இந்தியாவுடன் அடிக்கடி தனது ஊடுருவல்,தீவிரவாதத்தொல்லைகளால் சண்டையிடும் பாகிஸ்தானிகள் கும்பிடும் அல்லாஹ்வை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் இந்திய தெய்வங்கள் எல்லாம் உண்மையில் பொறுமைசாலிகள்தான்.
பிரபாகரனை அழித்துவிட்டு கொக்கரிக்கும் ராஜபக்ஷே வணங்கும் புத்தரிடம் (போதி மரத்தடி புத்தரை கற்பனை செய்து பாருங்கள்.காமெடியாக இருக்கும்)சூரசம்காரம் பண்ணி வெற்றிக்கடவுலான முருகன் தோற்றுவிட்டான் என்பதும் வரலாற்று உண்மையாகிறது.
கடவுளே இல்லைஎன்று அவ்வப்போது சொல்லத்துடித்தாலும் அரசியல் பண்றதுக்காக வெளிப்படையாக சொல்லமுடியாத இந்த கொள்கை உடைய கலைஞர் கருனாதியிடம் சகலசக்தி படைத்த கடவுளரையும் தன் பக்கம் வைத்திருக்கும் அம்மா சமீபகாலம்மாக தோற்றுக்கொண்டிருக்கும் regional politicsசை வைத்தும் சரி...

புரிந்துகொள்ள வேண்டியது இதுதான்.

பேரழிவு ஆயுதங்களை பரீட்சித்து பார்த்து தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டு ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கும் வட கொரியாவுடன் அமெரிக்கா கொண்டிருக்கும் அணுகுமுறை பேச்சுவார்த்தைதான்.க்ளிண்ட்டன் அங்கே சென்று கெஞ்சிதான் நிருபர்களை விடுவித்தார்.

பேரழிவு ஆயுதங்கள் கையிருப்பும் பொருளாதார வளமும் பொருந்திய நாடுகலாலான கூட்டமைப்பும் நட்டான்மைத்தனமும்தான் உலகத்தின் போக்கைத்தீர்மாநிக்கின்றன.(ஆட்சியாளர்கள் தீர்மானிக்கிறார்கள்.மனிதர்கள்
தீர்மானிக்கிறார்கள்.

கடவுள் வெறும் பொம்மைதான்.கற்சிலைதான்.பாவம். அவரை திட்டுவதை விட்டுவிடுங்கள்.

அப்படி சர்வ வல்லமை படைத்த ஒருவர் இருந்தால் நல்லாத்தான் இருக்கும்...(தசாவதாரம் கமல் பாணியில்)........

supersubra 13 August 2009 at 8:37 am  

//கடவுளால் மனிதனுக்கு என்ன பயன் அல்லது நன்மை?//

ஒரு வாதத்துக்காக ஒபாமா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அவர் இருப்பதாக நம்புவதில்லை. ஆனால் அவர் எடுக்கும் முடிவுகள் என்னை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும் இன்றைய உலக பொருளாதார சந்தையில். அது போல பிரபஞ்சத்தின் தலைவன் எடுக்கும் முடிவுகளும் என்னையும் பாதிக்கும்.

ரிக் வேதத்தின் பிரபஞ்ச படைப்பு பற்றிய பாடலில்

யார் சொல்ல முடியும் யாருக்கு தெரியும்
எப்பொழுது இது வந்தது எப்படி இது வந்தது
கடவுள்கள் கூட பின்னால் படைககபட்டவர்கள்தான்
யாருக்கு உண்மை தெரியும் இந்த தோற்றத்தை விளக்க

என்ற பாடல் கூறும் செய்தியை புரிந்து கொண்டு விவாதிக்கலாம்.
Lyrics of rigveda song
http://supersubra.googlepages.com/

உங்கள் ராட் மாதவ் 13 August 2009 at 9:01 am  

நண்பரே தெய்வம் என்று ஒன்று உள்ளது. மனித மனதுகளை, ஒழுக்க நெறிமுறைகளை கட்டுப்படுத்த மனிதனே தனக்கு விரும்பிய கடவுள் அவதாரங்களை பல வடிவங்களில், பல பரிணாமங்களில் தானே (கண்ணால் காண முடியவில்லை என்பதால்) தேர்ந்தெடுத்து கொண்டான்.

எல்லாவருக்கும் பசி உள்ளது. தணிவதற்கு உணவு அவசியம். உணவு வகைகள் மாறலாம். நோக்கம் பசி அடங்குவது. அதேபோல்தான் கடவுளும்.

இறைவனை வழிபடும்போது கண்களை மூடிக்கொண்டே வணங்குகிறோம். இல்லையெனில் மனம் ஒரு நிலைப்படாது. அலை பாயும்.

எழுதினால் பக்கங்கள் தீராது.

சுருக்கமாக இரண்டு வரிகளில்.

* மரணத்தின் நாழிகை முன்பே தெரிந்தால்?
* அடுத்த நொடி என்ன நிகழ்வு நிகழும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிந்தால்?

மனிதனிடம் கடவுள் நம்பிக்கை இருக்குமா என்பது சந்தேகமே....

simpleblabla.blogspot.com

Gokul 13 August 2009 at 9:05 am  

மனிதனால் இந்த உலகத்திற்கு என்ன பயன்? மனிதனால் மிருகங்களுக்கு என்ன பயன் ? இதற்கு பதில் சொன்னால் கடவுளால் மனிதனுக்கு என்ன பயன் என்று சொல்ல வசதியாக இருக்கும்.

மேலும், கடவுள் என்பது விஞ்ஞானிகளால் இரண்டு தளங்களில் விவாதிக்க படுகிறது ,

1. இந்த பிரபஞ்சத்தையும் பெரும் நக்ஷத்திர கூட்டங்களையும், அண்டத்தையும் பெருவெடிப்பு நிகழ செய்த சக்தி என்ற தளத்தில்.

2. ஒரு தனி மனிதன் வேண்டிக்கொள்ளும் சக்தி என்ற தளத்தில்.

நீங்கள் எந்த தளத்தில் இருந்து பேசுகறீர்கள்? கேள்விகளை தெளிவாக கேட்கவும். இரண்டு தளம் என்றெல்லாம் இல்லை , ஒரே கடவுளை பற்றி கேட்கிறேன் என்று சொன்னால் , sorry , hit count வேண்டுமானால் ஏறலாம் ஆனால் கேள்வி பதில் முழுமையாக இருக்காது. ஏனெனில் இரண்டு தளங்களையும் ஒன்றாக வைத்து அறிவியல் பூர்வமாக விவாதம் செய்ய இயலாது.

Sabarinathan Arthanari 13 August 2009 at 9:07 am  

விவாதத்துக்கு அழைப்பிற்கு நன்றி.

எப்போதும் நல்ல கருத்து பரிமாற்றமுள்ள எந்த ஒரு விவாதமும் படிப்பவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பதி்ல் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது.

ஆனால் துரதிருஷ்ட வசமாக வலைபதிவுகளில் எப்போது இது போன்ற விவாதங்கள் நடை பெற்றாலும் பெரியார், பாரதியார், விவேகானந்தர் போன்ற பெரியோர்களையும், சக வலை பதிவு நண்பர்களையும் தனி நபர் தாக்குதல்களை மேற்கொள்வது வாடிக்கையாகி விட்டது.

எனவே பின்னூட்ட மட்டுறுத்தலும், தனி நபர் தாக்குதல்களுக்கான பின்னூட்டங்கள் தயவு தாட்சண்யமின்றி நீக்கபடும் என்ற வாசகங்களும் இடுகையில் இடம் பேற்றால் ஒழிய இது முன்னேற்றத்திற்கான விவாதமாக இருக்காது.

//கடவுள்// என்ற ஒரே பதத்தின் மூலம் பல்வேறு விதமான நம்பிக்கைகளை எப்படி ஒரே விதமாக அனுகுவது ? குறிப்பாக இந்திய துணை கண்ட மதங்களுக்கும் (சைவம், வைணவம், சமணம், புத்தம், சீக்கியம்) மேலை நாட்டு மதங்களுக்கும் (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம்) அடிப்படையில் மிகப்பெரிய வித்தியாசங்கள் உள்ளன.

முதலில் இங்கு மதங்கள் பற்றிய விமர்சணங்கள் செய்தவர்களுக்கு ஒரு சிறு கேள்வி: இந்திய மதங்கள் குறிப்பிடும் கடவுள் என்பவர் யார் ? மேலை மதங்கள் குறிப்பிடும் கடவுள் என்பவர் யார் ?
(குறிப்பாக நண்பர்கள் தமிழ் ஓவியா, பிரியமுடன் வசந்த் ஆகியோருக்கு)

இதை நான் கேட்க காரணம் இது தான் தலைப்பிற்கான ஆதாரம். இல்லாவிடில் நம்மில் ஒருவர் பிரெஞ்சிலும், மற்றவர் ஜெர்மெனிலும் கலந்துரையாடுவது போல ஆகிவிடும் (ஓஷோ அடிக்கடி குறிப்பிடுவது போல பைத்தியகாரர்களின் விவாதங்கள் போல ஆகிவிடும்)

நன்றி!
வாழ்த்துக்கள்!!

உங்கள் ராட் மாதவ் 13 August 2009 at 9:08 am  

//இன்னொன்று தெரியுமா? இந்தியாவில் கேட்கும் இந்தக் கேள்விகளை அரபு நாடுகளிலோ ஒரு சில ஐரோப்பிய நாடுகளிலோ கேட்க முடியுமா?//

உண்மை. கேட்டால் தலை இருக்காது..

Eswari 13 August 2009 at 3:56 pm  

என்னை இந்த விவாதத்திற்கு அழைத்ததற்கு நன்றி. என் கருத்தை என் பதிவில் போட்டு உள்ளேன்.

http://padmaeswari.blogspot.com/2009/08/blog-post_13.html

நேரம் கிடைத்தல் வந்து படிக்கவும்.

Eswari 13 August 2009 at 3:58 pm  

என்னை இந்த விவாதத்திற்கு அழைத்ததற்கு நன்றி. என் கருத்தை என் வலைப்பதிவில் போட்டு உள்ளேன். நேரம் இருந்தால் வந்து படிக்கவும்.

http://padmaeswari.blogspot.com/2009/08/blog-post_13.html

தமிழ் ஓவியா 13 August 2009 at 7:03 pm  

கடவுளைப் பற்றி மா.சிங்காரவேலர் அவர்கள் கூறிய கருத்து ...

"கடவுள் என்பது ஒரு பழைமையான சொல். இந்தச் சொல்லுக்குரிய பொருளை யாரும் பார்த்த தில்லை. இந்தச் சொல்லால் குறிக் கப்படும் பொருளை மெய், வாய், கண், மூக்கு, செவிகள் மூலமாகவாவது அல்லது எந்தவிதக் கருவிகளாலா வது ஆராய்ந்து அறிந்தவர் உலகில் ஒருவரும் இல்லை.
ஒரு காலத்தில் மனிதன் பல்லாயிரம் வருஷங்களாகப் பேசத் தெரியாதவனாக இருந்தான். அந்தக் காலத்தில் கடவுள் என்ற சொல் உலகில் வழங்காதிருந்தது. இதைப் பற்றி யாரும் பேசுவாரில்லை; யாரும் சொல்லுவாரில்லை. இது லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முந்தி யிருக்கலாம். ஆனால் உலகில் உயிர் முளைத்து நூறு கோடி ஆண்டுகளி ருக்கும். இந்தக் காலங்களில் வாழ்ந்து மடிந்த உயிர்கள் பல கோடி. இவ்வுயிர்களுக்கு இச்சொல்லைச் சொல்லத் தெரிந்திருக்காது. இந்தக் காலங்களில் எந்த உயிரும் இச் சொல்லைச் சொல்லவும் இல்லை. மனிதன் மிருகத்திலிருந்து விடுபட்ட பின் பேச ஆரம்பித்தான். இவன் பேசத் தெரிந்து கொண்ட பிறகும் வெகுகாலம் இச்சொல்லை உச்சரிக் காதிருந்தான். மனித மொழி அபிவி ருத்தியடைந்த பிறகே கடவுள் என்ற சொல்லைக் கற்பனை செய்யத் தொடங்கினான்".

---------"கடவுளும் மனிதனும்" நூலில்...

Anonymous 14 August 2009 at 1:18 am  

அன்புள்ள வலை வாசகர்களே உங்கள் அனைவர் மீதும் இரைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ஆமீன்

இறைவனை நம்புவதால் உலகிர்கு நன்மையா இல்லையா தன்னை ஒருவன் கவனித்துக்கொண்டிருக்கிரான் நாளை நாம் தண்டிக்கபடுவோம் என்ரு ஒருவன் முலுமையாக நம்பினால் அவன் பொய் சொல்லமாட்டான் திருடமாட்டன் விபச்சாரம்செய்யமாட்டான் லஜ்ஜம்வாங்கமாட்டான் குடிக்கமாட்டான் இதனால் உலகிர்கு நன்மையா இல்லையா

Sabarinathan Arthanari 14 August 2009 at 6:34 am  

நண்பர்களே,

//அந்தக் காலத்தில் கடவுள் என்ற சொல் உலகில் வழங்காதிருந்தது. //

இங்கு ஒரு முக்கியமான விடயம். கடவுள் என்பவர் ஒரு கண்டுபிடிப்பு (invention) என நாத்திக நண்பர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஆத்திக நண்பர்கள் கடவுள் எப்போதும் இருக்கிறார். மனிதன் உணர்ந்து கொண்டான் (discovery) என்கிறார்கள்.

என்வே இக்கூற்று ‘கடவுள் இல்லை என்பது’ (உதாரணமாக) நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை வெளிப்படுத்தும் முன்னால் உயிரினங்கள்,பொருள்கள் புவியில் தொங்கி கொண்டு இருந்தன எனும் பொய் போல ஆகிவிடுமல்லவா ?

சிந்திக்க தூண்டியமைக்கு நன்றி!
வாழ்த்துக்கள்!!

Unknown 14 August 2009 at 7:41 am  

நன்றி வசந்த்

//குறிப்பிட்டு இந்துமதக்கடவுள்களால் இயற்க்கைக்கு ஆபத்து. இருக்குற மலைய உடைச்சுத்தானே அந்த காலத்தில இருந்து இந்தகாலம் வரை சிலைகளும் கோவில்களும் செய்துட்டு வர்றோம் அந்த மலைகளை உடைக்கும்போது அங்க இருக்குற மரம் செடிகளை வெட்டியிருப்பார்கள்தானே//

ஆஹா என்ன ஒரு சிந்தனை. ஏன் வசந்த் கோவில் கட்டவில்லை என்றால் மலையும் காடும் அப்படியே இருந்துருக்குமுன்னு சொல்றீங்களா (இன்று கான்கிரீட்ல பயன்படுத்துற ஜல்லி கல்லும் மலைய உடச்சிதான் உருவாக்குகிறாகள்)
கோவிலால் மலைக்கும் மரத்திற்க்கும் ஏற்படுற பாதிப்பு 0.0001% கூட கிடையாது. அதுமட்டும் இல்லாமல் கோவில் போன்றவை கண்டிப்பாக தேவை குறைந்த பட்சம் பொழுதுபோக்கிற்காவது.


//ஒரு உயிருக்கும் பாதகம் வரக்கூடாதுன்னு நினைக்கிறவர் கடவுள் கடவுள் நாம மனசுல நினைச்சா போதும் தானே.. அப்பறம் அந்த விவேக் காமெடியில வர்றது போல சாலையோர மைல்கல்லுக்கு குங்குமம் சந்தனம் வச்சு அதனோட உண்மையான பயனை மறைக்கிறது. இது டிரைவர்களுக்கு ஆபத்து....//

ஹா........ஹா........ஹா........

//ஆடு கோழி பலியிடுறதால அந்த வாயில்லா ஜீவன்களுக்கு ஆபத்து//

மேலே உள்ள பதில்தான். கடவுள் இல்லன்னா மட்டும் வாயில்லா ஜீவன்களுக்கு ஆப்த்து இல்லையா என்ன?

Unknown 14 August 2009 at 7:44 am  

நன்றி வசந்த்
//
//கடவுள் மனிதன் உருவாக்கியதா இல்லை கடவுள் மனிதனை படைத்தாரா//
வரலாறுகள் உண்மையாய் இருந்தால் இந்த கேள்விக்கு பதில் கடவுள் மனிதனை படைத்தார்.//

வரலாறுன்னு எதை சொல்றீங்க ராமாயனம் மகாபரதத்தையா?

//வரலாறுகள் பொய்யாயிருந்தால் இந்தகேள்விக்கு பதில் மனிதன் கடவுளை மனிதன் படைத்தான்//

எனக்கு சுத்தமா புரியல கொஞ்சம் விளக்கமுடியுமா?

நன்றி வசந்த்

Unknown 14 August 2009 at 9:09 am  

நன்றி அனானி

//intha vilayatuku nan varavilai//

வேற எந்த விளையாட்டு பிடிக்குமுன்னு சொல்லுங்க.

Unknown 14 August 2009 at 9:12 am  

நன்றி உமர்

//சோம்பேரிகளுக்கு அவன் தான் துணை
சுரு சுரு ப்பானவருக்கு அவனை நினைப்பதற்க்கு நேரம் இல்லை
அவ்வளதான்//

கடவுளை நம்புகிறவர் எல்லாம் சோம்பேரின்னு சொல்லிட முடியாது.
எனக்கு இந்த கருத்தில் உடன்பாடு இல்லை.

Unknown 14 August 2009 at 9:13 am  

நன்றி ஊர்சுற்றி

//இந்த விசயம் சரிதான். கடவுளை நம்பி தொழில் நடத்துபவர்கள் என்பதற்குப் பதிலாக, கடவுளை நம்பி நடக்கும் தொழில்கள் செய்வோர் என்று சொல்லலாமா? :)//

சொல்லலாம்.

Unknown 14 August 2009 at 9:26 am  

நன்றி சாதிக் அலி.

//ஐயா பெரியவங்களே தாய்மார்களே..கடவுள் இருக்கா இல்லையா?இருக்கிறார் என்றால் எங்கிருக்கிறார்?எப்படியிருக்கிறார்? என்ற கேள்விகள் எல்லாம் அரோக்கியமான கேள்விகள் தான். ஆனால் அதற்கு முன்னே கடவுள் என்று எதைக் குறிப்பிடுகிறோம் என்று ஒரு முடிவுக்கு வாருங்கள்.கடவுள் என்ற வார்த்தை தான் பொது ஆனால் கடவுள் என்ற வார்த்தைக்கு எல்லோரும் அவரவருக்கு ஏற்ற பொருள் கொள்கின்றர்.தேடும் பொருள் என்ன என்று தெளிவாகிய பின் தான் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி வரவேண்டும்.//

ஒரு விசயம் சாதிக் இங்கு நான் கடவுள் இருப்பை பற்றி கேள்வி எழுப்பவும் இல்லை விவாதிக்கவும் இல்லை. நமக்கும் நம் சமுகத்திற்க்கும் கடவுளின் பயன் என்ன மற்றும் கடவுளின் தேவை என்ன என்பதே. மீண்டும் ஒருமுறை கெள்விகளை படிக்கவும்.

//எனவே கடவுள் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் அவர்கள் நம்பும் கடவுள் எத்தகைய இயல்புடையவர் என்று தெளிவாக சொன்னால் தான் அப்படி ஒரு கடவுள் இருக்க முடியுமா என ஆராயலாம்.//

அதாவது எந்த மதகடவுள் என்று சொல்லிவிட்டு ஆரம்பிக்க வேண்டும் என்கின்றீர்கள்.

//அது போல கடவுள் நம்பிக்கை இல்லாதவரும் பொத்தாம் பொதுவில் கடவுள் இல்லை என்று சொல்லாமல் எப்படிப்பட்ட கடவுளை தான் நம்பவில்லை என்று தான் சொல்ல முடியும்.என்ன சரி தானே//

அதாவது எந்த மதகடவுள் என்று சொல்லிவிட்டு ஆரம்பிக்க வேண்டும் என்கின்றீர்கள்.

உங்களுக்கு ஒரு கேள்வி எந்த கடவுளாக இருந்தால் விவாதிப்பீர்கள்?

நன்றி சாதிக்.

Unknown 14 August 2009 at 10:32 am  

நன்றி திரு ஸ்ரீ ரமேஷ் சதாசிவம்

//என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது. //
நீங்கள் உங்கள் வாழ்கை சம்பவத்தை கூறி இருந்தீர்கள் அதி எனக்கு சில கேள்விகள் அல்லது மாற்று கருத்துகள்.

01. பத்து நாட்கள் கழித்து பெற்ற நன்பனின் உதவியை முதலிலே முயற்சித்திருந்தால் பத்து நாட்கள் வேற எதாவது உபயொகமான வேலை செய்திருக்கலாம் இல்லையா?

02. கந்தர் ச்ஷ்டி கவசம் மட்டும் கூறுவதால் பத்து நாட்கள் உணவில்லாமல் வாழலாமா? எந்தவித பக்க விளைவும் இல்லாமல் (குடல் புண்) மாத்த்திற்க்கு எத்தனை பத்துநாட்கள் உணவில்லாமல் இருக்க முடியும்

03. பொய் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
// அப்பொழுது என் உடலின் கடைசி சக்தியும் செலவழிந்திருந்தது. அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாமல் முட்டிக் கால்களை பிடித்துக் கொண்டு நிமிர முடியாமல் தவித்த அந்த வினாடி, என் இதயத்திலிருந்து ஒரு சக்தி உடலெங்கும் பரவியது. எழுந்தேன். சூளைமேட்டிலிருந்து அண்ணாசாலை வரை நடந்து சென்று cheque-ஐ வாங்கினேன்.//
வாழ்வின் கடைசி கட்ட்த்தில் இருக்கும் எந்த உயிரும் அதன் இருப்பை நீடிக்க எடுக்கும் கடைசி முயற்சி அசாத்தியமானது அதில் எந்த சந்தெகமும் இல்லை. இது இயற்கை.

04. கந்தர் ச்ஷ்டி கவசம் சொல்லாமல் இடுந்தாலும் இதேதான் நடந்திருக்கும்.

05. வாழ்வில் நடந்த சாதாரன நிகழ்சியை கடவுளுடன் இனைத்தவிதம் அவ்வளவாக பொருந்தவில்லை என்பதே என் கருத்து. (இங்கு சாதாரனம் என்று நான் கூற காரணம் நீங்கள் 2004 இருந்த நிலையில் தான் பெரும்பான்மையினர் இருகிறார்கள் என்பது தான் நிஜம்).

நன்றி திரு ஸ்ரீ ரமேஷ் சதாசிவம்

Unknown 14 August 2009 at 10:51 am  

நன்றி minorwall,
//விவாதம் என்பதை விட எல்லோருக்கும் பொதுவான எற்றுக்கொள்ளகூடியதுமான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.//
நன்றி.

//கடவுள் ஒருவேளை மனித இனத்தின் மூதாதையர்களாக இருந்திருக்கலாம்.வரலாற்று ரீதியாக நிறைய லிங்க் இருப்பதால்.தற்போது இருக்கும் எஞ்சிய சிலைவடிவங்களுக்கும் ஏனைய பிற வடிவமற்ற கடவுளருக்கும் சக்தி ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.நமது மூதாதையர்களுக்கு சக்தி ஏதும் இல்லாததைப்போல..//
இருக்கலாம்.

//வாழ்க்கைக்கு நம்பிக்கை அவசியம்.செயல்பாட்டின் விளைவு எதிர்பார்ப்புக்கு மாறாகும்போது அவநம்பிக்கை துளிர்ப்பது மனித இயல்பு. எல்லா மனிதர்களுக்கும் தொடர்ந்து நம்பிக்கையுடன் போராடி வாழ்வை எதிர்கொள்கிற ஆற்றல் இருப்பதில்லை.அவர்களுக்கு நம்பிக்கை தரும் இடமாக இந்த ஆலயங்கள் இருக்குமானால் இருந்துவிட்டுப்போகட்டும்.//

நல்ல சிந்தனை. ஒருவேளை கடவுளின் பயன் இதுவாக கூட இருக்களாம். ’’எல்லா மனிதர்களுக்கும் தொடர்ந்து நம்பிக்கையுடன் போராடி வாழ்வை எதிர்கொள்கிற ஆற்றல் இருப்பதில்லை’’ என்பது சத்தியமான உண்மை.
மற்றும் ஒரு கேள்வி அவர்களுக்கு ஆலயங்கள் மீது நம்பிக்கை எவ்வாறு உருவாகிறது?
அதை தவிர்த்து அவரவர் மேல் நம்பிக்கையை எப்படி உருவாக்குவது.

//பேரழிவு ஆயுதங்கள் கையிருப்பும் பொருளாதார வளமும் பொருந்திய நாடுகலாலான கூட்டமைப்பும் நட்டான்மைத்தனமும்தான் உலகத்தின் போக்கைத்தீர்மாநிக்கின்றன. (ஆட்சியாளர்கள் தீர்மானிக்கிறார்கள்.மனிதர்கள் தீர்மானிக்கிறார்கள்.)//
நிதர்சனமான உண்மை,

//கடவுள் வெறும் பொம்மைதான்.கற்சிலைதான்.பாவம். அவரை திட்டுவதை விட்டுவிடுங்கள்.
அப்படி சர்வ வல்லமை படைத்த ஒருவர் இருந்தால் நல்லாத்தான் இருக்கும்...(தசாவதாரம் கமல் பாணியில்)........//
கடவுளை இங்கே திட்டவில்லை.
நன்றி

Unknown 14 August 2009 at 11:11 am  

நன்றி supersubra,
//
//கடவுளால் மனிதனுக்கு என்ன பயன் அல்லது நன்மை?//
ஒரு வாதத்துக்காக ஒபாமா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அவர் இருப்பதாக நம்புவதில்லை. ஆனால் அவர் எடுக்கும் முடிவுகள் என்னை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும் இன்றைய உலக பொருளாதார சந்தையில். அது போல பிரபஞ்சத்தின் தலைவன் எடுக்கும் முடிவுகளும் என்னையும் பாதிக்கும்.//

அருமையான விளக்கம் இந்தற்கான பதில் பிறகு சொல்கிறேன்.

//ரிக் வேதத்தின் பிரபஞ்ச படைப்பு பற்றிய பாடலில்
யார் சொல்ல முடியும் யாருக்கு தெரியும்
எப்பொழுது இது வந்தது எப்படி இது வந்தது//

அருமையான வரிகள் ஆனால் மிகுதியான negative சிந்தனை உள்ளதாக படுகிறது.
எப்படியென்றால் யாருக்குமே தெரியாது மற்றும் தெரிந்து கொள்ளவும் முடியாது என்பது போல் உள்ளது.

ஆமாம் இந்த பிரபஞ்சம் எப்படி வந்த்தென்பதின் அராச்சியில் நாம் மிக சிலவற்றையே அறிந்துள்ளோம் என்பது உண்மை.

அதாவது பல கோடி நூற்றாண்டு கொண்ட பிரபஞ்சத்தை ஆராய்ந்து சில முடிவுகள் வர இன்னும் பல நூற்றாண்டு ஆகலாம். அதாவது Pre-KG மாணவனிடம் (a+b)^2 = என்ன என்று கேட்பது போல் உள்ளது.

முயன்றால் அனைத்திற்கும் பதில் கிடைக்கும் இல்லையொன்றால் கடவுள் என்ற பதிலுடன் சமாதானம் ஆகலாம்.

ஒருமுறையாவது முயற்சி செய்து பாருங்கள்.

//கடவுள்கள் கூட பின்னால் படைககபட்டவர்கள்தான்
யாருக்கு உண்மை தெரியும் இந்த தோற்றத்தை விளக்க //

மேலே கூறிய அதே பதில் தான்.

கோவி.கண்ணன் 14 August 2009 at 1:11 pm  

//கடவுளால் மனிதனுக்கு என்ன பயன் அல்லது நன்மை?//

கடவுளை அடையாளப்படுத்தும் மதவாதிகளுக்கும் அவர்களின் ஆளுமைக்கும் என்றுமே நன்மை, அதனால் தான் மதங்களைக் குறைச் சொல்லும் போது அது கடவுளை அவமதிக்கும் செயல் என்று பொங்கி எழுகிறார்கள். மதவாதிகளும் மனிதர்கள் தானே :)

மற்றவர்களுக்கு மன அமைதி கிடைக்கிறது ! (பொன்னும் பொருளும் கிடைப்பதாக நான் சொல்ல மாட்டேன்...அவை வெறும் நம்பிக்கை தான்)

//கடவுளால் பாதிக்கப்படுபவர்கள் யார் யார்? எப்படி?
//

நன்மை இருக்கிறது என்று கருத்தில் நம்பிக்கை உடையவர்கள் யாரும் பாதிக்கப்படுவதில்லை என்றாலும் கண்ணைத் தோண்டிப் போடுவது, விரலை வெட்டி உண்டியலில் போடுவது, நெருப்பில் நடப்பது, தலையில் தேங்காய் உடைத்துக் கொள்வது, குழந்தைகளை குழிக்குள் மூடி திறப்பது போன்ற மூடநம்பிக்கைகள் கடவுள் பெயரால் தான் நடக்கின்றன. இதில் தொடர்புடையவர்கள் அனைவருமே பாதிக்கப்படுபவர்கள், ஆனால் அதை வெளியே சொல்ல மாட்டார்கள்

//கடவுளை மனிதன் உருவாக்கினான இல்லை கடவுள் மனிதனை படைத்தாரா?//

மனிதனே மதங்களை உருவாக்கினான், கால வெள்ளத்தில் இன அடையாளம் கட்டிக்காக்க, பிற இனத்திடம் ஆளுமை செலுத்த அவர்களிடம் அதைப் பரப்ப மதம் மனிதனுக்கு தேவைப்பட்டது, மதம் காட்டும் கடவுள்கள் அனைத்தும் மனிதனின் உருவாக்கமே.


//கடவுள்___________________?//

நீங்களோ, நானோ இல்லை !
:)

Unknown 14 August 2009 at 3:26 pm  

நன்றி RAD MADHAV,

//நண்பரே தெய்வம் என்று ஒன்று உள்ளது. மனித மனதுகளை, ஒழுக்க நெறிமுறைகளை கட்டுப்படுத்த மனிதனே தனக்கு விரும்பிய கடவுள் அவதாரங்களை பல வடிவங்களில், பல பரிணாமங்களில் தானே (கண்ணால் காண முடியவில்லை என்பதால்) தேர்ந்தெடுத்து கொண்டான்.//

அதாவது ஒழுக்க நெறிமுறைகளுக்காக கடவுளை மனிதன் உருவாகினான் என்கிறீர்கள்.

இருக்கலாம்.

இதை கொஞ்சம் யோசிச்சு பாருங்க. அதாவது ஒரு குழந்தையை நாம் இதை செய்யாதே என்று சொல்வதற்கு பயன்படுத்தும்/பயமுறுத்தும் வார்த்தைகளை ஒரு வாலிபனிடமோ அல்லது வயோதிகனிடமோ பயன்படுத்த முடியாது. அதுபோல் என்றோ ஒழுக்க நெற்காக உருவக்கிய கடவுள் இன்று பயன்பட வாய்பே இல்லை அப்படி இருந்தால் நாகரீகமும் வளர்ந்திருக்காது நாமும் வளர்ந்திருக்க மாட்டோம். சட்டமும் காவல் துறையின் அவசியம் ஏற்பட்டிருக்காது.


//எழுதினால் பக்கங்கள் தீராது.
சுருக்கமாக இரண்டு வரிகளில்.
* மரணத்தின் நாழிகை முன்பே தெரிந்தால்?
* அடுத்த நொடி என்ன நிகழ்வு நிகழும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிந்தால்?
மனிதனிடம் கடவுள் நம்பிக்கை இருக்குமா என்பது சந்தேகமே....//

??????

Unknown 14 August 2009 at 3:39 pm  

நன்றி கோகுல்

//மனிதனால் இந்த உலகத்திற்கு என்ன பயன்? மனிதனால் மிருகங்களுக்கு என்ன பயன் ? இதற்கு பதில் சொன்னால் கடவுளால் மனிதனுக்கு என்ன பயன் என்று சொல்ல வசதியாக இருக்கும்.//

விவாத்த்தின் நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள் இங்கே அறிந்துகொள்ள/ தெரிந்துகொள்ள முற்படுவது – மனிதனுக்கு என்ன பயன் என்பதே ஏன்னென்றால் விவாதிப்பது மனிதர்கள். நான் அறிந்தவரை நீங்கள் கடவுள் இல்லை என்பது தான் யதார்தம்.


//மேலும், கடவுள் என்பது விஞ்ஞானிகளால் இரண்டு தளங்களில் விவாதிக்க படுகிறது ,
1. இந்த பிரபஞ்சத்தையும் பெரும் நக்ஷத்திர கூட்டங்களையும், அண்டத்தையும் பெருவெடிப்பு நிகழ செய்த சக்தி என்ற தளத்தில்.
2. ஒரு தனி மனிதன் வேண்டிக்கொள்ளும் சக்தி என்ற தளத்தில்.//

இதில் விஞ்ஞானம் மெய்ஞானம் எல்லாம் தேவை இல்லை மனிதற்க்கு என்ன பயன் அல்லது ஏன் தேவை என்பதே.


//நீங்கள் எந்த தளத்தில் இருந்து பேசுகறீர்கள்? கேள்விகளை தெளிவாக கேட்கவும். இரண்டு தளம் என்றெல்லாம் இல்லை , ஒரே கடவுளை பற்றி கேட்கிறேன் என்று சொன்னால் , sorry , hit count வேண்டுமானால் ஏறலாம் ஆனால் கேள்வி பதில் முழுமையாக இருக்காது.//

Hit countக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என் வலைதளம் வர்தக நோக்கிற்க்கோ அல்லது விளம்பர நோக்கிற்க்கோ ஏற்படுத்தியது கிடையாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


//ஏனெனில் இரண்டு தளங்களையும் ஒன்றாக வைத்து அறிவியல் பூர்வமாக விவாதம் செய்ய இயலாது.//

முயற்சி செய்து பாருங்களேன்.

நன்றி கோகுல்.

Unknown 14 August 2009 at 3:50 pm  

நன்றி திரு சபரிநாதன்.

//எப்போதும் நல்ல கருத்து பரிமாற்றமுள்ள எந்த ஒரு விவாதமும் படிப்பவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பதி்ல் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது.//

எனக்கும் இதில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளதால்தான் தேடி சென்று விவாத்த்திற்க்கு அழைக்கிறேன்.

//ஆனால் துரதிருஷ்ட வசமாக வலைபதிவுகளில் எப்போது இது போன்ற விவாதங்கள் நடை பெற்றாலும் பெரியார், பாரதியார், விவேகானந்தர் போன்ற பெரியோர்களையும், சக வலை பதிவு நண்பர்களையும் தனி நபர் தாக்குதல்களை மேற்கொள்வது வாடிக்கையாகி விட்டது.//

இதுவரை இங்கு அவ்வாறு நடைபெறவில்லை என்றவரையில் எனக்கும் மகிழ்ச்சியே.

//எனவே பின்னூட்ட மட்டுறுத்தலும், தனி நபர் தாக்குதல்களுக்கான பின்னூட்டங்கள் தயவு தாட்சண்யமின்றி நீக்கபடும் என்ற வாசகங்களும் இடுகையில் இடம் பேற்றால் ஒழிய இது முன்னேற்றத்திற்கான விவாதமாக இருக்காது.//

ஒருவிதத்தில் சரியே.

//
//கடவுள்// என்ற ஒரே பதத்தின் மூலம் பல்வேறு விதமான நம்பிக்கைகளை எப்படி ஒரே விதமாக அனுகுவது ? குறிப்பாக இந்திய துணை கண்ட மதங்களுக்கும் (சைவம், வைணவம், சமணம், புத்தம், சீக்கியம்) மேலை நாட்டு மதங்களுக்கும் (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம்) அடிப்படையில் மிகப்பெரிய வித்தியாசங்கள் உள்ளன.//

மீண்டும் சொல்கிறேன் கடவுளின் இருப்பை பற்றியதல்ல விவாதம். கடவுளின் தேவையை பற்றியது.

நன்றி திரு சபரிநாதன்.

Unknown 14 August 2009 at 3:54 pm  

நன்றி RAD MADHAV

//
//இன்னொன்று தெரியுமா? இந்தியாவில் கேட்கும் இந்தக் கேள்விகளை அரபு நாடுகளிலோ ஒரு சில ஐரோப்பிய நாடுகளிலோ கேட்க முடியுமா?//

உண்மை. கேட்டால் தலை இருக்காது..
//

நன்பர் செந்திலுக்கு கூறிய அதே பதில்தான்

இன்னொன்று புரிந்து கொள்ளுங்கள் நாம் இருக்கும் சமுகமே மேம்படாத போது நாம் ஏன் மற்றவர்களை பார்க்க வேண்டும். நல்லவற்றை வேண்டுமென்றால் மற்றவரிடமிருந்து பெற்று கொள்ளளாம் தீயவை/தேவையற்றவை எதற்க்கு(கேள்விகூட கேட்க முடியாத சூழ்நிலை எதற்க்கு?)

Unknown 14 August 2009 at 4:01 pm  

நன்றி nizamroja01

//இறைவனை நம்புவதால் உலகிர்கு நன்மையா இல்லையா தன்னை ஒருவன் கவனித்துக்கொண்டிருக்கிரான் நாளை நாம் தண்டிக்கபடுவோம் என்ரு ஒருவன் முலுமையாக நம்பினால் அவன் பொய் சொல்லமாட்டான் திருடமாட்டன் விபச்சாரம்செய்யமாட்டான் லஜ்ஜம்வாங்கமாட்டான் குடிக்கமாட்டான் இதனால் உலகிர்கு நன்மையா இல்லையா//

அப்படியா?

ஆக கடவுளை நம்புவோர் அனைவரும் குடிப்பதில்லை, திருடுவதில்லை, பொய் சொல்வதில்லை, விபசாரம் செய்வதில்லை என்பதே உங்கள் கருத்து – மிக்க நன்றி

ஒரு சீரியஸான விவாத்த்தில் எப்படி உங்களால் காமடி செய்ய தோன்றுகிறது.

நன்றி

Unknown 14 August 2009 at 4:06 pm  

நன்றி திரு சபரிநாதன்.

//என்வே இக்கூற்று ‘கடவுள் இல்லை என்பது’ (உதாரணமாக) நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை வெளிப்படுத்தும் முன்னால் உயிரினங்கள்,பொருள்கள் புவியில் தொங்கி கொண்டு இருந்தன எனும் பொய் போல ஆகிவிடுமல்லவா?//

கேள்வியை மாற்றியும் கேட்கலாம் இல்லையா அதாவது இக்கூற்று ‘கடவுள் உண்டு என்பது’ (உதாரணமாக) நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை வெளிப்படுத்தும் முன்னால் உயிரினங்கள்,பொருள்கள் புவியில் தொங்கி கொண்டு இருந்தன எனும் பொய் போல ஆகிவிடுமல்லவா?

நன்றி சிந்திக்க தூண்டியமைக்கு!

Unknown 14 August 2009 at 4:21 pm  

நன்றி திரு. கோவி.கண்ணன்.

இதுவரை விவாத்த்தில் வந்தவர்களில் நீங்களும் ஊர்சுற்றி தான் அனைத்திற்கும் உங்கள் கருத்தை கூறினீர்கள் - நன்றி.

//கடவுளை அடையாளப்படுத்தும் மதவாதிகளுக்கும் அவர்களின் ஆளுமைக்கும் என்றுமே நன்மை, அதனால் தான் மதங்களைக் குறைச் சொல்லும் போது அது கடவுளை அவமதிக்கும் செயல் என்று பொங்கி எழுகிறார்கள். மதவாதிகளும் மனிதர்கள் தானே :)
மற்றவர்களுக்கு மன அமைதி கிடைக்கிறது ! (பொன்னும் பொருளும் கிடைப்பதாக நான் சொல்ல மாட்டேன்...அவை வெறும் நம்பிக்கை தான்)//

உண்மை உடன்படுகிறேன்.

இந்த மன அமைதி வேறு எதிலும் கிடைக்காதா? அல்லது கட்வுளால் மட்டும் மன அமைதி கிடைகிறது என்ற மாயை எப்போது எப்படி உருவானது?

பயத்திற்காக கடவுளை பயன்படுத்தினார்கள் என்றால் – மனிதன் பயத்திற்க்காக பலவற்றை பயன்படுத்தியிருப்பான் அதில் ஒன்றுதான் கடவுள் – அந்த கட்வுள் மட்டும் இன்று நிலைதிருக்க காரணம் என்ன?

//நன்மை இருக்கிறது என்று கருத்தில் நம்பிக்கை உடையவர்கள் யாரும் பாதிக்கப்படுவதில்லை என்றாலும் கண்ணைத் தோண்டிப் போடுவது, விரலை வெட்டி உண்டியலில் போடுவது, நெருப்பில் நடப்பது, தலையில் தேங்காய் உடைத்துக் கொள்வது, குழந்தைகளை குழிக்குள் மூடி திறப்பது போன்ற மூடநம்பிக்கைகள் கடவுள் பெயரால் தான் நடக்கின்றன. இதில் தொடர்புடையவர்கள் அனைவருமே பாதிக்கப்படுபவர்கள், ஆனால் அதை வெளியே சொல்ல மாட்டார்கள்//

ஆம் நிஜம். அதனால்தானோ ஆன்மீகவாதிகள் உருவனார்கள்? (அதவது மூடநம்பிக்கை கலைந்து இறைவனை வழிபடுவது)

//மனிதனே மதங்களை உருவாக்கினான், கால வெள்ளத்தில் இன அடையாளம் கட்டிக்காக்க, பிற இனத்திடம் ஆளுமை செலுத்த அவர்களிடம் அதைப் பரப்ப மதம் மனிதனுக்கு தேவைப்பட்டது, மதம் காட்டும் கடவுள்கள் அனைத்தும் மனிதனின் உருவாக்கமே.//

எனக்கும் அப்படிதான் தொன்றுகிறது.

//நீங்களோ, நானோ இல்லை !//

மனிதனாக இருந்தாலே போதும் என்பது என் என்னம்.

நன்றி திரு. கோவி.கண்ணன்.

Unknown 14 August 2009 at 4:58 pm  

நன்றி தமிழ் ஓவியா,

//இவன் பேசத் தெரிந்து கொண்ட பிறகும் வெகுகாலம் இச்சொல்லை உச்சரிக் காதிருந்தான். மனித மொழி அபிவி ருத்தியடைந்த பிறகே கடவுள் என்ற சொல்லைக் கற்பனை செய்யத் தொடங்கினான்//

ஆமாம் அப்படிதான் இருந்திருக்க வேண்டும்.

அதாவது உங்கள் வாதத்தின் படி கடவுள் என்ற சொல்லே கற்பனை என்பதுதானே - இதனை ஒப்பு கொள்கிறேன்.

இங்கே விவாதிக்க இருப்பது கடவுள் என்ற கற்பனை தேவையா அல்லது அதனால் என்ன பயன் என்பதே?

நன்றி தமிழ் ஓவியா.

Unknown 14 August 2009 at 5:09 pm  

நன்றி தமிழ் ஓவியா.

//இது குறித்த பெரியாரின் கருத்து என்ன என்பதைப் பார்ப்போம்.பின் விவாதிக்கிறேன்.//

தந்தை பெரியாரின் கருத்துகளில் எனக்கு மிகுந்த மதிப்பு உள்ளது எந்த சூழ்நிலையிலும் எனக்கு எதிர் கருத்தும் கிடையாது.

நீங்கள் உங்கள் விவாதத்தை தொடங்குங்களேன்.

நன்றி தமிழ் ஓவியா.

Unknown 14 August 2009 at 5:10 pm  

நன்றி கலையரசன்

//பின்னூட்டங்கள் வரட்டும்!
நானும் ஜாயின் பண்ணிக்கிறேன்!//

இன்னும் எத்தனை பின்னூடம் வேண்டும்.

நன்றி கலை

Unknown 14 August 2009 at 5:12 pm  

நன்றி தருமி ஐயா.

உங்கள் பின்னூடத்திற்கு என் கருத்தை பிறகு தெரிவிக்கிறேன்

நன்றி.

ராஜவம்சம் 14 August 2009 at 7:17 pm  

//ஒரு சீரியஸான விவாத்த்தில் எப்படி உங்களால் காமடி செய்ய தோன்றுகிறது.//

உங்களூடைய கருத்தை ஏற்றவர்கள் சொல்வது மட்டும் தான் உங்களுக்குசரியாகதோன்றுகிறது

நான் பதினைந்து வயதுகுல் எல்லா கெட்டப்பழக்கத்திற்கும் ஆழாணவன்.

கடவுள் நம்பிகை தோன்றியது தண்டிக்கபடுவோம் என்றபயம் உங்கள் கருத்துபடி இது மூடநம்பிக்கையாக இருக்கலாம் நான் கடவுளுக்கு பயந்து எல்லாகெட்டபழக்கத்தையும் விட்டேன்
(நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி)இதனால் எனக்கு நன்மை ஏற்பட்டதா இல்லையா?

Unknown 14 August 2009 at 7:41 pm  

நன்றி ராஜ வம்சம்.

//உங்களூடைய கருத்தை ஏற்றவர்கள் சொல்வது மட்டும் தான் உங்களுக்கு சரியாக தோன்றுகிறது//

இது மனித இயல்பு. இருந்தாலும் எல்லா பின்னூடத்தின் என் கருத்தை முடிந்தவரை நடுநிலமையாக/நேர்மையாக செயல்படுவதாகவே தோன்றுகிறது. எங்காவது தவிறியிருந்தால் சுட்டி காட்டவும்.

//நான் பதினைந்து வயதுகுல் எல்லா கெட்டப்பழக்கத்திற்கும் ஆழாணவன்.
கடவுள் நம்பிகை தோன்றியது தண்டிக்கபடுவோம் என்றபயம் உங்கள் கருத்துபடி இது மூடநம்பிக்கையாக இருக்கலாம் நான் கடவுளுக்கு பயந்து எல்லாகெட்டபழக்கத்தையும் விட்டேன்//

இருக்கலாம். அனால் நீங்கள் ஒருவர் மட்டும் உலகம் இல்லை மற்றும் நீங்கள் நினைத்தது போல் எல்லோரும் நினைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

//(நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி)இதனால் எனக்கு நன்மை ஏற்பட்டதா இல்லையா?//

நான் நம்புகிறேன் நீங்கள் கடவுளுக்கு பயந்து அனைத்து கெட்டபழக்கத்தையும் விட்டீர்கள் என்று ஆனால் நீங்கள் மட்டும் உலகம் இல்லை.

கோவி.கண்ணன் 14 August 2009 at 7:48 pm  

//
இந்த மன அமைதி வேறு எதிலும் கிடைக்காதா? அல்லது கட்வுளால் மட்டும் மன அமைதி கிடைகிறது என்ற மாயை எப்போது எப்படி உருவானது?

பயத்திற்காக கடவுளை பயன்படுத்தினார்கள் என்றால் – மனிதன் பயத்திற்க்காக பலவற்றை பயன்படுத்தியிருப்பான் அதில் ஒன்றுதான் கடவுள் – அந்த கட்வுள் மட்டும் இன்று நிலைதிருக்க காரணம் என்ன?//

வெறும் பயம் இல்லிங்க, கடுமையான உடல் நோய்கள், மரண பயம் இவற்றின் பயம் மனிதனுக்குத்தான் அதிகம், விலங்குகளுக்கு நோய்கள் வலிகள் இருந்தாலும் அவை நோய்கள் குணம் ஆகுமா ஆகாதா ? என்றெல்லாம் கவலை படாது, அவைகளுக்கு மரண பயமும் கிடையாது.

அழகாக அமைந்த இயற்கையை பார்க்கும் போது அவை மேலான சக்தி ஒன்றால் படைக்கப்பட்டு இருக்கும் என்கிற கற்பனை மனிதனுக்கு மட்டுமே ஏற்படும், அந்த நம்பிக்கை வழியாக கடவுள் நம்மை காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கையும் அவனுக்கு ஏற்படுவது இயல்புதான்.

அதனால் அதான் அவன் காட்டுவாசியாக இருந்தாலும் கூட எதோ ஒரு கடவுளை நம்புகிறான்.

ஆனால் இயற்கை மனிதன் பார்த்து ரசிக்க வேண்டும், மனிதனுக்கு மட்டுமே பயனாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவானது இல்லை, ஏனென்றால் மனிதர்களே வசிக்காத பகுதிகளும், ஆழ்கடல் மீன்களும், அடர்ந்த காடுகளும் கூட அழகாகத்தான் இருக்கின்றன

Bibiliobibuli 15 August 2009 at 12:11 am  

என்னுடைய கருத்து எந்தவொரு மதத்தை சார்ந்த கடவுளையோ அல்லது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களையோ கருத்தில் கொண்டு எழுதப்பட்டதல்ல. அப்படி யாரையாவது புண்படுத்தியிருந்தால், தயவு செய்து மன்னிக்கவும்.

பிரதீப்,

முதலில், மனிதன் தான் கடவுளை உருவாக்கினான் என்பது என் கருத்து. சரி, கடவுள் என்ற கருத்தியலை அல்லது கொள்கையை ஏன் உருவாக்கினான் என்று கேள்வி கேட்டால், உங்கள் அடுத்த கேள்விக்கு பதில் வருகிறது. அதாவது கடவுளால் மனிதனுக்கு என்ன பயன்? கடவுளை உருவாக்கியவர்கள் நிச்சயமாக ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் உருவாக்கியிருப்பார்கள். அது நன்மை அல்லது தீமையாக/சுயலாப நோக்கமாக கூட இருக்கலாம்.

நன்மை என்று பார்த்தால் தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும் என்று பொதுநல நோக்கோடு மனித சமுதாயத்தில் ஏதோ ஒரு ஒழுக்கத்தை நிலைநாட்ட (Moral value) உதவுவதாய் கூடவிருக்கலாம். இது மட்டுமே நடந்திருந்தால் நன்றாகத்தானிருக்கும்.

ஆனால், கடவுள் என்ற கருத்தியல் ஏனோ இக்காலத்தில் ஒரு வியாபாரப் பொருளாகப் போய்விட்டது என்பது என் கருத்து. அது கடவுள் தலங்கள் முதல் தங்களை கடவுளின் பிரதிநிதகள் என்று தனிமனிதர்கள் சொல்லுமளவிற்கு சீரழிந்து கிடக்கிறது. இதனால் மனிதனுக்கு என்ன பயன்? மூடநம்பிக்கைகளும் ஏமாற்று வேலைகளுமே மனிதசமுதாயத்தில் மலிந்து கிடக்கிறது. இது மனிதகுலத்திற்கு ஒரு ஆரோக்கியமான விடயம் இல்லையே.

உதாரணமாக, புகைத்தல் உடல் நலத்திற்கு கேடு என்று பெட்டியிலேயே எழுதிவிட்டு அதை உலகிலுள்ள அனைத்து அரசுகளும் தானே விற்பனைக்கு அனுமதிக்கின்றன. அதேபோல், இந்தியாவில் திருப்பதியில் உண்டியல் காணிக்கை அரசுக்கு பெரும் வருமானத்தை கொடுப்பதாகப் படித்திருக்கிறேன் (எனக்கு தெரிந்தது இந்த ஒன்று தாங்க). அதனால் இந்திய அரசு அதை ஊக்குவிக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?ஆக, அரசாங்கங்களே இப்படியான விடயங்களை (சிகரெட் முதல் கடவுள் நம்பிக்கை வரை) ஊக்குவிக்கும் போது, சாதரண மனிதர்கள் நாம் கடவுளால் எங்களுக்கு நன்மையா தீமையா என்ற பகுத்தறிவுக் கேள்விக்கெல்லாம் பதில் காண அறிவு இருக்கிறதா? எனக்கு சொல்லத்தெரியவில்லை. ஆனால், விடை காண வேண்டும் என்ற கட்டாயம் மனிதகுலத்திற்கு உண்டு.

ஆளவந்தான் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் சொல்லுமே, மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கிறேன். ஆனால், கடவுள் கொன்று மிருகம் மட்டும் வளர்கிறது என்று. இப்படி ஒரு மோசமான நிலைக்கு மனிதகுலம் தள்ளப்படாதவரை சந்தோசம் தான்.

ஆகவே, மனிதர்களையும் மனங்களையும் நேசிப்போம். கடவுள் தானாகவே உங்கள் ரூபத்தில் (மனிதரூபத்தில்) காட்சி தருவார். அப்படி நடந்தால் உலகமும் மனிதகுலமும் சுபீட்சம் பெறும். என்னங்க, நான் சொல்லறது சரியா?

minorwall 15 August 2009 at 9:17 am  

//ஆகவே, மனிதர்களையும் மனங்களையும் நேசிப்போம். கடவுள் தானாகவே உங்கள் ரூபத்தில் (மனிதரூபத்தில்) காட்சி தருவார். அப்படி நடந்தால் உலகமும் மனிதகுலமும் சுபீட்சம் பெறும். என்னங்க, நான் சொல்லறது சரியா? //

மிகச்சரி. இங்கேயும் அன்பே சிவம் படத்து கமல் கான்செப்டை டச் பண்ணிருக்கீங்கோ..
நீங்க பெரிய கமல் ரசிகரா இருப்பீங்களோ?

சாரி. ரொம்ப டீப்பா எல்லோருமே சிந்தனை பண்றதாலே கொஞ்சம் பிரேக்.ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னுதான் கமல் பட trackலே கதையை கொண்டுபோறேன்..

minorwall 15 August 2009 at 10:43 am  

//நல்ல சிந்தனை. ஒருவேளை கடவுளின் பயன் இதுவாக கூட இருக்களாம். ’’எல்லா மனிதர்களுக்கும் தொடர்ந்து நம்பிக்கையுடன் போராடி வாழ்வை எதிர்கொள்கிற ஆற்றல் இருப்பதில்லை’’ என்பது சத்தியமான உண்மை.
மற்றும் ஒரு கேள்வி அவர்களுக்கு ஆலயங்கள் மீது நம்பிக்கை எவ்வாறு உருவாகிறது?
அதை தவிர்த்து அவரவர் மேல் நம்பிக்கையை எப்படி உருவாக்குவது.
.//
பாடத்திட்டங்களில் மாற்றங்களைகொண்டுவருவதன் மூலம், அறநிலையத்துறை ஆலயங்களின் நிர்வாகத்தில் புதிய விதிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்துவதன் மூலம், ஆலயங்கள் வெறும் புராதனச் சின்னங்களே என்று அரசு அறிவிப்பதன் மூலம், (சமீபத்திலே அதிமுக அரசு உயிர்பலியிடுதல் தவறு என்று அறிவித்ததும் பின்னர் மக்கள் எதிர்ப்பு காரணமாக கைவிட்டதும் நினைவுக்கு வருகிறது.)ஊடகங்களின் மூலம் தவறான பிரச்சாரங்களை அனுமதிப்பதை செய்தி-ஒலிபரப்புத்துறை கட்டுப்படுத்துவதன் மூலம் என்று பட்டியல் நீளும்..

எப்படிப் பார்த்தாலும் அரசின், அரசு அதிகாரிகளின் செயல்திட்டங்களினால்தான் இவற்றை நடைமுறைப்படுத்த இயலும்.
அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்து மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறேன் என்று கொள்கை நிலைப்பாட்டை ஏற்று செயல்படும் இயக்கங்களின் செயல்பாட்டு விளைவு இந்த 40வருடங்களிலே எந்த அளவுக்கு நடைமுறையில் சாதித்திருக்கிறதோ அதனைவிட இன்னும் அதிகமாக சாதித்திருக்கலாமோ என்பது எனது எண்ணம்.

எல்லாம் மாறும்.தனிமனிதர்கள் தங்களின் சுய அனுபவத்தால் மாறுவார்கள்.காலம் மேலும் 50ஆண்டுகளை விழுங்கினாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை.

minorwall 15 August 2009 at 11:20 am  

(சிறு திருத்தம்)

அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்து மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறேன் என்று கொள்கை நிலைப்பாட்டை ஏற்று செயல்படும் இயக்கங்களின் செயல்பாட்டு விளைவு இந்த 40வருடங்களிலே எந்த அளவுக்கு நடைமுறையில் சாதித்திருக்கிறதோ அதனைவிட இன்னும் அதிகமாக அரசியலிலே நேரடியாக ஈடுபட்டிருந்தால் சாதித்திருக்கலாமோ என்பது எனது எண்ணம்.

Unknown 19 August 2009 at 2:59 pm  

நன்றி கோவி.கண்ணன்.

//அழகாக அமைந்த இயற்கையை பார்க்கும் போது அவை மேலான சக்தி ஒன்றால் படைக்கப்பட்டு இருக்கும் என்கிற கற்பனை மனிதனுக்கு மட்டுமே ஏற்படும், அந்த நம்பிக்கை வழியாக கடவுள் நம்மை காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கையும் அவனுக்கு ஏற்படுவது இயல்புதான்.//

நீங்கள் சொல்வது போல் இயல்புதான் அவன் காட்டுவாசியாக இருக்கும்வரை. இன்றும் சற்று மாறிய நாகரீக காட்டுவாசியாகவே அல்லவா இருகிறார்கள்.

கடவுள்:
பயத்தினால் மட்டும் தோன்றியவர் இல்லை கடவுள் என்பது உண்மையே ஆம் எந்த பயமாக இருந்தாலும் (மரணபயம்.............) அனைத்து உயிர்களுக்கும் உள்ளது. ஆனால் கற்பனை என்பது மனிதனுக்கு மட்டுமே! ஆம் அந்த கற்பனைதான் கடவுளை உருவாக்கியது உயிர்பெற செய்தது.

Unknown 19 August 2009 at 3:30 pm  

நன்றி ரதி.
//என்னுடைய கருத்து எந்தவொரு மதத்தை சார்ந்த கடவுளையோ அல்லது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களையோ கருத்தில் கொண்டு எழுதப்பட்டதல்ல. அப்படி யாரையாவது புண்படுத்தியிருந்தால், தயவு செய்து மன்னிக்கவும்.//

யாரையும் புண்படுத்தாமல் எந்த கருத்தையும் சொல்ல முடியாது. இதில் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

//முதலில், மனிதன் தான் கடவுளை உருவாக்கினான் என்பது என் கருத்து.//
அப்படித்தான் இருக்கமுடியும் என்பது இதுவரை அறிவியல் அறிந்த உண்மை.

//சரி, கடவுள் என்ற கருத்தியலை அல்லது கொள்கையை ஏன் உருவாக்கினான் என்று கேள்வி கேட்டால், உங்கள் அடுத்த கேள்விக்கு பதில் வருகிறது. அதாவது கடவுளால் மனிதனுக்கு என்ன பயன்? கடவுளை உருவாக்கியவர்கள் நிச்சயமாக ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் உருவாக்கியிருப்பார்கள். அது நன்மை அல்லது தீமையாக/சுயலாப நோக்கமாக கூட இருக்கலாம்.//

கடவுளை ஏன் உருவாக்கினான் என்று கேட்டால் ஆயிரம் காரணம் வரும் அதில் ஒன்று மனிதனை நெறிபடுத்த (அதாவது இறந்த காலம்)
ஆனால் என் கேள்வி: கடவுளால் மனிதனுக்கு என்ன பயன்? இல்லையென்றால் இப்படியும் கேட்கலாம் அதாவது இன்றைய சமுதாயத்திற்க்கு கடவுள் தெவையா? (நான் அறிய முற்படுவது முடிந்த காரணத்தை அல்ல இன்றைய தேவையை.)

//நன்மை என்று பார்த்தால் தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும் என்று பொதுநல நோக்கோடு மனித சமுதாயத்தில் ஏதோ ஒரு ஒழுக்கத்தை நிலைநாட்ட (Moral value) உதவுவதாய் கூடவிருக்கலாம். இது மட்டுமே நடந்திருந்தால் நன்றாகத்தானிருக்கும். //

இது மட்டும்தான் நன்மையென்றால் இது போன்ற குருட்டு நம்பிக்கை தேவைதானா?

//உதாரணமாக, புகைத்தல் உடல் நலத்திற்கு கேடு என்று பெட்டியிலேயே எழுதிவிட்டு அதை உலகிலுள்ள அனைத்து அரசுகளும் தானே விற்பனைக்கு அனுமதிக்கின்றன. அதேபோல், இந்தியாவில் திருப்பதியில் உண்டியல் காணிக்கை அரசுக்கு பெரும் வருமானத்தை கொடுப்பதாகப் படித்திருக்கிறேன் (எனக்கு தெரிந்தது இந்த ஒன்று தாங்க). அதனால் இந்திய அரசு அதை ஊக்குவிக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? ஆக, அரசாங்கங்களே இப்படியான விடயங்களை (சிகரெட் முதல் கடவுள் நம்பிக்கை வரை) ஊக்குவிக்கும் போது, சாதரண மனிதர்கள் நாம் கடவுளால் எங்களுக்கு நன்மையா தீமையா என்ற பகுத்தறிவுக் கேள்விக்கெல்லாம் பதில் காண அறிவு இருக்கிறதா? எனக்கு சொல்லத்தெரியவில்லை. ஆனால், விடை காண வேண்டும் என்ற கட்டாயம் மனிதகுலத்திற்கு உண்டு.//

அருமையான உதாரணம் ரதி.

புகைத்தலை அரசு அனுமதிக்கிறது எச்சரிக்கையுடன்.
இப்படி யோசிச்சி பாருங்க: அதாவது அந்த எச்சரிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் புகைப்பவரின் என்னிக்கையில் மாற்றம் கண்டிப்பாக இருக்காது அவனாக அல்லது அவளாக உணரும் வரை. அந்த உணர்வு எப்படி வரும். நல்ல கல்வி மற்றும் வாழ்வின் அனுபவத்தால் தான். அனைத்தையும் அனுபவத்தால் தான் கற்க்க வேண்டும்மென்றால் மனிதனுக்கு ஆயிரம் ஆண்டுகள் கூட போதாது. அதனால்தான் இது போன்ற விவாதங்கள்.

//ஆகவே, மனிதர்களையும் மனங்களையும் நேசிப்போம். கடவுள் தானாகவே உங்கள் ரூபத்தில் (மனிதரூபத்தில்) காட்சி தருவார். அப்படி நடந்தால் உலகமும் மனிதகுலமும் சுபீட்சம் பெறும். என்னங்க, நான் சொல்லறது சரியா?//

சரியென்றே தோன்றுகிறது. பார்போம்.

நன்றி ரதி.

Unknown 19 August 2009 at 3:41 pm  

நன்றி மைனர்வால்,

//அதை தவிர்த்து அவரவர் மேல் நம்பிக்கையை எப்படி உருவாக்குவது?
பாடத்திட்டங்களில் மாற்றங்களைகொண்டுவருவதன் மூலம், அறநிலையத்துறை ஆலயங்களின் நிர்வாகத்தில் புதிய விதிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்துவதன் மூலம், ஆலயங்கள் வெறும் புராதனச் சின்னங்களே என்று அரசு அறிவிப்பதன் மூலம், (சமீபத்திலே அதிமுக அரசு உயிர்பலியிடுதல் தவறு என்று அறிவித்ததும் பின்னர் மக்கள் எதிர்ப்பு காரணமாக கைவிட்டதும் நினைவுக்கு வருகிறது.)ஊடகங்களின் மூலம் தவறான பிரச்சாரங்களை அனுமதிப்பதை செய்தி-ஒலிபரப்புத்துறை கட்டுப்படுத்துவதன் மூலம் என்று பட்டியல் நீளும்..//

அருமையான விளக்கம் மைனர்வால். உண்மையில் உங்கள் வாதங்கள் ஒருவித அரோகியமான அடுத்தகட்ட வாதங்களாக உள்ளது. மிக்க நன்றி. கண்டிப்பாக நீங்கள் கூறியவற்றை பற்றி இன்னும் விரிவாக அலசுவோம் அதாவது தனிமனிதனாக எந்த அளவு மற்றத்தை எப்படி ஏற்படுத்த முடியும் என்று.

//எல்லாம் மாறும்.தனிமனிதர்கள் தங்களின் சுய அனுபவத்தால் மாறுவார்கள்.காலம் மேலும் 50ஆண்டுகளை விழுங்கினாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை.//

500 ஆண்டுகளும் ஆகலாம்.

//அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்து மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறேன் என்று கொள்கை நிலைப்பாட்டை ஏற்று செயல்படும் இயக்கங்களின் செயல்பாட்டு விளைவு இந்த 40வருடங்களிலே எந்த அளவுக்கு நடைமுறையில் சாதித்திருக்கிறதோ அதனைவிட இன்னும் அதிகமாக அரசியலிலே நேரடியாக ஈடுபட்டிருந்தால் சாதித்திருக்கலாமோ என்பது எனது எண்ணம்.//

எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.

நன்றி மைனர்வால்.

Unknown 9 October 2009 at 2:44 am  

நன்றி திரு supersubra

//ஒரு வாதத்துக்காக ஒபாமா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அவர் இருப்பதாக நம்புவதில்லை. ஆனால் அவர் எடுக்கும் முடிவுகள் என்னை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும் இன்றைய உலக பொருளாதார சந்தையில். அது போல பிரபஞ்சத்தின் தலைவன் எடுக்கும் முடிவுகளும் என்னையும் பாதிக்கும்.//

சுஜாதாவின் கடவுள் இருக்கிறாரா? என்ற புத்தகத்தை படிச்சிருப்பீங்கன்னு நினைக்குரேன். உங்களுக்கு அவரோட பதில்தான். ஒபாமாவின் இருப்பையும் செயல்களையும் அதன் விளைவையும் மெய்பிக்க முடியும். அனால் கடவுளின்?

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP