மீள்பின்னூடம் - (பழைய பதிவின் பின்னூடமும் விளக்கமும்) – 1

Wednesday 19 August, 2009

எல்லோரும் மீள்பதிவு போடும்போது நாம் ஏன் மீள் பின்னூடம் போடகூடாதுன்னு தோன்றியது அதனால் தான் இந்த பதிவு. இதுல இன்னொரு கொடுமை என்னவென்றால் இதுதான் முதல் பாகம். (இன்னும் நிறைய மீள் பின்னூடம் இருக்கு)



இந்த பின்னூடம் வந்த பதிவை வாசிக்க இங்க கிளிக் பன்னுங்க.



மீள்பின்னூடம் – 1.



முதலில் நன்றி திரு. கிருஷ்ண பிரபு, (இவரின் பின்னூடமும் அதற்கான என் வாதமும்) உங்க கருத்தையும் பின்னூடமிடுங்க.



//மேலும் மதம், சாதி போன்ற அமைப்புகளும் ஒரு குழுவாக வாழத்தானே தோற்றுவிக்கப்பட்டது.//

இந்த கருத்தை ஏற்று கொள்ள முடியவில்லை கிருஷ்ண. ஒவ்வொரு இனமும் தனி குழுவாக வழலாமே ஒழிய அந்த இனத்தில் பாகுபாடு என்பது ஏற்று கொள்ளமுடியாது. உதாரணத்திற்க்கு தமிழ் பேசும் அனைவரும் ஒரு குழுவாக வாழலாமே தவிர அதில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த சாதி இருக்ககூடாது.

நீங்க கேட்கலாம் ஒவ்வொரு இனமும் குழுகளாக இருக்கும் போது சாதி ஏன் இருக்ககூடாதென்று. ஏன்னென்றால் சாதியில் உள்ள பாகுபாடு இனத்தில் இல்லை அது மட்டும் இல்லாமல் இனம் என்பது ஒரு முழு சமுகத்தை குறிக்கும் ஆனால் சாதி ஒரு சமுகதிற்க்குள்ளே பல பாகுபாடு உருவாக்குகிறது.

விளக்கம்: இனம் என்று இங்கு நான் குறிப்பது ஒரே மொழி பேசுவோர். ஆம் எந்த ஒரு மனிதனும் தன் தாய்மொழியில்தான் தன் முழு கருத்தையும் கூறமுடியும். எவ்வளவு சரளமாக வேற்று மொழி தெரிந்தாலும் தாய் மொழி மூலமாக தான் உணரமுடியும் என்பது என் கருத்து.


//ஒரு குழந்தை சினிமாவைப் பார்த்து கெட்டுப்போகிறது என்றால் நம்பலாம். சுய அறிவுள்ள ஒருவர் கனவுத் தொழிற்சாலையைப் பார்த்து கெட்டுப் போவது நம்ப முடியாத ஒரு விஷயம். அப்படி நம்பித்தான் ஆகவேண்டுமெனில் சினிமாதான் கெடுக்கிறது எனில் அது சினிமாவால் அல்ல. தனி மனிதனுக்கு ஒழுக்கம் இல்லாததால்.தனிப்பட்டவனுடைய சபல மனதால்...//

ஒரு மனிதனுக்கு தனிமனித ஒழுக்கம் என்பது எப்போது உருவாகிறது?
நான் அறிந்தவரை குழந்தை பருவத்திலிருந்தே அந்த குழந்தை பார்கின்ற சமுகம், பெற்றோர், சூழ்நிலை இவையாவும் தனிமனித ஒழுக்கத்தை நிர்னைப்பதாக நினைக்கிறேன். அப்படியென்றால் கட்டாயம் சினிமா தனிமனித ஒழுக்கத்தை பாதிக்கிறது (எந்த அளவு என்பதே வேறுபடுகிறது).


//சினிமாவிற்கும் தொலைக்காட்சிக்கும் பெரிய வித்யாசம் இல்லை.//

கண்டிப்பாக வித்யாசம் இருக்கிறது ஏன்னெறால், தினமும் சினிமா பார்பவர்களை காண்பது அரிது. ஆனால் தொலைகாட்சியை அனைவரும் ஒரு நாளில் ஒரு முறையாவது பார்கிறோம். அதானால் தொலைகாட்சியின் பாதிப்பு சினிமாவைவிட அதிகம்.


//மதம் நிச்சயமாக கலாச்சாரத்தை சீரழிக்காது. கலாச்சாரத்தை காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் அது சமூகத்தை வேண்டுமென்றால் சீரழிக்கலாம். அப்படித்தானே நடக்கிறது.//

இதற்க்கு பதில் நீங்க எழுதிய முதல் பத்தையை மறுபடியும் படிங்க.


//இன்று சாதிய முறையை அழிக்க வேண்டுமென்கிறார்கள். ஆனால் பள்ளிக்கூடத்தில் சேரும்போது அதனைக் குறிப்பிட வேண்டுமென்கிறார்கள்.ஆகவே சாதியம் கலாச்சாரத்தைக் கெடுக்கிறது எனில் அதற்கான முக்கிய பங்கு கல்வி சார்ந்த அமைப்புகளுக்கு உண்டு. கல்வித் துறை அரசியலை சார்ந்துள்ளதால் அரசியல் வாதிகளுக்கும் அதில் ஒரு பங்கு உண்டு.//

கல்வியில் சாதியை குறிப்பிட சொல்வதின் நோக்கம்: அனைவருக்கும் சமமான நிலை வரவேண்டும் என்பதால், உங்களுக்கு எந்த சலுகையும்/அடையாளமும் வேண்டாம் என்றால் குறிப்பிட தேவையில்லை. அதுமட்டும் இல்லாமல் இன்றைய நிலையில் கலப்பு திருமனம், சுய மரியாதை திருமணம் எல்லாம் அரசு அங்கிகாரம் பெற்றது தானே அங்கே எந்த சாதியை குறிப்பிடுவீர்கள்.


//ஒழுங்கான கல்வி கலாச்சாரத்தைக் கெடுக்காது.//

சரியாக புரிய வில்லை ஒழுங்கான கல்வியா இல்லை ஒழுக்கத்துடன் கூடிய கல்வியா?


//சுய கலாச்சாரத்துடன் மாற்று கலாச்சாரத்தை தொடர்புபடுத்தும் போதுதான் பிரச்சனையே. அந்தத் தொடர்பு படுத்துதல் வேண்டுமெனில் கலாச்சாரத்தைக் கெடுக்கலாம்.//

அப்படியென்றால் ஒப்பீடு என்பதே கூடாது என்கிறீர்களா. நீங்கள் நினைத்து கொண்டிருக்கும் கலாசரமும் பல கலாச்சாரத்தின் பாதிப்பில் வந்ததுதானே.


//அனால் அது மெத்தப் படித்த தனி மனிதனின் ஒழுக்கக்கேடினால் விளைவது.//

அப்போ ஒழுக்கத்திற்க்கும் கல்விக்கும் தொடர்பில்லைன்னு சொல்றீங்களா?


//வேறு எதைக் காட்டிலும் தனி மனித ஒழுக்கம் இல்லையெனில் குடும்பத்திலிருந்து, சுற்றத்திலிருந்து சமுதாயத்திலிருந்து, கலாச்சாரத்திலிருந்து அனைத்துமே கெடும் என்பது என்னுடைய கருத்து.//

இவை அனைத்தும் அல்லவா தனிமனித ஒழுக்கத்திற்க்கு பாதிப்பை ஏற்படுத்துவது.

உங்க கருத்தையும் பின்னூடமிடுங்க.

நன்றி.

5 comments:

Bibiliobibuli 19 August 2009 at 6:44 pm  

பிரதீப்,

////மேலும் மதம், சாதி போன்ற அமைப்புகளும் ஒரு குழுவாக வாழத்தானே தோற்றுவிக்கப்பட்டது.////

//உதாரணத்திற்க்கு தமிழ் பேசும் அனைவரும் ஒரு குழுவாக வாழலாமே தவிர அதில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த சாதி இருக்ககூடாது.//

முதலில், சாதி மதம் என்ற கருத்தியலும் அமைப்புகளும் மனிதர்களை குழுக்களாக வாழவைக்க தோற்றுவிக்கப்பட்டதாக எனக்கு தோன்றவில்லை. ஆண்டான், அடிமை என்ற வர்க்க முரண்பாடுகள் மூலம் ஒருவர் ஒருவரை அடக்கியாளும் ஓர் வழிமுறையாகவே சாதி, மதம் என்ற கோட்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டன என்று தான் நான் நினைக்கிறன்.

அடுத்து, தமிழர்கள் தங்களை குழுவாக அடையாளப்படுத்தலாமா அல்லது இனமாக அடையாளப்படுத்தலாமா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. எப்படி அடையாளப்படுத்தினாலும் அதில் சாதி என்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் இருப்பதுதான் மனிதவாழ்விற்கு ஆரோக்கியமானது. ஏற்றத்தாழ்வுகள் அற்ற ஓர் அறிவுடைமை சமுதாயமாக இருப்பதுதான் தமிழன் என்ற குழு/இனத்திற்கு நன்மையும் பெருமையும் சேர்க்க வழி வகுக்கும் என்பது எனது கருத்து.

Joe 19 August 2009 at 10:21 pm  

Oh God, please save us from Pradeep! ;-)

கலையரசன் 20 August 2009 at 9:39 am  

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

இப்படியே வாக்குவாதம் பண்ணி G.K. வை டெவலப் பண்ணிகிறீங்க?

ரைட்டு... பொறுத்துகுறோம்!!

Unknown 20 August 2009 at 12:26 pm  

//Oh God, please save us from Pradeep! ;-)//

அவ்வளவு சுலபமா தப்பிக்க முடியுமா?

Unknown 20 August 2009 at 12:27 pm  

நன்றி கலை

//உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...//

அப்ப பதிவை பிடகலையா?

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP