பனையேறிகள் என்றால் இளக்காரம் கவிதையில் கூட

Monday 3 August, 2009

என்னோட முந்தைய பதிவில் எனக்கு வந்த பின்னூடம் இதுதாங்க


//பனையேறிகள் என்றால் இளக்காரம் கவிதையில் கூட ...ஏனெனில் இவர்கள் பிற்படுத்தபட்டவர்கள் (தாழ்த்தபட்டவர்கள் நாங்கள் உண்மையில்)//

அந்த பதிவையும் ஒருமுறை படிச்சிடுங்க - என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?

உண்மையில் பின்னூடம் இட்டவர் எந்த நோக்கில் இட்டார் என்பது தெரியாது. ஆனா ஒன்னுமட்டும் ரொம்ப தெளிவா தெரியுதுங்க - அந்த கவிதையின் உதாரனம் அவர் தான் என்று. அந்த கவிதையில் "தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர்" என்று இருக்கும் ஆனா இவர் எங்கேன்னு அவர் தான் சொல்லணும் கண்டிப்பாக பனையேரவில்லை என்பதை உகிக்க முடியும்.

அவரின் பின்னுடத்தை முதலில் பார்த்தவுடன் எனக்குள் ஒரு சிறு தடுமாற்றம் வந்தது என்னடா எதாவது தப்பாக சொல்லிவிட்டோமன்னு. மறுபடியும் ஒருமுறை முழுவதையும் படித்ததும் தான் புரிந்தது - அட நம்ம தலைப்பே பெரியாரை திட்டுவது போல் இருக்கு இதுக்கு எதுவும் ஆட்ச்சபனை தெரிவிக்காமல் இவர் சொல்வதை பார்த்தால் இது சீண்டுவதற்கு இட்ட பின்னுடமாக தான் தெரிந்தது .

அவர் பதிவை பார்த்தபின் இன்னும் தெளிவாக விளங்கியது........


தந்தை பெரியாரை பற்றி நிறைய பேர் சொல்லிடாங்க இருந்தாலும் ஒரு சில மட்டும்.

பெரியாருக்கு யுனெஸ்கோ கொடுத்த நற்சான்றிதழ் 27-6-1970
"புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை"
UNESCO described Periyar as "the prophet of the new age, the Socrates of South East Asia, father of social reform movement and arch enemy of ignorance, superstitions, meaningless customs and base manners"

பெரியாரை பற்றி அவரே கூறியது.
தொண்டு செய்ய எனக்கு "யோக்கியதை" இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதை தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாக கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத் தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகின்றேன்.

சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகின்றேன்.

பெரியாரின் ஆசை
எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல.

பெரியாரின் கல்வி குறித்த கருத்து
படிப்பு எதற்கு? அறிவுக்கு, அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் - நாணயமாய் வாழ்வதற்கு. முதலாவதாக, மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அடுத்து, ஒழுங்குமுறை பழக வேண்டும். அதற்கு அடுத்தாற்போல் தான் பாடம்.

பெரியாரை பற்றி இன்னும் சில.

"நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.


எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.


"நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது."


நன்றி வணக்கம்.

3 comments:

கலையரசன் 5 August 2009 at 12:18 pm  

கவிதையின் அர்த்தம் புரியாமல் பேசிவிட்டார் விடுங்கள் பிரதீப்.. அவர் பெயரை போலவே!!

Unknown 5 August 2009 at 2:23 pm  

நன்றி கலை

நான் 5 August 2009 at 4:36 pm  

பனையேறிகளை விட மிக உயர்ந்த மக்கள் இப்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியில்.......அந்த வேதனை தான் மக்கா ...எந்த பெரியார் அல்லது நாராயனகுரு வருவார்?

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP