கட்டிட கலையின் அடுத்த அத்யாயம் - மிதக்கும் கட்டிடம் (appartment) - 2
Monday, 10 August 2009
சில விசயங்களை கேட்கும் போது ஒருவித பிரமிப்பும் அவநம்பிக்கை தான் வருகிறது. ஏன்னென்றால் அவற்றை பற்றி நாம் கனவிலும் யோசிப்பதில்லை. அப்படின்னா அவர்களால் மட்டும் எப்படி முடியுது.
01. அவர்களின் சமுகமும் சூழ்நிலையும்.
02. அவர்களின் வாழ்வியல் முறை.
03. கல்வி தரமும் ஒழுக்கமும்.
04. ________________
என்னடா தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தமே இல்லன்னு நினைக்காதீங்க.
இந்த விசயமும் என்னை ஆச்சரியபட வைத்தது தான். ஆமாங்க நம்ம வீடு தண்ணீல மிதந்தால் எப்படி இருக்கும். இங்க ஒரு சின்ன ஊரே தண்ணீல கட்டிக்கொண்டிருகிறார்கள். ஆச்சரியமா இருக்கா உண்மையா தாங்க நெதர்லாண்ட்ல தண்ணிமேல 60 வீடுகள் கொண்ட ஒரு ஊரை கட்டிட்டு இருக்காங்க.
தண்ணிமேல வீடு எல்லாம் தேவை இல்லாத வேலைன்னு நம்ம நினைக்கலாம் ஆனா அந்த நாட்டோட 50% நிலபரப்பு கடல் மட்டத்துக்கு கீழ் உள்ளது.
மிதக்கும் கட்டிடத்தின் ஒரு பகுதி.
பெரிய பெரிய hollow block பொட்டுவிட்டு அதன் மேல் கட்டிலத்தை precast technologyல கட்டுரதா சொல்றாங்க.
உட்புற தொற்றம்.
நிலத்துல கட்டுவதற்க்கு ஆகும் energyல 75% இருந்தாலே போதுமாம். அதுமட்டு இல்லாமல் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தனி தோட்டம் கூட இருக்காம்.
இதுதாங்க அந்த மிதக்கும் கட்டிடத்தின் முழு தோற்றம்.
கட்டிடத்தின் வெளிபுற முழுவதும் அலுமினிய தகடுகளால் அழகு படுத்தி இருக்காங்க.
இந்த கட்டிடத்தின் சிறப்பம்சமே அதன் cooling system தானாம்.
submergable pump மூலம் நீரை எடுத்து பயன்படுத்துகிறார்கள்.
இதுதான் entrance சின்ன சந்து கார் செல்லும் வழி.
இந்த கட்டிடத்துக்கு தேவையான car parking வசதி இந்த கட்டிடதிலே அமைச்சிருக்காங்க.
இந்த கட்டிடம் மொத்தம் 2 ஏக்கர் நீர் பரப்பில் உருவாக்கி கொண்டிருகிறார்கள்.
எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டு போங்க.
நன்றி வணக்கம்.
8 comments:
. நல்லா தகவல் நண்பா கட்டிட துறை வளந்திருக்கிற இந்த காலகட்டத்தில் இதெல்லாம் ஒரு ஆச்சரியமில்லை . இந்தியாவை பொறுத்தவரையில் அதற்கான தேவையில்லை . இதியாவில் நிலபர்ப்புகள் ஏராளம் உள்ளன .
இனி தண்ணீர் உலகம் வந்தாலும் கவலைப்பட வேண்டாம்ன்னு சொல்றீங்க? ரைட்டு... வாழ்க அந்த கண்டுபிடிப்பாளர்கள்!!
நன்றி சுரேஷ் குமார்,
//இந்தியாவை பொறுத்தவரையில் அதற்கான தேவையில்லை. இதியாவில் நிலபர்ப்புகள் ஏராளம் உள்ளன.//
இந்தியாவிற்க்கு இது தேவை என்று சொல்லவில்லை. அவர்கள் நாட்டில் 50% நிலபரப்பு கடல் மட்டத்தை விட தாழ்வான பகுதி என்பதால் இதுபோல் யோசித்திருகிறார்கள்.
நன்றி கலை
நல்ல அழகான கட்டிடங்களின் புகைப்படங்கள்
மிக அருமையான படங்கள், நல்ல தொகுப்புகள்........
வீட்டுக்கு நங்கூரம் போட்டு அதுக்கும் பூட்டு போடனும், இல்லை என்றால் யாராவது துடுப்பு போட்டு தள்ளிக் கொண்டு போய்விடுவார்கள்.
:)
superb
Post a Comment