இது சாத்யமா?

Sunday, 27 September, 2009

இது சாத்யமா? 


இப்படிதாங்க கேள்வி எழுந்தது எனக்கு வந்த மின் அஞ்சல் பார்த்தவுடன். பிறகு ஏன் முடியாதுன்னும் தோன்றியது. ஏன்னா இது சாத்யமா என்ற கேள்விதான் நிறைய விசயத்தை சாத்ய படுத்தியிருக்கு.


அப்படி என்னத்ததான் பார்த்தன்னு கேக்குறீங்களா? இதோ கீழே இருக்குற படங்களை பர்த்துட்டு நீங்களே சொலுஙகளேன். இது சாத்தியமான்னு.

இது தான் வருங்கால தேடியெந்திரமாம். இதுல பில்டிங்க பார்த்தாலே அதன் விலாசத்தை கொடுத்துடுமாம். அதாவது அதுல நீங்க சுட்டிகாட்டுற கட்டிடத்தின் விலாசத்தை தருமாம்.
இன்னும் விவரமான தகவலும் கிடைக்குமாம். அதாவது அந்த தளத்தில்
உள்ள அலுவலக விவரமும்.
செய்திதாள் படிக்கும் போது எதாவது வர்த்தைக்கு அர்த்தமோ விளக்கமோ தேவைபட்டால் இதன் மூலம் பார்கலாமாம்.
என்ன புரிஞ்சதுங்களா?

இது கட்டிடத்தின் உள்ளும் வேலை செய்யுமாம்.
அட translation னும் செய்யுமாம்.
சொல்றத்துக்கு ஒன்னும் இல்லிங்க.
இத பாருங்க.......

முடியல.................


மேலும் வாசிக்க >>

Read more...

மீள்பின்னூடம் - (பழைய பதிவின் பின்னூடமும் விளக்கமும்) – 2

Saturday, 26 September, 2009இது இரண்டாவது பாகம் (மீள்-பின்னூடம்)இந்த பின்னூடம் வந்த பதிவை வாசிக்க இங்க கிளிக் பன்னுங்க.உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க.


மீள்பின்னூடம் – 2
முதலில் நன்றி திரு சொல்லரசன்,

//தனிமனித ஒழுக்கமே கலாச்சார சீரழிவுக்கு காரணம்//

தனிமனித ஒழுக்கம் என்றால்?
ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை யாரையாவது/எதையாவது சார்ந்தே இருக்கிறான். அவனது குணம்/தனிமனித ஒழுக்கம் நிர்னைப்பதென்பது அவனை/அவளை சூழ்ந்துள்ளவர்கள் (தாய், தந்தை, உடன்பிற்ந்தோர், நன்பர் மற்றும் பலர்) மற்றும் சமுகம். இவற்றில் அவனை/அவளை எது அதிகமாக பாதிக்கிறதோ அதுதான் அவன்/அவளுடைய தனிமனித ஒழுக்கம். அப்படியானால் சமுகத்தின் கலாச்சாரம் தானே தனிமனிதனை பாதிக்கிறது. சற்று விளக்குங்களேன் புரியவில்லை.


//கலாச்சாரம் என்பது என்னை பொருத்தவரை உடலை மறைக்கும் ஆடை போன்றது,அது நாட்டிற்கு நாடு,இடத்திற்கு இடம் மாறுபடும்.ஆடைஅணியாத ஊரில் ஆடையின்றி போகலாம்,ஆனால் ஆடை உடுத்தும் ஊரில் ஆடையின்றி சென்றால் அதுதான் கலாச்சார சீரழிவு,இதற்கு தனிமனித ஒழுக்கமே காரணம்.//

ஓரளவு ஏற்று கொள்ளலாம். அனால் ஆடைஅணியாத ஊரில் ஆடை அனியசொல்வது தானே அடுத்தநிலை அல்லது முன்னேற்றம். அப்படியென்றால் கலாச்சாரத்தில் முன்னேற்றம்/முற்போக்கு சிந்தனை கூடாதா?மீள்பின்னூடம் – 3
நன்றி திரு. கனேஷ் குமார் (தீப்பெட்டி)


//தமிழ் கலாச்சாரம் என்பது என்ன? அத சொன்னீங்கன்னா எது எவ்வளவு பாதிக்குதுன்னு சொல்ல முடியும்.//

எங்கோ படித்தது: கற்றறிந்த நடத்தைகளின் தொகுப்பே பண்பாடு என்பதால், புதியவற்றைக் கற்றுக்கொள்ளும்போது மாற்றம் நிகழ்கிறது.

இதில் தமிழ் கலாச்சாரம் என்பது தமிழ் சமுகத்தின் கடந்தகால வரலாறு/வாழ்வியல்முறை எனவும் சொல்லலாம். 

இதில் கலாசாரம்/பண்பாடு கண்டிப்பாக மாறுதலுக்கு உட்பட்டதே ஏனென்றால் போக்குவரத்து, தொலை தொடர்பு வசதிகள், இனையம் என்பன மிகவும் குறைவாக/இல்லாது இருந்த காலத்தில் மாற்றங்கள் மிக மெதுவாகவே ஏற்பட்டன. அதனால் அதன் பாதிப்பு/தாக்கம் மிக குறைவு அல்லது இல்லை(தேவையற்றவை) 

ஆனால் இப்பொழுது எல்லா துறைகளிலும் அதீதமான வளர்ச்சி காணும் காலகட்டம். அறிவியல் வளர்ச்சியினால், போக்குவரத்து, தொலை தொடர்பு வசதிகள் மற்றும் இனையம் பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளன. இதனால், பல கலாச்சார/பண்பாடுகளைக் கொண்ட மக்களிடையே தொடர்புகள்/தாக்கம் அதிகரித்துள்ளன. ஒரு தரப்பாருடைய பண்பாட்டிலிருந்து பல விடயங்களை மறு தரப்பார் கற்றுக்கொள்கிறார்கள். இதனால் பண்பாட்டு மாற்றம் தவிக்கமுடியாததாகிறது.

நாம் இவற்றில் எதில் அதிகம் பதிக்க/வளர்க்க படுகிறோம் என்பதை விவாதிப்போம்.


//கலாச்சாரம் என்பதே இறந்தகாலத்தில் மட்டுமே பயன்படும் வார்த்தை..//

கலாச்சாரம் அல்லது பண்பாடு இரண்டும் ஒரே பொருளை தந்தாலும் கலாச்சாரம் என்ற வார்த்தையை நாம் இறந்த காலத்தை குறிக்கவும், பண்பாடு என்ற வார்த்தையை நிகழ்காலத்தை குறிக்கவும் பயன் படுத்துகிறோம் என்பது என் கருத்து.//பண்டைய கலாச்சாரத்தை பற்றி பேசலாம்.. 
நாளைய கலச்சாரத்தை பேசமுடியுமா?//


நாளைய கலச்சாரத்தை பற்றி யூகிக்கலாம் (தொலைநோக்கு பார்வையில்) நாளை பற்றி யோசிகாதிருந்தால் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்காது.


//இன்றைய கலாச்சாரம்/பண்பாடு பற்றி நாளைய பார்வைகள் சொல்லும்..//

சத்தியமான வார்த்தைகள்........ ஆனால் இழிவாக சொல்ல இடம் கொடுக்ககூடாது என்பது என் கருத்து/எண்ணம்.


//இன்றைய கலாச்சாரம், பண்பாடு என்று அதையெல்லாம் நிகழ்காலப் பார்வையில் பார்ப்பதென்பது நடவாத காரியம். அல்லது நாளை மாறப்போகும் ஒற்றை பார்வை..//

நிகழ்காலத்தையே பார்க்க முடியாதவர்களால் கடந்த காலத்தை பற்றி யோசித்து என்ன பயன்.

கடந்தகாலத்தை பார்பதன் நோக்கம் முன் நிகழ்ந்த/நிகழ்த்தபட்ட தவற்றை திருத்தி புது வடிவு கண்பதற்க்கு என்பது என் கருத்து.

மீண்டும் நன்றி திரு. கனேஷ் குமார் (தீப்பெட்டி)
மேலும் வாசிக்க >>

Read more...

இந்த வார படித்த பிடித்த பதிவுகள் - 2

இது இரண்டாவது தொகுப்பு - நீண்ட நாளுக்கு பிறகு.


முதல் பதிவு -  சிறுவனின் நூலகம்அருமயான தொகுப்பு -  Computer, Engineering, Learning English and Others என அனைத்து வகை புத்தகங்களும் கிடைகின்றன இலவசமாக - ஒரு முறை முயற்சித்து பாருங்கள்.  முனைவர் நா.இளங்கோ -  கவர்ச்சித் தலைவர்கள் தேவை -மலையருவி

நாளை ஆட்சியைப் பிடிக்க

இன்று

அவசரத் தேவை

வாக்குகளை வாரிக் கட்டும்
கவர்ச்சித் தலைவர்கள்

முருக சிவகுமார் - தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா

கடவுள் இருப்பதாக கூறி தொழுபவர்கள் எல்லோருமே இவரைப் போலவே இருந்தால், உலகத்தில் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கொடுமைகள் நிகழாது! அன்னை தெரசாவின் வாழ்வில் இருந்து பாடம் கற்போம்.இதே போன்ற Tab வசதியை Microsoft office இல் கொண்டுவந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் Microsoft Word, Microsoft Excel, Microsoft powerpoint இல் தனித் தனி Window இல் திறந்து வைத்து ஒவ்வொரு Window ஆக மாற்றி மாற்றி வேலை செய்வதற்குப் பதில் ஒரே Window இல் வெவ்வேறு Tab இல் திறந்து வைத்து வேலை செய்வதனால் இலகுவாக எமது வேலைகளை செய்து முடிக்கக் கூடியதாக இருக்கும்.


அத்தோடு 1990ம் ஆண்டு அல்லது அதற்கு கிட்டிய ஆண்டொன்றில் தனது ஆச்சிரமத்திற்கு வந்த இளம்பெண்களை வீட்டுக்கு அனுப்பாமல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார் என்றும் அதன்பின்னரே இப்போது இருக்கும் தங்கக் கோயிலினுள் (Golden temple) நுழைந்தார் என்றும் அறியக் கிடைத்தது.


RSYF - பொருளாதார வீழ்ச்சி – ஐ. டி. வேலை

அப்போது, நான் Y2K பிரச்சனையால் வேலை போகிறது என்று நினைத்தேன். சரி, இனிமேல் அந்த Y2K பிரச்சினை தான் வராதே என்று நினைத்து சந்தோசப்பட்டேன். அன்று, எனது நண்பர்கள் அனைவரும் திருமணம் ஆகாதவர்கள். ஆகையால், வேலை போனால் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை.


மேலும் வாசிக்க >>

Read more...

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?

Wednesday, 16 September, 2009எனக்கு மின் அஞ்சல் வழி கிடைத்தது. எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
இதுல என் பங்களிப்பு copy - paste மட்டுமே.


அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?
அப்படிஎன்னதான் வேலை பார்ப்பீங்க ?"- நியாயமான ஒரு கேள்வியை கேட்டார்எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்.


"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதேமாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாராஇருக்கான்."

"
அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".


"இந்த மாதிரி அமெரிக்கால்-, இங்கிலாந்து- இருக்குற Bank, இல்லஎதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இதசெய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"
சரி""இந்த மாதிரி Client- மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிககொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு"Sales Consultants, Pre-Sales Consultants....". இவங்க போய் Client கிட்டபேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அதபண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.


"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?


"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."


"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBAபடிக்கணும்?" - அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.


"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"


"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாளசொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"


"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்?ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"


"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னுசொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்லஅவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னுநமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னுஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டதுஇதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்பஆரம்பிப்பான்."அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.


"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்கCR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.


"CR-னா?"


"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலைபார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம்கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள்ஆக்கிடுவோம்."


அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.


"இதுக்கு அவன் ஒத்துபானா?"


"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வரமுடியுமா?"


"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"


"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னுஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ்ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."


"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னுசொல்லு."


"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."


"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" - அப்பா குழம்பினார்.


"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போஎவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான்இவரு வேலை."


"பாவம்பா"


"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும்இவரு கிட்ட போய் சொல்லலாம்."


"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"


"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும்தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றதுமட்டும் தான் இவரோட வேலை."


"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றது மாதிரி?!"


"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறையஅடி பொடிங்க இருப்பாங்க."


"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலைஈஸியா முடிஞ்சிடுமே?"


"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க...டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும்செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே"இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு"சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ்பசங்க தான் அதிகம் இருப்பாங்க."


"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"


"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோடவேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறதுமாதிரி."


"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசாதான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்னதேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"


"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக்குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும்.நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னுசொல்லுவாங்க"


"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"


"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரிவிட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வாரஆரம்பிப்போம்."


"எப்படி?"


"நீ கொடுத்த கம்ப்யூட்டர்- ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம்மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியனஎடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டுபோகட்டும்னு விட்டுருவான்".


"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டுவந்துடுவீங்க அப்படித்தான?"


"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான்இருக்கணும்."


"அப்புறம்?"


"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்னபண்ணி இருக்குற மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கறமாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."


"அப்புறம்?"


"அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்- ஒருஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு"Maintanence and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்குகூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போது, வருஷ கணக்காநிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான்கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.
"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."
மேலும் வாசிக்க >>

Read more...
Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP