அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?

Wednesday 16 September, 2009



எனக்கு மின் அஞ்சல் வழி கிடைத்தது. எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
இதுல என் பங்களிப்பு copy - paste மட்டுமே.


அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி


"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?
அப்படிஎன்னதான் வேலை பார்ப்பீங்க ?"- நியாயமான ஒரு கேள்வியை கேட்டார்எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்.


"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதேமாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாராஇருக்கான்."

"
அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".


"இந்த மாதிரி அமெரிக்கால்-, இங்கிலாந்து- இருக்குற Bank, இல்லஎதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இதசெய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"
சரி""இந்த மாதிரி Client- மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிககொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு"Sales Consultants, Pre-Sales Consultants....". இவங்க போய் Client கிட்டபேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அதபண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.


"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?


"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."


"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBAபடிக்கணும்?" - அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.


"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"


"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாளசொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"


"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்?ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"


"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னுசொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்லஅவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னுநமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னுஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டதுஇதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்பஆரம்பிப்பான்."அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.


"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்கCR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.


"CR-னா?"


"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலைபார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம்கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள்ஆக்கிடுவோம்."


அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.


"இதுக்கு அவன் ஒத்துபானா?"


"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வரமுடியுமா?"


"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"


"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னுஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ்ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."


"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னுசொல்லு."


"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."


"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" - அப்பா குழம்பினார்.


"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போஎவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான்இவரு வேலை."


"பாவம்பா"


"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும்இவரு கிட்ட போய் சொல்லலாம்."


"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"


"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும்தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றதுமட்டும் தான் இவரோட வேலை."


"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றது மாதிரி?!"


"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறையஅடி பொடிங்க இருப்பாங்க."


"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலைஈஸியா முடிஞ்சிடுமே?"


"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க...டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும்செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே"இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு"சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ்பசங்க தான் அதிகம் இருப்பாங்க."


"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"


"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோடவேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறதுமாதிரி."


"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசாதான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்னதேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"


"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக்குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும்.நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னுசொல்லுவாங்க"


"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"


"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரிவிட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வாரஆரம்பிப்போம்."


"எப்படி?"


"நீ கொடுத்த கம்ப்யூட்டர்- ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம்மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியனஎடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டுபோகட்டும்னு விட்டுருவான்".


"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டுவந்துடுவீங்க அப்படித்தான?"


"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான்இருக்கணும்."


"அப்புறம்?"


"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்னபண்ணி இருக்குற மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கறமாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."


"அப்புறம்?"


"அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்- ஒருஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு"Maintanence and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்குகூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போது, வருஷ கணக்காநிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான்கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.
"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

5 comments:

Krishna 16 September 2009 at 7:27 pm  

Ultimate nga. Super. ithuku mela oru project a pathi yarume solla mudiyathu he he he he

--KK

இராகவன் நைஜிரியா 26 September 2009 at 7:03 pm  

எனக்கு நல்லா புரிஞ்சுடுச்சுங்க.

Unknown 27 September 2009 at 1:50 am  

அருமை... அருமை....!! நோகாம நோம்பி கும்புடரத.... இப்டி வெவரிக்குனுமா..?

கம்பேனி ரகசியத்த இப்புடி அம்பலப்படுத்தீட்டீங்களே......!!!

ப்ரியமுடன் வசந்த் 27 September 2009 at 7:27 am  

wow...good explanations....

கலையரசன் 27 September 2009 at 10:06 am  

இதை எங்கிருந்து காப்பி பேஸ்ட் பண்ண?
நல்லாயிருக்கு!!

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP