இந்த வார படித்த பிடித்த பதிவுகள் - 1

Sunday 23 August, 2009

எதோ பதிவிட வேண்டுமே என்பதற்காக அல்ல இந்த பதிவு.

தினமும் எத்தனையோ பதிவை படிக்கிறோம் அதில சிலவற்றை (குறிப்பாக எனக்கு பிடித்ததை பகிர்ந்து கொள்ள தான் இந்த பதிவு.

நன்றி.

முதல் பதிவு: தோழர் வே மதிமாறன் எழுதிய கலாச்சாரம் குறித்த அவரது பார்வை (பேட்டி)

சென்னைக்கு வயது 370 - திரு ராதா கிருஷ்ணன் பதிவு

பொரு"ளாதாரம்" - திரு. ந‌.வீ.விசய‌ பாரதி ன் இந்தியாவின் முக்கிய பிரச்சனை பற்றிய பதிவு.

ஜின்னா, வறட்சி, ஷாருக்கான் மற்றும் சினேகா - திரு. மாதவராஜ்
யார் இதற்கு காரணம் எனக் கண்டுபிடித்துச் சொல்வதற்கும் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. மற்றவர்களை கைகாட்டிவிட்டு, தாங்கள் இதற்கு காரணமும், பொறுப்புமல்ல என்று காட்டிக்கொள்ளவும், புனிதர் கீரீடத்தை யாருக்கும் தெரியாமல் தங்கள் தலையில் சூட்டிக்கொள்ளவுமே இந்த சர்ச்சைகள் அவ்வப்போது ஆவிகளாய் எழுப்பப்படுகின்றன.

Install Immediately! பின்னூட்ட ஜெனரேட்டர்! Guaranteed to Work! - ஜாம்பஜார் ஜக்குவின் பதிவு (நான் மிகவும் ரசித்தது.

சிங்கை நாதனுக்கு முதல் அறுவை சிகிச்சை ( VAD Fixing Surgery)விவரங்கள்


மேலும் வாசிக்க >>

Read more...

மீள்பின்னூடம் - (பழைய பதிவின் பின்னூடமும் விளக்கமும்) – 1

Wednesday 19 August, 2009

எல்லோரும் மீள்பதிவு போடும்போது நாம் ஏன் மீள் பின்னூடம் போடகூடாதுன்னு தோன்றியது அதனால் தான் இந்த பதிவு. இதுல இன்னொரு கொடுமை என்னவென்றால் இதுதான் முதல் பாகம். (இன்னும் நிறைய மீள் பின்னூடம் இருக்கு)



இந்த பின்னூடம் வந்த பதிவை வாசிக்க இங்க கிளிக் பன்னுங்க.



மீள்பின்னூடம் – 1.



முதலில் நன்றி திரு. கிருஷ்ண பிரபு, (இவரின் பின்னூடமும் அதற்கான என் வாதமும்) உங்க கருத்தையும் பின்னூடமிடுங்க.



//மேலும் மதம், சாதி போன்ற அமைப்புகளும் ஒரு குழுவாக வாழத்தானே தோற்றுவிக்கப்பட்டது.//

இந்த கருத்தை ஏற்று கொள்ள முடியவில்லை கிருஷ்ண. ஒவ்வொரு இனமும் தனி குழுவாக வழலாமே ஒழிய அந்த இனத்தில் பாகுபாடு என்பது ஏற்று கொள்ளமுடியாது. உதாரணத்திற்க்கு தமிழ் பேசும் அனைவரும் ஒரு குழுவாக வாழலாமே தவிர அதில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த சாதி இருக்ககூடாது.

நீங்க கேட்கலாம் ஒவ்வொரு இனமும் குழுகளாக இருக்கும் போது சாதி ஏன் இருக்ககூடாதென்று. ஏன்னென்றால் சாதியில் உள்ள பாகுபாடு இனத்தில் இல்லை அது மட்டும் இல்லாமல் இனம் என்பது ஒரு முழு சமுகத்தை குறிக்கும் ஆனால் சாதி ஒரு சமுகதிற்க்குள்ளே பல பாகுபாடு உருவாக்குகிறது.

விளக்கம்: இனம் என்று இங்கு நான் குறிப்பது ஒரே மொழி பேசுவோர். ஆம் எந்த ஒரு மனிதனும் தன் தாய்மொழியில்தான் தன் முழு கருத்தையும் கூறமுடியும். எவ்வளவு சரளமாக வேற்று மொழி தெரிந்தாலும் தாய் மொழி மூலமாக தான் உணரமுடியும் என்பது என் கருத்து.


//ஒரு குழந்தை சினிமாவைப் பார்த்து கெட்டுப்போகிறது என்றால் நம்பலாம். சுய அறிவுள்ள ஒருவர் கனவுத் தொழிற்சாலையைப் பார்த்து கெட்டுப் போவது நம்ப முடியாத ஒரு விஷயம். அப்படி நம்பித்தான் ஆகவேண்டுமெனில் சினிமாதான் கெடுக்கிறது எனில் அது சினிமாவால் அல்ல. தனி மனிதனுக்கு ஒழுக்கம் இல்லாததால்.தனிப்பட்டவனுடைய சபல மனதால்...//

ஒரு மனிதனுக்கு தனிமனித ஒழுக்கம் என்பது எப்போது உருவாகிறது?
நான் அறிந்தவரை குழந்தை பருவத்திலிருந்தே அந்த குழந்தை பார்கின்ற சமுகம், பெற்றோர், சூழ்நிலை இவையாவும் தனிமனித ஒழுக்கத்தை நிர்னைப்பதாக நினைக்கிறேன். அப்படியென்றால் கட்டாயம் சினிமா தனிமனித ஒழுக்கத்தை பாதிக்கிறது (எந்த அளவு என்பதே வேறுபடுகிறது).


//சினிமாவிற்கும் தொலைக்காட்சிக்கும் பெரிய வித்யாசம் இல்லை.//

கண்டிப்பாக வித்யாசம் இருக்கிறது ஏன்னெறால், தினமும் சினிமா பார்பவர்களை காண்பது அரிது. ஆனால் தொலைகாட்சியை அனைவரும் ஒரு நாளில் ஒரு முறையாவது பார்கிறோம். அதானால் தொலைகாட்சியின் பாதிப்பு சினிமாவைவிட அதிகம்.


//மதம் நிச்சயமாக கலாச்சாரத்தை சீரழிக்காது. கலாச்சாரத்தை காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் அது சமூகத்தை வேண்டுமென்றால் சீரழிக்கலாம். அப்படித்தானே நடக்கிறது.//

இதற்க்கு பதில் நீங்க எழுதிய முதல் பத்தையை மறுபடியும் படிங்க.


//இன்று சாதிய முறையை அழிக்க வேண்டுமென்கிறார்கள். ஆனால் பள்ளிக்கூடத்தில் சேரும்போது அதனைக் குறிப்பிட வேண்டுமென்கிறார்கள்.ஆகவே சாதியம் கலாச்சாரத்தைக் கெடுக்கிறது எனில் அதற்கான முக்கிய பங்கு கல்வி சார்ந்த அமைப்புகளுக்கு உண்டு. கல்வித் துறை அரசியலை சார்ந்துள்ளதால் அரசியல் வாதிகளுக்கும் அதில் ஒரு பங்கு உண்டு.//

கல்வியில் சாதியை குறிப்பிட சொல்வதின் நோக்கம்: அனைவருக்கும் சமமான நிலை வரவேண்டும் என்பதால், உங்களுக்கு எந்த சலுகையும்/அடையாளமும் வேண்டாம் என்றால் குறிப்பிட தேவையில்லை. அதுமட்டும் இல்லாமல் இன்றைய நிலையில் கலப்பு திருமனம், சுய மரியாதை திருமணம் எல்லாம் அரசு அங்கிகாரம் பெற்றது தானே அங்கே எந்த சாதியை குறிப்பிடுவீர்கள்.


//ஒழுங்கான கல்வி கலாச்சாரத்தைக் கெடுக்காது.//

சரியாக புரிய வில்லை ஒழுங்கான கல்வியா இல்லை ஒழுக்கத்துடன் கூடிய கல்வியா?


//சுய கலாச்சாரத்துடன் மாற்று கலாச்சாரத்தை தொடர்புபடுத்தும் போதுதான் பிரச்சனையே. அந்தத் தொடர்பு படுத்துதல் வேண்டுமெனில் கலாச்சாரத்தைக் கெடுக்கலாம்.//

அப்படியென்றால் ஒப்பீடு என்பதே கூடாது என்கிறீர்களா. நீங்கள் நினைத்து கொண்டிருக்கும் கலாசரமும் பல கலாச்சாரத்தின் பாதிப்பில் வந்ததுதானே.


//அனால் அது மெத்தப் படித்த தனி மனிதனின் ஒழுக்கக்கேடினால் விளைவது.//

அப்போ ஒழுக்கத்திற்க்கும் கல்விக்கும் தொடர்பில்லைன்னு சொல்றீங்களா?


//வேறு எதைக் காட்டிலும் தனி மனித ஒழுக்கம் இல்லையெனில் குடும்பத்திலிருந்து, சுற்றத்திலிருந்து சமுதாயத்திலிருந்து, கலாச்சாரத்திலிருந்து அனைத்துமே கெடும் என்பது என்னுடைய கருத்து.//

இவை அனைத்தும் அல்லவா தனிமனித ஒழுக்கத்திற்க்கு பாதிப்பை ஏற்படுத்துவது.

உங்க கருத்தையும் பின்னூடமிடுங்க.

நன்றி.

மேலும் வாசிக்க >>

Read more...

உண்மை சுதந்திரம் எப்போது. (மீள்பதிவு சில மாற்றங்களுடன்)

Saturday 15 August, 2009

இன்று சுதந்திர தினம் – காலையில் இருந்தே பிள்ளைகள் அனைவரும் ஏதோ ஒரு சந்தோசத்தோடு இந்திய கொடியை சட்டையில் குத்தி கொண்டு ஒருவித பெருமித்தோடு இருப்பதை பார்க்கும் போது – ஒரு காலத்தில் நாமும் (நாமும் என்பதைவிட நான் என்பதே சரி) அப்படிதான் இருந்தோம் – ஆனால் இன்று அவ்வாறு இருக்கமுடியவில்லை ஏன் என்று யோசிக்கும் போது தான் தெரியுது பள்ளி பருவம் வேறு உண்மை வாழ்கை வேறு என்பது.



நான் சொல்ல நினைக்கிற (பிறரிடமிருந்து பெற்றதே) விசயம் மேலோட்டமாக பார்த்தா கண்டிப்பாக என்னை வெறுக்க தோன்றும். ஆனால் அனைத்தும் யதார்த்தம் (போலியாக நல்லவனாக இருப்பதைவிட உண்மையாக இருப்பது எவ்வளவோ மேல் என்பது என் கருத்து)



படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கண்டிப்பாக பின்னூடமிடவும் நன்றி.



இந்தியா என்பது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது உருவாக்கப் பட்டு ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரநாடு என்று பிரகடனப்படுத்தப் பட்ட நாடு.


நாடு என்று சொல்லப் பட்டாலும் இது உண்மையில் ஒரு கண்டம் - தென்னாசியக் கண்டம்.
இதன் மக்கள் தொகை ஒரு கண்டமான ஐரோப்பாவை விட அதிகம்.

ஒரு விதத்தில் இந்தியாவை ஐரோப்பாவிற்கு ஒப்பிடலாம்.
ஐரோப்பா மாதிரி இங்கு பல மொழிகள் பேசும் பல கலாச்சாரம் கொண்ட தேசிய இனங்கள் உள்ளன.
ஐரோப்பாவில் வெள்ளை நிறத்தவர்கள், இங்கு பிரவுன் நிறத்தவர்கள்.


ஐரோப்பாவில் ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் ஒவ்வொரு நாடு உண்டு.


(உதாரணத்துக்கு தமிழ்நாடு என்று எடுத்து கொண்டால் அது ஜெர்மன் நாடு அளவு இருக்கும். ஆந்திரம் பிரான்ஸ் அளவு இருக்கும் – நிலபரப்பும், மக்கள் தொகையும் வளங்களும்)
அத்துடன் கடந்த பல வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பை உண்டுபண்ணி அதில் பல ஐரோப்பிய நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.


இப்படி தனிநாடாக இருப்பதில் உள்ள நன்மைகள் இவைகள் என்று சொல்லலாம்
ஒவ்வொரு இனமும் தமது மொழி, இனம் என்ற அடையாளங்களை மற்றைய இனத்தவர்களின் மேலாதிக்கத்தில் இருந்து காப்பாற்றி கொள்ள முடிகிறது.
தமது பொருளாதார சமூக நலன்களையும் திட்டம் போட்டு முன்னேற்றம் செய்கிற வாய்ப்பையும் தமக்கென்று ஒரு ராணுவம், வெளியுறவுக் கொள்கைகள் என்பனவும் வைத்திருக்க முடிகிறது. மிக முக்கியமாக தாய் மொழிகல்வி சாத்தியமாகிறது – இதன் பயன் அனைவருக்கும் தெரியும்.


ஒன்று சேர்ந்து இந்தியா என்று இருப்பதிலும் சில நன்மைகள் உள்ளன.
வர்த்தகம், வேலைவாய்ப்பு, சுலபமாக ஒரு பகுதியில் இருந்து மற்றைய பகுதிக்கு பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்யக் கூடிய ஒரு நன்மை. அவர்களுக்கும் நன்மை ,எங்களுக்கும் நன்மை.

ஒரு பெரிய நாட்டின் பகுதியாக இருக்கும்போது மக்களுக்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. ஆனால் இந்த உத்தரவாதம் நமது தமிழ் மீனவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில் இந்திய நாடு தனது குடிமக்களுக்கான கடமையைச் செய்யத் தவறி விட்டது.


எதிர்காலத்தில் நாம் ஐரோப்பிய நாடுகள் மாதிரியான ஒரு நிலையை எடுத்து தனி நாடுகளாகப் பிரிந்து, அதே சமயம் இந்திய ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கலாம் அந்த ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மாதிரி பொதுவான பாஸ் போர்ட் வைத்திருக்கலாம், ஒரு இடத்திலருந்து இன்னொரு இடத்துக்கு வேலைக்காகவோ வர்த்தகத்துக்காகவோ போகவும் மற்றைய இடங்களின் வாழவும் தடை இல்லாமலும் இருக்கும். அத்துடன் ஐரோப்பாவில் யூரோ என்ற பொது நாணயம் இருப்பது மாதிரி இங்கும் ரூபாய் என்ற பொது நாணயம் இருக்கும்.

அத்துடன் தமக்கு தனி ராணுவம் இருந்தாலும் ,பொதுவான நேட்டோ மாதிரி ஒரு அமைப்பை இந்திய ஒன்றியத்தில் உள்ள எல்லா நாடுகளின் பாதுகாப்புக்கும் உருவாக்கலாம் .ஐரோப்பிய கோர்ட் மாதிரி அதிகாரம் மிக்க சக்தி வாய்ந்த அமைப்பை உருவாக்கி, காவிரி, முல்லைப்பெரியாறு மாதிரியான எல்லைத் தகராறுகளை தீர்க்கலாம், கட்டுப்படாத நாடுகளுக்கு நஷ்ட ஈடு கேட்டும் வர்த்தக ரீதியுலும் தண்டனை கொடுக்கலாம்.

அத்துடன் இலங்கை,மாலைதீவு நேபாளம் பூடான் போன்ற குட்டித் தென்னாசிய நாடுகளையும் இந்த ஒன்றியத்தில் இணைத்து கொள்ளலாம்


என்ன எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்கிறீர்களா?
சொல்லமுடியாது.

எதிர்காலத்தில் இது சாத்தியம்தான்

நன்றி வணக்கம்.

மேலும் வாசிக்க >>

Read more...

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 2

Tuesday 11 August, 2009

பதிவுலக நபர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கின்றது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்படக் கூடியவை பற்றி அறியும் சிறு முயற்சி தான் இந்த பதிவு.

விவாதத்துக்கான இரண்டாம் கேள்வி பதிவுலக்கத்துல பெருபாலும் அலசப்பட்ட கேள்விதான்.

கடவுள்/இறைவன்?

இந்த கேள்விக்கு அனைவரும் ஏற்று கொள்ளும்படி பதிலளிப்பது என்பது கடினம்தான்.

அதனால விவாதத்தின் தலைப்பை இப்படி மாத்திக்கலாம்.

கடவுளால் மனிதனுக்கு என்ன பயன் அல்லது நன்மை?

கடவுளால் பாதிக்கப்படுபவர்கள் யார் யார்? எப்படி?

கடவுளை மனிதன் உருவாக்கினான இல்லை கடவுள் மனிதனை படைத்தாரா?

கடவுள்___________________?

உங்க கருத்தை பின்னூட்டம் இடுங்க. கண்டிப்பாக இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக வளர வேண்டுமென்று ஆசை படுகிறேன்.

நன்றி வணக்கம்
மேலும் வாசிக்க >>

Read more...

கட்டிட கலையின் அடுத்த அத்யாயம் - மிதக்கும் கட்டிடம் (appartment) - 2

Monday 10 August, 2009

சில விசயங்களை கேட்கும் போது ஒருவித பிரமிப்பும் அவநம்பிக்கை தான் வருகிறது. ஏன்னென்றால் அவற்றை பற்றி நாம் கனவிலும் யோசிப்பதில்லை. அப்படின்னா அவர்களால் மட்டும் எப்படி முடியுது.

01. அவர்களின் சமுகமும் சூழ்நிலையும்.
02. அவர்களின் வாழ்வியல் முறை.
03. கல்வி தரமும் ஒழுக்கமும்.
04. ________________

என்னடா தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தமே இல்லன்னு நினைக்காதீங்க.

இந்த விசயமும் என்னை ஆச்சரியபட வைத்தது தான். ஆமாங்க நம்ம வீடு தண்ணீல மிதந்தால் எப்படி இருக்கும். இங்க ஒரு சின்ன ஊரே தண்ணீல கட்டிக்கொண்டிருகிறார்கள். ஆச்சரியமா இருக்கா உண்மையா தாங்க நெதர்லாண்ட்ல தண்ணிமேல 60 வீடுகள் கொண்ட ஒரு ஊரை கட்டிட்டு இருக்காங்க.

தண்ணிமேல வீடு எல்லாம் தேவை இல்லாத வேலைன்னு நம்ம நினைக்கலாம் ஆனா அந்த நாட்டோட 50% நிலபரப்பு கடல் மட்டத்துக்கு கீழ் உள்ளது.

மேலதிக தகவலுக்கு சுட்டி 1, சுட்டி 2, சுட்டி 3.


மிதக்கும் கட்டிடத்தின் ஒரு பகுதி.
பெரிய பெரிய hollow block பொட்டுவிட்டு அதன் மேல் கட்டிலத்தை precast technologyல கட்டுரதா சொல்றாங்க.



உட்புற தொற்றம்.
நிலத்துல கட்டுவதற்க்கு ஆகும் energyல 75% இருந்தாலே போதுமாம். அதுமட்டு இல்லாமல் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தனி தோட்டம் கூட இருக்காம்.



இதுதாங்க அந்த மிதக்கும் கட்டிடத்தின் முழு தோற்றம்.
கட்டிடத்தின் வெளிபுற முழுவதும் அலுமினிய தகடுகளால் அழகு படுத்தி இருக்காங்க.



இந்த கட்டிடத்தின் சிறப்பம்சமே அதன் cooling system தானாம்.
submergable pump மூலம் நீரை எடுத்து பயன்படுத்துகிறார்கள்.



இதுதான் entrance சின்ன சந்து கார் செல்லும் வழி.
இந்த கட்டிடத்துக்கு தேவையான car parking வசதி இந்த கட்டிடதிலே அமைச்சிருக்காங்க.



இந்த கட்டிடம் மொத்தம் 2 ஏக்கர் நீர் பரப்பில் உருவாக்கி கொண்டிருகிறார்கள்.


எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டு போங்க.

நன்றி வணக்கம்.
மேலும் வாசிக்க >>

Read more...

தொடர் பதிவு: கல்விக்கு உதவுவோம் வாருங்கள்.

Sunday 9 August, 2009


ஆமாங்க இது ஒரு தொடர் பதிவா வரனுமுன்னு தான் ரொம்ப ஆசையா இருக்கு.

முதல்ல என்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்த நன்பர் ஜோவிற்க்கு நன்றி.





விசயம் இதுதாங்க எவ்வளவோ விசயத்துக்கு தொடர்பதிவு எழுதிற நாம் ஏன் கல்விக்கு உதவி செய்து மற்றும் செய்ய சொல்லி ஒரு தொடர் பதிவு எழுதகூடாதுன்னு நன்பர் ஜோ கேட்டார். முதல்ல இது ஒரு விளம்பரமா அமஞ்சிடுமோன்னு தொன்றினாலும் இந்த பதிவால அட்லீஸ்ட் ஒருவர் தொடர்ந்தாலும் அது ஒரு/சில மாணவர்கள் கண்டிப்பாக பயன் பெருவார்கள் என்ற நம்பிக்கையோட தொடங்குகிறேன்.

கல்வி - இந்த ஒரு செல்வத்தைதாங்க நம்மிடமிருந்து யார் அபகரித்தாலும் குறையாதது. அதனால இதை மத்தவங்களுக்கு நம்மால் முடிந்தவரை கொடுப்பொம்.

முதல்ல நான் என்ன செய்தேன்/ செய்கிறேன்னு சொல்லிடுறேன்:
01. நன்பர் ஜோவின் பதிவை படித்துவிட்டு சின்ன பள்ளிகுப்பம் கிரமத்தில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ்ர்களுக்கான நூலகம் அமைக்க என்னால் ஆன சிறு உதவி செய்தேன் (30 புத்தகங்கள்)
02. நானும் என் தம்பியும் - 3 கல்லூரி மாணவர்களின் மொத்த கல்வி செலவையும் (விடுதி செலவு உட்பட) ஏற்று உதவி செய்து கொண்டிருக்கிறோம்.
03. ஆண்டுதோறும் விளையாட்டு வீரர்களுக்கு (குறிப்பாக செஸ்) உதவி புரிந்து வருகிறோம்.
04. எங்கள் தெரு மற்றும் தெரிந்த மாணவர்களின் கல்விக்கு சிறு சிறு உதவி செய்தும் வழிகாட்டியும் வருகிறோம்.
05. அது மட்டுமில்லாமல் நான் கற்ற/தெரிந்து கொண்ட அனைத்து விசயமும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள எப்பொது தயங்கியது இல்லை.

கல்விக்காக நாம் என்ன செய்ய முடியும்?
01. பணம் உள்ளவர்கள் - நூலகம் அமைக்கவோ மாணவர்களின் கல்விக்கு நிதி உதவியோ செய்யலாம்.
02. நம் அருகில் வசிக்கும் கல்வியை தொடர முடியாத மணவர்களுக்கு நமக்கு தெரிந்தவற்றை கற்று தரலாம்.
03. நம்மால் முடிந்த எந்த ஒரு சிறு உதவி/வழிகாட்டுதலோ சிறு தயக்கமோ/ தாமதமோ இல்லாமல் செய்யலாம்.

யாருக்கு உதவி செய்யலாம்?
'தனி மனிதனாக ஒருவன் உலகையே நேசிக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்து இருப்பவனை மட்டும் நேசித்தால்கூடப் போதுமானது!' - அன்னை தெரசா
அமாம் இது கல்விக்கும் பொருந்தும் - நமக்கு பக்கத்தில் இருப்பவர்/ தெரிந்தவர்களுக்கு செய்ய ஆரம்பித்தால் கூட போதும்.

நன்பர்களே மேலே கூறிய விசயம் அனைத்தும் அனைவருக்கு தெரியும் இருந்தாலும் இது ஒரு மீள்பதிவு போல் - நல்ல கருத்தை எவர் எத்தனைமுறை கூறினாலும் தப்பில்லைன்னு சொல்லிட்டேங்க.

நன்றி வணக்கம்.

பின் குறிப்பு: நன்பர்கள் சிலர் சின்னபள்ளி குப்பம் கிராம நூலகத்திற்க்கு புத்தகங்கள் வழங்க இருப்பாதல் இந்த மாத கடைசியில் அங்கு செல்லவிருக்கிறேன். விரும்புகிறவர்கள் கலந்து கொள்ளலாம்.

முக்கிய அறிவிப்பு: இந்த தொடர் பதிவை நன்பர் கலை (கலக்கல் கலையரசன்) தொடர்வார். மேலும் விருப்ப உள்ளவர்கள் தொடரலாம்.

மேலும் வாசிக்க >>

Read more...

இது எங்க ஊரு - வேலூர் கோட்டை (Vellore Fort) - 2

வேலூர்க்கு நிறைய பெருமையான விஷயங்கள் இருந்தாலும் அதில் ரொம்ப பெருமையான விஷயமா நான் கருதுவது இந்த கோட்டைய தான்.

சிறு குறிப்பு:
1560ல் - சின்ன பொம்ப நாயக்கால் கட்டபட்டது (விஜயநகர பேரரசு)
1650ல் - பிஜபூர் சுல்தான் கைபற்றினார்.
1676ல் - மராட்டியர்கள் கைபற்றினார்கள்.
1708ல் - தௌலத்கான் (டெல்லி) கைபற்றினார்.
1760ல் - பிரிட்டிஷ்கரர்களல் கைபற்றபட்டது.
1806ல் - முதல் சிப்பாய் கலக்கம் நிகழ்ந்தது.

ரொம்ப அறுக்குறேனோ?

கிழே இருக்குற படங்களை பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லிடுங்க.



கருப்பு மேல எப்பவும் எனக்கு ஒரு காதல் உண்டு அதனாலதான்
முதல் படம் கருப்பு வெள்ளை. ஆங்கிலேயர்கள் காலத்துல எடுத்த படம்.



இது இப்போ எடுத்த படம்.
கோட்டையோட ஒரு பகுதி படம்




இதுதான் வரலாற்று சிறப்புமிக்க கோட்டையின்
நுழைவாயில் (சிறு பாலம்)



இன்றும் இந்தியாவுல இருக்குற கோட்டைகளில் அகழியில்
எப்போதும் தண்ணி இருக்குற கோட்டை இதுதாங்க.
அகழில முதலைகளும் இருக்குறதா சொல்றாங்க.
சமிபத்துல சுற்றுல துறை இங்கு படகு சவாரி செய்ய வசதி செஞ்சிருக்காங்க.




இந்த கோட்டை இரண்டு கட்ட பதுகாப்பு அரண் கொண்டது
இந்த சுவர் இரண்டாவது வரிசை.




போர் வீரர்கள் தங்குவதற்கான அறைகள் போகும் வழி



நேர்த்தியான கட்டட கலையின் சிறந்த சான்று.
அருமையான கண்கானிப்பு கோபுரங்கள்.



கண்கானிப்பு கோபுரத்தின் உட்புற தோற்றம்.
அதுக்கு கீழே ஓய்வு அறை.



இரண்டாம் நிலை அரண்னில் இருந்து கோட்டை அகழி தோற்றம்.



அகழியை எத்தனை கோனத்தில் இருந்து பார்த்தாலும் அழகுதான்.



1806ல ஆங்கிலேயரால் போட்ட வரைபடம் இதுதாங்க.
இந்த ஒரு விசயத்துலதான் நாம நிரைய இழந்திருக்கோம்.



கோட்டைக்குள்ள இருக்குற கோயில் (ஜலகண்டீஸ்வரர்)
விஜயநகர பேரரசின் சிறந்த உதாரணம்.



கோயிலோட மொத்த தோற்றம்.



கோயிலோட முன்புற தோற்றம்.



இதுதாங்க அழகிய சிற்ப மண்டபம்.



என்ன சொல்ல...............



இப்ப சொல்லுங்க எங்க ஊரு எப்படி இருக்கு.



ரெண்டுத்துல எதுங்க அழகு?



இன்னொரு கருப்பு வெள்ளை படம்.



அதேதூண் இல்லீங்க இது பக்கத்து தூண்.
இன்னும் இதுபோல நிறைய இருக்கு.



இதுதான் ரெண்டு விலங்கு ஒரே சிற்பத்தில்.

.......................................

........................

...........

.


மேலும் வாசிக்க >>

Read more...
Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP