பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

Wednesday 17 June, 2009

பதிவுலக நன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

விவாதத்துக்கான முதல் கேள்வி பதிவுலக்கத்துல பெருபாலும் அலசபட்ட கேள்விதான்.

கலாச்சாரம்/பண்பாடு என்றால் என்ன?

இந்த கேள்விக்கு அனைவரும் ஏற்று கொள்ளும்படி பதிலலிப்பது என்பது கடினம்தான். ஏன்னென்றால் கலாச்சாரம் சமுகத்திற்க்கு சமுகம் இடத்திற்க்கு இடம் மாறுபடுமென்று பெரும்பாலும் சொல்றாங்க. அதனால நாம் முதலில் தமிழ் சமுகத்தின் கலாச்சாரத்தை பற்றி பேசுவோம்.

கலாசரத்தை வளர்க்கும் அல்லது சீர் குலைக்கும் விசயமாக தான் கீழே பட்டியலிட்டவை உள்ளன.

இதுல எது எவ்வளவு எப்படி பாதிச்சிருக்குன்னு உங்க கருத்தை பின்னூடம் இடுங்க. கண்டிப்பாக இது ஒரு ஆரோகியமான விவதமாக வளர வேண்டுமென்று ஆசை படுறேன்.

சினிமா?
தொலைகாட்சி?
மதம்?
சாதி?
கல்வி?
ஒழுக்கம்?
தனிமனித ஒழுக்கம்?
வாழ்வியல் முறை?
சமுக கட்டமைப்பு?
அரசியல்?
வேற ஏதாவது?







65 comments:

oviyangal 16 June 2009 at 1:24 pm  

கல்வி..
ஒழுக்கம் தவிர மத்த எல்லாமே சமுதாயத்தை பாதிக்கும் விதமாத்தான் இருக்கு சார்.

oviyangal 16 June 2009 at 1:24 pm  

கல்வி..
ஒழுக்கம் தவிர மத்த எல்லாமே சமுதாயத்தை பாதிக்கும் விதமாத்தான் இருக்கு சார்.

Unknown 16 June 2009 at 1:27 pm  

நன்றி ovyangal,

எந்த விதத்தில் சொல்ல முடியுமா?

வனம் 16 June 2009 at 10:38 pm  

வணக்கம்

என்னைப்பொருத்தவரையில் வாழ்வியல் முறை தான்

பொதுவாய் ஒரு நல்ல சமுதாயத்திர்கு அந்த சமூக மக்களின் வாழும்முறைதான் அடிப்படையாக கொள்ளப்படுகின்றது.

இதன் கூட சோந்தமாக சிந்திக்கும் திறனும் சேர்ந்தால் எல்லோரும் ஒரு நல்ல சமூகத்தின் பங்காக இருக்கலாம்

இராஜராஜன்

Unknown 16 June 2009 at 11:08 pm  

நன்றி திரு இராஜராஜன் அவர்களே

//இதன் கூட சோந்தமாக சிந்திக்கும் திறனும்//

சொந்தமாக சிந்திக்கும் திறன் எனறால் - எப்படி அதை பெருவது?

கல்வியின் மூலமாகவா?
சமுகத்தின் மூலமாகவா?
ஆன்மீகத்தின் மூலமாகவா?

அல்லது இயல்பாகவா? இயல்பாக என்றால் எத்தனை பேருக்கு இது இருக்கும் அல்லது இருக்கிறது.

கொஞ்சம் விளக்குங்களேன்.

நன்றி

மதிபாலா 17 June 2009 at 12:40 pm  

கலாச்சாரம்/பண்பாடு என்றால் என்ன?

/

ஒரு எழவும் இல்ல.

எல்லாம் நம்மளே விதிச்சிகிட்ட மாயக்கோடுகள்..

அத்தனையையும் உடைத்தெறியணும்.

புருஷன் செத்தா பொண்டாட்டி வெள்ளைப் புடவை கட்டணும்கிறதும் கலாச்சாரம் தான்.

ஏன் பொண்டாட்டி செத்தா புருஷன் வெள்ளச்சட்ட தான் போடணும்னு கலாச்சாரம் இல்ல.

நாவிதன் செரைக்க மட்டுமே செய்யணும்கிறது மரபு / கலாச்சாரம்னு தான் சொல்லிசொல்லித்தான் வளர்த்தாங்க.

ஏன் செரைக்கத் தெறிஞ்சவனெல்லாம் செரைச்சா என்ன குறைஞ்சி போச்சு.

நம்ம நாட்டுல கலாச்சாரம் , பண்பாடுன்னு அவனவனுக்கு தோணினதை எல்லாம் செஞ்சு வச்சிட்டானுங்க.

அதையெல்லாம் உடைத்தெறியணும்...

சாதிமதமில்லாத , பெண்ணடிமைத்தனம் இல்லாத , சமத்துவ சமுதாயம் அமைக்கணும்.

அதுக்கப்பறம் தான் கலாச்சாரம் மத்த எழவையெல்லாம் பத்தி பேசணும்.

Unknown 17 June 2009 at 2:56 pm  

நன்றி திரு மதிபாலா அவர்களுக்கு
//ஒரு எழவும் இல்ல.
எல்லாம் நம்மளே விதிச்சிகிட்ட மாயக்கோடுகள்..
அத்தனையையும் உடைத்தெறியணும்.//

அப்ப அதோட பேர் என்ன?

//சாதிமதமில்லாத , பெண்ணடிமைத்தனம் இல்லாத , சமத்துவ சமுதாயம் அமைக்கணும்.//

கண்டிப்பாக ஏற்று கொள்ள படவேண்டிய உண்மை.

//அதுக்கப்பறம் தான் கலாச்சாரம் மத்த எழவையெல்லாம் பத்தி பேசணும்.//

அப்ப பேசவே கூடது என்கிறீர்களா?

உங்க கருத்துகள் எல்லாம் இந்து மத மூட நம்பிக்கை/கலாச்சாரத்தை சார்ந்தே இருக்கு.
அதுவும் உண்மைதான் நம் சமுக்த்தில் பெரும்பாண்மையானோர் இந்துகள் தான்.
இருந்தாலும் பொதுபடையான கருத்துகளை எதிர்பார்கிறேன்.

அது மட்டும் இல்லாமல் ஒரு விசயம் தப்பா இருகிறதனாலேயோ இல்ல சீர்கெட்டு இருக்குறதனாலேயோ அதபத்தி பேச கூடாதுன்னு எதும் இல்லைன்னு நினைக்குறேன்

இன்னொரு விசயம் என்னவெண்றால் இங்கு எதனால் எவ்வளவு எப்படி சீர்கெட்டு/வளர்ந்து இருக்கு என்பதை பார்போம்

மீண்டும் உங்க கருத்துக்கு நன்றி

Unknown 17 June 2009 at 3:00 pm  

கலாச்சாரம் என்பதே வாழ்வியல் முறை தானே. அந்த வாழ்வியல் முறையில் சமூகத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது. சமூகம் என்பது ஒவ்வொரு தனி மனிதனாலும் சமைக்கப்பட்டது தானே. இந்த சமுதாயத்தின் பொழுது போக்கிற்கும் முன்னேற்றத்திற்கும் தானே சினிமா, தொலைகாட்சி, கல்வி போன்ற கட்டமைப்புகள்.

மேலும் மதம், சாதி போன்ற அமைப்புகளும் ஒரு குழுவாக வாழத்தானே தோற்றுவிக்கப்பட்டது.

ஒரு குழந்தை சினிமாவைப் பார்த்து கெட்டுப்போகிறது என்றால் நம்பலாம். சுய அறிவுள்ள ஒருவர் கனவுத் தொழிற்சாலையைப் பார்த்து கெட்டுப் போவது நம்ப முடியாத ஒரு விஷயம். அப்படி நம்பித்தான் ஆகவேண்டுமெனில் சினிமாதான் கெடுக்கிறது எனில் அது சினிமாவால் அல்ல. தனி மனிதனுக்கு ஒழுக்கம் இல்லாததால்.தனிப்பட்டவனுடைய சபல மனதால்...

சினிமாவிற்கும் தொலைக்காட்சிக்கும் பெரிய வித்யாசம் இல்லை. வித்யாசம் இருக்கிறது, தொலைக்காச்சி கெடுக்கிறது என்றால் அதில் வீட்டிலுள்ள பெரியவர்களுக்கும் பங்கிருக்கிறது.பெரியவர்கள் முறையாக வளரவில்லை, குழந்தைகளை வளர்க முயலவில்லை என்று அர்த்தம்.

மதம் நிச்சயமாக கலாச்சாரத்தை சீரழிக்காது. கலாச்சாரத்தை காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் அது சமூகத்தை வேண்டுமென்றால் சீரழிக்கலாம். அப்படித்தானே நடக்கிறது.

செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டதுதான் சாதியம். நான் சொல்ல வருவது நாகரீகம் வளர ஆரம்பித்த ஆரம்ப காலங்களில். நாகரீகம் முழுவதும் வளர்ந்துள்ள இன்று சாதிய முறையை அழிக்க வேண்டுமென்கிறார்கள். ஆனால் பள்ளிக்கூடத்தில் சேரும்போது அதனைக் குறிப்பிட வேண்டுமென்கிறார்கள்.ஆகவே சாதியம் கலாச்சாரத்தைக் கெடுக்கிறது எனில் அதற்கான முக்கிய பங்கு கல்வி சார்ந்த அமைப்புகளுக்கு உண்டு. கல்வித் துறை அரசியலை சார்ந்துள்ளதால் அரசியல் வாதிகளுக்கும் அதில் ஒரு பங்கு உண்டு.

ஒழுங்கான கல்வி கலாச்சாரத்தைக் கெடுக்காது. மெத்தப்படித்த கர்வத்தில் சுய கலாச்சாரத்தை துறந்து...மனதிற்குப் பிடித்த வேறொரு கலாச்சாரத்தைத் தழுவும் போது கூட பிரச்சனை இல்லை. சுய கலாச்சாரத்துடன் மாற்று கலாச்சாரத்தை தொடர்புபடுத்தும் போதுதான் பிரச்சனையே. அந்தத் தொடர்பு படுத்துதல் வேண்டுமெனில் கலாச்சாரத்தைக் கெடுக்கலாம். அனால் அது மெத்தப் படித்த தனி மனிதனின் ஒழுக்கக்கேடினால் விளைவது.

வேறு எதைக் காட்டிலும் தனி மனித ஒழுக்கம் இல்லையெனில் குடும்பத்திலிருந்து, சுற்றத்திலிருந்து சமுதாயத்திலிருந்து, கலாச்சாரத்திலிருந்து அனைத்துமே கெடும் என்பது என்னுடைய கருத்து.

என்னையும் உங்களுடைய கருத்துப் பரிமாற்றத்திற்கு அழைத்ததற்கு நன்றி ராஜேந்திரன் பிரதாப். ஆமாம் இதுதானே உங்களுடைய பெயர்.

அன்புடன்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

வம்பு விஜய் 17 June 2009 at 3:08 pm  

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

- வம்பு விஜய்

Unknown 17 June 2009 at 3:56 pm  

நன்றி திரு கிருஷ்ண பிரபு,

//மேலும் மதம், சாதி போன்ற அமைப்புகளும் ஒரு குழுவாக வாழத்தானே தோற்றுவிக்கப்பட்டது.//

இந்த கருத்தை ஏற்று கொள்ள முடியவில்லை கிருஷ்ண. ஒவ்வொரு இனமும் தனி குழுவாக வழலாமே ஒழிய அந்த இனத்தில் பாகுபாடு என்பது ஏற்று கொள்ளமுடியாது. உதாரணத்திற்க்கு தமிழ் பேசும் அனைவரும் ஒரு குழுவாக வாழலாமே தவிர அதில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த சாதி இருக்ககூடாது.

நீங்க கேட்கலாம் ஒவ்வொரு இனமும் குழுகளாக இருக்கும் போது சாதி ஏன் இருக்ககூடாதென்று. ஏன்னென்றால் சாதியில் உள்ள பாகுபாடு இனத்தில் இல்லை அது மட்டும் இல்லாமல் இனம் என்பது ஒரு முழு சமுகத்தை குறிக்கும் ஆனால் சாதி ஒரு சமுகதிற்க்குள்ளே பல பாகுபாடு உருவாக்குகிறது.


//ஒரு குழந்தை சினிமாவைப் பார்த்து கெட்டுப்போகிறது என்றால் நம்பலாம். சுய அறிவுள்ள ஒருவர் கனவுத் தொழிற்சாலையைப் பார்த்து கெட்டுப் போவது நம்ப முடியாத ஒரு விஷயம். அப்படி நம்பித்தான் ஆகவேண்டுமெனில் சினிமாதான் கெடுக்கிறது எனில் அது சினிமாவால் அல்ல. தனி மனிதனுக்கு ஒழுக்கம் இல்லாததால்.தனிப்பட்டவனுடைய சபல மனதால்...//

ஒரு மனிதனுக்கு தனிமனித ஒழுக்கம் என்பது எப்போது உருவாகிறது?
நான் அறிந்தவரை குழந்தை பருவத்திலிருந்தே அந்த குழந்தை பார்கின்ற சமுகம், பெற்றோர், சூழ்நிலை இவையாவும் தனிமனித ஒழுக்கத்தை நிர்னைப்பதாக நினைக்கிறேன். அப்படியென்றால் கட்டாயம் சினிமா தனிமனித ஒழுக்கத்தை பாதிக்கிறது (எந்த அளவு என்பதே வேறுபடுகிறது).



//சினிமாவிற்கும் தொலைக்காட்சிக்கும் பெரிய வித்யாசம் இல்லை.//

கண்டிப்பாக வித்யாசம் இருக்கிறது ஏன்னெறால், தினமும் சினிமா பார்பவர்களை காண்பது அரிது. ஆனால் தொலைகாட்சியை அனைவரும் ஒரு நாளில் ஒரு முறையாவது பார்கிறோம். அதானால் தொலைகாட்சியின் பாதிப்பு சினிமாவைவிட அதிகம்.


//மதம் நிச்சயமாக கலாச்சாரத்தை சீரழிக்காது. கலாச்சாரத்தை காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் அது சமூகத்தை வேண்டுமென்றால் சீரழிக்கலாம். அப்படித்தானே நடக்கிறது.//

இதற்க்கு பதில் நீங்க எழுதிய முதல் பத்தையை மறுபடியும் படிங்க.

//இன்று சாதிய முறையை அழிக்க வேண்டுமென்கிறார்கள். ஆனால் பள்ளிக்கூடத்தில் சேரும்போது அதனைக் குறிப்பிட வேண்டுமென்கிறார்கள்.ஆகவே சாதியம் கலாச்சாரத்தைக் கெடுக்கிறது எனில் அதற்கான முக்கிய பங்கு கல்வி சார்ந்த அமைப்புகளுக்கு உண்டு. கல்வித் துறை அரசியலை சார்ந்துள்ளதால் அரசியல் வாதிகளுக்கும் அதில் ஒரு பங்கு உண்டு.//

கல்வியில் சாதியை குறிப்பிட சொல்வதின் நோக்கம்: அனைவருக்கும் சமமான நிலை வரவேண்டும் என்பதால், உங்களுக்கு எந்த சலுகையும்/அடையாளமும் வேண்டாம் என்றால் குறிப்பிட தேவையில்லை. அதுமட்டும் இல்லாமல் இன்றைய நிலையில் கலப்பு திருமனம், சுய மரியாதை திருமணம் எல்லாம் அரசு அங்கிகாரம் பெற்றது தானே அங்கே எந்த சாதியை குறிப்பிடுவீர்கள்.


//ஒழுங்கான கல்வி கலாச்சாரத்தைக் கெடுக்காது.//

சரியாக புரிய வில்லை ஒழுங்கான கல்வியா இல்லை ஒழுக்கத்துடன் கூடிய கல்வியா?


//சுய கலாச்சாரத்துடன் மாற்று கலாச்சாரத்தை தொடர்புபடுத்தும் போதுதான் பிரச்சனையே. அந்தத் தொடர்பு படுத்துதல் வேண்டுமெனில் கலாச்சாரத்தைக் கெடுக்கலாம்.//

அப்படியென்றால் ஒப்பீடு என்பதே கூடாது என்கிறீர்களா. நீங்கள் நினைத்து கொண்டிருக்கும் கலாசரமும் பல கலாச்சாரத்தின் பாதிப்பில் வந்ததுதானே.


//அனால் அது மெத்தப் படித்த தனி மனிதனின் ஒழுக்கக்கேடினால் விளைவது.//

அப்போ ஒழுக்கத்திற்க்கும் கல்விக்கும் தொடர்பில்லைன்னு சொல்றீங்களா?


//வேறு எதைக் காட்டிலும் தனி மனித ஒழுக்கம் இல்லையெனில் குடும்பத்திலிருந்து, சுற்றத்திலிருந்து சமுதாயத்திலிருந்து, கலாச்சாரத்திலிருந்து அனைத்துமே கெடும் என்பது என்னுடைய கருத்து.//

இவை அனைத்தும் அல்லவா தனிமனித ஒழுக்கத்திற்க்கு பாதிப்பை ஏற்படுத்துவது.


//என்னையும் உங்களுடைய கருத்துப் பரிமாற்றத்திற்கு அழைத்ததற்கு நன்றி ராஜேந்திரன் பிரதாப். ஆமாம் இதுதானே உங்களுடைய பெயர்.//

நன்றி திரு கிருஷ்ண பிரபு, என் பெயர் பிரதீப்.

S.A. நவாஸுதீன் 17 June 2009 at 4:23 pm  

இந்த உலகில் எந்த மதமும் தீயவற்றை போதிக்கவில்லை. மதத்தில் மனிதன் புகுத்திய மாற்றங்களின் விளைவுதான் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு. மதம் கூறும் (கலப்படமற்ற) உண்மையான வாழ்க்கை முறைதான் மனிதனை மனிதனாக வாழச் செய்யும்.

Unknown 17 June 2009 at 4:37 pm  

நன்றி திரு. S.A. நவாஸுதீன்.

//இந்த உலகில் எந்த மதமும் தீயவற்றை போதிக்கவில்லை.//

பிறகு ஏன் இவ்வளவு பிரச்சனை/தீவிரவாதம் குறிப்பாக இஸ்லாமில்.


//மதத்தில் மனிதன் புகுத்திய மாற்றங்களின் விளைவுதான் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு,//

எந்த மதத்தில்

//உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு. மதம் கூறும் (கலப்படமற்ற) உண்மையான வாழ்க்கை முறைதான் மனிதனை மனிதனாக வாழச் செய்யும்.//

நீங்க சொல்லியிருக்குற எந்த விசயமும் நம்ம விவாதத்திற்க்கு ஒத்துவரவில்லையே

இருந்தாலும் உங்க கருத்துகளை பகிர்ந்ததற்க்கு நன்றி.

Unknown 17 June 2009 at 4:42 pm  

வணக்கம் பிரதீப்,

இன்றுள்ள பரிமாண வளர்ச்சியில் நீங்கள் பேசுகிறீர்கள். நான் என்னுடைய முதல் பின்னூட்டத்தில், "செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டதுதான் சாதியம். நான் சொல்ல வருவது நாகரீகம் வளர ஆரம்பித்த ஆரம்ப காலங்களில்" என்று சொல்லியிருந்தேன்.

தாம் இந்த தொழிலை சார்ந்தவர்கள் என்று முன்னிறுத்த உதவியாகக் கொண்டு வந்த முறையாகக் கூட இருக்கலாம். தன் சாதிய முறையால் முறையால் குளிர் காய நினைப்பவர்கள் ஏன் ஏற்றத் தாழ்வுகளை பற்றிப் பேச வேண்டும்.

கவனித்து பார்த்தால் நான் ஒன்றுடன் ஒன்று முடிச்சி போட்டு சொல்லியிருந்தேன். சினிமாவில் ஆரம்பித்து தனி மனிதன் வரை. நான் முடித்தது தனி மனிதனின் ஒழுக்கத்தில் என்றாலும், தனி மனிதன் தான் குடும்பத்தில், சமுதாயத்தில், நாட்டில், உலகத்தின் பிரஜையாக அங்கம் வகிக்கிறான்.

நுண்ணிய கேள்விகளை எழுப்புகிறீர்கள். ஆகவே உங்களுக்கு அதிகமாகவே இதைப் பற்றி பல கோணங்களில் தெரியும் என்று நினைக்கிறேன். அடுத்தவர்களைக் கூர் பார்க்க நினைக்கிறீர்களோ! இந்த வார்த்தை உங்களை உறுத்தியிருந்தால் என்னை மன்னிக்கவும்.

/--சினிமா, தொலைகாட்சி, மதம், சாதி, கல்வி, ஒழுக்கம், தனிமனித ஒழுக்கம், வாழ்வியல் முறை, சமுக கட்டமைப்பு, அரசியல்--/

வேற ஏதாவது - முக்கியமாக ஒன்றை சேர்க்க மறந்து விட்டீர்கள் அது "கலை". இயல், இசை நாடக வித்வான்கள், விளையாட்டு வீரர்கள் (தற்பொழுது) என பலரும் 'கலாச்சாரத் தூதர்கள்-

Cultural ambassadors' என்றுதான் கௌரவமாக அழைக்கப் படுவார்கள்.

அன்புடன்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

S.A. நவாஸுதீன் 17 June 2009 at 4:50 pm  

//இந்த உலகில் எந்த மதமும் தீயவற்றை போதிக்கவில்லை.//

பிறகு ஏன் இவ்வளவு பிரச்சனை/தீவிரவாதம் குறிப்பாக இஸ்லாமில்.

உங்கள் கேள்வியே தவறு. மனிதர்கள் செய்யும் தவறுக்கு மதம் என்ன செய்யும். எந்த மதமும் தீவிரவாதத்தை போதிக்கவுமில்லை, ஆதரிக்கவுமில்லை. இந்துக்கள் தவறு செய்தால் இந்து மதத்தை நீங்கள் குற்றம் கூறுவீர்களா? அதுபோல் முஸ்லிம்கள் தவறு செய்தால் இஸ்லாத்தை குறை சொல்வது நியாயமில்லை, ஏற்புடையதுமில்லை.

சாணக்கியன் 17 June 2009 at 5:09 pm  

கலாச்சாரம் என்பதை ஏதோ கட்டுப்பாடுகள் மூட நம்பிக்கைகள் என்பதுபோல் புரிந்துகொண்டுள்ள சிலரைப் பார்த்து பரிதாபமாக இருக்கிறது. மதுரையில் ‘அண்ணே’ என விழிப்பதும் கோயம்புத்தூரில் ‘ங்க’ விகுதி சேர்த்து அழைப்பதும் சென்னையில் மரியாதை இல்லாமால், ‘உன் அண்ணன் வந்துட்டா”னா”?’ என விழிப்பதும்கூட கலாச்சாரம்தான். ஒப்பாரி மற்றும் தாலாட்டு கூட கலாச்சாரம்தான். கலாச்சாரமே தேவையில்லை, இனிமே யாரும் தாலாட்டே பாடக்கூடாது என சொல்வார்களோ?

சினிமா?
இது குறித்த என் கருத்தை தனி பதிவாகவே போட்டிருக்கிறேன். 25% தீமை செய்கிறது. http://vurathasindanai.blogspot.com/2009/05/blog-post_21.html
தொலைகாட்சி?
30% தீமை
மதம்?
10% தீமை
அரசியல்?
25% தீமை

மற்றவை எல்லாம் சிறு சிறு சதவிகிதங்கள் என்பதால் குறிப்பது கடினம்

Unknown 17 June 2009 at 5:18 pm  

நன்றி திரு. கிருஷ்ண பிரபு,

//நுண்ணிய கேள்விகளை எழுப்புகிறீர்கள். ஆகவே உங்களுக்கு அதிகமாகவே இதைப் பற்றி பல கோணங்களில் தெரியும் என்று நினைக்கிறேன்.//

இருக்கலாம் ஆனால் என்னிடம் தெளிவான ஒரு முடிவு இல்லை. அதை தெரிந்து கொள்ளவே இந்த விவாதம்/பதிவு.


//அடுத்தவர்களைக் கூர் பார்க்க நினைக்கிறீர்களோ! இந்த வார்த்தை உங்களை உறுத்தியிருந்தால் என்னை மன்னிக்கவும்.//

கண்டிப்பாக இல்லை. சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்பதில் அர்தமும் இல்லை அவசியமும் இல்லை. நான் எந்த விதத்திலும் தப்பாக எடுத்து கொள்ளவில்லை.


//வேற ஏதாவது - முக்கியமாக ஒன்றை சேர்க்க மறந்து விட்டீர்கள் அது "கலை". இயல், இசை நாடக வித்வான்கள், விளையாட்டு வீரர்கள் (தற்பொழுது) என பலரும் 'கலாச்சாரத் தூதர்கள்-//

ஆம் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.

//தாம் இந்த தொழிலை சார்ந்தவர்கள் என்று முன்னிறுத்த உதவியாகக் கொண்டு வந்த முறையாகக் கூட இருக்கலாம்.//

சரி அப்படியிருந்தால் தொழிலின் அடையாளமாக மட்டுமே இருக்கவேண்டுமே ஒழிய ஏன் இந்த ஏற்றதாழ்வு நான் இப்போது கூற வில்லை அந்த காலத்தில்?


//தன் சாதிய முறையால் முறையால் குளிர் காய நினைப்பவர்கள் ஏன் ஏற்றத் தாழ்வுகளை பற்றிப் பேச வேண்டும்.//

உங்களுடைய இந்த கேள்வி அரசியல்வாதியையா அல்லது சமுகத்தை/தனிமனிதனை நோக்கியா?

சொல்லரசன் 17 June 2009 at 5:28 pm  

தனிமனித ஒழுக்கமே கலாச்சார சீரழிவுக்கு காரணம்,கலாச்சாரம் என்பது என்னை பொருத்தவரை உடலை மறைக்கும் ஆடை போன்றது,அது நாட்டிற்கு நாடு,இடத்திற்கு இடம் மாறுபடும்.ஆடைஅணியாத ஊரில் ஆடையின்றி போகலாம்,ஆனால் ஆடை உடுத்தும் ஊரில் ஆடையின்றி சென்றால் அதுதான் கலாச்சார சீரழிவு,இதற்கு தனிமனித ஒழுக்கமே காரணம்.
உங்களின் முய‌ற்சிக்கு பாராட்டுகள் இதுபோன்ற‌ பதிவுகளால் பல கருத்துகள் புதிய கோணத்தில் அலசபடும்.

தீப்பெட்டி 17 June 2009 at 5:56 pm  

//கலாச்சாரம்/பண்பாடு என்றால் என்ன?//
//முதலில் தமிழ் சமுகத்தின் கலாச்சாரத்தை பற்றி பேசுவோம்//

தமிழ் கலாச்சாரம் என்பது என்ன? அத சொன்னீங்கன்னா எது எவ்வளவு பாதிக்குதுன்னு சொல்ல முடியும்..

கலாச்சாரம் இதுதானென்பதை காலம்தான் சொல்லும்..

கலாச்சாரம் என்பதே இறந்தகாலத்தில் மட்டுமே பயன்படும் வார்த்தை..
பண்டைய கலாச்சாரத்தை பற்றி பேசலாம்..
நாளைய கலச்சாரத்தை பேசமுடியுமா?
இன்றைய கலாச்சாரம்/பண்பாடு பற்றி நாளைய பார்வைகள் சொல்லும்..

இன்றைய கலாச்சாரம், பண்பாடு என்று அதையெல்லாம் நிகழ்காலப் பார்வையில் பார்ப்பதென்பது நடவாத காரியம். அல்லது நாளை மாறப்போகும் ஒற்றை பார்வை..

அது ஒரு கனாக் காலம் 17 June 2009 at 6:03 pm  

பண்பாடு / கலாச்சாரம் ...நாம் பேசும் மொழியா, உடுத்தும் உடையா, கொண்டாடும் பண்டிகையா, ரசிக்கும் இசையா , வழிபாட்டு முறையா ... இப்படி நீண்டு கொண்டே போகும் .... அதை முதலில் தெளிவுபடுத்தி கொள்ளவேண்டும்

அம்மா , அப்பா தான் இதற்க்கு எல்லாம் திறவு கோல், அவர்கள் சொன்னது தான் நமக்கு எல்லாமே , ( அவர்கள் கொடுத்தது தான் இந்த உருவம், அறிவு d.n.a etc.,) அவர்கள் காமித்து கொடுத்து தான் இது எல்லாமே, ( மாம்பழம், நாரதர், வேலன், கணபதி .... அது வெறும் கதை அல்ல ... ஒரு பெரிய தாத்பர்யம் ) ...

ஆனால் இப்பொழுது நடப்பது, நண்பர்கள் , நண்பிகள், வசிக்குமிடம், படிக்கும் கல்லூரி, ஹாஸ்டல், படிக்கும் புத்தகங்கள், பின் நீங்கள் சொன்ன சினிமாக்கள், தொலை காட்சி ( தொல்லை காட்சி ) .... உலகமயமாக்கல் / பொருளாதாரம் /இடம் பெயர்ந்து வாழ்தல் ...இன்னம் இது போன்ற காரணங்களால் ... எல்லாம் மிக வேகமாக மாறி கொண்டே வருகிறது ..அழிந்து கொண்டும் வருகிறது

நீங்கள் நினைப்பது போல் ( அல்லது ஆசை படுவது ) எல்லாரும் எப்போதும் சமம் , ஏற்ற தாழ்வு அறவே போகும் ...... அது எங்குமே நடைமுறையில் இல்லை. Golf விளையாடும் குழு வேறு basketball விளையாடும் கூட்டம் வேறு ...அது எப்போதுமே இருக்கும் .

நான் எதாவது உதாரணத்திற்கு சொன்னால் கூட சர்ச்சையாகிவிடும் ...

நான் தொடங்கிய இடத்திற்கே வருகிறேன்...அம்மா /அப்பாவை நன்றாக மதித்து, மரியாதையுடன் இருகிறார்களோ , அவர்களால் பண்பாடு / கலாச்சாரம் காபாற்றபடுகிறது , மட்டுமில்லாமல் ... அடுத்த தலை முறைக்கும் எடுத்து செல்லப்படுகிறது , ஒரு உதாரணமாய் வாழ்வதால்

Unknown 17 June 2009 at 6:58 pm  

நன்றி திரு. S.A. நவாஸுதீன்.

//இந்துக்கள் தவறு செய்தால் இந்து மதத்தை நீங்கள் குற்றம் கூறுவீர்களா?//

மதத்தால் தவறு செய்தால் கண்டிப்பாக கூறுவேன், கூறிகொண்டிருக்கிறேன்.


//அதுபோல் முஸ்லிம்கள் தவறு செய்தால் இஸ்லாத்தை குறை சொல்வது நியாயமில்லை, ஏற்புடையதுமில்லை//

முஸ்லிம் என்று தனி மனிதனை கூறவில்லை இஸ்லாத்தை சொல்லிகொண்டு தவறு செய்தால் கண்டிப்பக அனைவரும் ஒதுக்க அல்லது தண்டிக்கவேண்டும். என்னை பொருத்தவரை ஒருவனை அனைவரும் ஒதுக்குவதே மிக தண்டனை.

இன்னோரு விசயம் இங்கே நாம் மதங்களை தாண்டி யோசிப்போமே

உங்கள் கருத்திற்க்கு மிக்க நன்றி.
உங்களிடமிருந்து இன்னும் எதிபார்கிறேன்.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் 17 June 2009 at 7:06 pm  

விலங்கைப்போல் வாழ்ந்த மனிதன், நாகரீகம் வளர தனக்கென்று சில வரைமுறைகளை வகுத்துக்கொண்டதே கலாச்சாரமும், பண்பாடும். விலங்கிற்கு தாய்க்கும், துணைக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால் மனிதனை அப்படி நடக்காமல் வழிவகுப்பது காலச்சாரமும்,பண்பாடும்தான்.
எந்த கையில் சாப்பிட்டாலும் சாப்பாடு இறங்கும். ஆனால் ஏன் வலதுகையில் சாப்பிடவேண்டும் என்று கூறுகிறோம்?
வீட்டை விட்டு போகும்போது " போய்விட்டு வருகிறேன்" என்று கூறுவதும், சாவு வீட்டிற்கு போனால் சொல்லமல் வருவதும், உண்மையிலே எந்த பலனை தருகிறது? இது போன்ற சில சம்பவங்களால் நன் வாழ்கையை கொஞ்சம் அழகு பண்ணிக்கொள்கிறோம்.
ஒருவரை சந்தித்தால் " ஹல்லோ, சௌக்கியமா?" என்று கேட்டு கைக்குலுக்கிக்கொள்வது, ஒரு மரியாதையும், அவருக்கு ஒரு சந்தோஷத்தையும் கொடுக்கும்.
இது போன்ற உபதரவமில்லாத கலாச்சாரத்தையும், பண்பாடுகளையும் பேணி காக்கத்தான் வேண்டும்.
ஆனால் ஜாதி, மத, மற்றும் மூட நம்பிக்கைகளை காரணம் காட்டி, மனிதனை மீண்டும் மிருகமாக மாற்றும் வழிமுறைகளை தூக்கி வீச வேண்டும்.
என் கருத்து சரியா நண்பர்களே?

Bibiliobibuli 17 June 2009 at 7:30 pm  

பண்பாடு/கலாச்சாரம் என்பதே ஒரு தனிமனிதனின் வாழ்வை பண்படுத்துவதற்காகவும், மேன்மைப்படுத்தவும் உருவாக்கப்பட்ட எழுதப்படாத விதிமுறைகள் தான். அதாவது எங்கள் நம்பிக்கை (கடவுள், உழைப்பு etc.) , நாங்கள் வாழ்க்கையில் எங்கள் உயர்வுக்காய் மதிப்பளிக்கும் விடயங்கள் (பெரியோரை மதித்தல், கல்வி), மற்றும் எங்கள் வாழ்க்கை முறை (ஒருவனுக்கு ஒருத்தி). ஆனால், நீங்கள் இங்கே கூறுபவை சில பண்பாட்டை நிர்ணயிக்கும் புறக்காரணிகள் மட்டுமே. இந்த புறக்காரணிகள் எங்கள் பண்பாட்டை எப்படி கட்டிக்காக்க உதவுகின்றன அல்லது எப்படி எங்கள் கலாச்சாரத்தை சீரழிக்கின்றன என்று விவாதிக்கலாம். ஆனால், இவையெல்லாம் எப்படி பண்பாட்டை நிர்ணயிக்கும் அடிப்படைகளாக ஆகமுடியும்?

உதாரணமாக சினிமா எப்படி தனிமனித வாழ்வின் கலாச்சாரமாக ஆகமுடியும்? ஆனால், அது எங்கள் கலாச்சாரத்தை பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் போது அந்த சினிமா என்ற ஊடகம் அதன் தாக்கத்தை தனிமனிதன் மீது ஏற்படுத்துகிறது. அந்த தனிமனித சிந்தனை தானே சமூகவாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவ்வாறாக, தனிமனித, சமூக மாற்றமே கலாச்சார்த்தை கட்டிக்காக்கிறது அல்லது சீரழிக்கிறது.

அடுத்து, கல்வி என்று பார்த்தோமேயானால், அது நாங்கள் வாழ்க்கையில் நம்பும் அல்லது மதிக்கும் ஒரு விடயம். ஆனால், கல்வி மட்டுமே எப்படி கலாச்சாரமாக முடியும்?

இதே போன்று தான் நீங்கள் கூறும் மற்ற சில காரணிகளும். ஆக, பல காரணிகள் ஒன்றாக சேர்ந்து தான் கலாச்சாரத்தின் அடிப்படைகளை தீர்மானிக்கின்றன. இந்த வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், என்பன சமூகத்திற்கு சமூகம் மாறுபடும்போது கலாச்சாரமும் பண்பாடும் மாறுபடுகிறது.

இறுதியாக, உங்கள் கருத்து கணிப்பில் தரப்பட்ட தரவுகள் கலாச்சாரத்தில் தாக்கத்தை விளைவிக்கிற புறக்காரணிகளே அன்றி அதுவே கலாச்சாரம்/பண்பாடு ஆகாது என்பது என் கருத்து.

வனம் 17 June 2009 at 7:47 pm  

வணக்கம் பிரதீப்
சொந்தமாக சிந்திக்கும் திறன் மறுபடியும் வாசியுங்கள்,
சொந்தமாக சிந்திக்கும்

அதை எப்படி
கல்வியின் மூலமாக பெறமுடியும்,
பள்ளிகளில் பெரும் கல்வி என்பது யாறோ பதிந்துவிட்டு சென்றதை நமக்குள் தினிக்கும் விடயம்தான்.

சமுகத்தின் மூலமாக -- கொஞ்சம் ஒத்துவரும் ஆனால் இதுவும் நாம் அதாவது இயல்பாக யோசிப்பதன் மூலமாகவே வரும்

ஆன்மீகத்தின் மூலமாகவா -- நிச்சயம் ஆன்மீகம் யாரையும் யோசிக்க அனுமதிப்பதில்லை, நான் சொல்வதை கேள், நான் சொன்னபடி நட என தொடர்ந்து அறிவுறுத்துவதுதான் ஆன்மீகம்.


\\இயல்பாகவா? இயல்பாக என்றால் எத்தனை பேருக்கு இது இருக்கும் அல்லது இருக்கிறது. \\
ரோம்ப நியாயமான கேள்வி, எனக்கு தெறிந்தவரை பெரும்பாலானவர்கள் யோசிக்க தயாராக இல்லை.instant முடிவுகளுக்கு பழக்கப்பட்டவர்களாக இருக்கின்றொம்.

சரி எப்படி யோசிப்பது எனில், வரலாற்றிலிருந்துதான் என்பதே என் பதில்.
எல்லோருக்குமே தான் சரியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் எப்படி, நமக்கு முன்னாடி வாழ்ந்த நமக்கு பிடித்த (இரத்த சம்பந்தம் இல்லாத) மனிதர்களை ஏன் பிடிக்கும் என கொஞ்சம் ஆழமாக யேசித்தாலே நமக்கான விடயங்களை பெறலாம்.

ஏன் எனில் அவை ஒரு மனிதரால் வாழப்பட்ட சாதாரண வாழ்கை, சாதாரண மனிதன் எப்படி சாமியாக உயர்ந்தான் அவன் செய்த சரி எது, தவறு எது, எங்கே எழுந்தான், எங்கே வீழ்ந்தான் என பார்த்தால் போதும்.

இவற்றையே நான் பின்பற்றுகின்றேன் -- என்னளவில்.

இந்த எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது என் நண்பர் கேட்ட ஒரு கேள்வி.
\\ மொகலாய மன்னர்களில் ஷாஜகானின் மனைவியின் பெயர்மட்டும் நம் எல்லோருக்கும் எப்படி தெரிகின்றது -- நிச்சயம் தாஜ்மகாலால் மட்டுமல்ல

அவறுடைய மழு வம்சமும் குறைந்தபட்சம் 3 மனைவியரோடு வாழ்ந்தபோதும் அவர்மட்டும் ஒற்றை மனைவியோடு வாழ்ந்தவர் என்பதை என் நண்பர் கூரியது.

இராஜராஜன்

Unknown 17 June 2009 at 8:07 pm  

நன்றி திரு. சாணக்கியன்

//கலாச்சாரம் என்பதை ஏதோ கட்டுப்பாடுகள் மூட நம்பிக்கைகள் என்பதுபோல் புரிந்துகொண்டுள்ள சிலரைப் பார்த்து பரிதாபமாக இருக்கிறது.//

உண்மையான வார்த்தைகள்.... ஆனால் அந்த கட்டுபாடுகளையும் மூடநம்பிக்கையையும் மீறும் போது கலாச்சாரம் அழிந்துவிடுவதாக கூறுகிறார்களே. அதுதான் விளங்கவில்லை.


//சினிமா?
இது குறித்த என் கருத்தை தனி பதிவாகவே போட்டிருக்கிறேன். 25% தீமை செய்கிறது. http://vurathasindanai.blogspot.com/2009/05/blog-post_21.html//

உங்கள் பதிவை முழுமையாக வாசிதேன் மிக அருமை/தெளிவு. உங்களுடைய அந்த பதிவில் உள்ள பெருபாண்மையான கருத்துகளை ஏற்கிறேன்

//தொலைகாட்சி?
30% தீமை
மதம்?
10% தீமை
அரசியல்?
25% தீமை
மற்றவை எல்லாம் சிறு சிறு சதவிகிதங்கள் என்பதால் குறிப்பது கடினம்//

ஒரு சிறிய சந்தேகம் - நன்மை என்று எதுவும் இல்லையா?
அதன் தீர்வு என்று எதுவும் இல்லையா?

Unknown 17 June 2009 at 8:26 pm  

சினிமா?

சினிமாவுல நல்ல visiyangala சொல்லக்கூடிய சினிமாவும் இருக்குது..... , சில கம்முனாட்டி நாயுவ எடுக்குற கண்ணுல பாக்முடியாத சினிமாவும் இருக்குது.......

பூ , தாரே ஜமீன்..... , மொழி, தவமாய் தவமிருந்து ... போன்ற படங்கள் நல்ல பார்க்கக் கூடிய கதை மேமையுடையது.......

பூ - மென்மையான நம்ம ஊரு கிராம காதல்..

மொழி - ஊனமுற்ற ( ஊமை , செவிடு ) உள்ள ஒரு பெண்ணிடத்தில் உள்ள ஒரு காதல் ( இருந்தாலும் ஜோதிகா மாதிரி பிகரா இருந்தா எல்லாரும் ஊக்கி சொல்லீருவாங்க... ) முக அழகுக்கு முக்கியத்துவம் குடுக்காமல் இருக்க வேண்டும்.


தவமாய் தவமிருந்து - ஒரு தாய் தந்தை கஷ்ட்டப்பட்டு வளர்த்த பிள்ளைகளும் , பிற்காலத்தில் உள்ள அந்த குடும்பமும் ... நல்ல ஒரு எடுத்துரைப்பு ... ( ஆனா எடைல சேரன் கொஞ்சம் ஓவர் பிட்ட போட்டு மொக்க போட்டுடாரு ) .


இதயெல்லாம் விட்டுபுட்டு ..... பார்த்தனையும் லவ்வு ..... தொரத்தி தொரத்தி லவ்வு..... ஒரே பாட்டுல லவ்வு ஒரே பாட்டுக்கு 700 திராச்சு..... கையா சொலட்டுனா ... பத்து அடியாளுங்க பறந்து போய் பக்கத்து ஊருல உளுவறதும்..... யாருக்கிட்ட உடுரானுங்க கலர் கலரா ரீலு....

என்ன கருமமோ தெரியில .... சினிமாவுல லவ்வுனா ஒடெனே ஏதாவது செம பிகரத்தான் மடக்குரானுங்க.... எவனாவது சப்ப பிகர மடக்குன மாதிரி ஒரு சினிமா இருக்குதா....???


இது பாத்திட்டு நம்ம போடி பயலுவளும் சும்மா இறக்காம கையா சுத்துறது , கால சுத்துறதுன்னு.... கெட்டு குட்டிச் செவுரு ஆகுரானுங்க.......

Unknown 17 June 2009 at 8:26 pm  

தொலைகாட்சி?


இதுலையும் அப்பிடித்தானுங்........ நல்ல நல்ல சேனல்களும் இருக்குது..... சொங்கிச் சேனல்களும் இருக்குது.......

பெருசுங்க - கூடி .. கூடி ... ஒக்காந்துகிட்டு சீரியல பாத்து அழுவறது..... எண்ணு கேட்டா....?? அதுலதான் உண்மையான வாழ்க்கை கதைய காட்டுறாங்களாம்.... !!! எங்க போய் முட்டிகிரதுன்னு தெரியல....

இளைஞர்கள் - நடன நிகழ்ச்சி ஓக்கேதான் .... ஆனா அதுல அழுது ... அழுது ஓவர் சீன கிரியேட் பண்ணுறது.... பாக்க ... பாக்க ... கெட்ட கோவம் வரும்......

பாட்டு போட்டிகளிலும் சிறுவர்களை கலட்டி விடுவது... அதுங்களும் தேம்பி .. தேம்பி அழுகறது......

நியூஸ் சானல்ல முக்காவாசி பொய்யி , கொஞ்சூண்டு மெய்யி ......


வாண்டுங்க கெட்டு போரதுக்கின்னே வந்தது ஜெட்டிக்ஸ் , குட்டிக்ஸ் ..... எல்லாம் ....

Unknown 17 June 2009 at 8:27 pm  

மதம்?

இத வெச்சுதான் உலகமே பலப்ப ஓட்டிகிட்டு இருக்குது... இதுலையும் மன்ன அள்ளி போட்டுட்டா உலகமே சப்புன்னு ஆயிரும்.........

மதம்கிறது மக்களை நல்வழி படுத்தும் ஒரு நூலகமே.... !!!! ஆனா அத வெச்சுத்தான் உலக அரசியலே ஓடுது........ சொறி புடுச்ச மொன்ன நாயுவ.... மதம்கிரத ஒரு கெட்ட வார்த்தையாவே ஆக்கிபுட்டானுங்க .......

Unknown 17 June 2009 at 8:27 pm  

சாதி?

சாதியும் .... அதே போலதான்.... பல நூற்றண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்பட்ட ஒரு திழில் வாரியான பிரிவு .... இப்போ தல விருச்சு போட்டு பெப்பரப்பென்னு அடுத்து..... ஒன்னும் பண்ண முடியாது.....

Unknown 17 June 2009 at 8:27 pm  

கல்வி?

நற் கல்வி ....... நல்ல வாழ்க்கையை கொடுக்கும்.....

Unknown 17 June 2009 at 8:27 pm  

ஒழுக்கம்?


நல்லொழுக்கம்... நல்ல பண்பையும் , கவுரவுத்தையும் கொடுக்கும்...

Unknown 17 June 2009 at 8:28 pm  

தனிமனித ஒழுக்கம்?


தனி மனித பண்பையும் , கவுரவுத்தையும் கொடுக்கும்....

Unknown 17 June 2009 at 8:28 pm  

வாழ்வியல் முறை?


இப்போ இருக்குற வாழ்வியல் முறை சீரழுஞ்சு பொய் கடக்குது.... இத நிமித்தவே முடியாது.....

Unknown 17 June 2009 at 8:28 pm  

சமுக கட்டமைப்பு?

கேவலமா இருக்குது.......

Unknown 17 June 2009 at 8:28 pm  

அரசியல்?

சாக்கடை

Unknown 17 June 2009 at 8:28 pm  

வேற ஏதாவது?


இன வெறி..... மறந்துட்டீங்களா... நம்ம சொந்தங்கள் அனைத்தும் இலங்கையில செத்துகிட்டு இருக்குது......

Unknown 17 June 2009 at 8:29 pm  

நன்றி திரு சொல்லரசன்,

//தனிமனித ஒழுக்கமே கலாச்சார சீரழிவுக்கு காரணம்//

தனிமனித ஒழுக்கம் என்றால்?
ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை யாரையாவது/எதையாவது சார்ந்தே இருக்கிறான். அவனது குணம்/தனிமனித ஒழுக்கம் நிர்னைப்பதென்பது அவனை/அவளை சூய்ந்துள்ளவர்கள்(தாய், தந்தை, உடன்பிற்ந்தோர், நன்பர் மற்றும் பலர்)மற்றும் சமுகம். இவற்றில் அவனை/அவளை எது அதிகமாக பாதிக்கிறதோ அதுதான் அவன்/அவளுடைய தனிமனித ஒழுக்கம். அப்படியானால் சமுகத்தின் கலாச்சாரம் தானே தனிமனிதனை பாதிக்கிறது. சற்று விளக்குங்களேன் புரியவில்லை.


//கலாச்சாரம் என்பது என்னை பொருத்தவரை உடலை மறைக்கும் ஆடை போன்றது,அது நாட்டிற்கு நாடு,இடத்திற்கு இடம் மாறுபடும்.ஆடைஅணியாத ஊரில் ஆடையின்றி போகலாம்,ஆனால் ஆடை உடுத்தும் ஊரில் ஆடையின்றி சென்றால் அதுதான் கலாச்சார சீரழிவு,இதற்கு தனிமனித ஒழுக்கமே காரணம்.//

ஓரளவு ஏற்று கொள்ளலாம். அனால் ஆடைஅணியாத ஊரில் ஆடை அனியசொல்வது தானே அடுத்தநிலை அல்லது முன்னேற்றம். அப்படியென்றால் கலாச்சாரத்தில் முன்னேற்றம்/முற்போக்கு சிந்தனை கூடாதா?


//உங்களின் முய‌ற்சிக்கு பாராட்டுகள் இதுபோன்ற‌ பதிவுகளால் பல கருத்துகள் புதிய கோணத்தில் அலசபடும்//

நன்றி திரு சொல்லரசன். விவாதத்தில் கடைசிவரை பங்குகொள்ளுங்கள்.

Unknown 17 June 2009 at 9:10 pm  

நன்றி திரு. கனேஷ் குமார் (தீப்பெட்டி)

//தமிழ் கலாச்சாரம் என்பது என்ன? அத சொன்னீங்கன்னா எது எவ்வளவு பாதிக்குதுன்னு சொல்ல முடியும்.//

எங்கோ படித்தது: கற்றறிந்த நடத்தைகளின் தொகுப்பே பண்பாடு என்பதால், புதியவற்றைக் கற்றுக்கொள்ளும்போது மாற்றம் நிகழ்கிறது.

இதில் தமிழ் கலாச்சாரம் என்பது தமிழ் சமுகத்தின் கடந்தகால வரலாறு/வாழ்வியல்முறை எனவும் சொல்லலாம்.

இதில் கலாசாரம்/பண்பாடு கண்டிப்பாக மாறுதலுக்கு உட்பட்டதே ஏனென்றால் போக்குவரத்து, தொலை தொடர்பு வசதிகள், இனையம் என்பன மிகவும் குறைவாக/இல்லாது இருந்த காலத்தில் மாற்றங்கள் மிக மெதுவாகவே ஏற்பட்டன. அதனால் அதன் பாதிப்பு/தாக்கம் மிக குறைவு அல்லது இல்லை(தேவையற்றவை)

ஆனால் இப்பொழுது எல்லா துறைகளிலும் அதீதமான வளர்ச்சி காணும் காலகட்டம். அறிவியல் வளர்ச்சியினால், போக்குவரத்து, தொலை தொடர்பு வசதிகள் மற்றும் இனையம் பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளன. இதனால், பல் கலாச்சார/பண்பாடுகளைக் கொண்ட மக்களிடையே தொடர்புகள்/தாக்கம் அதிகரித்துள்ளன. ஒரு தரப்பாருடைய பண்பாட்டிலிருந்து பல விடயங்களை மறு தரப்பார் கற்றுக்கொள்கிறார்கள். இதனால் பண்பாட்டு மாற்றம் தவிக்கமுடியாததாகிறது.

நாம் இவற்றில் எதில் அதிகம் பதிக்க/வளர்க்க படுகிறோம் என்பதை விவாதிப்போம்.


//கலாச்சாரம் என்பதே இறந்தகாலத்தில் மட்டுமே பயன்படும் வார்த்தை..//

கலாச்சாரம் அல்லது பண்பாடு இரண்டும் ஒரே பொருளை தந்தாலும் கலாச்சாரம் என்ற வார்த்தையை நாம் இறந்த காலத்தை குறிக்கவும், பண்பாடு என்ற வார்த்தையை நிகழ்காலத்தை குறிக்கவும் பயன் படுத்துகிறோம் என்பது என் கருத்து.


//பண்டைய கலாச்சாரத்தை பற்றி பேசலாம்..
நாளைய கலச்சாரத்தை பேசமுடியுமா?//

நாளைய கலச்சாரத்தை பற்றி யூகிக்கலாம் (தொலைநோக்கு பார்வையில்) நாளை பற்றி யோசிகாதிருந்தால் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்காது.


//இன்றைய கலாச்சாரம்/பண்பாடு பற்றி நாளைய பார்வைகள் சொல்லும்..//

சத்தியமான வார்த்தைகள்........ ஆனால் இழிவாக சொல்ல இடம் கொடுக்ககூடாது என்பது என் கருத்து/எண்ணம்.


//இன்றைய கலாச்சாரம், பண்பாடு என்று அதையெல்லாம் நிகழ்காலப் பார்வையில் பார்ப்பதென்பது நடவாத காரியம். அல்லது நாளை மாறப்போகும் ஒற்றை பார்வை..//

நிகழ்காலத்தையே பார்க்க முடியாதவர்களால் கடந்த காலத்தை பற்றி யோசித்து என்ன பயன்.

கடந்தகாலத்தை பார்பதன் நோக்கம் முன் நிகழ்ந்த/நிகழ்த்தபட்ட தவற்றை திருத்தி புது விடிவு கண்பதற்க்கு என்பது என் கருத்து.

மீண்டும் நன்றி திரு. கனேஷ் குமார் (தீப்பெட்டி)
உங்களிடமிருந்து இன்னும் நிறைய கருத்துகளை எதிர்பார்கிறேன்.

Joe 17 June 2009 at 10:09 pm  

ஏற்கனவே ஒரு இடுகையில் (http://joeanand.blogspot.com/2009/06/blog-post_06.html) சொல்லியிருந்தது போல இந்த சமுதாயம், கலாச்சாரம் என்ற போர்வையில் வகுக்கும் விதிமுறைகள் அனைத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட ஆண்களால் உருவாக்கப்பட்ட விதிகள் சமுதாயத்தை பின்னோக்கி இழுத்து செல்லக் கூடியவை.


போலி வேஷம் போடுவதில் நம் நாட்டு ஆண்களை யாரும் மிஞ்ச முடியாது. பப்பில் பீர் அடித்து விட்டு வந்த ஒருவர், அங்கே பெண்களும் குடித்ததைப் பற்றி வருத்தப்படுகிறார். அதற்கு ஒரு இடுகை, பீர் குடிக்கும் பெண்களின் படம். என்னவொரு அபத்தம்?

சோம பானம் என்றொரு பானம் பல்லாண்டுகளுக்கு முன்பே இந்த நாட்டில் இருந்ததாக சொல்கிறார்களே, வரலாற்று ஆசிரியர்கள். சாராயம், கள் இவையெல்லாம் பார்களில் நீங்கள் பீர், விஸ்கி அடிக்கும் முன்பே இருந்தனவே, அதெல்லாம் எந்த கலாச்சாரத்தை சேர்ந்தவை?

எனது இடுகையில், உங்கள் பின்னூட்டம் ஒரு spam. எனது இடுகையைப் பற்றிய உங்கள் கருத்தை சொல்லி விட்டு, பிறகு "எனது பதிவில், இந்த விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள்" என்று அழைத்திருக்க வேண்டும்.

Unknown 17 June 2009 at 10:14 pm  

நன்றி திரு. சுந்தரராமன்.

//பண்பாடு / கலாச்சாரம் ...நாம் பேசும் மொழியா, உடுத்தும் உடையா, கொண்டாடும் பண்டிகையா, ரசிக்கும் இசையா , வழிபாட்டு முறையா ... இப்படி நீண்டு கொண்டே போகும் .... அதை முதலில் தெளிவுபடுத்தி கொள்ளவேண்டும் //

நிச்சையமாக, நான் அறிந்தவரை இவற்றின் கலவைதானே கலாச்சாரம் தனியாக எதையாவது சொல்லமுடியுமா, சற்று விளக்கவும்.


//அம்மா , அப்பா தான் இதற்க்கு எல்லாம் திறவு கோல், அவர்கள் சொன்னது தான் நமக்கு எல்லாமே , ( அவர்கள் கொடுத்தது தான் இந்த உருவம், அறிவு d.n.a etc.,) அவர்கள் காமித்து கொடுத்து தான் இது எல்லாமே, ( மாம்பழம், நாரதர், வேலன், கணபதி .... அது வெறும் கதை அல்ல ... ஒரு பெரிய தாத்பர்யம் ) ...//

உண்மை, அனால் குறிப்பிட்ட காலம் வரை(வெளிஉலகம் அனுகாத வரை) இதில் தாயின் பங்கு அதிகம். அவள் எதை சமுகத்திடமிருந்து பெற்றாலோ அவற்றில் அவள் எதை நல்லது என்று கருதுகிறாளோ அதைதான் குழந்தை மீது தினிக்கிறாள் அல்லது கற்று கொடுகிறாள். இதில் நம் விவாதமானது கலாச்சாரத்தை பாதிப்பவை/வள்ர்ப்பவை எவை? எவ்வளவு? எப்படி?


//ஆனால் இப்பொழுது நடப்பது, நண்பர்கள் , நண்பிகள், வசிக்குமிடம், படிக்கும் கல்லூரி, ஹாஸ்டல், படிக்கும் புத்தகங்கள், பின் நீங்கள் சொன்ன சினிமாக்கள், தொலை காட்சி ( தொல்லை காட்சி ) .... உலகமயமாக்கல் / பொருளாதாரம் /இடம் பெயர்ந்து வாழ்தல் ...இன்னம் இது போன்ற காரணங்களால் ... எல்லாம் மிக வேகமாக மாறி கொண்டே வருகிறது ..அழிந்து கொண்டும் வருகிறது//

மாறி கொண்டு அல்லது அழிந்து கொண்டு என்பது உண்மை.
இருக்கும் நிலையில் இருந்து அடுத்த நல்லநிலை அடைவதுதான் வளர்ச்சி
சில தேவையற்றவை அழிவதும் தேவையானவைதான்.
இதில் இப்பொழுது நம் நிலை என்ன?


//நீங்கள் நினைப்பது போல் ( அல்லது ஆசை படுவது ) எல்லாரும் எப்போதும் சமம் , ஏற்ற தாழ்வு அறவே போகும் ...... அது எங்குமே நடைமுறையில் இல்லை.//

உண்மைதான். ஆனால் என் விருப்பம் என்னவென்றால்(பொருளாதார ரீதியில்) ஏற்ற தாழ்வு இல்லாமல் செய்வது இல்லை. அதில் உள்ள விகிதத்தை குறைப்பது. அதுமட்டும் இல்லாமல். ஏற்ற தாழ்வு இல்லாமல் போக முயற்சித்தால் தான் குறைந்த பட்சம் விகிதத்தையாவது குறைக்க முடியும் என்பது என் கருத்து.


//Golf விளையாடும் குழு வேறு basketball விளையாடும் கூட்டம் வேறு ...அது எப்போதுமே இருக்கும்.//

ஆம் இருக்கதான் சொய்யும் ஆனால் golf விளையாடுபவர்கள் basketballலும் விளையாடலாம் அதற்க்கு எந்த தடையும் கிடையாது. அதுமட்டும் இல்லாமல் golf விளையாடுபவன் food ball விளையாடுபவனை இழிவாக பார்க்க மாட்டன் என்பது என் கருத்து.


//நான் எதாவது உதாரணத்திற்கு சொன்னால் கூட சர்ச்சையாகிவிடும் ...//

சர்ச்சைக்கு பிறகு ஏதோ ஒரு முடிவு கண்டிப்பாக தெரியும்.


//நான் தொடங்கிய இடத்திற்கே வருகிறேன்...அம்மா /அப்பாவை நன்றாக மதித்து, மரியாதையுடன் இருகிறார்களோ , அவர்களால் பண்பாடு / கலாச்சாரம் காபாற்றபடுகிறது , மட்டுமில்லாமல் ... அடுத்த தலை முறைக்கும் எடுத்து செல்லப்படுகிறது , ஒரு உதாரணமாய் வாழ்வதால்//

சத்யமான வார்த்தைகள். அம்மாவும் அப்பாவும் சமுகத்தில் ஒருவர் தானே.

மீண்டும் நன்றி திரு சுந்தர ராமன்.
இன்னும் நிறைய விவாதம் உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.

Unknown 17 June 2009 at 10:17 pm  

இதுதான் கலாசாரம் என்று ஒரு வரையறை வைக்கமுடியாது. வைக்கவும் கூடாது. விருமாண்டி படத்தின் பெயர் பற்றிய சர்ச்சைக்காலத்தில் நடிகர் கமலஹாசன் கூறிய சில கருத்துக்கள் எனக்குப் பிடித்தது. Link இங்கே http://www.youtube.com/watch?v=C5uHxcSga5U&eurl=http%3A%2F%2Fvigneshram.blogspot.com%2F2009%2F05%2Fcontroversy.html&feature=player_embedded

Unknown 17 June 2009 at 10:41 pm  

நன்றி தமிழ்நாட்டுத்தமிழன்.

//விலங்கைப்போல் வாழ்ந்த மனிதன், நாகரீகம் வளர தனக்கென்று சில வரைமுறைகளை வகுத்துக்கொண்டதே கலாச்சாரமும், பண்பாடும். விலங்கிற்கு தாய்க்கும், துணைக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால் மனிதனை அப்படி நடக்காமல் வழிவகுப்பது காலச்சாரமும்,பண்பாடும்தான்.//

அருமையான விளக்கம்..... ஆனால் ஒரு சிறு சந்தேகம்?
நீங்கள் கொடுத்த விளக்கம் பரினாம வள்ர்ச்சிக்கு பொருந்தும்....
கலாச்சாரம் என்பது அதைவிட பண்பட்ட நிலையல்லவா......
குழப்பமாக இருக்கிறது விளக்கவும்.


//எந்த கையில் சாப்பிட்டாலும் சாப்பாடு இறங்கும். ஆனால் ஏன் வலதுகையில் சாப்பிடவேண்டும் என்று கூறுகிறோம்?
வீட்டை விட்டு போகும்போது " போய்விட்டு வருகிறேன்" என்று கூறுவதும், சாவு வீட்டிற்கு போனால் சொல்லமல் வருவதும், உண்மையிலே எந்த பலனை தருகிறது? இது போன்ற சில சம்பவங்களால் நன் வாழ்கையை கொஞ்சம் அழகு பண்ணிக்கொள்கிறோம்.//

சரியான வாரித்தைகள். ஒழுக்கம் என்பதன் வரைமுறை. நிச்சயமாக ஒழுக்கம் என்பது கலாச்சாரம்/பண்பாட்டின் மிக முக்கியமான அங்கம் சந்தேகமே இல்லை.


//ஒருவரை சந்தித்தால் " ஹல்லோ, சௌக்கியமா?" என்று கேட்டு கைக்குலுக்கிக்கொள்வது, ஒரு மரியாதையும், அவருக்கு ஒரு சந்தோஷத்தையும் கொடுக்கும்.
இது போன்ற உபதரவமில்லாத கலாச்சாரத்தையும், பண்பாடுகளையும் பேணி காக்கத்தான் வேண்டும்.//

கண்டிப்பாக.


//ஆனால் ஜாதி, மத, மற்றும் மூட நம்பிக்கைகளை காரணம் காட்டி, மனிதனை மீண்டும் மிருகமாக மாற்றும் வழிமுறைகளை தூக்கி வீச வேண்டும்.//

நிச்சயமாக. எப்படி?


//என் கருத்து சரியா நண்பர்களே?//

என்னால் உங்களை உணர முடிகிறது


மீண்டும் நன்றி
இன்னும் நிறைய கருத்துகளை எதிர்பார்கிறேன்.

Unknown 17 June 2009 at 11:07 pm  

நன்றி திரு/திருமதி Rathi

//பண்பாடு/கலாச்சாரம் என்பதே ஒரு தனிமனிதனின் வாழ்வை பண்படுத்துவதற்காகவும், மேன்மைப்படுத்தவும் உருவாக்கப்பட்ட எழுதப்படாத விதிமுறைகள் தான்.//

உண்மை உருவாக்கப்பட்ட என்பதைவிட உருவான என்பது சரியாக இருகுமென்று நினைக்குறேன்.


//அதாவது எங்கள் நம்பிக்கை (கடவுள், உழைப்பு etc.) , நாங்கள் வாழ்க்கையில் எங்கள் உயர்வுக்காய் மதிப்பளிக்கும் விடயங்கள் (பெரியோரை மதித்தல், கல்வி), மற்றும் எங்கள் வாழ்க்கை முறை (ஒருவனுக்கு ஒருத்தி)//

ஆம் இந்த அனைத்து விசயம் தான் தனிமனித ஒழுக்கம் என்பது என் கருத்து.


//ஆனால், நீங்கள் இங்கே கூறுபவை சில பண்பாட்டை நிர்ணயிக்கும் புறக்காரணிகள் மட்டுமே. இந்த புறக்காரணிகள் எங்கள் பண்பாட்டை எப்படி கட்டிக்காக்க உதவுகின்றன அல்லது எப்படி எங்கள் கலாச்சாரத்தை சீரழிக்கின்றன என்று விவாதிக்கலாம். ஆனால், இவையெல்லாம் எப்படி பண்பாட்டை நிர்ணயிக்கும் அடிப்படைகளாக ஆகமுடியும்?//

நீங்கள் சொல்வது மிக மிக சரியான ஒன்று
மீண்டும் ஒரு முறை என் பதிவை படிச்சு பாருங்க. நிர்ணைக்கும் அடிபடை விசயங்களாய் சொல்லவில்லை என்பது புரியும். அவற்றை பாதிக்கும்(வளர்ச்சி/அழிக்கும்) விசயங்களாக தான் பட்டியலிட்டிருந்தேன். அதுமட்டும் இல்லாமல் அதில் தனிமனித ஒழுக்கமும் பட்டியலிட்டு உள்ளேன்.

தனி மனித ஒழுக்கம் என்பது நீங்கள் மேலே கூறியவை. அவை தவிர ஒழுக்கம் என்பது அந்த தனிமனிதன் சமுதாயத்தை சந்திப்பது.


//உதாரணமாக சினிமா எப்படி தனிமனித வாழ்வின் கலாச்சாரமாக ஆகமுடியும்? ஆனால், அது எங்கள் கலாச்சாரத்தை பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் போது அந்த சினிமா என்ற ஊடகம் அதன் தாக்கத்தை தனிமனிதன் மீது ஏற்படுத்துகிறது. அந்த தனிமனித சிந்தனை தானே சமூகவாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவ்வாறாக, தனிமனித, சமூக மாற்றமே கலாச்சார்த்தை கட்டிக்காக்கிறது அல்லது சீரழிக்கிறது.//

மிக சரியாக கூறினீர்கள். இதை தான் நான் கேட்டேன்.
கட்டிக்காக்கிறதா அல்லது சீரழிக்கிறததா எப்படி மற்றும் எவ்வளவு.


//அடுத்து, கல்வி என்று பார்த்தோமேயானால், அது நாங்கள் வாழ்க்கையில் நம்பும் அல்லது மதிக்கும் ஒரு விடயம். ஆனால், கல்வி மட்டுமே எப்படி கலாச்சாரமாக முடியும்? //

கண்டிப்பாக கல்வி மட்டுமே கலாச்சாரம் ஆகாது. ஆனால், கலாச்சாரத்தை/பண்பாட்டை நிர்னைக்கும் காரணிகளில் கல்வி மற்றும் ஒழுக்கம் மிக முக்கியமானது.


//இதே போன்று தான் நீங்கள் கூறும் மற்ற சில காரணிகளும். ஆக, பல காரணிகள் ஒன்றாக சேர்ந்து தான் கலாச்சாரத்தின் அடிப்படைகளை தீர்மானிக்கின்றன. இந்த வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், என்பன சமூகத்திற்கு சமூகம் மாறுபடும்போது கலாச்சாரமும் பண்பாடும் மாறுபடுகிறது.//

அமாம். சரியான பதில்.


//இறுதியாக, உங்கள் கருத்து கணிப்பில் தரப்பட்ட தரவுகள் கலாச்சாரத்தில் தாக்கத்தை விளைவிக்கிற புறக்காரணிகளே அன்றி அதுவே கலாச்சாரம்/பண்பாடு ஆகாது என்பது என் கருத்து.//

கருத்துகணிப்பில் விளாவரியாக எழுதமுடியாததால் தான் இந்த பதிவு.
இருந்தாலும் பெரும்பாலும் பொருந்த கூடியவையாகவே பட்டியலிட்டிருக்கிறேன்.

மீண்டும் நன்றி திரு/திருமதி Rathi
உங்களிடமிருந்து இன்னும் நிறைய கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

Unknown 18 June 2009 at 12:00 am  

நன்றி திரு ராஜராஜன் (வனம்)

//சொந்தமாக சிந்திக்கும்
அதை எப்படி
கல்வியின் மூலமாக பெறமுடியும்,
பள்ளிகளில் பெரும் கல்வி என்பது யாறோ பதிந்துவிட்டு சென்றதை நமக்குள் தினிக்கும் விடயம்தான்.//

இருக்கலாம், ஆனால் சொந்தமாக சிந்திக்க ஒரு அடிதலம் அமைத்து தரும் ஒரு கருவி அல்லவா. எவறோ பதிந்தவையும் அனுபவத்தின் தொகுப்புதான் சுருக்கமாக சொல்வதென்றால் வரலாறுதானே.

என்னை பொருத்தவறை கலாச்சாரம்/பண்பாட்டை நிர்னைக்கும் காரணிகளில் மிக முக்கியமானவை கல்வி. அந்த கல்வி வியாபாரம் ஆக்கபடுவதால் ஒருவகையில் கலாச்சாரம்/பண்பாடு சீர்கெடுகிறது.


//சமுகத்தின் மூலமாக -- கொஞ்சம் ஒத்துவரும் ஆனால் இதுவும் நாம் அதாவது இயல்பாக யோசிப்பதன் மூலமாகவே வரும்//

எனக்கு சரியாக புரியவில்லை. சற்று உதாரணத்துடன் விளக்குங்களேன்.


//ஆன்மீகத்தின் மூலமாகவா -- நிச்சயம் ஆன்மீகம் யாரையும் யோசிக்க அனுமதிப்பதில்லை, நான் சொல்வதை கேள், நான் சொன்னபடி நட என தொடர்ந்து அறிவுறுத்துவதுதான் ஆன்மீகம்.//

உண்மையான வார்த்தைகள்.


//எனக்கு தெறிந்தவரை பெரும்பாலானவர்கள் யோசிக்க தயாராக இல்லை.instant முடிவுகளுக்கு பழக்கப்பட்டவர்களாக இருக்கின்றொம்.//

இருக்கலாம் யோசிப்பதென்றால் அவர்களுக்கு பாதகம் ஏற்படாமல் இருக்க மட்டும் யோசிகிறார்கள். ஒரு வகையில் சுயநலம் எனவும் சொல்லலாம்.


//சரி எப்படி யோசிப்பது எனில், வரலாற்றிலிருந்துதான் என்பதே என் பதில்.
எல்லோருக்குமே தான் சரியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் எப்படி, நமக்கு முன்னாடி வாழ்ந்த நமக்கு பிடித்த (இரத்த சம்பந்தம் இல்லாத) மனிதர்களை ஏன் பிடிக்கும் என கொஞ்சம் ஆழமாக யேசித்தாலே நமக்கான விடயங்களை பெறலாம்.//

சரியான வரையரை பிறகு ஏன் யோசிப்பதில்லை? அல்லது எந்த விசயம் யோசிப்பதற்க்கு தடை செய்கிறது கொஞ்சம் விளக்குங்களேன்.


//ஏன் எனில் அவை ஒரு மனிதரால் வாழப்பட்ட சாதாரண வாழ்கை, சாதாரண மனிதன் எப்படி சாமியாக உயர்ந்தான் அவன் செய்த சரி எது, தவறு எது, எங்கே எழுந்தான், எங்கே வீழ்ந்தான் என பார்த்தால் போதும்.//

உண்மை தான். ஆனால் எதாற்த்தம் சாமியாக உயர்ந்தவனின் சரியை மட்டுமே பெரிது படுத்தி காட்டுகிறது என்பது தான் நிஜம்.


//இவற்றையே நான் பின்பற்றுகின்றேன் -- என்னளவில்.//

வாழ்த்துகள். நானும் பின்பற்ற முயற்சிக்கிறேன்.


//இந்த எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது என் நண்பர் கேட்ட ஒரு கேள்வி.
\\ மொகலாய மன்னர்களில் ஷாஜகானின் மனைவியின் பெயர்மட்டும் நம் எல்லோருக்கும் எப்படி தெரிகின்றது -- நிச்சயம் தாஜ்மகாலால் மட்டுமல்ல
அவறுடைய மழு வம்சமும் குறைந்தபட்சம் 3 மனைவியரோடு வாழ்ந்தபோதும் அவர்மட்டும் ஒற்றை மனைவியோடு வாழ்ந்தவர் என்பதை என் நண்பர் கூரியது.//

ஒரு சிறு தவறு அவருடைய மூன்றாவது மனைவிதான் நீங்கள் குறிப்பிடும் ”மும்தாசு”
கீழ் உள்ள சுட்டியை பார்க்கவும்.
http://en.wikipedia.org/wiki/Arjumand_Banu_Begum

நீங்கள் தாஜ்மஹால் என்றவுடன் எனக்கு கவிஞர் தாமரையின் ஒரு கவிதைதான் நியாபகம் வருகிறது. கவிதை மறந்துவிட்டது ஆனால் அதன் அடிநாதம் அல்லது அர்த்தம் நினைவிருக்கு:
என்னவென்றால்:

காதலியின் காலில் முள் தைப்பதைகூட பொருத்து கொள்ளமாட்டான் காதலன்.
ஒருமுரை பிரசவத்தை பார்த்த எந்த கனவனும் அடுத்த குழ்ந்தைக்கு துணிய மாட்டன்.
மும்தாசுக்கு 14 குழந்தைகள்.
யார் சொன்னது காதலின் சின்னம் தாஜ்மஹால் என்று அது ஒரு துயரத்தின் அடையாளம்.

இதனால் நான் ஷாஜகானை குறை சொல்லவில்லை. அவரின் நிறைகள் மிகை படுத்த பட்டுள்ளன என்கிறேன்.


மீண்டு நன்றி திரு. இராஜராஜன்
உங்களிடமிருந்து இன்னும் நிறைய கருத்துகளை எதிர்பார்கிறேன்.

Unknown 18 June 2009 at 12:49 am  

நன்றி திரு Joe,

//ஏற்கனவே ஒரு இடுகையில் (http://joeanand.blogspot.com/2009/06/blog-post_06.html) சொல்லியிருந்தது போல இந்த சமுதாயம், கலாச்சாரம் என்ற போர்வையில் வகுக்கும் விதிமுறைகள் அனைத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட ஆண்களால் உருவாக்கப்பட்ட விதிகள் சமுதாயத்தை பின்னோக்கி இழுத்து செல்லக் கூடியவை.//

உண்மை. அனைத்தையும் ஏற்க்க முடியாதென்றால் சிலவற்றை ஏற்கிறீர்கள் சிலவற்றை நிராகறிக்கின்றீர்கள். ஏன்னென்றால் சிலவற்றால் நன்மை சிலவற்றால் தீமை விளைகிறது. அவற்றை அறியும் ஒரு சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.


//போலி வேஷம் போடுவதில் நம் நாட்டு ஆண்களை யாரும் மிஞ்ச முடியாது. பப்பில் பீர் அடித்து விட்டு வந்த ஒருவர், அங்கே பெண்களும் குடித்ததைப் பற்றி வருத்தப்படுகிறார். அதற்கு ஒரு இடுகை, பீர் குடிக்கும் பெண்களின் படம். என்னவொரு அபத்தம்?//

100% சரியான கருத்து. தனிமனிதம் ஒழுக்கம்/கற்பு என்பது இருபாலருக்கும் பொருந்தும் என்பதுதான் என்கருத்தும். ஆனால் முன்பு இலைமறை காயாக இருந்தது இப்பொழுது வெட்டவெளிச்சமாக நடப்பதால் அதனால் பாதிக்க படுபவர்களும் அதிகமாகிறார்கள் என்பது என் கருத்து. மீண்டும் சொல்கிறேன் கற்பு/ஒழுக்கம் என்பது இருபாலருக்கும் பொருந்தும். யார் செய்தாலும் தவரு சரியாக மாரிவிடாது என்பதே என் கருத்து.


//சோம பானம் என்றொரு பானம் பல்லாண்டுகளுக்கு முன்பே இந்த நாட்டில் இருந்ததாக சொல்கிறார்களே, வரலாற்று ஆசிரியர்கள். சாராயம், கள் இவையெல்லாம் பார்களில் நீங்கள் பீர், விஸ்கி அடிக்கும் முன்பே இருந்தனவே, அதெல்லாம் எந்த கலாச்சாரத்தை சேர்ந்தவை?//

நீங்கள் சொல்வதை ஒத்து கொள்கிறேன். பண்டைய கலாச்சாரம் தான் சிறந்தது. இப்போது உள்ள கலாச்சாரம் முற்றிலும் சீற்கெட்டுவிட்டதாக நான் எங்கும் எப்போதும் கூறவில்லை என்பதே நிஜம். இந்த பதிவு இவற்றை அலசுவதற்க்கு/விவாதிப்பதற்க்கு மட்டுமே. நான் சுயமாக எந்த கருத்தையும் கூறவில்லை. பிறர் இடமிருந்து அறியும்/தெளிவு படுத்தி கொள்ளும் ஒரு சிறு முயற்ச்சிதான் இந்த பதிவு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


//எனது இடுகையில், உங்கள் பின்னூட்டம் ஒரு spam. எனது இடுகையைப் பற்றிய உங்கள் கருத்தை சொல்லி விட்டு, பிறகு "எனது பதிவில், இந்த விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள்" என்று அழைத்திருக்க வேண்டும்.//

இதற்க்கு உங்கள் இடுமையிலே பதில் அளித்து விட்டேன். கீழ் உள்ள சுட்டியை பார்க்கவும்.
http://joeanand.blogspot.com/2009/06/blog-post_06.html?showComment=1245270484895#c7473180755703683233

மீண்டும் நன்றி திரு. Joe.
உங்கள் கருத்துகள் வ்ரவேற்க்கபடுகிறது (விருப்பமிருந்தால்)

Unknown 18 June 2009 at 1:23 am  

நன்றி திரு. Keith Kumarasamy

//இதுதான் கலாசாரம் என்று ஒரு வரையறை வைக்கமுடியாது. வைக்கவும் கூடாது//

கலாசாரம்/பண்பாடு கண்டிப்பாக மாறுதலுக்கு உட்பட்டதே ஏனென்றால் போக்குவரத்து, தொலை தொடர்பு வசதிகள், இனையம் என்பன மிகவும் குறைவாக/இல்லாது இருந்த காலத்தில் மாற்றங்கள் மிக மெதுவாகவே ஏற்பட்டன. அதனால் அதன் பாதிப்பு/தாக்கம் மிக குறைவு அல்லது இல்லை(தேவையற்றவை)

ஆனால் இப்பொழுது எல்லா துறைகளிலும் அதீதமான வளர்ச்சி காணும் காலகட்டம். அறிவியல் வளர்ச்சியினால், போக்குவரத்து, தொலை தொடர்பு வசதிகள் மற்றும் இனையம் பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளன. இதனால், பல் கலாச்சார/பண்பாடுகளைக் கொண்ட மக்களிடையே தொடர்புகள்/தாக்கம் அதிகரித்துள்ளன. ஒரு தரப்பாருடைய பண்பாட்டிலிருந்து பல விடயங்களை மறு தரப்பார் கற்றுக்கொள்கிறார்கள். இதனால் பண்பாட்டு மாற்றம் தவிக்கமுடியாததாகிறது.

நாம் இவற்றில் எதில் அதிகம் பதிக்க/வளர்க்க படுகிறோம் என்பதை விவாதிப்போம்.


//விருமாண்டி படத்தின் பெயர் பற்றிய சர்ச்சைக்காலத்தில் நடிகர் கமலஹாசன் கூறிய சில கருத்துக்கள் எனக்குப் பிடித்தது. Link இங்கே http://www.youtube.com/watch?v=C5uHxcSga5U&eurl=http%3A%2F%2Fvigneshram.blogspot.com%2F2009%2F05%2Fcontroversy.html&feature=player_embedded//

எனக்கும் பிடித்திருக்கிறது.

நன்றி

Unknown 18 June 2009 at 1:34 am  

கருத்திற்க்கு நன்றி திரு. லவ்டேல் மேடி.

அது ஒரு கனாக் காலம் 18 June 2009 at 8:07 am  

கலாச்சாரம் என்பது நிறய விஷயங்களின் கலவை ... அதில் மொழி ஆதாரம் ... இப்ப உள்ள வாழ்கை முறையில், தாய் மொழி ...கொஞ்சம் கொஞ்சம் வீட்டில் பேசப்படுகிறது... கல்வியில் கிடையாது, தமிழ் நாட்டை விட்டு, வேறு மாநிலத்தில் , வேறு நாடுகளில் வசிக்கும் நபர்களுக்கு நிறைய சிரபப்பட்டு தான் தாய் மொழியை கற்று கொடுக்க வேண்டும் .... அனால் தமிழ் நாட்டிலேயே , இந்த தெருவுக்கு தெரு உள்ள கான்வெண்டு பள்ளிகளால் ... எத்தகைய பெரிய பாதிப்பு , யாருமே அறியாமல் அடித்தளத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

மொழியுடன் , ஆன்மிகம் ஒரு பெரிய பங்குண்டு ... யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று உள் மனது அடிக்கடி அதன் புத்தியை காண்பித்தாலும், .... ஆன்மீகம் , இப்படி இருந்தால் நல்லது, ..உனக்கு நல்லது, உன் மனைவிக்கு நல்லது, உன் குழந்தைக்கு நல்லது... நிறய விஷயங்களை, கதை , பண்டிகை , காவியம் மூலம் உணர்த்திக்கொண்டே இருக்கும் ....

சமூகம் ... அதுவும் அதன் கடைமையை செய்யும்.... அதில் நீங்கள் சொன்ன தொலை காட்சி, நடனம், கதை இவைகளின் தாக்கம் நிறைய இருக்கும் ..இப்ப இருக்கிறது ... சில சமயங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படித்தினாலும் , பல நேரங்களில் ... அது அதன் வேலையை செம்மையாகவே செய்கிறது

இங்கு ( அரேபியாவில் ) ... பெண்கள் புகை பிடிப்பது ரொம்ப சாதாரணம், நாம் நம் மனைவியையோ , மகளையோ ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் ... ஆண் ஆதிக்கம் , பெண்ணீயம் என பேசும் / எழுதும் ... ஆடவர்கள் கூட அப்படித்தான் நினைப்பார்கள் .... பொருளாதாரம் / வேலைவாய்ப்பு / கல்வி போன்ற காரணங்களால் ஒரு சில தலைமுறைகள் இங்கேயே தங்கி விட்டால் ...நாளை அவர்களும் அது போல் புகை பிடிப்பார்கள்... மேல்தட்டு மக்கள் , மற்றும் இந்தியாவில் கோவா போன்ற இடங்களில் புகை பிடிப்பது பெரிய விஷயமில்லை... ஆனால் அதே கத்தோலிக்க வகுப்பை சேர்ந்த கேரளா மலையாளி பெண்கள் அதை செய்ய மாட்டார்கள்....

கமலோட அத்த வீடியோ பார்த்தேன்... அந்த சமணர்கள் கழிவிரக்கம் பற்றி அன்பே சிவம் படம் ரிலிஸ் ஆகும் முன்பும் இது போல நிறைய சொன்னார். எங்காவது சிவன் அடியார்கள் / சிவா பக்த்தர்கள் யாரவது கையில் சூலத்தை வைத்து கொண்டோ அல்லது வேற ஆயுதம் ஏந்தி யாரையாவது இம்சிக்கிரார்களா இப்போது ??? அது எதற்கு இப்போது.

போற போக்குல , விதவையை பற்றி .ஒரு விளாசு ... எனக்கு தெரிந்து, இந்த உடன் கட்டை பழக்கம் தமிழ் நாட்டில் இருந்ததா தெரியவில்லை , எங்க பாட்டி ரொம்ப சின்ன வயதில் விதவை ஆனவர்.. எழுபது வயது வரை வாழ்ந்தார் ....உடன் கட்டை மூலம் உயிர் இழந்த எங்கள் சுற்று வட்டாரங்களில் யாரும் கிடையாது, என் வட்டம் சிறியது என்று கருதினால் , பெரிய வட்டம் இருந்தால் யாரேனும் இங்கு வந்து பகிரலாம் . ( விதவைகளை மிக கொடூரமாக நடத்தினோம் என்பதற்கு மறு பேச்சே கிடையாது .... அது மாறி வருகிறது , நல்ல மாற்றம் )

ராஜஸ்தானில் , மொகலாய படை எடுப்பினால் வந்த ஒரு தற்காலிக முடிவு ... நிச்சயமாக இந்த கால கட்டத்தில் அது போன்ற ஒரு பழக்கம் கண்டிப்பாக தடுக்கப்பட்டு , தக்க தண்டனை கொடுக்க வேண்டும்

திருமணம் ஆகி, குழந்தை (கள்) வந்த பிறகு அது நமக்கு நிறைய கற்று கொடுக்கும் ... நாமும் கற்று கொண்டே கற்று கொடுப்போம் ..அது ஒரு சுழற்சி ...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

வினோத் கெளதம் 18 June 2009 at 5:50 pm  

பிரதீப்..

இவர்கள் கொடுத்த கருத்துக்கு மேல் இதை அலசுவது மிக கடினம்..

Bibiliobibuli 18 June 2009 at 6:47 pm  

//ஆனால், கலாச்சாரத்தை/பண்பாட்டை நிர்னைக்கும் காரணிகளில் கல்வி மற்றும் ஒழுக்கம் மிக முக்கியமானது.//இந்த அனைத்து விசயம் தான் தனிமனித ஒழுக்கம் என்பது என் கருத்து.//

நீங்கள் சொல்வது சரி. தனிமனித ஒழுக்கம், கல்வி இந்த இரண்டு முக்கிய காரணிகளும் தான் கலாச்சாரத்தை, எங்கள் பண்பாட்டு விழுமியங்களை கட்டிக்காக்க உதவும். தனிமனித ஒழுக்கம் சீர்கெட்டால் மற்றவை எல்லாமே சீர்கெட்டுவிடும். ஆக, தனிமனித ஒழுக்கத்தை சீரழிக்கும் விடயங்களை/காரணிகளை புறக்கணிப்போம். நல்ல கல்வி மூலம் எங்கள் சிந்தனையை, கலாச்சாரத்தை வளர்ப்போம்.

இறுதியாக ஒரு வேண்டுகோள், என்னை Rathi என்று அழைத்தால் போதுமானது. நன்றி.

Unknown 18 June 2009 at 8:37 pm  

நன்றி Rathi.

//தனிமனித ஒழுக்கம் சீர்கெட்டால் மற்றவை எல்லாமே சீர்கெட்டுவிடும். ஆக, தனிமனித ஒழுக்கத்தை சீரழிக்கும் விடயங்களை/காரணிகளை புறக்கணிப்போம்.//

மிகவும் சரியானவை

Unknown 18 June 2009 at 8:44 pm  

நன்றி வினோத்கெளதம

//இவர்கள் கொடுத்த கருத்துக்கு மேல் இதை அலசுவது மிக கடினம்//

எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.
நான் இதுவரை இட்ட பதிவுகளிளே இதைதான் சிறந்ததாக நினைக்கிறேன்.

ஏன்னென்றால் இதில் அனைவரும் discuss செய்தோம். யாரும் விதண்டாவாதம் செய்யவில்லை அது மட்டும் இல்லாமல் ஒரு அநானி கூட வரவில்லை என்பது இன்னும் மகிழ்ச்சியா இருக்கு.

தங்கள் கருத்துகளை பின்னூடமாக இட்ட அனைவருக்கும் நன்றி.

வேற ஏதாவது கருத்து விடுபட்டிருந்தாலோ அல்லது ஏதாவது தவறாக இருந்தாலோ தெரிவிக்குமாரு கேட்டு கொள்கிறேன்.

நன்றி வணக்கம்.

Unknown 18 June 2009 at 11:37 pm  

நன்றி திரு சுந்தர ராமன்,

//கலாச்சாரம் என்பது நிறய விஷயங்களின் கலவை... அதில் மொழி ஆதாரம் ...//

மொழி ஆதாரம் என்பதைவிட மொழியை வைத்துதான் காலாச்சாரம் மாறுபடுகிறது என்பது என் கருத்து (மதத்தில் கூட பாத்தீங்கன்னா மொழியை வைத்து அவர்களின் வாழ்வியல் முறையும் அடிப்படைகளும் மாறும்) அதனால் தான் கண்டிப்பாக மொழியும் நிலமும் (இருக்கும் தேசம்) தான் கலாச்சாரத்தை வேறுபடுத்துகிறது என்பது என் கருத்து எதாவது மாற்று கருத்திருந்தால் விளக்கவும்.


//இப்ப உள்ள வாழ்கை முறையில், தாய் மொழி ...கொஞ்சம் கொஞ்சம் வீட்டில் பேசப்படுகிறது... கல்வியில் கிடையாது, தமிழ் நாட்டை விட்டு, வேறு மாநிலத்தில் , வேறு நாடுகளில் வசிக்கும் நபர்களுக்கு நிறைய சிரபப்பட்டு தான் தாய் மொழியை கற்று கொடுக்க வேண்டும் .... அனால் தமிழ் நாட்டிலேயே , இந்த தெருவுக்கு தெரு உள்ள கான்வெண்டு பள்ளிகளால் ... எத்தகைய பெரிய பாதிப்பு , யாருமே அறியாமல் அடித்தளத்தில் நடந்து கொண்டிருக்கிறது.//

உண்மையான வாரிகள். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நுனி கிளையில் அமர்ந்து அடி கிளையை வெட்டுவதுபோல். தமிழ் மொழி (இதை படிப்பவர் அனைவரும் தமிழர் என்பதால்) கல்வி என்பது மிக மிக அவசியம்.
இப்பொழுது உள்ள சூழ்நிலையில் அறிவியல்/தொழில்நுட்பம் பெரும்பாலும் தமிழில் இல்லாத்தால் ஆங்கிலமும் தேவை ஆனால் அடிபடைகள் அனைத்தும் தாய் மொழி/தமிழில் அமைந்தால் வளர்ச்சியும் சிந்திக்கும் திறனும் இப்பொழுது உள்ளதை விட பெருகும் என்பது என் கருத்து.


//மொழியுடன் , ஆன்மிகம் ஒரு பெரிய பங்குண்டு ... யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று உள் மனது அடிக்கடி அதன் புத்தியை காண்பித்தாலும், .... ஆன்மீகம் , இப்படி இருந்தால் நல்லது, ..உனக்கு நல்லது, உன் மனைவிக்கு நல்லது, உன் குழந்தைக்கு நல்லது... நிறய விஷயங்களை, கதை , பண்டிகை , காவியம் மூலம் உணர்த்திக்கொண்டே இருக்கும் ....//

இதில் எனக்கு சில மாற்று கருத்துகள் உண்டு. கல்வியானது மொழி மூலமாகவும் வாழ்வியல் முறை என்பது தனிமனித ஒழுக்கத்தின் மூலமாகவும் சரியாக கிடைக்குமானால் கண்டிப்பாக ஆன்மீகத்தின் அவசியம் இல்லாமலே நல்ல ஒரு சமுகத்தையும் சிறந்த கலாச்சாரம்/பண்பாட்டையும் உருவாக்கமுடியும். அதற்காக பண்டிகை, காவியம், கதை போண்றவற்றை வேண்டாம் என்று சொல்லவில்லை அதற்க்கு அளிக்கபடும் முக்கியதுவத்தை குறைத்து அதை ஒரு பொழுதுபோக்கை போல் பார்த்தாலே போதும் என்பது என் கருத்து.


//சமூகம் ... அதுவும் அதன் கடைமையை செய்யும்.... அதில் நீங்கள் சொன்ன தொலை காட்சி, நடனம், கதை இவைகளின் தாக்கம் நிறைய இருக்கும் ..இப்ப இருக்கிறது ... சில சமயங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படித்தினாலும் , பல நேரங்களில் ... அது அதன் வேலையை செம்மையாகவே செய்கிறது//

உண்மைதான் என்னோட முந்தைய பதிவான காமடி காலாச்சாரத்தை ஒரு முறை படித்துபாருங்கள்.
http://oviya-thamarai.blogspot.com/2009/05/blog-post_02.html
//எனக்கென்னமோ துன்பம் வரும்போது சிரிங்கனு வள்ளுவர் சொன்னதை நம்ம மக்கள் துன்ப படுத்தி பார்த்து சிரிங்க நினைச்சிட்டாங்களோனு தொனுது.//
ஆமாங்க, பொதுவாகவே இரு நன்பர்கள் பேசுவதையோ அல்லது வீட்டில் பேசும் போதோ பார்த்தீங்கன்னா சினிமாவோட தாக்கம் தெரியும். இதை சரி செய்ய என்ன வழின்னு கேட்டீங்கன்னா, நாமோ சினிமா, தொலைகாட்சி மற்றும் இனையத்துக்கு ஒதுக்குற நேரத்தை குறைத்து வீட்டில் குடும்பத்துடன் மற்றும் நன்பர்களுடன் செலவழிக்கும் நேரத்தை அதிகபடுத்தி நம் உரையாடலில் சினிமா தொலைக்காட்சி தவிர்த்தாலே கண்டிப்பாக ஒரு அரோகியமான நிலை உருவாகும்

தொடர்ச்சி......

Unknown 18 June 2009 at 11:38 pm  

தொடர்ச்சி..........

//கமலோட அத்த வீடியோ பார்த்தேன்... அந்த சமணர்கள் கழிவிரக்கம் பற்றி அன்பே சிவம் படம் ரிலிஸ் ஆகும் முன்பும் இது போல நிறைய சொன்னார். எங்காவது சிவன் அடியார்கள்/சிவா பக்த்தர்கள் யாரவது கையில் சூலத்தை வைத்து கொண்டோ அல்லது வேற ஆயுதம் ஏந்தி யாரையாவது இம்சிக்கிரார்களா இப்போது ??? அது எதற்கு இப்போது.//

கண்டிப்பாக இப்பொது இது தேவையில்லை. அந்த விடியோவில் கமல் சொல்வது கலாச்சாரத்தின் விளக்கம் கிடையாது கலாச்சார மாற்றத்தின் விளக்கம். அது மட்டும் இல்லாமல் எதற்காக சொல்லபட்ட்து என்பதை பொருத்தே அதன் விளக்கங்களும் மாறும் என்பது என் கருத்து.
கலாச்சார மாற்றம் என்பது மிக மிக அவசியம் இல்லையென்றால் வளர்ச்சி என்பதே இருக்காது. கலாச்சாரம் மாற்றம் எப்படி இருக்க வேண்டும் என்றால் மாற்றத்தினால் சமுகத்திற்க்கு ஏற்படும் பாதிப்பில் நன்மை அதிகமாகவும் தீமை இல்லாமலும் அல்லது இப்பொது இருப்பதைவிட குறைந்தும் இருக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் மற்றம் என்பது ஒரே சீறாகவும் அல்லது படிபடியாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஏதாவது மாற்று கருத்திருந்தால் தெரிவிக்கவும்.


//போற போக்குல , விதவையை பற்றி .ஒரு விளாசு ... எனக்கு தெரிந்து, இந்த உடன் கட்டை பழக்கம் தமிழ் நாட்டில் இருந்ததா தெரியவில்லை,//

தமிழ்நாட்டில் உடன் கட்டை: கல்கியின் வரலாற்று நாவல் பொன்னியின் செல்வனில் (இந்த நாவல் பெரும்பாலும் வரலாற்று அதரங்களான கல்வெட்டு, செப்புபட்டையம் பொன்றவற்றை வைத்தே எழுதியதாக கருதபடுகிறது.) கடைசி சில பக்கங்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் விவரங்களை கூறி இருப்பார். அதில் சுந்திர சோழரின் மனைவி வான்மாதேவி – மலையமானுடைய மகள் – அவருடன் உடன்கட்டை ஏறி சொர்க்கம் அடைகிறாள். (குறிப்பு: சுந்திர சோழரின் காலம் முகலாயர்களுக்கு முந்தைய காலம்) அது மட்டும் இல்லாமல் இதற்க்கு முன்பும் உடன்கட்டை ஏறுவது வழக்கத்தில் இருந்த்தாக பல இடங்களில் கூறியிருப்பார்.


//விதவைகளை மிக கொடூரமாக நடத்தினோம் என்பதற்கு மறு பேச்சே கிடையாது .... அது மாறி வருகிறது , நல்ல மாற்றம்//

நிச்சயமாக. இது போன்றவற்றைதான் இன்னும் முழுமையாக கலாச்சாரத்திலிருந்து நீக்க வேண்டும். இதுபோல் பலவற்றை குறிப்புடலாம்.


//ராஜஸ்தானில் , மொகலாய படை எடுப்பினால் வந்த ஒரு தற்காலிக முடிவு ... நிச்சயமாக இந்த கால கட்டத்தில் அது போன்ற ஒரு பழக்கம் கண்டிப்பாக தடுக்கப்பட்டு , தக்க தண்டனை கொடுக்க வேண்டும்//

இதற்கான விளக்கம் மேலே தரப்பட்டுல்லது.


//திருமணம் ஆகி, குழந்தை(கள்) வந்த பிறகு அது நமக்கு நிறைய கற்று கொடுக்கும்... நாமும் கற்று கொண்டே கற்று கொடுப்போம் ..அது ஒரு சுழற்சி...//

உண்மை குழந்தைகளிடமிருந்து நாம் கற்கிறோம் குழந்தை நம்மிடமிருந்து கற்கிறது. ஆனால் குழந்தையானது நம் நட்த்தையும் நேர்மையையும் தான் பின்பற்றுகிறது அதனால் எதிர்காலத்தின் கலாச்சாரம் நம் கையில்தான் இருக்கிறது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளவேண்டும்.


//உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்//

நன்றி திரு சுந்தர ராமன். உங்களை பொன்றோரின் அதரவால் நாம் இன்னும் ஆழமாக ஒரு விசயத்தை அலசி முறையான தீர்வு கானமுடியும்.
கண்டிப்பாக இன்னும் ஒரு வாரத்தில் நம் கலந்துரையாடலின் தீர்வை ஒரு பதிவாக (சுருக்கமாக) possible solution தருவதற்க்கு முயற்ச்சிக்கிறேன்.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் 19 June 2009 at 3:28 am  

அழைப்புக்கு நன்றி. மீண்டும் வந்துள்ளேன். பார்த்தவுடன் கிடைத்தது இது. இதற்க்கு நான் முரண் படுகிறேன்.

"மேலும் மதம், சாதி போன்ற அமைப்புகளும் ஒரு குழுவாக வாழத்தானே தோற்றுவிக்கப்பட்டது."

எப்படி ஐயா? எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?
ஜாதி:
- ' நீ கீழ் தெருவில்/சேரியில் இரு, நான் மேல் தெருவில் இருக்கிறேன்'
- ' ஊரில் திருவிழா நடந்தால், தேர் ஓட்டத்தில் நீ வடம் பிடிக்கக்கூடாது'
- ' என் ஜாதியில் நீ பெண் கேட்கக்கூடாது, நானும் அது போல....( இந்த கோட்ட நீயும் தாண்ட கூடாது, நானும் தாண்ட மாட்டேன்- நன்றி வடிவேலு சார்)
- ' ஊர் மக்கள் மலத்தை நீ மட்டும்தான் வாற வேண்டும், எனக்கு பல கௌரவமான பல வேலைகள் உள்ளது.'
- ' உன் வீட்டு சவம், நான் வசிக்கும் தெருவில் கொண்டு போகக்கூடாது.'
- ' என்னதான் நீ இந்த தமிழ்நாட்டில் வாழந்தாலும், கடவுள் வழிபாட்டில் உன் தமிழ் மொழியால் அர்ச்சனை செய்யக்கூடாது.'
இது தான் ஜாதி செய்யும் வாழ்க்கை முறையா?

மதம்: இந்து, இந்துவை அடித்துக்கொள்கிறான், கிருஸ்தவன், கிருஸ்தவநை அடித்துக்கொள்கிறான். இஸ்லாமியன், இஸ்லாமியனை போட்டுத்தள்ளுகிறான். அட, புத்தம் சரணம் என்று சொல்பவனின் செயல்களை பார்த்துக்கொண்டுத்தனே இருக்கிறோம்.
இது மட்டும் இல்லை ....

இனம்:
இங்கே நான் தற்போது பிழைப்புக்காக வசிக்கும், 'நாகரீகம்' மிகுந்த நாட்டில், ஒருவர் வளர்க்கும் செல்லப்பிராணியான நாயை, 'DOG' என்று கூறிவிட்டால், கோபித்துக்கொள்கிறார்கள். விலங்குகளையும் நேசிக்கிறார்களாம்! ஆனால், இங்கு 'கருப்பு' அல்லது ' சாக்லேட் பிரவுன் ' (இல்லை 'நான் வெள்ளை தோல் என்று பெருமையோடு நம்ம ஊரில் கலர் காட்டுபவர்களும்) கலர் தோலை கண்டால் காறி (தன் தாய் நாட்டின் மண் மீதே) துப்புகிறார்கள். மனித நேயம் காற்றில் மிக அருமையாக காற்றில் பறக்கவிடப்படுகிறது. 'இல்லை' என்று யாராவது புலம் பெயர்ந்தவர்களை கூறச்சொல்லுங்களேன் பார்க்கலாம். முடியாது.
அதையெல்லாம் விடுங்கள் சார், இவனாவது நம்மை ஒரு காலத்தில் ஆண்டவர்கள் என்ற மிதப்பில் செய்கிறார்கள், அது தவறென்றும் தெரியாமல். நம் தாய்நாட்டில் என்ன வாழுது , பக்கத்துக்கு மாநிலத்துக்கு போனால் நமக்கு என்ன மரியாதை என்பதை,மனசாட்சியோடு சிந்தித்துப்பார்த்தால் உண்மை புரியும். " கொங்குறு நன் மக்களு " என்றால் என்னவென்று தெரியுமா?

மீண்டும் அழைத்ததற்கு நன்றி. மிகவும் அருமையான பகிர்வு. இன்னும் எல்லோரிடமும் கொண்டுசென்றால் இன்னும் நலமாக இருக்கும். இது போல சீரியஸ் ஆக சிந்தித்தால் தலை கேட்டுபோகிறது, மனது கஷ்டபடுகிறது,கோபம் வருகிறது.( நிறைய செலவு ஆகிறது!)

அது சரி, பின்னுட்டம் போட்டீர்கள், என் பதிவை பார்க்க நேரமில்லையா? அது சம்மந்தமாக ஓரிரு வார்த்தைகள் டைப் பண்ணக்கூடாதா? பரவாஇல்லை. நாயகன் தீமை(theme) நினைத்துகொள்ளுகிறேன்.
" நாலு பேருக்கு நல்லது நடக்குமுன்னா, எதுவும் தப்பில்ல"
மீண்டும் சந்திப்போம். நானும் வேலூர் பக்கம்தான்.

வனம் 19 June 2009 at 8:10 am  

வணக்கம் பிரதீப்

ஆம் கல்வி என்பது ஒரு அடிப்படை காரணிதான், ஆனால் இந்திய கல்வி நம்மை எப்படி பழக்குகின்றது -- படித்ததை வாந்திஎடுக்கும் ஒரு இயந்திரமாகத்தானே.

எதிரியுடன் போர்களத்தில் ஜான்சி ராணி போரிட்டால் என படித்துவிட்டு அவர்களின் வீரத்தை, தைரியத்தை மெச்சிவிட்டு நம் வீட்டு பெண்களை வீட்டைவிட்டு வெளியேவர அனுமதிக்காத பேராண்மையை தந்தது இந்த சமூகமும், கல்வியும் தான்.

சமூகத்தின் மூலமாக -- நம்மை சுற்றியுள்ளவர்களின் வாழ்வுமுறை என நான் அர்த்தபடுத்தலாமா? அப்படி எனில் சமூகம் செய்வதில் சரி தவறுகள் பிரித்துப்பார்க்கவே நமக்கு ஆழ்ந்து யோசிப்பதன் மூலமே வரும்.

தனக்கு பாதகம் ஏற்படாமல் இருக்க மட்டுமே யோசிக்கின்றார்கள் -- நான் சந்தித்த பலர் அதற்கு கூட யோசிக்க தயாராக இல்லை. இந்த சமூக, ஜாதிய, மத, ஆன்மீக கட்டமைப்புகளின் அடித்தளத்தில் முன் முடிவுகளுடனே இருக்கின்றார்கள், அவர்களின் அந்த முடிவுகளை மாற்ற, அல்லது சரியா எனக்கூட யோசிக்க தயாராக இல்லை.

\\ஒரு சிறு தவறு அவருடைய மூன்றாவது மனைவிதான் நீங்கள் குறிப்பிடும் ”மும்தாசு”
கீழ் உள்ள சுட்டியை பார்க்கவும்.
http://en.wikipedia.org/wiki/Arjumand_Banu_Begum \\

சுட்டிக்கும், குறிப்புக்கும் நன்றி. நான் மதனின் வந்தார்கள் வென்றார்கள் படித்துவிட்டு, அதில் அவர் ஷாஜகானில் முதல் மனைவியாகத்தான் குறிப்பிட்டுள்ளார் மற்றும் அவறுக்கு வேறு மனைவிகள் இருந்ததாக இல்லை -- எது சரி, தவறு என தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் ஆழ தேடவேண்டும்.

அப்புறம் தமிழ்நாட்டுத்தமிழனின் கேள்வியை நானும் வழிமொழிகின்றேன் ஆமா;

\\அது சரி, பின்னுட்டம் போட்டீர்கள், என் பதிவை பார்க்க நேரமில்லையா? அது சம்மந்தமாக ஓரிரு வார்த்தைகள் டைப் பண்ணக்கூடாதா? \\

சாணக்கியன் 19 June 2009 at 10:09 am  

/* ஒரு சிறிய சந்தேகம் - நன்மை என்று எதுவும் இல்லையா?
அதன் தீர்வு என்று எதுவும் இல்லையா? */

நன்மைகள் இருக்கின்றன. ஆனால் நான் தீமையே தூக்கலாக இருப்பதால் மொத்த தீமையின் 100% பங்கிட்டுக் கொடுத்திருக்கிறேன் :-). சினிமாவை விட இன்று டி.வி. நெடுந்தொடர்கள் சீரழிவை அதிகமாகவே செய்கின்றன. அப்புறம் இசை சேனல்களில் வரும் அந்த ஸ்க்ரோலிங் sms-கள்... யப்பா....

தீப்பெட்டி 19 June 2009 at 4:36 pm  

//வினோத்கெளதம் said...


பிரதீப்..

இவர்கள் கொடுத்த கருத்துக்கு மேல் இதை அலசுவது மிக கடினம//

ஆமா உண்மைதான்.. ஆனா இந்த பின்னூட்டங்களில் இருந்து நீங்க தெரிந்து கொண்டதை, புரிந்து கொண்டதை தனிப்பதிவாக்கினால் நன்றாக இருக்கும் பிரதீப்.. கொஞ்சம் பெரிய பதிவாக இருந்தாலும்..

அது தெளிவான கருத்தை முன் வைக்ககூடும்.. இன்னும் பல புது சிந்தனைகளுக்கும் வழிவகுக்கும்..

நேரம் இருப்பின் செய்யவும்.. அதுதான் விவாதத்தின் பயனாக இருக்கும்..

வணக்கத்துடன் நன்றி பாஸ்..

Unknown 20 June 2009 at 12:41 am  

நன்றி திரு. கனேஷ் குமார் (தீப்பெட்டி)


//பின்னூட்டங்களில் இருந்து நீங்க தெரிந்து கொண்டதை, புரிந்து கொண்டதை தனிப்பதிவாக்கினால் நன்றாக இருக்கும் பிரதீப்.. கொஞ்சம் பெரிய பதிவாக இருந்தாலும்..//

கண்டிப்பாக பதிவிடுகிறேன்.

நன்றி...

Unknown 20 June 2009 at 12:46 am  

நன்றி திரு. சாணக்கியன்

//தீமையின் 100% பங்கிட்டுக் கொடுத்திருக்கிறேன் :-). சினிமாவை விட இன்று டி.வி. நெடுந்தொடர்கள் சீரழிவை அதிகமாகவே செய்கின்றன. அப்புறம் இசை சேனல்களில் வரும் அந்த ஸ்க்ரோலிங் sms-கள்... யப்பா....//

உணர முடிகிறது.

Unknown 20 June 2009 at 1:01 am  

நன்றி திரு ராஜராஜன் (வனம்)

//ஆம் கல்வி என்பது ஒரு அடிப்படை காரணிதான், ஆனால் இந்திய கல்வி நம்மை எப்படி பழக்குகின்றது -- படித்ததை வாந்திஎடுக்கும் ஒரு இயந்திரமாகத்தானே.//

ஒப்பு கொள்கிறேன்.


//எதிரியுடன் போர்களத்தில் ஜான்சி ராணி போரிட்டால் என படித்துவிட்டு அவர்களின் வீரத்தை, தைரியத்தை மெச்சிவிட்டு நம் வீட்டு பெண்களை வீட்டைவிட்டு வெளியேவர அனுமதிக்காத பேராண்மையை தந்தது இந்த சமூகமும், கல்வியும் தான்.//

மறுக்க முடியாத உண்மை.


//சமூகத்தின் மூலமாக -- நம்மை சுற்றியுள்ளவர்களின் வாழ்வுமுறை என நான் அர்த்தபடுத்தலாமா? அப்படி எனில் சமூகம் செய்வதில் சரி தவறுகள் பிரித்துப்பார்க்கவே நமக்கு ஆழ்ந்து யோசிப்பதன் மூலமே வரும்.//

ஆமாம்.


//தனக்கு பாதகம் ஏற்படாமல் இருக்க மட்டுமே யோசிக்கின்றார்கள் -- நான் சந்தித்த பலர் அதற்கு கூட யோசிக்க தயாராக இல்லை. இந்த சமூக, ஜாதிய, மத, ஆன்மீக கட்டமைப்புகளின் அடித்தளத்தில் முன் முடிவுகளுடனே இருக்கின்றார்கள், அவர்களின் அந்த முடிவுகளை மாற்ற, அல்லது சரியா எனக்கூட யோசிக்க தயாராக இல்லை.//

சத்யமான வார்த்தைகள்.


//அப்புறம் தமிழ்நாட்டுத்தமிழனின் கேள்வியை நானும் வழிமொழிகின்றேன் ஆமா;
\\அது சரி, பின்னுட்டம் போட்டீர்கள், என் பதிவை பார்க்க நேரமில்லையா? அது சம்மந்தமாக ஓரிரு வார்த்தைகள் டைப் பண்ணக்கூடாதா? \\//

உண்மையை சொல்லவேண்டும் என்றால் இந்த விவாதத்தை தொடங்கும் போது யாரும் வரவில்லை பின் நானாக இதற்க்கு முன் கலாச்சாரம் சம்மந்தமாக பதிவிட்டவர்களையிம் நன்பர்களையும் தேடி அழைபதற்க்கே நேரம் சரியாக இருந்தது. கண்டிப்பாக இந்த தவறை தொடரமாட்டேன்.

Unknown 20 June 2009 at 1:27 am  

நன்றி தமிழ்நாட்டுத்தமிழன்.

//ஜாதி:
- ' நீ கீழ் தெருவில்/சேரியில் இரு, நான் மேல் தெருவில் இருக்கிறேன்'
- ' ஊரில் திருவிழா நடந்தால், தேர் ஓட்டத்தில் நீ வடம் பிடிக்கக்கூடாது'
- ' என் ஜாதியில் நீ பெண் கேட்கக்கூடாது, நானும் அது போல....( இந்த கோட்ட நீயும் தாண்ட கூடாது, நானும் தாண்ட மாட்டேன்- நன்றி வடிவேலு சார்)
- ' ஊர் மக்கள் மலத்தை நீ மட்டும்தான் வாற வேண்டும், எனக்கு பல கௌரவமான பல வேலைகள் உள்ளது.'
- ' உன் வீட்டு சவம், நான் வசிக்கும் தெருவில் கொண்டு போகக்கூடாது.'
- ' என்னதான் நீ இந்த தமிழ்நாட்டில் வாழந்தாலும், கடவுள் வழிபாட்டில் உன் தமிழ் மொழியால் அர்ச்சனை செய்யக்கூடாது.'
இது தான் ஜாதி செய்யும் வாழ்க்கை முறையா?//

சரியான கேள்விகள், இவ்வளவு வளர்ச்சி(......) அடைந்த பின்பும் இவை அனைத்தையும் அல்லது பெருபாண்மையானவற்றை பின்பற்றுகிறேம் என்று நினைக்கும் போது அடிபடையிலே சில தவறுகள் இருப்பதாய் தான் தோன்றுகிறது. கண்டிப்பாக களைய பட வேண்டும் எவ்வாறு? எல்லொரும் உணரும் வகையில் தெரியவில்லை.
ஏன்னொன்றால் இதுபோன்ற விசயத்தை/விவாதத்தை யாரும் விரும்புவதும் இல்லை வரவேற்பதும் இல்லை.
கண்டிப்பாக தெரிந்து கொள்ள முயற்ச்சிப்பேன்.


//மீண்டும் அழைத்ததற்கு நன்றி. மிகவும் அருமையான பகிர்வு. இன்னும் எல்லோரிடமும் கொண்டுசென்றால் இன்னும் நலமாக இருக்கும். இது போல சீரியஸ் ஆக சிந்தித்தால் தலை கேட்டுபோகிறது, மனது கஷ்டபடுகிறது,கோபம் வருகிறது.( நிறைய செலவு ஆகிறது!//

நன்றி கண்டிப்பாக முயற்ச்சிகிறேன். செலவை நாளை நடக்கவிருக்கும் நல்லதுக்கான(ஒரு 10 பேராவது உணரமாட்டாங்களா?) முலதனமாக நினத்து கொள்ளுங்கள்.


//அது சரி, பின்னுட்டம் போட்டீர்கள், என் பதிவை பார்க்க நேரமில்லையா? அது சம்மந்தமாக ஓரிரு வார்த்தைகள் டைப் பண்ணக்கூடாதா? பரவாஇல்லை. நாயகன் தீமை(theme) நினைத்துகொள்ளுகிறேன்.
" நாலு பேருக்கு நல்லது நடக்குமுன்னா, எதுவும் தப்பில்ல"//

உண்மையை சொல்லவேண்டும் என்றால் இந்த விவாதத்தை தொடங்கும் போது யாரும் வரவில்லை பின் நானாக இதற்க்கு முன் கலாச்சாரம் சம்மந்தமாக பதிவிட்டவர்களையிம் நன்பர்களையும் தேடி அழைபதற்க்கே நேரம் சரியாக இருந்தது. கண்டிப்பாக இந்த தவறை தொடரமாட்டேன்.


//மீண்டும் சந்திப்போம். நானும் வேலூர் பக்கம்தான்.//

அப்படியா எந்த பக்கம்? என் வீடு காட்பாடியில் இப்ப இருப்பது துபாயில்.

Karna 20 June 2009 at 4:44 am  

மனிதன் சர்வைவ் அவதர்கு அவன் வாலும் இடதில் எப்படி வால்ந்தால் தனக்கும் தன்னை சார்ந்தவர்க்கும் பலன் கிடைக்குமோ அதன் படி தன் கலாசரம் அமையும்...இதில் "பலன்" வரலர்ரில் பென், பொன், நிலம் இவை மூன்ராகதான் உல்லது..சமூகம் எப்படி இருந்தால் இவை மூன்ரும் பலம் பொருந்தியவர்கு கிடைகுமோ அவ்வாரு சமூகதின் பழக்கம் இருக்கும்..அதனால் கலாசரம் மாருவது நம்மை போல எலியவர்கலால் அல்ல, அதன் மார்ரதுக்காக நாம் வருந்தவும் வேன்டாம். -- உதாரனதிர்கு நாம் நம் பலன் மட்ரும் நம் நெரம் கருதி மெக்டொனால்டில் சபிடுவது இல்லயா..இது ஒரு எலிய உதாரனம் தான்..இதுவே தான் மிகப்பெரிய அலவில் கலாசாரம் ஆகுரது..இதன் இன்னொரு எடுத்துக்காட்டு நம் நாட்டில் மனைவி எப்படி உடை உடுத்த வேன்டும் என்ரு கனவன் தீர்மானிப்பது...

நாகா 20 June 2009 at 9:00 am  

//சினிமா?
தொலைகாட்சி?
மதம்?
சாதி?
கல்வி?
ஒழுக்கம்?
தனிமனித ஒழுக்கம்?
வாழ்வியல் முறை?
சமுக கட்டமைப்பு?
அரசியல்?
வேற ஏதாவது?//

என்னைப் பொறுத்தவரை, கிராமத்து மக்களின் வாழ்வுமுறையில் சாதி, மதம் மற்றும் சமூக கட்டமைப்பு பெரும் பங்கு வகிக்கின்றன. நகர நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களின் கலாச்சாரத்தில் ஊடகங்களின் பங்கு மறுக்க முடியாதது. ஆனால் கல்வியும் தனி மனித ஒழுக்கமும்தான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது என் கருத்து.

Unknown 27 June 2009 at 6:58 pm  

நன்றி நாகா

//என்னைப் பொறுத்தவரை, கிராமத்து மக்களின் வாழ்வுமுறையில் சாதி, மதம் மற்றும் சமூக கட்டமைப்பு பெரும் பங்கு வகிக்கின்றன. நகர நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களின் கலாச்சாரத்தில் ஊடகங்களின் பங்கு மறுக்க முடியாதது. ஆனால் கல்வியும் தனி மனித ஒழுக்கமும்தான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது என் கருத்து.//

எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது........

அருண்மொழிவர்மன் 27 July 2009 at 9:11 am  

வணக்கம் பிரதீப், கலாசாரம் என்பது நாகரீகம் தழுவியதாக இருப்பினும் அது காலத்துக்கு காலம் மாறிவருவது....

கலாசார மாறல்கள் கால ஓட்டத்தில் ஏற்கப்படவேண்டியனவே. நீங்கள் சொன்ன எல்ல விடயங்களும் கலாசார மாற்றத்தில் செல்வாக்கு செலுத்தினாலும், அந்த அந்த காலப்பகுதிகளில் செல்வாக்கு செலுத்தும் ஆதிக்கங்கள் அந்த மாறூதல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற என்று நினக்கின்றேன்

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP