ரஜினிகாந்த்............ரசிகர்கள்............

Sunday, 21 June, 2009


சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்

ரஜினிகாந்த் ஆமாங்க இந்த பேரை சொன்னாலே எல்லோரும் எதவது விமர்சிக்க ஆரம்பிச்சுடுராங்க; நல்லவிதமாகவோ அல்லது திட்டியோ (பெரும்பாலும் நல்லவிதமாக)

ஒரு விசயம் மட்டும் முதல் இருந்தே புரியமாட்டேங்குதுங்க என்னன்னா சினிமாவும் ஒரு தொழில்தானே அதுல இருக்கவங்களும் மனிதர்கள் தானே. அவங்களுக்கு அப்படி என்ன வித்யாசம அல்லது அதிகபடியா இருக்கு (புகழ்ன்னு சொன்னா அது நாம உருவாக்குனது தான்)

சினிமாவை ஒரு பொழுது போக்கா மட்டும் பார்க்க ஏன் முடியல.

ஒரு படம் ரிலீஸ் ஆனா ஏகபட்ட விமர்சனங்கள், ஆய்வு கட்டுரைகள், அலசல்கள், அந்த கலைஞசர்களுக்கு அறிவுரைகள்.............. எதற்க்கு இந்த முக்கியதுவம்.

அதுகாக சினிமாவே வேண்டாமுன்னு சொல்லவில்லை அத ஒரு பொழுதுபோக்க மட்டும் பாப்போமே சினிமா முடிந்ததும் அத மறந்துட்டு அடுத்த வேலையை பாப்போமே. நாம நம்ம வேலையை விட்டுட்டு அவங்க வேலையை பாக்குறதால (அலசல் மற்றும் ......) சினிமாகாரங்க ஜெயிச்சுட்டு நம தோத்துட்டு இருக்கா மாதிரிதான் தெரியுது..............

என்ன இது தலைப்புக்கும் மேட்டருக்கும் சம்மந்தமே இல்லன்னு நினைக்காதீங்க கீழே இருக்குற வீடியோவை பாத்துடுங்க.............
இவரு எதுனால மண் சோறு சாப்பிட்டாருன்னு விவாதம் பன்ன போரதில்லை

அவந்தான் பைத்தியகாரதனமா செய்றான்னா (கண்டிப்பாக இவன் மாதிரியான ஆளுங்களுக்கு மரியாதை தேவையில்லை) அத மீடியா வேற பெரிசு படுத்தினா கண்டிப்பாக இது போன்ற செயல்களை உக்கப்டுத்துவதா தான் அமையுது

அதுமட்டும் இல்லாமல் எந்த நடிகனாவது அவனோட ரசிகன் இது மதிரி செய்றது தப்புன்னு சொல்லி கண்டித்து/தண்டித்து இருக்கானா (இவங்களுக்கும் மரியாதை குடுக்க தோனல) அப்பவே தெரியலையா நம்ம நடிகர்களின் மிக சிறந்த வேசம்(பொது வாழ்வில்)

உங்களோட க்ருத்துக்களை பின்னூடமிடுங்கள்

நன்றி...........

6 comments:

லவ்டேல் மேடி 22 June 2009 at 6:30 AM  

நம்ம மக்களுக்கு நடிப்புல ஓவர் ஸீன போட்டாலே ஒரே குஜால்தான் ... உடனே தலைவான்னு சவுண்டு உட ஆரபிசுருவானுங்க...... !! உடனே நடிகனுங்களுக்கும் ஜிவ்வ்னு ஏரிக்குது .........!!!


லேட்டஸ்ட் அப்டேட் :::::::: விஜய் ...?? என்ன கொடும............

சப்ராஸ் அபூ பக்கர் 22 June 2009 at 12:07 PM  

///சினிமா முடிந்ததும் அத மறந்துட்டு அடுத்த வேலையை பாப்போமே. ///

ஏற்றுக் கொள்கிறேன்.....

தீப்பெட்டி 22 June 2009 at 12:19 PM  

இப்படி மீடியா பெரிசு பண்ணுறதால தான் ரசிகர்கள் இப்படி பண்ணிட்டு இருக்காங்க..

இல்லாட்டி அவன் அவன் வேலைய பாத்துக்கிட்டு இருப்பாங்க..

ஜெகநாதன் 24 June 2009 at 7:02 AM  

//சினிமாகாரங்க ஜெயிச்சுட்டு நம தோத்துட்டு இருக்கா மாதிரிதான் தெரியுது..............//​
நெசந்தான் அய்யா. நம்ம கனவு எல்லாத்தையும் சினிமாவா பார்த்துத் தீர்த்துகிற சென்மங்களாயிட்டோமே!
அதுதான் கனவுத்​தொழிற்சாலை போல!

என் பக்கம் 27 June 2009 at 6:44 PM  

நன்றி லவ்டேல் மேடி,
//லேட்டஸ்ட் அப்டேட் :::::::: விஜய் ...?? என்ன கொடும............//

என்ன செய்ய அனுபவிச்சு தான் ஆகணும்

என் பக்கம் 27 June 2009 at 6:47 PM  

நன்றி ஜெகநாதன், தீப்பெட்டி மற்றும் சப்ராஸ் அபூ பக்கர்

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP