Please என்னோட பதிவை திருடுங்க.....

Friday, 12 June 2009

இன்னைக்கு காலையில் வந்து google reader திறந்தா ஒரே புலம்பல் - ஐய்யோ என் பதிவை திருடிட்டான் என் பதிவை திருடிட்டானு................முடியல.............


அதனால தான் சகபதிவர் ஒருவருக்கு இதுமாதிரி பின்னூடம் இட்டேன்:

ஏன் இப்படி நினைக்க கூடாது.

உங்களொட கருத்து மற்றும் எண்ணங்கள் இன்னும் பல பேருக்கு பல வழிகளில் சேர்வதாய் நினைக்ககூடாது.

உங்களுக்கு என்னோட முதல் கேள்வி:
நீங்க உங்களை முன்நிறுத்திறீங்களா இல்ல உங்களோட கருத்துகளையா?

நன்றி வணக்கம்......


என்னை பொருத்தவரை நம்மோட கருத்துகள் எத்தனை பேருக்கு போய் சேருதுன்றது தான் முக்கியமே தவிர மற்றதெல்லாம் அதற்க்கு அடுத்துதான்.


அதற்க்கு சகபதிவரின் பதில் பின்னூடம்:

என்னங்க இது அநியாயமா இருக்கு.., இடுகைய போடுங்க, ஆனா [நன்றி" ன்னு போட்டு தானே நீங்க யூஸ் பண்ணனும்.அது தானே தர்மம் அத விட்டுட்டு திருடுறதுக்கு இப்படி வக்காலத்து வாங்குறீங்க.
ஓஹோ ... நீங்களும் அந்த இனம் தானா? அப்ப சரி...

மேல நான் கேட்ட கேள்வி: நீங்க உங்களை முன்நிறுத்திறீங்களா இல்ல உங்களோட கருத்துகளையா? இதுக்கு ஏதாவது ஒரு பதிலை சொல்லியிருக்கலாம் இல்லன்னா நான் சொன்ன கருத்து தப்புன்னு விளக்கமளித்திருக்களாம். அதவிட்டுட்டு //நீங்களும் அந்த இனம் தானா? அப்ப சரி//

இதுக்கு என்னங்க பதில் சொல்றது.........

என்னோட பதில் இது தான்.

பேசுவதுக்கு முன் பத்துவாட்டி யோசிகனும் ஏழுதுவதுக்கு முன் நூறுவாட்டியாவது யோசிகனும். இல்ல குறைந்த பட்சம் என்னோட பதிவையாவது பத்துட்டு பேசுங்க..... ’’நீங்களும் அந்த இனம் தானானு’’ கேட்டதால எனக்கு எந்த கோபமும் இல்ல ஏன்ன உங்க கீழ்தனமான சிந்தனையை பத்தி கவலபட வேண்டிய அவசியம் எனக்கில்ல


இப்ப தலைப்புக்கு வருவோம்.

நாம பதிவிடற பெருபாண்மையான விசயங்கள் ஏதோ ஒன்றிலிருந்துதான் எடுக்குறோம் (சொந்த அனுபவங்களை தவிற) அந்த விசயங்களில் நம்மோட கருத்தையும் சேர்த்து பதிவிடறோம். அதை திருடும் போது கண்டிப்பாக நமக்கு வலிக்கதான் செய்யும் அதனாலதான் நான் அந்த நிகழ்வை(திருட்டை) இதுமாதிரி பார்த்தா வலிக்கு பதில் சந்தோசம் கிடைக்கும் இல்லையானு சொன்னேன்.

இதுகாக திருடுறதை நான் சரியின்னு சொல்லவில்லை - பட்டுகோட்டையார் சொன்னாமாதிரி ”திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” - நீங்க பதிவிடற மட்டமான வார்த்தைகளாளோ அவர திட்றதாலையோ அவரை திருத்திட முடியாது.

இப்படியும் யோசிகலாம் இல்ல - உங்க பதிவை யாராவது திருடிட்டா; அட நம்ம கருத்தை சொல்ல இன்னொருத்தருன்னு நினச்சிகலாம் இல்ல அவருக்கு பதில் பதிவா நன்றி திரு_______ அவர்களுக்கு என்னோட பதிவை மறுபடியும் உங்க பிளாக்குள பதிவிட்டதுக்கு நன்றின்னு ஆதாரத்தோட சொல்லலாம். அதவிட்டுட்டு அவங்கள அசிங்கமா திட்றதுனால பதிவுலகுல நம் மேலும் ஒரு தவறான பார்வை ஏற்படும் என்பது என் கருத்து.

கடைசியா என்ன சொல்லவரேன்னா: ஆரோக்யமா யோசிக்கவும் மாறுபட்ட கோணத்திலிருந்து விசயத்தை அனுகவும் முயற்சி பண்ணுவோமே.


பி.கு.......
இதனால சகலமானவருக்கு சொல்லிகொள்வது என்னவெண்றால் தயவு செய்து என் பதிவை எவர் வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்............நன்றின்னு என் பேரை போடனுமுன்னு அவசியம் கிடையாது.
(அடி கோடிட்டவை நன்பர் நாமக்கல் சிபி பரிந்துரைத்த வரிகள் நன்றி)
நன்றி வணக்கம்.

அப்படியே நேரமிருந்தா கீழேவுள்ள பதிவையும் படிச்சுட்டு போங்க.

பின்னூடம் பதிவாகிறது..... (இந்த பதிவு மேலே சொன்ன பதிவருக்கு நான் இட்ட பின்னூடம்)



19 comments:

கோவி.கண்ணன் 12 June 2009 at 12:30 pm  

:)

அது ஒரு கனாக் காலம் 12 June 2009 at 12:53 pm  

நான் உங்கள் வழி, நன்றியோ ... இல்லையோ.... கருத்து ( இருந்தால் ) அது போய் சேரனும் .... அடிச்சு விளையாடுங்க !!!!!!

Anonymous 12 June 2009 at 1:08 pm  

அவர விடுங்க, அது அவர் அவர் கருத்து.

matterக்கு வருவோம்,
----
பி.கு.......
இதனால சகலமானவருக்கு சொல்லிகொள்வது என்னவெண்றால் தயவு செய்து என் பதிவை திருடி உங்க பிளாக்குல போடுங்க............நன்றின்னு என் பேரை போடனுமுன்னு அவசியம் கிடையாது.

நன்றி வணக்கம்.
----------

கண் கலங்க வச்சிடீங்க. தேவை படும்போது நான் உங்கள் பதிவை எடுத்து(underline எடுத்து) என் பிளாக்கில் போடுகிறேன், மறவாமல் உங்கள் பிளாக் முகவரியுடன். :)

நாமக்கல் சிபி 12 June 2009 at 1:20 pm  

//இதனால சகலமானவருக்கு சொல்லிகொள்வது என்னவெண்றால் தயவு செய்து என் பதிவை திருடி உங்க பிளாக்குல போடுங்க............நன்றின்னு என் பேரை போடனுமுன்னு அவசியம் கிடையாது//

நீங்களே "திருடி" போட்டுக்குங்கன்னு போட்டிருக்கீங்க! அப்ப நீங்க சொல்ல கருத்தோட நீங்களே முரண்படுற மாதிரி இருக்கே!

Unknown 12 June 2009 at 1:37 pm  

//நாமக்கல் சிபி:
நீங்களே "திருடி" போட்டுக்குங்கன்னு போட்டிருக்கீங்க! அப்ப நீங்க சொல்ல கருத்தோட நீங்களே முரண்படுற மாதிரி இருக்கே!//

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....

’’என்னை பொருத்தவரை நம்மோட கருத்துகள் எத்தனை பேருக்கு போய் சேருதுன்றது தான் முக்கியமே தவிர மற்றதெல்லாம் அதற்க்கு அடுத்துதான்’’

இந்த வரியை நீங்க படிச்சீங்களானு தெரியல.

Unknown 12 June 2009 at 1:38 pm  

நன்றி கோவி கண்ணான் மற்றும் சுந்தருக்கு.

Unknown 12 June 2009 at 1:39 pm  

//கண் கலங்க வச்சிடீங்க. தேவை படும்போது நான் உங்கள் பதிவை எடுத்து(underline எடுத்து) என் பிளாக்கில் போடுகிறேன், மறவாமல் உங்கள் பிளாக் முகவரியுடன். :)//

ரொம்ப நன்றி அநானி அண்ணே

Raju 12 June 2009 at 2:02 pm  

ஆஹா, அடுத்த எபிசோட் ஸ்டார்ட் ஆயிருச்சு.
:)

தீப்பெட்டி 12 June 2009 at 2:20 pm  

உண்மைதான் நாம ஒண்ணும் புதுசா எழுதல.. இந்த உலகத்தில கிடைக்கிற விசயங்கள, அனுபவங்கள நாம எழுதுறோம். நமக்கு கொடுக்கும் உலகுக்கு நாமும் நம்ம பங்கைச் சேர்த்து கொடுக்கிறோம்.நாம நம்ம முன்னிலப் படுத்துறத விட கருத்துகள் போய் சேருவதே முக்கியம். ஆனா எல்லாரும் கருத்தை சொல்லுறதுக்காக எழுதலயே.. நாலு பேரு நம்ம பத்தி பேசணுங்குறதுக்காகத்தான் சிலர் எழுதுறாங்க.. கண்டுக்காதீங்க பாஸ்..

நாமக்கல் சிபி 12 June 2009 at 2:51 pm  

//’’என்னை பொருத்தவரை நம்மோட கருத்துகள் எத்தனை பேருக்கு போய் சேருதுன்றது தான் முக்கியமே தவிர மற்றதெல்லாம் அதற்க்கு அடுத்துதான்’’

இந்த வரியை நீங்க படிச்சீங்களானு தெரியல.//

:) படிச்சேன்! இல்லேங்குலே!

அப்ப சொல்லாம எடுத்தாலே "திருட்டு"ன்னுதான் நீங்க ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா!

கருத்து மட்டும் போய்ச் சேரட்டும்னு நீங்க நினைச்சிருந்தா "எவர் வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்"னு போட்டிருக்கலாமே! ஏன் திருடி போட்டுக்குங்கன்னு சொல்றீங்க!

Unknown 12 June 2009 at 2:55 pm  

//கருத்து மட்டும் போய்ச் சேரட்டும்னு நீங்க நினைச்சிருந்தா "எவர் வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்"னு போட்டிருக்கலாமே! ஏன் திருடி போட்டுக்குங்கன்னு சொல்றீங்க!//

நன்றி திரு நாமக்கல் சிபி அவர்களே

கண்டிப்பாக நான் திருத்திக்குறேன்

மீண்டும் நன்றி

Kripa 12 June 2009 at 6:08 pm  

Oviya Thamarai and Sakthi Vel,
Sorry to putting it in english... You both are Great Bloggers... You both have posted Great Articles... You people should not enter into an argument for someone else behavior.
Sakthivel: You have every right to claim that the article posted by the other person belong you and your expectation is all just a link back to his website, which is your right to claim... But at the same time you shouldn't be telling Oviya that "he belongs to that category".
Oviya: You are absolutely right on your views, but you need to understand the pain of Shaktivel and no person is same, everyone have their own perceptions/expectations.

So please don't blame each other..

You both should not fight for someother person's act...

Thanks...

நாட்டாம தீர்ப்பு குடுத்தாச்சி.... ரைட்டு.. ரைட்டு... ரெண்டுபேரும் கைகுளிகிகிட்டு அடுத்த பிளாக் எழுத பேனாவ சாரி கிபோர்ட கைல எடுங்க.. :)

Anonymous 12 June 2009 at 6:09 pm  

//பேசுவதுக்கு முன் பத்துவாட்டி யோசிகனும் ஏழுதுவதுக்கு முன் நூறுவாட்டியாவது யோசிகனும்//

அன்பு நண்பருக்கு,
நான் பதிவுலகத்துக்கு புதியவன். தங்கள் பதிவுகள் அருமை. கருத்துகள் அருமை. ஆனால் ஒரு சில வார்த்தைகளை தொடர்ந்து எழுத்து பிழையோடு உபயோகம் செய்வதால் படிக்க சிரமமாக இருக்கிறது.
உதாரணம் - துரை, திரமை மற்றும் பல

Pls don't feel bad..Take this in a right angle and correct this if u can..

Unknown 12 June 2009 at 6:23 pm  

எழுத்து பிழையை சரிசய்ய நிச்சயமாக முயற்சிக்றேன்

நன்றி

Anonymous 12 June 2009 at 6:40 pm  

உண்மைதான் நாம ஒண்ணும் புதுசா எழுதல.. இந்த உலகத்தில கிடைக்கிற விசயங்கள, அனுபவங்கள நாம எழுதுறோம். நமக்கு கொடுக்கும் உலகுக்கு நாமும் நம்ம பங்கைச் சேர்த்து கொடுக்கிறோம்.
தேவை படும்போது நான் உங்கள் பதிவை எடுத்து என் பிளாக்கில் போடுகிறேன்.
நன்றி....நன்றி...நன்றி.

நிகழ்காலத்தில்... 12 June 2009 at 10:52 pm  

நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். எடுத்துப் போடுகிற பதிவருக்கு கருத்தை மட்டும் பல பேருக்கு கொண்டு செல்லும் எண்ணம் இருந்தால் நன்றி என போடுவார்.

இல்லை அவர் தன்னை முன்னிறுத்தும்
எண்ணம் இருந்தால் போடமாட்டார்,

நீங்கள் உழைத்து சம்பாதித்த பொருட்கள் உங்கள் அனுமதி இல்லாமல் பிறர் சொந்தமாக்கிக் கொண்டால் என்ன செய்வீர்கள்?

Unknown 12 June 2009 at 11:37 pm  

//நீங்கள் உழைத்து சம்பாதித்த பொருட்கள் உங்கள் அனுமதி இல்லாமல் பிறர் சொந்தமாக்கிக் கொண்டால் என்ன செய்வீர்கள்?//

கருத்துக்கு நன்றி

ஆனா, பணம்/பொருட்களுக்கும், கல்விக்கும் வித்யாசம் இருக்கு. என்னவென்றால் ஒன்று எடுக்க எடுக்க குறையும் ஒன்று கூடும். அதனால இரண்டையும் ஒப்பிடுவது சரியாக தெரியவில்லை.

நிகழ்காலத்தில்... 13 June 2009 at 5:28 am  

’நன்றி’ எனக் குறிப்பிடுவதில் உள்ள சிரமம் என்ன என்பதுதான் எனது ஆதங்கம்.

ஆக்கபூர்வமான கலந்துரையாடலினால்தான் கல்விச் செல்வம் கூடும்,


சத்தமில்லாத கருத்து திருட்டினால் பொருள் இழப்பு ஏதும் இல்லைதான். ஆனாலும் பின்னாளில் நூல்வடிவம் பெறும்போது தேவையில்லாத சிக்கல்கள் வரும் தானே

Anonymous 13 June 2009 at 4:44 pm  

http://southactress1.blogspot.com/

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP