நான் ரசித்த துபாய் (Dubai Bus) - 4
Saturday, 13 June 2009
துபாயில் வேலை பாக்குறேன்னு சொன்னாலே நம் அனைவருக்கும்
நியாபகம் வருவது வெற்றி கொடி கட்டு படத்தின் பார்த்திபன் வடிவேலு காமடி தான்
அதுல பார்த்திபனை வடிவேலு துபாயில் எங்க இருந்ததாக கேப்பார்.
அதுக்கு பார்த்திபன் துபாய் பஸ்டாண்டு பக்கத்துலன்னு சொல்வார்.
அந்த படம் எடுத்தப்ப துபாயில் பஸ்டாண்டு இருந்ததோ இல்லையோ
இப்போ விதவிதமான நூற்றுகணக்கான பஸ்ஸும் பஸ்டாப்பும்,
பயண செலவை கணிசமாவே குறைச்சிருக்கு.
துபாயில் இந்த பேருந்து பயணமும் என்னை வெகுவாகவே கவர்ந்ததுங்க.

இதுதாங்க பர்துபாய் பேருந்து நிலயம். இது பக்கத்துல தான் என்னோட
இருப்பிடமும். யார் என்னை துபாயில் எங்க இருக்கேன்னு கேட்டாலும்
துபாய் பஸ்டாண்டு பக்கத்துலன்னு சொல்ல வேண்டியத இருக்கு.

இதுதாங்க DUBAI BUS. ஆமாங்க எல்லா பஸ்ஸும் ஏசி பஸ்தாங்க.
இல்லன்னா இந்த வெய்யில்க்கு எந்த வண்டியிலும் ஏற முடியாதுங்க.

அமாங்க DOUBLE DECKER BUSதாங்க. பொரும்பாலும் பக்கத்து
அமிரகமான சார்ஜாவுக்கும் துபாயில் சில ரூட்டுக்கும் போகுதுங்க.
முதல் ஏசி பஸ்டாப் இங்க தான் அமைச்சத சொல்றாங்க.
இந்த ரிசிஷனுக்கு அப்புறம் அவ்வளவா கூட்டம் இல்லாத
மாதிரிதாங்க தெரியுது (விழாயன் மற்றும் வெள்ளி நீங்களாக)

இது அபுதாபி மாதிரி பக்கத்து அமிரகத்துக்கு போற பஸ்ஸுங்க.

லண்டன்ல இருக்குற அதே BIG BUS தாங்க இங்கேயும்
சுற்றுலா பயனிகளை கவர்வதற்காக.

இது AIRPORT BUSங்க சில நேரங்களில் இந்த வண்டி மூலம் தான்
விமானத்தில் ஏற முடியுங்க இதுல உக்காருவதற்க்கு 5 இல்ல 10 சீட்டுதாங்க
இருக்கும். ஏன்னா பயன நேரம் 10 நிமிசத்துக்கும் குறைவுங்க.

இதோட பேரு WONDER BUS இதுவும் சுற்றுலா பயனிகளை
கவர்வதற்காக தாங்க. இதுல் என்ன விசேசமுன்னா
இது நீரிலும் போகும் நிலத்துலையும் போகுங்க.

இதோட பேரு WATER BUS எனக்கு ரொம்ம புடிச்ச பஸ்ஸுங்க ஏன்னா ரோடு
மூலமா நீங்க ஒரு மணி நேரம் ஆகும் தூரம் இதுல 10 நிமிசத்துல போயிடலாங்க.

இது CATMARAN வகையை சார்ந்ததுங்க. அதாங்க கட்டுமரம்
வகையை சார்ந்தது. இந்த வகை படகையும் இந்த வார்தையும்
உலகிற்க்கு குடுத்தது தமிழர்கள் தாங்க.

இந்த மாதிரியான பஸ் இருக்கானு தெரியல
ஆனா நல்லா இருக்கேன்னு போட்டிருக்கேன்
எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.
முந்தைய மூன்று பதிவுகளுக்கு கீழே கிளிக் பன்னுங்க.
16 comments:
//லண்டன்ல இருக்குற அதே BIG BUS தாங்க இங்கேயும்
சுற்றுலா பயனிகளை கவர்வதற்காக.//
அங்கே அடிக்கிற வெய்யில்ல எப்படி ஓபன் பஸ் ல போறாங்க!!!
//எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.//
அருமை கலக்கிட்டீங்க..
எனக்கும் ரொம்ப நாளா துபாய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை.
வடிவேல் தான் நினைவிற்கு வருகிறார் :-))))
பஸ் போட்டோஸ் எல்லாம் சூப்பர்.. என்ன இருந்தாலும் நம்ம தமிழ் நாட்டு பஸ் போல வருமா. சும்மா எல்லா பக்கதில இருந்தும் காத்து வரும். அதோட MUSIC Player இல்லாமலே. MUSIC கொடுத்துட்டு வரும் பாருங்க...
சேகுவேரா - வின் முதுகில் குத்தியதா கியூபா?
சே வின் பிறந்த நாளில் தமிழர்களின் சூளுரை
”உலகமே எதிர்ப்பினும் உரிமையை மீட்போம்”
http://maanamumarivum.blogspot.com/
நல்லாயிருக்கு பிரதீப்...
பரவாயில்லையே, உங்கள் தகவல்களை
வைத்து துபாய் guide புக் போடலாம் போலயிருக்கே?
நல்ல தகவல் பகிர்வு பிரதீப்...
ஆனா எனக்கு இங்க துபாய் பஸ்ல பிடிக்காத விஷயம் உள்ள ஏறின உடனே டிக்கெட் எடுக்க சொல்றது....!!
நம்ம ஊரு மாதிரி டிக்கெட் எடுக்காம டகால்டி குடுக்க வழியில்லையே..
நான் இங்க வரதுக்கு முன்னாடி துபாய்ல இருந்து வந்த என் பிரண்ட் துபாய் பஸ்ல கண்டக்டரே இருக்க மாட்டாங்கன்னு சொன்ன உடனே எவ்ளோ ஆசையா வந்தேன்...ஏமாத்திட்டாங்க....
:(
கிரி, விஷ்னு, கலை மற்றும் கண்ணா
அவர்களுக்கு நன்றி
பஸ் போட்டோஸ் எல்லாம் நன்றாக உள்ளது.
என்ன இருந்தாலும் நம்ம இந்திய பஸ் போல வருமா!!
உங்கள் தகவல்களை
வைத்து துபாய் போயி வந்தப்போல இருக்கிறது.நல்ல தகவல் பகிர்வு நன்றி...நன்றி ...
http://naga-thoughts.blogspot.com/2009/06/f1.html
உங்கள் பதிவுகள் எல்லாம் கலக்கல் .....
துபாயின் பஸ், Museum , பாலங்கள் , மலிவு விலை தொலை பேசி ...ன்னு நல்ல உபயோகமான தகவல்கள் தொடர்ந்து கொடுத்து கொண்டு வருகிறீர்கள் ... எப்பொழுதும் இதன் பயன் உண்டு.
இந்த மாதிரி படங்கள் அருமை .
ஆனால் இவைதான் தமிழர்களை ஏமாற்றும் படங்கள்.
துபாய் பஸ் ஸ்டாண்டில ஷார்ஜா போக ஆயிரம் பேர் இரண்டு மணி நேரம் வரிசியைல் நிற்பதை போடுங்கள்.
அதே போல ஷார்ஜாவில் அறுநூறு பேர் பசிர்க்காக காத்திருத்தல். adhai podungal nanbare.
adhuthaan tamilarkalukku indiyarkalukku sollum unmaiyaana படம்.
குப்பன்_யாஹூ
//ஆனால் இவைதான் தமிழர்களை ஏமாற்றும் படங்கள்.
துபாய் பஸ் ஸ்டாண்டில ஷார்ஜா போக ஆயிரம் பேர் இரண்டு மணி நேரம் வரிசியைல் நிற்பதை போடுங்கள்.
அதே போல ஷார்ஜாவில் அறுநூறு பேர் பசிர்க்காக காத்திருத்தல். adhai podungal nanbare.
adhuthaan tamilarkalukku indiyarkalukku sollum unmaiyaana படம்.//
நன்றி குப்பன்_யாஹூ.
நீங்க சொல்றது உண்மைதான் நான் மறுக்கவில்லை.
எப்பவும் குறைகளையே சொல்லிட்டு இருக்குறதை விட இருக்குறதை ரசிப்போம் என்ற சிறு முயற்சிதான் இந்த பதிவு.
இருந்தாலும் கருத்திற்கு நன்றி.
பின்னூடம் இட்ட அனைவருக்கும் நன்றி
நானும் பர் துபாய் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலதான் இருக்கேன் கொஞ்சம் உங்க போட்டோ போட்டிங்கன்னா பார்க்க பேச முடியும்ல உங்க பதிவு ரொம்ப நல்லா இருக்கு
bahurudeen.
நல்ல பதிவு..
wonder bus இப்போதான் பாக்குறேன்..
நன்றி தீபக், தீப்பெட்டி
Post a Comment