மொழி இனத்துக்கு அப்பாற்பட்ட மனிதன்.
Thursday, 4 June 2009
உண்மையில் இந்த தலைப்புக்கு 100% தகுதியானவர் என்பதாலும் அவருக்கு கண்டிப்பா மரியாதை செலுத்தனுமுன்னு நினைச்சதாலும் இந்த பதிவு.
இப்பதாங்க தெனாலி வலைபக்கத்துல ஈழத்தமிழரின் காயங்களும்... காரணங்களும்.. கட்டுரையை படிச்சேன். உண்மையிலே தமிழ் தமிழன்னு சொல்லிக்றவங்க கூட் இவ்வளவு தெளிவா சொல்லவில்லைன்னு தான் தோனுது.
ஒப்பனையில் வில்லனா தெரிஞ்சாலும் “பிரபாகரன் என் ஹீரோ” ன்னு சொன்னதால இவர் எனக்கு ஹீரோவாதான் தெரியுராரு.
என்னை பாதித்த/கவர்ந்த வரிகள்.
- மனநலம் பாதிச்சிருந்தாலோ அல்லது சுயநலம் தலையில் ஏறி உட்கர்திருந்தாலோ மட்டுமே தன்னை சுற்றி நடக்குற விசயங்கள் பற்றி மெளனமாக இருக்க முடியும்.
- சம்மட்டியால் அடித்த வரிகள். எனக்கு என்னன்னு இருக்குறவங்களுக்கு.
- ஈழதமிழ் மக்கள் கண்ணீருக்கு காரணமாக உலகத்தின் மெளனம் இருந்தபோது, ஆதரவற்ற மக்களின் உரிமைக்கு காவலாக பிரபாகரன் கழுத்தில் தொங்கிய சயனைடு குப்பிதான் இருந்துச்சுங்கற உண்மையை மனசாட்சி உள்ள மனிதனாக என்னால் புரிந்து கொள்ள முடியுது.
- பெருபாலும் மனசாட்சியை வித்துடுறாங்க இல்ல தொலைச்சிடுறாங்க.
-விரல் நுனியில் தகவல் யுகத்திம் பயனை அடையும் நாகரிக உலக மனிதர்கள், தமிழர்கள்மேல் நிகழ்ந்த படுகொலையை பற்றி தெரியாமலே இருப்பது............
- தெருயாமலே இல்ல தெரிஞ்சுக்க விரும்புறதில்லை.
- சொந்த நாட்டு மக்களின் சடலங்களுக்கு மத்தியில் ஆட்சியாள்ர்களால் இனிப்பு பரிமாறபட்ட நிகழ்வு ரொம்ப அபாயகரம்.
- அதைவிட கொடுரம் வேற எதுவும் இல்லை.
- இலங்கையில் கொலை செய்யபட்ட மக்களின் அவலத்தைவிட, அதை கைகட்டி வேடிக்கை பார்த்த உலகத்தின் அசிங்கம் வெட்ககேடனது.
- இத்தனை போராட்டங்களுக்கு பிறகும்........
- இதுவரையிலான நம் மெளனம் குற்றமாக இருந்தால் இனிமேல் நீடிக்கும் மெளனம் பாவமாகிவிடும்.
- சத்யமான உண்மை.
- ஈழதமிழர்களின் காயங்களுக்கு மருந்து உரிமை மட்டும் தான்.
- இதுமட்டும் கிடைக்க போகுதா என்ன?
8 comments:
தெருயாமலே இல்ல தெரிஞ்சுக்க விரும்புறதில்லை ...
repeatu ..
எனக்கும் பிரகாஷ்ராஜ் என்ற மனிதரை மிகவும் பிடிக்கும். அவர் தனிப்பட்ட வாழ்க்கையை விட பொதுவாழ்வில் நல்லவர்.
உங்களுக்கு தமிழர்சில் ஓட்டு போட்டுவிட்டேன். எனக்கும் ஒரு ஓட்டு போடுங்க...
நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.
இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்
இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு
இந்த சுட்டியை சொடுக்குங்கள்
தமிழர்ஸ் பிளாக்
எனக்கும் பிடித்த வரிகள்..
நன்றி கலை, மீனா மற்றும் சூரியன்
//விரல் நுனியில் தகவல் யுகத்திம் பயனை அடையும் நாகரிக உலக மனிதர்கள், தமிழர்கள்மேல் நிகழ்ந்த படுகொலையை பற்றி தெரியாமலே இருப்பது............
- தெருயாமலே இல்ல தெரிஞ்சுக்க விரும்புறதில்லை.//
இப்படி யாரும் தெரிந்து கொள்ளாமல், அக்கறை இல்லாமல் விட்டுவிடுவார்களோ என்று தான் நாங்கள் உலகத்து வீதிகளில் எல்லாம் இறங்கி எங்கள் உறவுகளை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினோம். ஆனால், சர்வதேசமும் கண் இருந்தும் கபோதியாய், காதிருந்தும் செவிடராய்...... சரி விடுங்கள், எங்கள் வலி யாருக்கும் புரியாததாகவே போகட்டும்.
சர்வதேச, பிராந்திய, பூகோள அரசியலுக்குள் சிக்கி எங்கள் அறுபது வருட உரிமைப்போர் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டு விட்டது. பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் பேர்வழிகள் என்று ஜோர்ஜ் புஷ்ஷை குருவாக கொண்டவர்கள் இலங்கையில் ராஜபக்க்ஷேக்கள் என்னும் அரசபயங்கரவாதிகளையும் இருபத்தோராம் நூற்றாண்டின் இடிஅமீன்களையும் உருவாக்கியது மட்டுமன்றி; ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையிலும் இந்த அரசபயங்கரவாதிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கி ஈழத்தமிழனின் இனப்படுகொலையை ஊக்கப்படுத்துகிறார்கள். இலங்கைக்கு இந்த நற்சான்றிதழை வாங்க்கிக்கொடுத்த பெருமை இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் மனித உரிமைகளை மதிக்காத நாடுகளை தான் சாரும்.
நாங்கள் ஈழத்தமிழர்கள், எத்தனை வலிகள் என்றாலும் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் எழுவோம் எங்கள் உரிமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும் வரை.
//நாங்கள் ஈழத்தமிழர்கள், எத்தனை வலிகள் என்றாலும் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் எழுவோம் எங்கள் உரிமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும் வரை.//
தலை வணங்குகிறேன்.
பெருமையாக இருக்கிறது.
எங்களை(தமிழ்நாட்டு தமிழ்ர் பெரும்பாண்மையினரை) கண்டால் அருவெருப்பாக இருக்கிறது
Post a Comment