என்னை தெரியுமா? - விஜயகாந்த்

Friday 12 June, 2009

இந்த தொடர் பதிவு எவ்வளவு பிரபலமா ஆயிடுச்சினா.

நம்ம அரசியல் தலைவர்கள் (present/future) ஒவ்வொருவரா பதிவிட ஆரம்பிச்சிட்டாங்க.

இவங்கள்ல எந்த விததிலும் குறைந்தவர் இல்லைன்னு நம்ம வருங்கால முதல்வர் புரட்சி கலைஞர் கருப்பு MGR அண்ணன் விஜயகாந்த் தும் மொரிஸியஸிலிருந்து பதில் சொல்லி இருக்காருங்க......

இவ்வளவு நாள் ஏன் சொல்லவில்லைன்னா கலைஞரோ ஜேவோ இவரோட பதிலை கப்பி அடிச்சிட கூடாது என்பதற்காக..............



_________________________________________________________________

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா

சொந்தப்பெயர் விஜய ராஜ்......சினிமாவுக்கு விஜய காந்த்......சினிமாவுல கேப்டன், புரட்சி கலைஞ்ர். அப்புறம் மக்களா வச்ச பேரு (அவர் குடும்பம் தான்) கருப்பு எம் ஜி ஆர், 2011 முதல்வர்.......

ஜயலலிதா, கருனாநிதிக்கே இத்தனை பேரு இருக்கும் போது எனக்கு ஏன் இருக்க கூடாது.


2. கடைசியாக அழுதது எப்பொழுது?

+2 ரிசல்ட் அப்ப தான்.......... ஆமங்க பையனோட ரிசல்ட்தான்....


3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

இந்த கேள்வி ஆளும்கட்சியின் சதி..............


4. பிடித்த மதிய உணவு என்ன?

ஒரு குவட்டரும் சிக்கன் பிரியாணியும் தான்.


5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

தேசிய கட்சிகள்ன்னா பரவாயில்ல திமுக அதிமுக மதிரி மாநில கட்சிகளுடன் கண்டிப்பாக...........................


6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவிதான் அதுவும் ஒகனேகல் falls.................


7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

சட்டைபையை தான். குறைந்த பட்சம் தேர்தல் செலவாவது செய்ய வேணாமா.


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: மனைவி மற்றும் மச்சான்

பிடிக்காத விஷயம் : கேள்வி கேட்பது ஏன்னா புள்ளி விவரம் மட்டும்தான் கேகனும் கேள்வி கூடவே கூடாது.

.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

அவரோட தம்பி;


10. யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

கடவுள் மற்றும் மக்கள்...........


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை (காக்கிதான் புடிக்கும் இருந்தாலும்)


12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடி கொண்டே இருக்குது........................

(மனசுக்குள்ள: எனக்கொரு வாய்பலித்தால்...................)


13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

மஞ்சள், கருப்பு மற்றும் சிகப்பு


14. பிடித்த மணம்?

பாட்டிலை திறந்தவுடன் வருமே அது. (பன்னீர் சோட பாட்டிலுங்க......)


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கடவுள் மற்றும் மக்கள் ஏன்னா வேற யாரோடும் கூட்டணி வச்சிக்க மாட்டான் இந்த தமிலன்


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

பண்ருட்டியார் ................ அவரோட் கட்சி ஆரம்பிப்பது எப்படி என்கின்ற பதிவு அருமை.


17. பிடித்த விளையாட்டு?

போலிஸ் திருடன். (ரொம்ப நாள் பழகிடுச்சு)


18. கண்ணாடி அணிபவரா?

இல்லை....................


19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ஊர் பஞ்சாயத்து, இந்திய ரானுவம், தமிழக போலிஸ் இவங்க எல்லாம் இருக்குற படம் ரொம்ப பிடிக்கும்.


20. கடைசியாகப் பார்த்த படம்?

மரியாதை (யாருமே தியட்டருக்கு வருவதில்லைன்னு கேள்வி அதனால தான்)


21.பிடித்த பருவ காலம் எது?

கருனாநிதி ஆட்சியில் எல்லாமே இருண்ட காலம்.........


22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

இந்த கேள்வி ஆளும்/எதிர் கட்சியின் சதி................


23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அடுத்த படம் அரம்பிக்கும் போது


24. உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : நாளைய முதல்வர்

பிடிக்காத சத்தம் : உங்க தொகுதிக்கு என்ன செஞ்சிங்க


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

இப்போ மொரிசியஸ்............................


26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நீ என்ன திமுக ஆளா? இல்ல அதிமுக ஆளா?


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஓட்டு பதிவு இயந்திரம்.


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

எனக்கு பின்னால் மக்கள் கூட்டம் இருக்கு.


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

விருதாசலம்/சட்டமன்றம்............... 2011 க்குள் ஒருதடவையாவது போகனும்........பாப்போம்.


30.எப்படி இருக்கணும்னு ஆசை?

அட்லீஸ்ட் முதலமைச்சராக...........................இல்லனா பிரதமராக.


31.மனைவி/மச்சான் இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

எதுவும் இல்ல (முடியாது)


32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

மில் - சினிமா - கட்சி - முதலமைசர் - பிரதமர் - ________________



யாராவது பின்னூடம் போடாம போனீங்க அடுத்த படத்தை நாளைக்கே ஆரம்பிச்சுடுவேன்

அதனால மரியாதையா பின்னூடம் போடுங்க.


தேர்தலில் தான் ஓட்டு போடல அட்லீஸ்ட் தமிழிஸ் மற்றும் தமிழ்மணத்திலாவது ஓட்டு போடுங்க.

6 comments:

வந்தியத்தேவன் 12 June 2009 at 5:49 am  

கேப்டனை வைத்து கலக்கிட்டியள்.

கலையரசன் 12 June 2009 at 8:56 am  

பிரதீப் நீயாப்பா இது...
அருமையா நகைச்சுவை பதிவு
வருதே.. கலக்கு! கலக்கு!
ரசிச்சு சிரிச்சேன்...
அப்படியே ஓட்டு போட்டுட்டு கிளம்பறேன்! ஆங்!

Unknown 12 June 2009 at 9:39 am  

கலை மற்றும் வந்தியத்தேவனுக்கு நன்றி

Kavin 12 June 2009 at 10:55 am  

தொடரட்டும் உமது கலை சேவை
வாழ்த்துக்களுடன் வோட்டுகளும் உனக்காக

கடைக்குட்டி 12 June 2009 at 11:07 am  

ஐடியாவுக்கே சபாஷ்... :-)

தொடர்ந்து இந்த மாதிரி கலக்குங்க

Anonymous 16 June 2009 at 11:52 am  

Sema Mokka.........

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP