என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?
Sunday, 2 August 2009
சமீபத்தில் ஒரு பதிவில் படித்தேன்.
எவ்வளவு உண்மை: அப்படி என்ன செய்து விட்டார்ன்னு அவரால் பயன் பெற்றவர்களே (ஏணியில் ஏறி விட்டு ஏணியை உதைபது போல்) கேட்கும் போது என்ன பதில் சொல்ல முடியும்.
நிறையமுறை வலையில் வலம் வந்ததுதான் - மீண்டும் ஒரு முறை படிப்பதில் தப்பில்லை படிக்காதவங்க கண்டிப்பாக படிக்க வேண்டியது.
தந்தை பெரியார்: இவரால் பாதித்தவர்கள் 5 விழுகாடு என்றால் கண்டிப்பாக பயன் பெற்றது 95 விழுகாடு. இதில் பாதிப்பு என்பது அவர்கள் கலா காலமாக ஏமாற்றி/வஞ்சித்து/________ அனுபவித்த சலுகைகளை இழந்து இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
இன்னும் ஒரு கசப்பான உண்மை என்னவென்றால்: இந்த 5% மக்கள் மீதி உள்ள 95% மக்கள்லில் பெரும்பான்மையினரை இவரை மறக்கவோ ஏசவோ செய்துள்ளது............
இதை ஒருமுறை படிச்சிடுங்க:
“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும் தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்
“பெரியாரின் முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க
”இதுமுடி வெட்டும் தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.
“என்னங்க பெரியார் சொல்லிட்டா சரியா?
பிரமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?
” இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.
ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?
***
‘இனி’ மாத இதழ் -1993 அக்டோபர்
நன்றி: தோழர் வே.மதிமாறனின் கவிதைகள்
இப்ப சொல்லுங்க என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?
9 comments:
அய்யா வணக்கம்,
இது தோழர் வே.மதிமாறனின் கவிதைகள். நல்ல பணி செய்துள்ளீர்கள் அதே நேரம் கவிதை எழுதியவரின் பெயரையும் இடுதல் நன்றே ..
மேலும் படிக்க இங்கே சொடுக்குங்கள்,
http://mathikavithai.wordpress.com/
தோழமையுடன்
முகமது பாருக்
தகவலுக்கு நன்றி திரு முகமது பாருக்
//அதே நேரம் கவிதை எழுதியவரின் பெயரையும் இடுதல் நன்றே ..//
தேரியாததால் இட வில்லை - இப்போது சேர்த்து விட்டேன்.
வணங்குகிறேன் தோழரே..!
உலகெங்கும் வாழும் எங்களைப் போல ஒரு வாய்ப்புகள் பெற்ற புதிய தலைமுறையை
உருவாக்கிக் கிழித்தார், மானமற்று, ஈனப் பிறவிகளாய் வாழ்ந்து வந்த பல
லட்சம் தமிழர்களை தலைவர்களாய், அறிஞர்களை, மருத்துவர்களாய்,
எல்லாவற்றிற்கும் மேலாக மனிதர்களாய் மாற்றிக் கிழித்தார் என்பதையும் சேர்த்து சொல்லுங்கள்!
நன்றி கலை மற்றும் நாகா
பனையேறிகள் என்றால் இளக்காரம் கவிதையில் கூட ...ஏனெனில் இவர்கள் பிற்படுத்தபட்டவர்கள் (தாழ்த்தபட்டவர்கள் நாங்கள் உண்மையில்)
நன்றி கிறுக்கன்.
//பனையேறிகள் என்றால் இளக்காரம் கவிதையில் கூட ...ஏனெனில் இவர்கள் பிற்படுத்தபட்டவர்கள் (தாழ்த்தபட்டவர்கள் நாங்கள் உண்மையில்)//
இதுதான் மேலே கூறிய 5% ன் வெற்றி.
கவிதையின் கருத்தை உணராமல் வார்த்தைகளில் குற்றம் கண்டுபிடித்து கொண்டிருபவர்களுக்கு விளக்குவது வேலையற்ற வேலை
நன்றி கிறுக்கன்.
பனையேறிகளை விட மிக உயர்ந்த மக்கள் இப்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியில்.......அந்த வேதனை தான் மக்கா ...எந்த பெரியார் அல்லது நாராயனகுரு வருவார்?
பனையேறிகளை விட மிக உயர்ந்த மக்கள் இப்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியில்.......அந்த வேதனை தான் மக்கா ...எந்த பெரியார் அல்லது நாராயனகுரு வருவார்?
Post a Comment