தொடர் பதிவு: கல்விக்கு உதவுவோம் வாருங்கள்.
Sunday, 9 August 2009
முதல்ல என்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்த நன்பர் ஜோவிற்க்கு நன்றி.
விசயம் இதுதாங்க எவ்வளவோ விசயத்துக்கு தொடர்பதிவு எழுதிற நாம் ஏன் கல்விக்கு உதவி செய்து மற்றும் செய்ய சொல்லி ஒரு தொடர் பதிவு எழுதகூடாதுன்னு நன்பர் ஜோ கேட்டார். முதல்ல இது ஒரு விளம்பரமா அமஞ்சிடுமோன்னு தொன்றினாலும் இந்த பதிவால அட்லீஸ்ட் ஒருவர் தொடர்ந்தாலும் அது ஒரு/சில மாணவர்கள் கண்டிப்பாக பயன் பெருவார்கள் என்ற நம்பிக்கையோட தொடங்குகிறேன்.
கல்வி - இந்த ஒரு செல்வத்தைதாங்க நம்மிடமிருந்து யார் அபகரித்தாலும் குறையாதது. அதனால இதை மத்தவங்களுக்கு நம்மால் முடிந்தவரை கொடுப்பொம்.
முதல்ல நான் என்ன செய்தேன்/ செய்கிறேன்னு சொல்லிடுறேன்:
01. நன்பர் ஜோவின் பதிவை படித்துவிட்டு சின்ன பள்ளிகுப்பம் கிரமத்தில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ்ர்களுக்கான நூலகம் அமைக்க என்னால் ஆன சிறு உதவி செய்தேன் (30 புத்தகங்கள்)
02. நானும் என் தம்பியும் - 3 கல்லூரி மாணவர்களின் மொத்த கல்வி செலவையும் (விடுதி செலவு உட்பட) ஏற்று உதவி செய்து கொண்டிருக்கிறோம்.
03. ஆண்டுதோறும் விளையாட்டு வீரர்களுக்கு (குறிப்பாக செஸ்) உதவி புரிந்து வருகிறோம்.
04. எங்கள் தெரு மற்றும் தெரிந்த மாணவர்களின் கல்விக்கு சிறு சிறு உதவி செய்தும் வழிகாட்டியும் வருகிறோம்.
05. அது மட்டுமில்லாமல் நான் கற்ற/தெரிந்து கொண்ட அனைத்து விசயமும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள எப்பொது தயங்கியது இல்லை.
கல்விக்காக நாம் என்ன செய்ய முடியும்?
01. பணம் உள்ளவர்கள் - நூலகம் அமைக்கவோ மாணவர்களின் கல்விக்கு நிதி உதவியோ செய்யலாம்.
02. நம் அருகில் வசிக்கும் கல்வியை தொடர முடியாத மணவர்களுக்கு நமக்கு தெரிந்தவற்றை கற்று தரலாம்.
03. நம்மால் முடிந்த எந்த ஒரு சிறு உதவி/வழிகாட்டுதலோ சிறு தயக்கமோ/ தாமதமோ இல்லாமல் செய்யலாம்.
யாருக்கு உதவி செய்யலாம்?
'தனி மனிதனாக ஒருவன் உலகையே நேசிக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்து இருப்பவனை மட்டும் நேசித்தால்கூடப் போதுமானது!' - அன்னை தெரசா
அமாம் இது கல்விக்கும் பொருந்தும் - நமக்கு பக்கத்தில் இருப்பவர்/ தெரிந்தவர்களுக்கு செய்ய ஆரம்பித்தால் கூட போதும்.
நன்பர்களே மேலே கூறிய விசயம் அனைத்தும் அனைவருக்கு தெரியும் இருந்தாலும் இது ஒரு மீள்பதிவு போல் - நல்ல கருத்தை எவர் எத்தனைமுறை கூறினாலும் தப்பில்லைன்னு சொல்லிட்டேங்க.
நன்றி வணக்கம்.
பின் குறிப்பு: நன்பர்கள் சிலர் சின்னபள்ளி குப்பம் கிராம நூலகத்திற்க்கு புத்தகங்கள் வழங்க இருப்பாதல் இந்த மாத கடைசியில் அங்கு செல்லவிருக்கிறேன். விரும்புகிறவர்கள் கலந்து கொள்ளலாம்.
முக்கிய அறிவிப்பு: இந்த தொடர் பதிவை நன்பர் கலை (கலக்கல் கலையரசன்) தொடர்வார். மேலும் விருப்ப உள்ளவர்கள் தொடரலாம்.
8 comments:
தங்கள் நல்லெண்ணம் வலுப்பெற, முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்
நன்றி செந்தில்
முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் சகா...
தொடருன்னா யாரையாவது கூப்பிடனும்!!
நன்றி கலை,
//தொடருன்னா யாரையாவது கூப்பிடனும்!!//
அப்ப நீங்களே தொடருங்களேன்.
நன்றி கலை.
அருமையான நற் செய்தி ..... தொடரட்டும் உங்கள் பணி.
அட்டகாசம் பிரதீப்!
உண்மையிலேயே பயனுள்ள ஒரு தொடர் பதிவு என்றால் இது தான்!
விளம்பரத்துக்காக செய்கிறேன் என்று சொல்லி விடுவார்கள் என்ற பயம் எனக்குமிருந்தது. ஆனால் தமிழகத்தில் இருக்கும் முகாம்களுக்கு தனி மனிதனாக என்னாலோ, உங்களாலோ உதவி செய்ய முடியாது, அதனால் தான் நான் இடுகை எழுதி சேர்ந்து செய்யலாம் என்று கூறினேன். (கூட்டம் போட்டு வீர வசனம் பேசும் அரசியல்வாதிகள் எந்த உதவியும் செய்வதில்லை, ஏனென்றால் இவர்களிடம் வோட்டு இல்லை)
முதலில் ஆதரவு இல்லையென்றாலும் இப்போது ஒரு பத்து பேருக்கு மேல் இணைந்துள்ளனர், இதுவே ஒரு வகையில் வெற்றி தானே?
இந்த மாதிரி நல்ல காரியங்கள் குறித்து இடுகை எழுதினால் வோட்டுக்களும், பின்னோட்டங்களும் வந்து குவிந்து விடுகின்றன. ;-)
உங்களது பயணம் குறித்து நான் ஒரு இடுகை எழுதியிருக்கிறேன், நண்பா!
http://joeanand.blogspot.com/2009/08/blog-post_6260.html
நர்சிம், வாசுதேவன் போன்றவர்களுக்கு உங்களது முகவரி தந்திருக்கிறேன்.
நன்றி ஜோ,
//இந்த மாதிரி நல்ல காரியங்கள் குறித்து இடுகை எழுதினால் வோட்டுக்களும், பின்னோட்டங்களும் வந்து குவிந்து விடுகின்றன. ;-)//
:-)))))
//உங்களது பயணம் குறித்து நான் ஒரு இடுகை எழுதியிருக்கிறேன், நண்பா!
http://joeanand.blogspot.com/2009/08/blog-post_6260.html
நர்சிம், வாசுதேவன் போன்றவர்களுக்கு உங்களது முகவரி தந்திருக்கிறேன்.//
நன்றி ஜோ
Post a Comment