இது எங்க ஊரு - வேலூர் கோட்டை (Vellore Fort) - 2
Sunday, 9 August 2009
வேலூர்க்கு நிறைய பெருமையான விஷயங்கள் இருந்தாலும் அதில் ரொம்ப பெருமையான விஷயமா நான் கருதுவது இந்த கோட்டைய தான்.
சிறு குறிப்பு:
1560ல் - சின்ன பொம்ப நாயக்கால் கட்டபட்டது (விஜயநகர பேரரசு)
1650ல் - பிஜபூர் சுல்தான் கைபற்றினார்.
1676ல் - மராட்டியர்கள் கைபற்றினார்கள்.
1708ல் - தௌலத்கான் (டெல்லி) கைபற்றினார்.
1760ல் - பிரிட்டிஷ்கரர்களல் கைபற்றபட்டது.
1806ல் - முதல் சிப்பாய் கலக்கம் நிகழ்ந்தது.
ரொம்ப அறுக்குறேனோ?
கிழே இருக்குற படங்களை பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லிடுங்க.

கருப்பு மேல எப்பவும் எனக்கு ஒரு காதல் உண்டு அதனாலதான்
முதல் படம் கருப்பு வெள்ளை. ஆங்கிலேயர்கள் காலத்துல எடுத்த படம்.

இது இப்போ எடுத்த படம்.
கோட்டையோட ஒரு பகுதி படம்

இதுதான் வரலாற்று சிறப்புமிக்க கோட்டையின்
நுழைவாயில் (சிறு பாலம்)

இன்றும் இந்தியாவுல இருக்குற கோட்டைகளில் அகழியில்
எப்போதும் தண்ணி இருக்குற கோட்டை இதுதாங்க.
அகழில முதலைகளும் இருக்குறதா சொல்றாங்க.
சமிபத்துல சுற்றுல துறை இங்கு படகு சவாரி செய்ய வசதி செஞ்சிருக்காங்க.

இந்த கோட்டை இரண்டு கட்ட பதுகாப்பு அரண் கொண்டது
இந்த சுவர் இரண்டாவது வரிசை.

போர் வீரர்கள் தங்குவதற்கான அறைகள் போகும் வழி

நேர்த்தியான கட்டட கலையின் சிறந்த சான்று.
அருமையான கண்கானிப்பு கோபுரங்கள்.

கண்கானிப்பு கோபுரத்தின் உட்புற தோற்றம்.
அதுக்கு கீழே ஓய்வு அறை.

இரண்டாம் நிலை அரண்னில் இருந்து கோட்டை அகழி தோற்றம்.

அகழியை எத்தனை கோனத்தில் இருந்து பார்த்தாலும் அழகுதான்.

1806ல ஆங்கிலேயரால் போட்ட வரைபடம் இதுதாங்க.
இந்த ஒரு விசயத்துலதான் நாம நிரைய இழந்திருக்கோம்.

கோட்டைக்குள்ள இருக்குற கோயில் (ஜலகண்டீஸ்வரர்)
விஜயநகர பேரரசின் சிறந்த உதாரணம்.

கோயிலோட மொத்த தோற்றம்.

கோயிலோட முன்புற தோற்றம்.

அதேதூண் இல்லீங்க இது பக்கத்து தூண்.
இன்னும் இதுபோல நிறைய இருக்கு.

இதுதான் ரெண்டு விலங்கு ஒரே சிற்பத்தில்.
.......................................
........................
...........
.
11 comments:
உங்க ஊரை ஒரு முறையேனும் கான வேண்டும் போல ஆவல் எழுகின்றது பிரதீப்!
வரலாறு என்றும் வாழும்...
பிரதீப்,
நான் ஓர் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ். இந்தியாவிலும் அகதியாய் ஒரு சில வருடங்கள் அவலமான அகதி வாழ்வு வாழ்ந்திருக்கிறேன். அப்போதெல்லாம் இப்படியான இடங்களை பார்க்கவேண்டுமென்ற அவா இருந்ததுண்டு. அனால், எப்போதடா என் சொந்த மண்ணுக்கு திரும்பிப்போவேன் என்ற தவிப்பில் இதுபோன்ற ஆசைகள் ஏனோ இரண்டாம்பட்சமாகப் போயின. என் சுயபுராணம் ஒருபுறம் இருக்க......
நான் புலம் பெயர்ந்து வாழும் நாட்டில் யாராவது கட்டிடகலை பற்றிப்பேசினால், அவர்களுக்கு நான் சொல்வது விஞ்ஞானம் முன்னேறாத காலங்களில் தமிழ்நாட்டில் கட்டிய கோயில்களைப் போய்ப்பாருங்கள் என்பதுதான். நிற்க, உங்க ஊர் தாங்கி நிற்கும் பெருமைகள் ரசிக்க வைக்கின்றன, பிரதீப்.
உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் ஈழத்திற்கும் ஒருமுறை சென்று பாருங்கள் உறவுகளே. எங்கள் மண்ணின் பாரம்பரியம் சீரழிக்கப்பட்டு, எங்கள் ஊர்கள் எப்படி சுடுகாடாகிப்போயிருக்கிறது என்பதை.
இதற்கு மேலும் உங்களை நான் அறுக்க விரும்பவில்லை. உங்கள் பொறுமைக்கு நன்றி.
கோட்டையும் .. கோவிலும்.... மிக அழகாக உள்ளது...!!
// ரெண்டுத்துல எதுங்க அழகு? //
அழகை அழகே ரசிப்பது அழகு .....!!!
இரண்டு விலங்கு சிற்பம் மிகவும் அருமை.....!!!
சூப்பர் , நானும் வேலுர்தான்(இப்போ சென்னை) ஆனாலும் நம்ம ஊரை பத்தி வெளி வரும் விஷயங்க ரொம்ப கம்மி, அதை உங்க பதிவு தீர்த்து வெச்சு இருக்கு, தொடர்ந்து நம்ம ஊரை பத்தி எழுதுங்க... வாழ்த்துக்கள்
நல்ல பயனுள்ள இடுகை, பிரதீப்.
புகைப்படங்கள் அருமை, வாழ்த்துக்கள்.
எழுத்துப் பிழைகளை சரி செய்யுங்கள்.
இன்றைய தலைமுறைக் குழந்தைகள்/இளைஞர்களுக்கு வரலாற்றில் அதிகம் ஆர்வமில்லை.
என் தந்தை ஆங்கிலம்/வரலாறு, புவியியல் ஆசிரியர், எனவே ஊர்களுக்கு செல்லும் போது, வழியில் உள்ள ஊர்களின் சிறப்பு என்ன, அங்கே வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்கள் / கோவில்கள் என்ன இருக்கின்றன என்று சொல்லிக் கொண்டு வருவார்.
brother meega arumai enum vellore rai padre solla neraiya iruku.......(e.g) rani kottai...
மிக அருமை நண்பா..........நானும் வேலூர் தான்...........
நன்றி கலை - எப்போ வரீங்க ஊருக்கு
நன்றி லவ்டேல் மேடி
நன்றி கோகுல் - கண்டிப்பாக செய்கிறேன்.
நன்றி கனவுலகம் - வேலூர்ல எங்கே?
நன்றி ஜோ
//எழுத்துப் பிழைகளை சரி செய்யுங்கள்.//
கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.
//இன்றைய தலைமுறைக் குழந்தைகள்/இளைஞர்களுக்கு வரலாற்றில் அதிகம் ஆர்வமில்லை.//
ஆமாம் ஜோ,
வீடுதான் முதல் காரணமாக எனக்கு படுது. எப்படின்னா பெற்றோர்கள் குழந்தைக்கு சொல்லும் கதைகள் மற்றும் உதாரணம் பெரும்பாலும் இதிகாசம் அல்லது கடவுள் சார்ந்து இருப்பதால் (அனைத்து மதத்திலும்).
வரலாறு என்பதன் அர்த்தம் மாறிவிடுகிறது................
நன்றி ரதி
//இதுபோன்ற ஆசைகள் ஏனோ இரண்டாம்பட்சமாகப் போயின.//
சொர்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா........
//நான் புலம் பெயர்ந்து வாழும் நாட்டில் யாராவது கட்டிடகலை பற்றிப்பேசினால், அவர்களுக்கு நான் சொல்வது விஞ்ஞானம் முன்னேறாத காலங்களில் தமிழ்நாட்டில் கட்டிய கோயில்களைப் போய்ப்பாருங்கள் என்பதுதான்//
நன்றி ரதி.
kosapet neenga?
Post a Comment