மீள்பின்னூடம் - (பழைய பதிவின் பின்னூடமும் விளக்கமும்) – 2
Saturday, 26 September 2009
உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க.
மீள்பின்னூடம் – 2
முதலில் நன்றி திரு சொல்லரசன்,
//தனிமனித ஒழுக்கமே கலாச்சார சீரழிவுக்கு காரணம்//
தனிமனித ஒழுக்கம் என்றால்?
ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை யாரையாவது/எதையாவது சார்ந்தே இருக்கிறான். அவனது குணம்/தனிமனித ஒழுக்கம் நிர்னைப்பதென்பது அவனை/அவளை சூழ்ந்துள்ளவர்கள் (தாய், தந்தை, உடன்பிற்ந்தோர், நன்பர் மற்றும் பலர்) மற்றும் சமுகம். இவற்றில் அவனை/அவளை எது அதிகமாக பாதிக்கிறதோ அதுதான் அவன்/அவளுடைய தனிமனித ஒழுக்கம். அப்படியானால் சமுகத்தின் கலாச்சாரம் தானே தனிமனிதனை பாதிக்கிறது. சற்று விளக்குங்களேன் புரியவில்லை.
//கலாச்சாரம் என்பது என்னை பொருத்தவரை உடலை மறைக்கும் ஆடை போன்றது,அது நாட்டிற்கு நாடு,இடத்திற்கு இடம் மாறுபடும்.ஆடைஅணியாத ஊரில் ஆடையின்றி போகலாம்,ஆனால் ஆடை உடுத்தும் ஊரில் ஆடையின்றி சென்றால் அதுதான் கலாச்சார சீரழிவு,இதற்கு தனிமனித ஒழுக்கமே காரணம்.//
ஓரளவு ஏற்று கொள்ளலாம். அனால் ஆடைஅணியாத ஊரில் ஆடை அனியசொல்வது தானே அடுத்தநிலை அல்லது முன்னேற்றம். அப்படியென்றால் கலாச்சாரத்தில் முன்னேற்றம்/முற்போக்கு சிந்தனை கூடாதா?
//தமிழ் கலாச்சாரம் என்பது என்ன? அத சொன்னீங்கன்னா எது எவ்வளவு பாதிக்குதுன்னு சொல்ல முடியும்.//
எங்கோ படித்தது: கற்றறிந்த நடத்தைகளின் தொகுப்பே பண்பாடு என்பதால், புதியவற்றைக் கற்றுக்கொள்ளும்போது மாற்றம் நிகழ்கிறது.
இதில் தமிழ் கலாச்சாரம் என்பது தமிழ் சமுகத்தின் கடந்தகால வரலாறு/வாழ்வியல்முறை எனவும் சொல்லலாம்.
இதில் கலாசாரம்/பண்பாடு கண்டிப்பாக மாறுதலுக்கு உட்பட்டதே ஏனென்றால் போக்குவரத்து, தொலை தொடர்பு வசதிகள், இனையம் என்பன மிகவும் குறைவாக/இல்லாது இருந்த காலத்தில் மாற்றங்கள் மிக மெதுவாகவே ஏற்பட்டன. அதனால் அதன் பாதிப்பு/தாக்கம் மிக குறைவு அல்லது இல்லை(தேவையற்றவை)
ஆனால் இப்பொழுது எல்லா துறைகளிலும் அதீதமான வளர்ச்சி காணும் காலகட்டம். அறிவியல் வளர்ச்சியினால், போக்குவரத்து, தொலை தொடர்பு வசதிகள் மற்றும் இனையம் பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளன. இதனால், பல கலாச்சார/பண்பாடுகளைக் கொண்ட மக்களிடையே தொடர்புகள்/தாக்கம் அதிகரித்துள்ளன. ஒரு தரப்பாருடைய பண்பாட்டிலிருந்து பல விடயங்களை மறு தரப்பார் கற்றுக்கொள்கிறார்கள். இதனால் பண்பாட்டு மாற்றம் தவிக்கமுடியாததாகிறது.
நாம் இவற்றில் எதில் அதிகம் பதிக்க/வளர்க்க படுகிறோம் என்பதை விவாதிப்போம்.
//கலாச்சாரம் என்பதே இறந்தகாலத்தில் மட்டுமே பயன்படும் வார்த்தை..//
கலாச்சாரம் அல்லது பண்பாடு இரண்டும் ஒரே பொருளை தந்தாலும் கலாச்சாரம் என்ற வார்த்தையை நாம் இறந்த காலத்தை குறிக்கவும், பண்பாடு என்ற வார்த்தையை நிகழ்காலத்தை குறிக்கவும் பயன் படுத்துகிறோம் என்பது என் கருத்து.
//பண்டைய கலாச்சாரத்தை பற்றி பேசலாம்..
நாளைய கலச்சாரத்தை பேசமுடியுமா?//
நாளைய கலச்சாரத்தை பற்றி யூகிக்கலாம் (தொலைநோக்கு பார்வையில்) நாளை பற்றி யோசிகாதிருந்தால் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்காது.
//இன்றைய கலாச்சாரம்/பண்பாடு பற்றி நாளைய பார்வைகள் சொல்லும்..//
சத்தியமான வார்த்தைகள்........ ஆனால் இழிவாக சொல்ல இடம் கொடுக்ககூடாது என்பது என் கருத்து/எண்ணம்.
//இன்றைய கலாச்சாரம், பண்பாடு என்று அதையெல்லாம் நிகழ்காலப் பார்வையில் பார்ப்பதென்பது நடவாத காரியம். அல்லது நாளை மாறப்போகும் ஒற்றை பார்வை..//
நிகழ்காலத்தையே பார்க்க முடியாதவர்களால் கடந்த காலத்தை பற்றி யோசித்து என்ன பயன்.
கடந்தகாலத்தை பார்பதன் நோக்கம் முன் நிகழ்ந்த/நிகழ்த்தபட்ட தவற்றை திருத்தி புது வடிவு கண்பதற்க்கு என்பது என் கருத்து.
மீண்டும் நன்றி திரு. கனேஷ் குமார் (தீப்பெட்டி)
0 comments:
Post a Comment