கடவுளின் தேவை.

Friday 9 October, 2009

இந்த கேள்வி என்ன ரொம்ப நாளா யோச்சிக்க வைத்த கேள்வி.


ரெண்டு மாசத்துக்கு முன்பு கூட இந்த ஒரு பதிவை போட்டு: கடவுளால் மனிதனுக்கு என்ன பயன் அல்லது நன்மை? கேட்டிருந்தேங்க அனா கடவுள்ன்னு பார்த்தவுடன் பெரும்பாண்மையானவங்க கடவுள் இருகாற இல்லையாங்ற விவாதத்துக்கு வந்துட்டாங்க.


கடவுள் இருகிறார் இல்லை என்ற விவாதத்தில் இதுவரை நடுநிலையான முடிவுக்கு வரவும் இல்லை வரவும் முடியாது. அதுமட்டும் இல்லாமல் கடவுள் இருக்கிறார் இல்லை என்று பேசுவதால் எந்த பயனும் இல்லை. அதனால தான் கடவுள் இருகிறார் இல்லைங்ற பிரச்சனையை விட்டுவிட்டு கடவுளின் தேவையும் அவரால் சமுகத்திற்கு ஏற்படும் நன்மை தீமை பற்றி பார்ப்போம். 







எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்ல உண்மையில் கடவுள் இருக்காற எப்படி தெரிந்து கொள்வது இல்ல இல்லையாங்கறதை பற்றியதல்ல இந்த பதிவு. 


கடவுளின் தேவையை பற்றியது. எனக்கு தெரிந்தவரை ஒரு சிலவற்றை பட்டியலிடுகிறேன் அதில் பிழை இருந்தால் பின்னூடமிடவும் திருத்தி கொள்கிறேன்.


கடவுளின் தேவை அவசியமற்றது என்பதற்கான சில காரணங்கள்.

  1. இன்றுள்ள சூழலில் பிறப்பு மற்றும் இறப்பு இவற்றில் கடவுளின் பங்களிப்பு எதுவும் இல்லை.
  2. காத்தல் என்பதும் கடவுளால் நிகழவில்லை - அவரவர் உழைத்தால் தான் சாப்பாடு (நான் அறிந்தவரை எந்த கடவுளும் யாருக்கும் சும்மா சோறு போட்டதில்லை)
  3. நல்ல முறையில் வாழவும் நல்லவனாக வாழவும் எந்த கடவுளின் தேவையும் இல்லை - அதாவது இன்னொருவனுக்கு உதவி செய்ய எந்த கடவுளின் தேவையும் இல்லை மனம் இருந்தால் போதும்.
  4. வாழ்வியல் முறை பயில எந்த கடவுளோ _________ தேவை இல்லை சிறிய விசயத்தை உணர்ந்தால் போதும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு அதுவும் கண்டிப்பாக அனுபவம் கற்று தரும்.
  5. ஒழுக்கத்துடன் வளர்க்கவும் கடவுள் தேவையில்லை. உன்மையான அன்புடன் (செல்லமாக இல்லை) வளர்த்தால் போதும்.

கடவுளின் தேவை அவசியமானது என்பதற்கான சில காரணங்கள்.
  1. ஒரு பொழுது போக்கிற்காக கடவுளையும் கோயிலையும் பயன் படுத்தினால் போதுமானது அதாவது ஒரு பூங்காவிற்க்கோ அல்லது திரை படத்திற்க்கோ செல்வது போல் கோவிலுக்கு சென்றால் போதுமானது.
  2. விழாகளை கொண்டாட மற்றவருடன் பழக மட்டும்.
  3. ....................
நிறைய விசயங்கள் இருக்கு கடவுளின் தேவையை பற்றி விவாதிக்க.

ஒரு அரோகியமான விவாதம்/கலந்துரையாடல் கண்டிப்பாக அடுத்த நிலைக்கு உயர்த்தும்.

- நன்றி

உங்கள் கருத்துகளை மறக்காமல் பின்னூடமிடுங்கள்.

11 comments:

கோவி.கண்ணன் 9 October 2009 at 4:39 am  

இடுகைத்தலைப்பு:
கடவுளின் தேவை.

உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!

- என்னால முடிஞ்சது

கோவி.கண்ணன் 9 October 2009 at 4:39 am  

இடுகைத்தலைப்பு:
கடவுளின் தேவை.

உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!

- என்னால முடிஞ்சது

மு.இரா 9 October 2009 at 4:56 am  

அய்யா, வணக்கம்
கோவிலுக்கு போறவங்க யெல்லாம் சொல்லும் ஒரு டொக்கு விஷயம் இது... கோயிலுக்கு போன என் மனசுக்கு நிம்மதி கிடைக்குது அதான் போறேனு... தினமும் கழிவறைக்கு போகும் போது கூடதான் நிம்மதி கிடைக்குது... அதுக்காக கழிவறையிலே இருக்க முடியுமா... இல்ல அதான் நிம்மதினு சொல்லறது முட்டாள்தனம்....

கோவில் ஒருவனை முட்டாள் ஆக்கி விட்டு அவனுக்கு நிம்மதியை கொடுக்கும்... ஆனால் நீங்க சொன்ன மத்த இடங்கள் சிந்தனையை தூண்டி விடும்... கடவுளை மற... மனிதனை நினை...

ராஜவம்சம் 9 October 2009 at 3:45 pm  

(1) ஏன் இல்லை ஒருவனுக்கு குழந்தை பிறக்காது என்றால் நீங்கள் கோடி ரூபாய் செலவு செய்தாலும் பிறக்காது அதேபோல் இறப்பு வந்துவிட்டால் நீங்கள் கோடி ரூபாய் செலவு செய்தாலும் நிருத்தமுடியாது இது நம்மைமீரி ஒரு சக்தி இருப்பதால் தான்

(2)கல்லுக்குள் உள்ள தேறைக்கு உணவளிப்பவன் யார் கருவரை குழந்தைகு உணவளிப்பவன் யார்

(3,4,5) இதை ஆமோதிக்கிறேன்


//நிறைய விசயங்கள் இருக்கு கடவுளின் தேவையை பற்றி விவாதிக்க.//

உண்மை தான் ஆனால் அதில் மூடநம்பிக்கை கலக்காது இருந்தால் சரியே

ராஜவம்சம் 9 October 2009 at 4:01 pm  

(1) ஏன் இல்லை ஒருவனுக்கு குழந்தை பிறக்காது என்றால் நீங்கள் கோடி ரூபாய் செலவு செய்தாலும் பிறக்காது அதேபோல் இறப்பு வந்துவிட்டால் நீங்கள் கோடி ரூபாய் செலவு செய்தாலும் நிருத்தமுடியாது இது நம்மைமீரி ஒரு சக்தி இருப்பதால் தான்

(2)கல்லுக்குள் உள்ள தேறைக்கு உணவளிப்பவன் யார் கருவரை குழந்தைகு உணவளிப்பவன் யார்

(3,4,5) இதை ஆமோதிக்கிறேன்


//நிறைய விசயங்கள் இருக்கு கடவுளின் தேவையை பற்றி விவாதிக்க.//

உண்மை தான் ஆனால் அதில் மூடநம்பிக்கை கலக்காது இருந்தால் சரியே

நாகா 9 October 2009 at 6:42 pm  

//(1) ஏன் இல்லை ஒருவனுக்கு குழந்தை பிறக்காது என்றால் நீங்கள் கோடி ரூபாய் செலவு செய்தாலும் பிறக்காது அதேபோல் இறப்பு வந்துவிட்டால் நீங்கள் கோடி ரூபாய் செலவு செய்தாலும் நிருத்தமுடியாது இது நம்மைமீரி ஒரு சக்தி இருப்பதால் தான்//

அப்படி என்றால் அந்த நம்மை மீறிய சக்தியால் ஒரு குழந்தையைக் கொடுக்கச் சொல்லுங்க்ளேன். அதே போல் இறப்பையும் (எல்லோரையும் வேண்டாம், நல்லவர்களை மட்டுமாவது) தடுக்கச்சொல்லுங்களேன்.. அதுவும் மூப்பெய்தியல்ல, ஒரு தீயவனால் கொல்லப்படும்போது தடுக்கச்சொல்லுங்களேன்..

ராஜவம்சம் 9 October 2009 at 8:05 pm  

//அப்படி என்றால் அந்த நம்மை மீறிய சக்தியால் ஒரு குழந்தையைக் கொடுக்கச் சொல்லுங்க்ளேன். அதே போல் இறப்பையும் (எல்லோரையும் வேண்டாம், நல்லவர்களை மட்டுமாவது) தடுக்கச்சொல்லுங்களேன்.. அதுவும் மூப்பெய்தியல்ல, ஒரு தீயவனால் கொல்லப்படும்போது தடுக்கச்சொல்லுங்களேன்//

அதைதான் முன்பே சொன்னேனே நம்மை மீரியசெயல் என்று

(ஏண்னா எனக்குமட்டும் அந்தசக்தியின்
தொலைப்பேசி நம்பரா இருக்கு)

நிகழ்காலத்தில்... 9 October 2009 at 10:35 pm  

கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் :))

முதல்ல நீங்க நினைக்கிற கடவுள் - அப்படின்னா எது அல்லது யார் அப்படின்னு சொல்லிட்டு விவாதம் ஆரம்பிக்கப்பட்டால் பொருத்தமாக இருந்திருக்கும்.,

தெளிவைப் பற்றி ஆராய்ந்தால் இன்னும் தெளிவு

குழப்பத்தைப்பற்றி ஆராய்ந்தால் மேலும் குழப்பம்

வாழ்த்துக்கள்

கலாட்டாப்பையன் 9 October 2009 at 11:41 pm  

இறவன் இருக்கின்றாரா இல்லையா ? நாத்திகர் களுடன் விவாதம் வருகின்ற ஞாயிறு மற்றும் திங்களில், நேரடி ஒளிபரப்பு www.onlinepj.com இல்

Bibiliobibuli 17 October 2009 at 7:11 pm  

//கடவுளின் தேவை அவசியமற்றது என்பதற்கான சில காரணங்கள்.//

நீங்கள் சொல்லும் இந்த ஐந்து காரணங்களுடன் நானும் ஒத்துப்போகிறேன்.

கடவுளின் தேவை அவசியம் என்று சொல்வதற்கு இருக்கும் சில காரணங்களில் ஒன்று என்று நான் நினைப்பது; ஒவ்வொரு சமூக பண்பாட்டு விழுமியங்களும் ஏனோ மதத்தோடும் கடவுளோடும் தொடர்புபடுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. மதம்/கடவுள் என்பதும் மனிதர்களின் பண்பாட்டு விழுமியங்களில் ஒன்றாகவே கருதப்படுவதால் ஒவ்வொரு சமூகமும் தங்கள் தனித்துவங்களை பேண கடவுளையும் ஓர் அங்கமாக சேர்த்துக்கொள்கிறார்கள். காதுகுத்தல் முதல் கல்யாணம் வரை கடவுள் தானே முன்வரிசையில் கால்மேல் கால்போட்டு ஜம்மென்று வீற்றிருக்கிறார். இதனால் தானோ என்னமோ யாராவது இவர்களிடம் கடவுள் என்ற கருத்தியல் மனிதவாழ்க்கைக்கு தேவையற்றது என்று சொன்னால் தங்கள் பண்பாட்டு விழுமியங்களை யாரோ குழிதோண்டி புதைக்க முயற்சிப்பதாக குழம்பிப்போகிறார்கள். தங்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றை இழந்ததாக நினைக்கிறார்கள். இப்படிப்படவர்களின் சமநிலையைப் பேணவாவது கடவுளை அனுமதிக்க வேண்டியுள்ளது. இந்த சூழ்நிலையில் கடவுளின் தேவை அவசியமாகிறது. ஆனால், துரதிஸ்டவசமாக கடவுளின் தேவை அனுமதிக்கப்படுவதால் மூடநம்பிக்கைகளும் கூடவே வளர்த்தெடுக்கப்படுகின்றன. அதாவது, காத்து குத்துவதை விடுங்க, கல்யாணம் என்பது இருவருக்கிடையில் ஏற்படும் ஓர் பரஸ்பர நம்பிக்கை. திருமணம் செய்பவர்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இல்லாமலா கடவுளை சாட்சி வைக்கிறார்கள்? ஆக, எந்தவொரு விடயத்திற்கும் மனிதர்களை விட கடவுளையே சாட்சியாக வைக்கவே பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். இப்படி நினைப்பவர்கள் நீங்கள் சொன்ன கடவுளின் தேவை அவசியமற்றது என்ற காரணங்களை படித்தால் தேவலாம்.

KARIKALVALAVAN 4 May 2011 at 12:39 pm  

nice posting but confusing

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP