Showing posts with label துபாய். Show all posts
Showing posts with label துபாய். Show all posts

கட்டிட கலையின் அடுத்த அத்யாயம் - கடலுக்கு அடியில் ஓட்டல் (Underwater Hotel) - 4

Sunday, 11 October 2009

கடலுக்கு அடியில் ஓட்டல். கேட்டதும் வியப்பா இருக்கா ஆனால் உண்மை. துபாய்லா 98% கட்டி முடிச்சுட்டாங்க இன்னும் சில வாரங்களில் திரப்பதாக இருக்காங்க.


கடலுக்கு அடியில என்றால் அதாவது கடற்கரையிலிருந்து 500 மீ கடலுக்குள், நீர் மேல் பரப்பில் இருந்து 66 அடி ஆழத்தில்.


இந்த ஓட்டலில் மொத்தம் 220 அறைகள் உள்ளதாம் அதுமட்டும் இல்லாமல் இதன் திட்ட மதிப்பீடு சுமார் 2000 கோடி ருபாய்.


மேலதிக விவரங்களுக்கு சுட்டி-1, சுட்டி-2 மற்றும் சுட்டி-3 பார்க்கவும்.




கீழே இருக்குற இந்த வீடியோவை பாத்துடுங்க - ரொம்ப தெளிவா எப்படி கட்டுனாங்கன்னு சொல்லியிருக்காங்க.












இது அந்த ஓட்டலோட நுழைவாயில் கடற்கரையில் இருக்கு







நீலநிர வட்டமாக இருப்பதுதாங்க ஓட்டல் அதன் வால் போன்ற பகுதி தரையில் இருந்து ஓட்டலுக்கு செல்லும் சுரங்க பாதை.







இது தாங்க அந்த ஓட்டல்







அந்த ஓட்டலோட இன்னும் ஒரு தோற்றம்







எப்படி இருந்ததுன்னு பின்னூடம் இடுங்க.




மேலும் வாசிக்க >>

Read more...

நான் ரசித்த துபாய் (Dubai Metro) - 6

Wednesday, 7 October 2009

துபாய் மெட்ரோ பற்றி சொல்வதற்கு நிறைய விசயம் இருக்கு அதுல ஒரு சில மட்டும்.


01. திட்ட மதிப்பீடு 20,150 கோடி ரூபாய் ( 15.5 பில்லியன் திராம்)
02. 100% தானியங்கி அதாவது ஓட்டுனர் இல்லாத ரயில்.
03. மெட்ரோ கட்டுமாணம் ஆரம்பித்த தேதி: 05.05.05 பொதுமக்களுக்கு திறந்த தேதி : 09.09.09.
04. மொத்தம் இருக்குற 49 ரயில் நிலய்ங்களில் (red line & green line) 10 தான் திறந்திருக்காங்க.
05. இருக்குற ரயில் நிலயங்களில் இருந்து 720 பேருந்து இனைக்க பட்டிருக்கு.





இதுதாங்க ஜப்பானிலிருந்து கொண்டுவரபட்ட சுரங்க வழி அமைக்கும் இய்ந்திரம். மொத்தம் 12.6 கி.மி. மற்றும் 11 ரயில் நிலையங்கள் புமிக்கு அடியில் அமைத்துள்ளார்கள் 







கழுகு பார்வை (கலையரசன் இல்லைங்க)







துபாய் மரினா பக்கம். மொத்தம் 5 கம்பார்ட்மெண்ட் தான்.







financial center station இதுதாங்க.







எவ்வளவு அழகா இருக்கு பாருங்க இதை ஓட்டுரத்துக்கு ஓட்டுனர் தேவை இல்லீங்களாம்.







ஒரு ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் இதுதாங்க.







பூமிக்கு அடியில் இருக்குற காலித் பின் வாளித் ஸ்டேஷன் இதுதாங்க. அதாவது 75அடி ஆழம் உள்ள நிலையம் மேல உள்ள போக்குவரத்துக்கு பாதிப்பு வராம செஞ்சிருக்காங்க.







அழகிய ரயில் நிலையத்தின் முகப்பு தோற்றம்




மேலும் வாசிக்க >>

Read more...

நான் ரசித்த துபாய் (Dubai Beach) - 5

Thursday, 18 June 2009


துபாய் பீச் - எனக்கு துபாய்ல பிடித்த இடங்களில் இதுவும் ஒன்று.


முதல் காரணம் எந்த குப்பையும் இல்லாம சுத்தமாக இருபதனால்
வெய்யில் அதிகமாக இருக்குறது கூட பெரியதா பாதிக்கலிங்க.


கண்ணுக்கும் மனசுக்கும் குளிர்ச்சியா (சத்தியமா கடலதான் சொல்றேங்க)
இருபதும் இன்னொரு காரணம்.


இப்படி நிறைய பட்டியலிட்டு உங்கள மொக்கை போட விரும்பவில்லை.
அதனால நேராக மேட்டருக்கே போயிடுவோம்.




இதுதான் ஜுமேரியா பீச்சுங்க. என்ன நல்லா இருக்கா.
ஆனா உள்ள போக காசு கேக்குறானுங்க. பரவாயில்ல
குடுத்த காசு வீணா போகல.




இதுவும் ஜுமேரியா பீச் தாங்க. இங்க free.




இது துபாய் மரினா பக்கத்துல இருக்குற பீச்ங்க.




இது சத்துவா பக்கத்துல இருக்கும் பீச்ங்க




இது பணகாரங்க பீச். ஆமாங்க வீட்டுக்கு ஒரு பீச்.
இது பாம் ஜுமேரியாவுல இருக்குற பீச்சுங்க.




என்னட வரிசையா பீச்சை காட்டிட்டு ஓட்டலை காட்டுரானு பாக்குறீங்களா
இவங்க தான் உலகின் முதல் ஏ.சி பீச் (air-conditioned beach) கட்டிக்கிட்டு இருக்காங்க
என்ன ஆச்சரியமா இருக்கா கீழே இருக்குற வீடியோவும் பாத்துடுங்க.

அதவது மதியம் 12 மணிக்கு கூட பீச் மணல்ல படுக்க முடியுமாம்
அதுகாக பெரிய பெரிய கருவிகளை பூமியில புதச்சி மணலோட
சூட்டை குறைக்க போறாங்களாம்

மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டிய பார்க்கவும்




இது போன்ற விளையாட்டுகளும் வருடத்திற்க்கு ஒருமுறை நடக்குதுங்க.


இது தான் ஏசி பீச் வீடியோ




எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

என்னோட முந்தைய பதிவுகளுக்கு கீழே உள்ள சுட்டியை பார்க்கவும்


மேலும் வாசிக்க >>

Read more...

UAE வாசகர்களுக்கு மட்டும் - The Surplus Collector

Tuesday, 16 June 2009



உங்களுக்கு தேவைபடாதது இன்னொருவருக்கு பொக்கிஷியமாகவும் இருக்கலாம்

நீங்கள் இருப்பிடம் அல்லது அலுவலகம் மாற்றும் போதும் உங்களூக்கு தேவையில்லாத பொருட்களை ( furniture, kitchenware, toys, cods, stationary, appliances, tv’s, fridges, speakers, desks, tables, chairs, big items, all kind of clothing etc) எடுத்து செல்ல இந்த கைபேசியை அழைக்கவும். 050 197 4045

THE SURPLUS COLLECTOR என்ற அமைப்பு இவற்றை குறைந்த ஊழிய வேலை ஆட்களுக்கு (LOW INCOME LABOURS) வழங்குகிறது.

ஊங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரிய படுத்துங்கள்.

இந்த வலைதலத்தையும் ஒரு முறை பார்த்துடுங்க - THE SURPLUS COLLECTOR

நன்றி வணக்கம்.

மேலும் வாசிக்க >>

Read more...

நான் ரசித்த துபாய் (Dubai Bus) - 4

Saturday, 13 June 2009


துபாயில் வேலை பாக்குறேன்னு சொன்னாலே நம் அனைவருக்கும்
நியாபகம் வருவது வெற்றி கொடி கட்டு படத்தின் பார்த்திபன் வடிவேலு காமடி தான்

அதுல பார்த்திபனை வடிவேலு துபாயில் எங்க இருந்ததாக கேப்பார்.
அதுக்கு பார்த்திபன் துபாய் பஸ்டாண்டு பக்கத்துலன்னு சொல்வார்.

அந்த படம் எடுத்தப்ப துபாயில் பஸ்டாண்டு இருந்ததோ இல்லையோ
இப்போ விதவிதமான நூற்றுகணக்கான பஸ்ஸும் பஸ்டாப்பும்,
பயண செலவை கணிசமாவே குறைச்சிருக்கு.


துபாயில் இந்த பேருந்து பயணமும் என்னை வெகுவாகவே கவர்ந்ததுங்க.




இதுதாங்க பர்துபாய் பேருந்து நிலயம். இது பக்கத்துல தான் என்னோட
இருப்பிடமும். யார் என்னை துபாயில் எங்க இருக்கேன்னு கேட்டாலும்
துபாய் பஸ்டாண்டு பக்கத்துலன்னு சொல்ல வேண்டியத இருக்கு.




இதுதாங்க DUBAI BUS. ஆமாங்க எல்லா பஸ்ஸும் ஏசி பஸ்தாங்க.
இல்லன்னா இந்த வெய்யில்க்கு எந்த வண்டியிலும் ஏற முடியாதுங்க.




அமாங்க DOUBLE DECKER BUSதாங்க. பொரும்பாலும் பக்கத்து
அமிரகமான சார்ஜாவுக்கும் துபாயில் சில ரூட்டுக்கும் போகுதுங்க.




இதுதாங்க BUS STOP இதுவும் ஏசிதாங்க. உலகத்துலையே
முதல் ஏசி பஸ்டாப் இங்க தான் அமைச்சத சொல்றாங்க.




இந்த ரிசிஷனுக்கு அப்புறம் அவ்வளவா கூட்டம் இல்லாத
மாதிரிதாங்க தெரியுது (விழாயன் மற்றும் வெள்ளி நீங்களாக)




இது அபுதாபி மாதிரி பக்கத்து அமிரகத்துக்கு போற பஸ்ஸுங்க.




லண்டன்ல இருக்குற அதே BIG BUS தாங்க இங்கேயும்
சுற்றுலா பயனிகளை கவர்வதற்காக.




இது AIRPORT BUSங்க சில நேரங்களில் இந்த வண்டி மூலம் தான்
விமானத்தில் ஏற முடியுங்க இதுல உக்காருவதற்க்கு 5 இல்ல 10 சீட்டுதாங்க
இருக்கும். ஏன்னா பயன நேரம் 10 நிமிசத்துக்கும் குறைவுங்க.




இதோட பேரு WONDER BUS இதுவும் சுற்றுலா பயனிகளை
கவர்வதற்காக தாங்க. இதுல் என்ன விசேசமுன்னா
இது நீரிலும் போகும் நிலத்துலையும் போகுங்க.




இதோட பேரு WATER BUS எனக்கு ரொம்ம புடிச்ச பஸ்ஸுங்க ஏன்னா ரோடு
மூலமா நீங்க ஒரு மணி நேரம் ஆகும் தூரம் இதுல 10 நிமிசத்துல போயிடலாங்க.




இது CATMARAN வகையை சார்ந்ததுங்க. அதாங்க கட்டுமரம்
வகையை சார்ந்தது. இந்த வகை படகையும் இந்த வார்தையும்
உலகிற்க்கு குடுத்தது தமிழர்கள் தாங்க.




இந்த மாதிரியான பஸ் இருக்கானு தெரியல
ஆனா நல்லா இருக்கேன்னு போட்டிருக்கேன்



எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.


முந்தைய மூன்று பதிவுகளுக்கு கீழே கிளிக் பன்னுங்க.


மேலும் வாசிக்க >>

Read more...

நான் ரசித்த துபாய் (Dubai Museum) - 3

Wednesday, 10 June 2009

கண்டிப்பக Dubai Museum பற்றி சொல்லியே அகனுங்க ஏன்னா பெறிய எதிபார்பு எதுவும் இல்லாம உள்ளே போயி ஆச்சிரிய பட்ட இடம்ன்னா அது இந்த மியுசியமும் ஒன்னுங்க.



வெளிய இருந்து பத்தப்ப ரொம்ப சின்ன கோட்டையா இருகுறதால் உள்ள என்ன இருக்க போகுதுன்னு முதல்ல நினைச்சேங்க அப்புறம் தான் தெரிஞ்சது 75% மியுசியமே under groundல தான் இருக்குதுன்னு.



என்ன உள்ள வறிங்களா. என்கிட்ட 3திராம் டிக்கட் வாங்கிட்டாங்க
இருந்தாலும் உங்களுக்கு இலவசம் தாங்க.






இதுதான் கோட்டையோட நுழைவாயில்
இந்த கோட்டை கிபி 1787ஆம் ஆண்டு கட்டபட்டதாகவும்
இந்த கட்டிடம் தான் துபாயில் பழமையான கட்டிடமுன்னு சொல்ராங்க.





இது எல்லாம் அவங்க பயன்படுத்திய ஆயுதங்கள் -1
18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்ப இருக்குற
இராஜ பரம்பரை தோன்றியதா சொல்ராங்க.



இது எல்லாம் அவங்க பயன்படுத்திய ஆயுதங்கள் -2



இது எல்லாம் அவங்க பயன்படுத்திய ஆயுதங்கள் -3
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் மொத்தம்
100 போர் வீரர்கள் இருந்ததாக சொல்ராங்க.





இது சிறிய கப்பல் வந்த அதை இழுத்து கட்டுவதற்க்கு பயன்படுத்திய கருவி.




இது கோட்டைக்கு உள்ள இருக்க ராஜா வோட வீடுங்க.
இதுல உயரம புகைகூண்டு மாதிரி இருக்குறது wind tower.
இந்த wind tower தான் துபாயோட architectல முக்கிய பங்கு வகிக்குறது.




அந்த வீட்டுக்குள்ள உள்ள படுக்கை அறை.




இது கோடைகாலத்தில் தூங்கறதுகாக பிரத்தியோக படுக்கை.





கோட்டை உட்புரத்திம் இன்னும் ஒரு தோற்றம்.


இப்ப பாதாள அறைக்கு போகபோறோம் இங்க நுழைந்த உடனே ஒரு வீடியோ ஓடுதிங்க
அதுல ஒவ்வொரு பத்தாண்டுகளும் அவங்க எப்படி முன்னேறுனாங்கன்னு காட்டுறாங்க


அப்புறம் தாங்க ஆச்சரியம் 1950ல துபாய் எப்படி இருந்ததுன்னு
அப்படியே லைவாக செட்டு போட்டிருக்காங்க.


சில படங்கள் உங்களுக்காக.




ஒரு சரக்கு கப்பலில் இருந்து பொருட்களை இறக்குறாங்க.




டீகடை பெஞ்சு தாங்க.



கடை வீதி பல தரபட்ட கடைகள்.
இன்னோரு விசயம் என்னன்னா இவ்ங்க 1960 வரை இவங்க
இந்திய ருபாய்தான் பயன்படுத்தியதா சொல்றாங்க




இது பாத்திர கடை




இது துணிகடை. அப்ப எல்லாம் இங்க இந்திய
துண்களுக்குதான் ரொம்ப மதிப்பாம்.




இது தையல் கடை.




பாட சாலைங்க. பசங்க எல்லாம் குரான் படிக்குறாங்க பாருங்க.
அப்ப எல்லாம் குரான் மட்டும் தான் படிப்பாங்களாம்.



இவரு ஒரு முத்து வியாபாரிங்க....
ஆமாங்க இங்க முத்து எடுப்பது அவங்க முதன்மை தொழிலாம்.



இது தான் துபாய் மக்களோட பாரம்பரிய உடைங்க.



பெண்களும் வீட்டிலேயே எதாவது ஒரு கைதொழில் செய்வாங்களாம்.



இது பாலைவத்தில் பிரபலமாக கிடைக்க கூடிய பேரிச்சை.



அவர்களோட வாகனம் (ஒட்டகம்).



இவரோட இடகையில் இருக்குறது தாங்க falcon
இந்த நாட்டோட தேசிய பறவை. இந்த பறவையை
முன்பெல்லாம் வேட்டையாட பயன்படுதினாங்களாம்
அவரோட வல்கையில் இருப்பது வேட்டையாடபட்ட பறவை.




இதுதான் பாலைவன சோலை சில் இடங்களில் த்ண்ணியும் கிடச்சிருக்குங்க.



கப்பல் கட்டுறாங்க பாருங்க.



மீனு / கருவாடு கடை.



முத்து குளிக்குறதை எவ்வள்வு அருமையா செஞ்சிருக்காங்க பாருங்க.




வெளியே வச்சிருக்க கப்பல்.



இந்த கப்பலுக்கு கீழேதான் மியுசியமே.



எப்படி இருந்துச்சுன்னு சொல்லிட்டு போங்க அப்படியே


என்னோட பழைய ரொண்டு பதிவை பாக்கனுமுன்னா இங்க கிளிக் பன்னுங்க.




மேலும் வாசிக்க >>

Read more...
Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP