டோண்டு, வால்பையன், காலம் மற்றும் பலர்

Friday, 24 July, 2009

இது எதோ விளம்பரத்துக வச்ச தலைப்பு இல்ல.....

இந்த பதிவ தொடங்குவதற்கு முன் சில விசயங்களை தெளிவு படுத்திடுறேன்

01. டோண்டு - பதிவுலகில் எனக்கு துளியும் பிடிக்காத பதிவர் (என்ன செய்ய பிடிகதவங்க என்ன செய்ராங்கன்னு பாக்குறதுல நிறைய ஆர்வம்) குலகல்வி பற்றியும் ராஜாஜி பற்றியும் அவர் எழுதிய பதிவை படிச்சதுல இருந்து.....

02. காலம் - முழுமையா தெரியாது இருந்தாலும் "எனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்" ரொம்ப தெளிவா சொன்னது பிடிச்சிருக்கு.

03. வால்பையன் - இவரோட எல்லா கருத்துகளையும் ஏத்துக்க முடியாது ஆனா நிறைய பதிவை ரொம்ப ரசித்து இருக்கேன்.

இன்னும் சில விசயங்களையும் சொல்லிடுறேன்.

01. இந்த பதிவு மூலம் யார் மனதையாவது புண்படுத்தினால் கண்டிப்பாக நான் வருத்தபடமாட்டேன் (எதிர் பதிவை போட்டுவிட்டு மன்னிப்பு கேகுறதுல எனக்கு உடன்பாடு இல்லை)

02. மேல சொன்னவங்களோட கருத்துகளை நான் புரிந்து கொண்டதை தான் பதிவிட்டிருக்கிரேன் - விவாதங்கள் வரவேர்க்க படுகிறது.

எல்லாத்துக்கு முன்னாடி இந்த பதிவுகளையும் அதன் பின்னுடங்களையும் படிச்சிடுங்க.


சரி மேடருக்கு வறேங்க......

பிராமணன் என்பவன் பொது நலனுக்காக பிரும்ம ஞானத்தை நோக்கி செல்பவன்.
ஷத்திரியன் தனது வலிமையால் மற்றவர்களை காப்பவன்.
வைசியன் பொருள்களில் வணிகம் செய்து செயல் புரிபவன்.
சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன்.

சேவை செய்பவனை பற்றி ஏன் தேடலைங்க டோண்டு ? - தைரியம் இருந்தா எழுதுங்களேன் "எங்கே சூத்திரன் தொடர்" இல்ல சுத்திரன மாற முடியுமா உங்களால்?
பிரும்ம ஞானத்துக்கும் பொது நலனுக்கும் என்ன சம்பந்தம்? கொஞ்சம் விளக்குங்கள்?

இதையெல்லாம் யார் வகுத்தா?
யார் அவர்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தா?

அட யாருங்க வகுக்கணும். எல்லாம் பிராமனர்களே தான். இதுல விளக்கம் வேற. போங்கடா நீங்களும் உங்க சாதியும்.

எந்தக் குழுவை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். அதில் சோம்பேறிகள் உண்டு, நல்ல உழைப்பாளிகள் உண்டு. ஓரிருவர் எல்லோரையும் ஒருங்கிணைத்து செயல்படக்கூடிய மேலாண்மையுடன் இருப்பார்கள்.

இப்ப சொல்லுங்க டோண்டு உங்க குழுவுல (பிராமின்ஸ்) எவ்வளவு சோம்பேறி எவ்வளவு உழைப்பாளி எவ்வளவு மேலன்மை படைத்தவர்கள்? அப்போ இதுல யாரு பிராமின் யாரு சூத்திரன்? - கேள்வி புரிஞ்சதா?

ஆர்க்கெஸ்ட்ராவில் கண்டக்டர் என்பவர் வெறுமனே தனது குழுவை பார்த்து நின்று கொண்டு கையில் உள்ள குச்சியை சுழற்றுவதாகத்தான் வெளியில் இருந்து பார்க்கும் விஷயம் தெரியாதவர்கள் கூறுவார்கள்.

அப்படியா உங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கு!!! அப்புறம் ஏன் தப்பு தப்பா பதிவிடுரீங்க (நான் சொன்னது கருத்து பிழை)

ஜுபின் மேத்தா மாதிரியான நடத்துனர்கள் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட ஆர்க்கெஸ்ட்ரா குழுவே இல்லை என்பதுதான் நிஜம். அங்கு போய் குழல் ஊதுபவன் மூச்சை பிடித்து ஊதுகிறான், இந்த ஆள் வெறுமனே குச்சியை சுற்றிவிட்டு நோகாமல் நோன்பு காக்கிறான் என நீங்கள் சொல்லிட இயலுமா?

எனக்கு ஒரு விஷயம் புரியல - குழல் உதவே தெரியாதவன் எப்படி குச்சிய ஆட்ட முடியும். (குடுக்குற உதாரணத்தை கொஞ்சம் சரியாய் கொடுங்க) - சோ மாதிரி சப்ப கட்டு கட்டாதீங்க.

வால். நீங்க ஏதோ தொடர்ந்த தேடலில் இருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது.ஒருநாள் நீங்கள் தேடுவது கிடைக்கும். டோண்டு-கூட இந்த உலகத்துல எல்லாரையும் விட்டு விட்டு, உங்களைப் பிடிச்சிருக்காரு பாருங்க.

எப்படி கண்டுபிடிச்சீங்க - வெத்தலையில் மை போட்டா - வாழ்த்துகள்

தெரிந்துகொள்ளச் செய்யும் முயற்சி ஞானத்தைத் தரும். ஞானத்தில் உயர்பவன் பிராம்மணனாகிறான்.

அப்போகுட மனிசனா ஆகா மாட்டிங்க.

மனிதனாக இருக்க எதுவுமே தெரிந்து கொள்ள வேண்டியதில்லை தானே!
நான் மனிதனாகவே இருந்து கொள்கிறேன்

மனிதனா இருக்க முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது: சக மனிதனை பாரபட்சம் இல்லாமல் மதிக்க தெரியனும் இல்லன்ன ____________________

டோண்டுவுக்கு சோவை பிடிப்பது போல் உங்களுக்கு டோண்டுவை பிடிப்பது எனக்கு ஆச்சர்யம் ஒன்றும் தரவில்லை

ரொம்ப கவலையோட சொல்லி இருக்கிங்க.

இப்போ சீரியஸா ஒரு விஷயம் -
ஒருவர் தினமும் சாப்பிட்டுக்கொண்டே வருகிறார். ஆரோக்கியமாய் இருக்கிறார். நோய் ஏதும் நல்ல வேளை வரவில்லை. ஆரோக்கியமாகதான் இருக்கிறோம் என்று சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் என்ன ஆகும்?

அறிவுபுர்வமான கிளவி கேடுட்டாரூ - என்னோட கேள்வி தினமும் சாப்பிட்ட மட்டும் ஆரோகியம் இருப்போமுன்னு யார் சொனனது? - எதுக்கு தேவை இல்லாமல் சாப்பிடுறதை நிறுத்தனும்? அது மட்டும் இல்லாமல் தேவையில்லாமல் சாபிடுவதை வேணுமுன்னா நிப்பாட்டலாம் (ஆண்மிகம்)

அதற்காகவே, முன் நாட்களில், இறை வழிபாடு செய்யவும், புத்தகங்கள் படித்து அதை மற்றவருக்கும் எடுத்துச் சொல்லவும், ஆன்மீக உணர்வுகளை வளர்க்கவும் வேண்டி அதை விரும்பி ஏற்ற ஒரு "மனிதக்" கும்பலுக்கு அந்தப் பொறுப்பை கொடுத்தனர். அந்த அந்த மனிதக் கும்பலுக்கு அவர் விரும்பி ஏற்ற ஒரு தொழிலை பிரித்து, தலை முறை தலை முறையாய் செய்து வர அறிவுறுத்தினர். ஏன் தெரியுமா? ஒரு மூன்றாம் மனிதருக்கு உங்கள் அறிவைக் கொடுப்பதை விட, நீங்களே பெத்த குழந்தைக்கு இன்னும் நேர்மையும், உண்மையுமான அக்கறையோடும் உங்கள் அறிவை பகிர்ந்து கொள்வீர்கள்.

அடடா என்ன ஒரு அழ்ந்த சிந்தனை - சகிக்கலை -தூ.........
இப்போ சிலருக்கு வாரிசு இல்லாவிட்டால் அந்த தொழில் அல்லது கலை அதோட முடிஞ்சதா?
நீங்க சொல்ற மாதிரி கல்வி/ஆன்மிகம் போதிக்குற பிராமிணர்கள் அவங்க பிள்ளைகளை தவிர யாருக்கும் நேர்மைய போதிப்பதில்லையா?
பிச்சை எடுத்து தின்ன பிரமனனுக்கே இருக்குற திமிர்.
இவ்வளவு கேவலம் யோசிக்குது (இந்த வரிகளை படித்தவுடன் கோபம் வந்தால் இன்னும் மனிசன மாறாத இல்ல மாற விரும்பாத பிராமணனாக தான் இருக்க முடியும்)

அதனால் உண்டான முறையே குலத் தொழில் முறைகள்.

இத பத்தி தனியா ஒரு பதிவிடுறேன்.......

நன்மையோ, தீமையோ நாமே செய்வது அடைவது கடவுள் என்பதால் ஒன்றும் இல்லை!

சரியான வரிகள்

யாகம் செய்வது மட்டுமே பிராமணனின் வேலை. யாகத்தால் மழை பெய்யும். யாகத்தால் பயிர்கள் நன்றாக விளையும். யாகத்தால் சுற்றுபுறம் தூய்மையாகும். யாகங்களை சிரத்தையாக, சரியாக செய்வதற்கு, மந்திரங்களை சரியாக உச்சரிப்பதற்கு அவனுக்கு உணவு, மன கட்டுபாடு மிக மிக அவசியம்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. ஒருவனுக்கு சிறு வயதிலேயே இந்த கட்டுப்பாடுகளை புகுத்தினால் தான் அது சாத்தியம். எப்படி ஒருவன் வயதில் ராணுவத்தில் சேர முடியாதோ அது போல் தான் இதுவும்.

அப்புறம் ஏன் யா ப்லோக் எழுதுறே போய் யாகம் பண்ணவேண்டியதுதானே.

எதையும் கஷ்டப்பட்டுத் தெரிஞ்சுக்கப் போறதில்லைன்னு ஒப்புதல் வாக்குமூலம் எப்படி வருது பாருங்க! எதையும் தெரிந்துகொள்ளாமல் இருப்பது கற்காலத்தில் தான் கொண்டுபோய் விடும், முடியுமா? சாத்தியமா?
மனிதனாக இருப்பதற்கு "அறியாமையே ஆனந்தம்" என்று ஒரு வழி தான் இருக்கிறதா?

என்ன ஒரு சந்தோசம்!!!!!!!
கற்காலத்தில் உங்களை போல் தெரிஞ்சவங்க இருக்க மாட்டாங்க அதுனால கண்டிப்பா பாகுபாடு இல்லாமல் சந்தோசமா இருக்க முடியும். சந்தோசத்தை தவிர வீர என்னங்க வேணும் வழ்கையை அனுபவிக்க.

பிராமணன் பிச்சை எடுத்து உண்பது என்கிற ஒரு விதி இருக்கிற படியால் இன்றைய தேதியில் பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பது இயலாத ஒன்று என்பதற்காக பார்பனர்கள் அக்மார்க் 'பிராமணிய' வழியில் செல்வதை விட்டுவிட்டார்களா தெரியவில்லை. காஞ்சி சங்கர மடத்தின் தலைமை பார்பனர் 'சங்கராச்சாரியார்' கூட பிச்சை எடுத்து உண்ணுவது கிடையாது. பிறகு எங்கே பிராமணர்களைத் தேடுவது.

????????????????...............................

வருண பிராமணனோ, வர்க்கப் பார்பனரோ தீவிரமாக பிராமணியத்தில் இருந்த போது தீண்டாமை ஆலமரமாக வளர்ந்து இருந்தது

எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.

பொதுமக்கள் 'பார்பனர்களை சக மனிதனுக்கு மேலாக மதிக்கப் படவேண்டும்' என்பதற்கு வேறு எதாவது ஒரே ஒரு காரணம் உண்டா ?

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க.

யாரும் கிடைச்ச சலுகையை விட்டுக்கொடுக்கவோ, மற்றவர்க்கு பகிர்ந்துகொள்ளவோ ரெடியா இல்லை. ஏதாவது ஒரு கதை சொல்லி status quo maintain பண்ண தான் முயற்சி பண்றாங்க

அமாங்க

பி.கு. விவாதங்கள், வசைகள் மற்றும் வாழ்த்துகள் வரவேற்க படுகிறது

20 comments:

Anonymous 25 July 2009 at 8:18 AM  

romba arumaiya iruku, manithanai muthalil mathikattum piragu jaathiyai patthi ivargal blog ealuthatum.innum ungaludaiya saataiadiyai eathir paakurean.

கலையரசன் 25 July 2009 at 10:04 AM  

வந்த உடனே ஆரம்பிச்சியா செல்ல்லோம்..

ரைட்டு.. பெரியவங்க பேசிக்கோங்க, நான் எதுக்கு நடுவுல?

ச.செந்தில்வேலன் 25 July 2009 at 10:29 AM  

பிரதீப், நான் வால்பயன், டோண்டு போன்றோரின் பதிவுகளைப் படித்ததில்லை.

ஆனால் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. யாரால் நாம், நம் பெயரிற்குப் பின் சாதிப்பெயரைப் போடாமல் இருக்கிறோம் என்று தெரியுமா? யார் இன்றும் அதிகமாக சாதியை போட்டு வருகிறார்கள் என்று தெரியுமா?

என் பக்கம் 25 July 2009 at 11:03 AM  

//யாரால் நாம், நம் பெயரிற்குப் பின் சாதிப்பெயரைப் போடாமல் இருக்கிறோம் என்று தெரியுமா? யார் இன்றும் அதிகமாக சாதியை போட்டு வருகிறார்கள் என்று ?//

சொல்லுங்க கண்டிப்பாக தெரிஞ்சுக்குறேன்.

இதுவரை எனக்குன்னு இருக்குற கருத்துகள் எல்லாம் பிறரிடமிருந்து பெற்றது தான்.

கண்டிப்பாக விதண்டாவாதம் பன்னமாட்டேன் - சரி என்று பட்டால் ஏற்று கொள்வேன்.

நன்றி செந்தில்

Vidhoosh 25 July 2009 at 11:05 AM  

இங்கே பார்க்கவும்.
http://vidhoosh.blogspot.com/2009/07/blog-post_05.html

இதில் நான் பெரியதாக சொல்ல ஏதும் இல்லை.
1. பிறந்த உடனேயே இணைத்தும் கொண்டு விடும் ஜாதியை நாம் மறுக்க முடியாத ஒன்று. இதை பற்றி எத்தனை விதமாக வாதம் செய்தாலும் அதற்கு தீர்வே கிடையாது.எதை மாற்ற முடியாதோ, அதை பற்றி வாதித்து என்ன பயன்?

2.நாம் இப்படி பிறந்து விட்டோமே என்று வருத்தப் படாமல், கையில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி ஜாதியை ஓரம் கட்டுவதே நான் பல இடங்களில் செய்த முயற்சியாக இருக்கிறது.

3. ஜாதியை முன்னிறுத்தி நம்மை பிளவு படச் செய்தது ஆங்கிலேயர்கள் தான் என்பதில் எனக்கு எள்ளளவும் கூட சந்தேகம் இல்லை.

---வித்யா

என் பக்கம் 25 July 2009 at 11:59 AM  

//ஜாதியை முன்னிறுத்தி நம்மை பிளவு படச் செய்தது ஆங்கிலேயர்கள் தான் என்பதில் எனக்கு எள்ளளவும் கூட சந்தேகம் இல்லை.//

எப்படி என்று விளக்க முடயுமா?
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் நம்மில் பிளவுகள் இல்லையா?

//பிறந்த உடனேயே இணைத்தும் கொண்டு விடும் ஜாதியை நாம் மறுக்க முடியாத ஒன்று.//

மறுக்க முடியாத ஒன்று என்று யார் சொன்னது? - கலப்பு திருமணத்தில் என்ன ஜாதி?

//இதை பற்றி எத்தனை விதமாக வாதம் செய்தாலும் அதற்கு தீர்வே கிடையாது.//

விவாதத்திற்கு தீரவு உண்டு. விதண்டாவதத்திற்கு கண்டிப்பாக தீர்வே கிடையாது.

//கையில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி ஜாதியை ஓரம் கட்டுவதே நான் பல இடங்களில் செய்த முயற்சியாக இருக்கிறது.//

வேற்று ஜாதியினரை ஓரங்கட்டுவதா ?

நன்றி

அது ஒரு கனாக் காலம் 25 July 2009 at 5:21 PM  

பதிவின் தொனியும் /தொடக்கம் ..நடை , பதில் எதுவுமே சரியில்லை. குல கல்வி, ராஜாஜி இது எல்லாம் முடிந்த கதை, அதனால்..இப்போ குல கல்வியை எதிர்த்து பேசி, ஆட்சி புரியும் குலங்களின் வளமை ( ஆட்சியில் இல்லாத போதும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கூஜா தூக்கி சில கட்சிகள் /ஆள்கள் ) என்னன்னு நான் சொல்லவேண்டாம்... ராஜாஜியின் வம்சம் எப்படி இருக்குன்னு தேடி பிடித்து பார்த்து படியுங்கள் , யாரை தர்க்கம் பண்ண கூபிட்றீங்க ,

என்ன வேண்டும் ... குளிக்கறேதே அவிசியமில்லை, அதனால், நான் குளிக்கிறதே கிடையாதுன்னு பெரியார் சொன்னார், அவரை தானே தலைவரா நினைக்கிறீங்க... வாழ்வின் முக்கியமான , ஒரு பழக்கம், காலையில் குளி, இது அவிசியமில்லை என்று தானே சொன்னார் பெரியார்... நான் தினமும் முடிந்த வரை குளிப்பவன், குளிக்கும் போது / குளித்த பின் கடுவுளை வணங்குவதால், .. குளிப்பதால் தானே நீ கடுவுளை நினைக்கிறாய், அதையே நிறுத்துடு,,,, அப்படின்னு சொன்னவர் தானே... எனக்கு என் வழி, அது போல் உங்களுக்கு உங்கள் வழி ... யார் வேறுபாடு நிறைய பார்கிறார், எந்த குலங்களில் பெண்கள் உரிமை உள்ளது, மறு கல்யாணம்/ விதவை மறுமணம் எங்கு நிறைய நடக்கிறது , வரதட்ச்சனை எங்கு நிறைய உள்ளது ... இது எல்லாரும் நீங்களும் நானும் அறிந்த விஷயம்.. இங்கு வந்து நிறைய தெரிந்து கொண்டேன் ... உங்கள் முதுகை பாருங்கள், உங்கள் மனதை பாருங்கள்.. உள் நோக்கி ஆராய்ந்து பாருங்கள்.

என் பக்கம் 25 July 2009 at 6:24 PM  

நன்றி திரு சுந்தரராமன்.

//பதிவின் தொனியும் /தொடக்கம் ..நடை , பதில் எதுவுமே சரியில்லை.//

உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதை தானே சரியில்லைன்னு சொல்லி இருக்கீங்க - உங்க கருத்திற்கு நன்றி.

//கல்வி, ராஜாஜி இது எல்லாம் முடிந்த கதை//

அதாவது வரலாறு. வாழ்கைக்கு மிக அவசியம் வரலாறு ஏன் என்றால் அங்க இருந்து தான் நாம் நல்ல மற்றும் கேட்ட உதாரணங்கள் கிடைக்கிறது.......

//கல்வியை எதிர்த்து பேசி, ஆட்சி புரியும் குலங்களின் வளமை ( ஆட்சியில் இல்லாத போதும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கூஜா தூக்கி சில கட்சிகள் /ஆள்கள் ) என்னன்னு நான் சொல்லவேண்டாம்... //

நான் என் பதிவுல அவங்களை பற்றி ஒரு வரி குட சாதகமாக இதுவரை எழுதியது கிடையாது. எழுதவும் மாட்டேன்.

//ராஜாஜியின் வம்சம் எப்படி இருக்குன்னு தேடி பிடித்து பார்த்து படியுங்கள்//

ராஜாஜி பற்றி நிறைய படிச்சிருக்கேன் கண்டிப்பாக பகிர்ந்து கொள்கிறேன்.

//யாரை தர்க்கம் பண்ண கூபிட்றீங்க//

சத்யமா இதுக்கு அர்த்தம் புரியல? கோசம் விளக்குங்க.

//என்ன வேண்டும் ... குளிக்கறேதே அவிசியமில்லை, அதனால், நான் குளிக்கிறதே கிடையாதுன்னு பெரியார் சொன்னார், அவரை தானே தலைவரா நினைக்கிறீங்க... //

ரொம்ப நல்லா உகிக்கிறீங்க - நான் ரொம்ப மதிக்குற வழிகாட்டி/தலைவர்களில் பெரியாரும் ஒருவர். கண்டிப்பா இது ஒரு பெருமையான விசயமே

//வாழ்வின் முக்கியமான , ஒரு பழக்கம், காலையில் குளி, இது அவிசியமில்லை என்று தானே சொன்னார் பெரியார்... நான் தினமும் முடிந்த வரை குளிப்பவன், குளிக்கும் போது / குளித்த பின் கடுவுளை வணங்குவதால், .. குளிப்பதால் தானே நீ கடுவுளை நினைக்கிறாய், அதையே நிறுத்துடு,,,, அப்படின்னு சொன்னவர் தானே... //

ரொம்ப அறிய தகவல் - நன்றி. (தந்தை பேரிறை பத்தி ரொம்ப தெரிஞ்சு வச்சி க்கிங்க)

//எனக்கு என் வழி, அது போல் உங்களுக்கு உங்கள் வழி ... யார் வேறுபாடு நிறைய பார்கிறார், எந்த குலங்களில் பெண்கள் உரிமை உள்ளது, மறு கல்யாணம்/ விதவை மறுமணம் எங்கு நிறைய நடக்கிறது , வரதட்ச்சனை எங்கு நிறைய உள்ளது ... இது எல்லாரும் நீங்களும் நானும் அறிந்த விஷயம்..//

ரொம்ப போதுபடைய இருப்பதால் புரியல கொஞ்சம் விளக்குங்கலேன் .

//இங்கு வந்து நிறைய தெரிந்து கொண்டேன் ... //

கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

//உங்கள் முதுகை பாருங்கள்,//

நான் அறிந்த வரை யாரும் சுயமாக அவங்க முதுகை (தவறை) பார்ப்பது மிக கடினம். அதனால் அடுத்தவர் உதவி அவசியம் நான் எங்கேனும் தவறு செய்திருந்தால் சுட்டி காட்டவும் (உங்களுக்கு மனமிருந்தால்) திருத்தி கொள்கிறேன்.

//உங்கள் மனதை பாருங்கள்.. உள் நோக்கி ஆராய்ந்து பாருங்கள்//

முயற்சித்து கொண்டுதான் இருக்கிறேன் அதன் விளைவு தான் இவை.

மிக்க நன்றி திரு சுந்தரராமன்.

SanjaiGandhi 25 July 2009 at 8:06 PM  

பெரியவங்க சமாச்சாரம்.. சும்மா ஒரு அட்டெண்டன்ஸ் :)

பித்தன் 25 July 2009 at 9:36 PM  

//
1. பிறந்த உடனேயே இணைத்தும் கொண்டு விடும் ஜாதியை நாம் மறுக்க முடியாத ஒன்று. இதை பற்றி எத்தனை விதமாக வாதம் செய்தாலும் அதற்கு தீர்வே கிடையாது.எதை மாற்ற முடியாதோ, அதை பற்றி வாதித்து என்ன பயன்?
//

இதுக்கு நேரடியா கலப்பு திருமணத்தை எற்க்கமுடியாதுன்னு சொல்லிருக்கலாம்...

//2.நாம் இப்படி பிறந்து விட்டோமே என்று வருத்தப் படாமல், கையில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி ஜாதியை ஓரம் கட்டுவதே நான் பல இடங்களில் செய்த முயற்சியாக இருக்கிறது.//

அய்யோடா என்ன கொடுமை இது,, யாரு யாரு இப்ப வருத்த படுறா ? வேதத்த படிச்சவங்க மனிதர்கள் அனைவரும் சமம்ன்னு உங்களுக்கு தெரியாதா ?

பிறப்பால ஒருத்தன் உயர்ந்தவன்/தாழ்ந்தவன்ன்னு நினச்சா உண்மையிலேயே அவன்கிட்ட ஏதோ நோய் இருக்குன்னு அர்த்தம்.. அப்படி நினைப்பவர்கள் மனநல மருத்துவரை பார்ப்பது தான் நல்லது.

//3. ஜாதியை முன்னிறுத்தி நம்மை பிளவு படச் செய்தது ஆங்கிலேயர்கள் தான் என்பதில் எனக்கு எள்ளளவும் கூட சந்தேகம் இல்லை.
//

உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம் -:)

//ராஜாஜியின் வம்சம் எப்படி இருக்குன்னு தேடி பிடித்து பார்த்து படியுங்கள் , //

//அது ஒரு கனாக் காலம், என் பக்கம் //

இராஜாஜி/பெரியார் ரெண்டு பேர் செய்தது எல்லாம் நல்லதுன்னு சொல்லிடமுடியாது, அதேபோலே ரெண்டுபேரும் நல்லது செய்யவே இல்லை என்று சொல்லவும் முடியாது. ஒருத்தர் பத்தி சொல்லும் பொழுது நிறையை மட்டும் அல்லது குறையை மட்டும் சொல்லுரவங்களுடன் எப்படி விவாதம் பண்ணமுடியும் ?

தக்காளியின் அழுகின பக்கத்தை மறைத்து வியாபாரம் பண்ணுவது போல -:)

என் பக்கம் 26 July 2009 at 3:22 AM  

நன்றி பித்தன்

//பிறப்பால ஒருத்தன் உயர்ந்தவன்/தாழ்ந்தவன்ன்னு நினச்சா உண்மையிலேயே அவன்கிட்ட ஏதோ நோய் இருக்குன்னு அர்த்தம்.. அப்படி நினைப்பவர்கள் மனநல மருத்துவரை பார்ப்பது தான் நல்லது.//

சத்தியமான வார்த்தைகள்.

//இராஜாஜி/பெரியார் ரெண்டு பேர் செய்தது எல்லாம் நல்லதுன்னு சொல்லிடமுடியாது, அதேபோலே ரெண்டுபேரும் நல்லது செய்யவே இல்லை என்று சொல்லவும் முடியாது. ஒருத்தர் பத்தி சொல்லும் பொழுது நிறையை மட்டும் அல்லது குறையை மட்டும் சொல்லுரவங்களுடன் எப்படி விவாதம் பண்ணமுடியும் ?//

நன்றி பித்தன்

கோவி.கண்ணன் 26 July 2009 at 6:48 AM  

//பிராமணன் என்பவன் பொது நலனுக்காக பிரும்ம ஞானத்தை நோக்கி செல்பவன்.
ஷத்திரியன் தனது வலிமையால் மற்றவர்களை காப்பவன்.
வைசியன் பொருள்களில் வணிகம் செய்து செயல் புரிபவன்.
சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன்.//

இதுல யாரும் பொம்பளைங்களே கிடையாது.

கோவி.கண்ணன் 26 July 2009 at 9:21 AM  

//
யாகம் செய்வது மட்டுமே பிராமணனின் வேலை. யாகத்தால் மழை பெய்யும். யாகத்தால் பயிர்கள் நன்றாக விளையும். யாகத்தால் சுற்றுபுறம் தூய்மையாகும். யாகங்களை சிரத்தையாக, சரியாக செய்வதற்கு, மந்திரங்களை சரியாக உச்சரிப்பதற்கு அவனுக்கு உணவு, மன கட்டுபாடு மிக மிக அவசியம்.//

என்னக் கொடுமை சார், மற்ற நாடுகளில் மழையே பெய்யலையா, இல்ல எல்லா நாட்டுக்கும் சேர்த்து இவங்களே யாகம் பண்ணிடுறாங்களா?
:)

அப்போ வெள்ளம் வருவதற்கும் இவங்க பண்ணுகிறா யாகம் தான் காரணமா ?

என் பக்கம் 26 July 2009 at 9:28 AM  

//என்னக் கொடுமை சார், மற்ற நாடுகளில் மழையே பெய்யலையா, இல்ல எல்லா நாட்டுக்கும் சேர்த்து இவங்களே யாகம் பண்ணிடுறாங்களா?//

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?
சங்கரச்சரியரை கைது செய்ததால் தான் சுனாமி வந்துச்சு :-))))))))

//இதுல யாரும் பொம்பளைங்களே கிடையாது.//

இதுக்கெல்லாம் பதில் இருக்காது ஏன்னா இதை choiceல விட்டுடுவாங்க.

நன்றி திரு கோவி.கண்ணன்.

வால்பையன் 27 July 2009 at 5:49 PM  

//பிறந்த உடனேயே இணைத்தும் கொண்டு விடும் ஜாதியை நாம் மறுக்க முடியாத ஒன்று. //

பிறந்த உடன் திணிக்கப்படும் என்று இருக்கவேண்டும்!

//எதை மாற்ற முடியாதோ, அதை பற்றி வாதித்து என்ன பயன்?//

உண்மை தான் மாற விருப்பமில்லாதவர்களிடம் பேசி பயனில்லை!

//நாம் இப்படி பிறந்து விட்டோமே என்று வருத்தப் படாமல்,//

யாரும் வருத்தாத வரைக்கும், தானாக யாரும் வருத்தப்பட போவதில்லை!

//ஜாதியை முன்னிறுத்தி நம்மை பிளவு படச் செய்தது ஆங்கிலேயர்கள் தான் என்பதில் எனக்கு எள்ளளவும் கூட சந்தேகம் இல்லை.//

ஆங்கிலேயருக்கு முன்னர் இருந்தே ஜாதி இருந்திருக்கிறது! அப்போது நடந்த கொடுமைகளுக்கு எழுத்துவடிவ ஆதாரம் இல்லை என்பதால் புதிய கதை திரிக்கலாகாது!

வால்பையன் 27 July 2009 at 5:52 PM  

பதிவை பற்றி சொல்றதுக்கு ஒன்னுமில்ல!

கொஞ்சம் எழுத்துபிழைகளை சரிபாருங்கள்!

வால்பையன் 28 July 2009 at 11:31 AM  

என் கருத்துகளை ஏற்கனவே பதிவு செய்து விட்டேனே!

Joe 2 August 2009 at 10:56 PM  

எழுத்துப் பிழைகளை சரி செய்யவும்!

Joe 2 August 2009 at 11:07 PM  

அருமையான இடுகை பிரதீப்.
நடை இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்திருக்கலாம்.

ஜாதி இல்லை என்று சொல்பவர்கள் ஏன் ஜாதிப் பெயரை மின்னஞ்சலில் கூட வைக்க வேண்டும்?

நீங்கள் ஏகப்பட்ட விஷயங்களை அறிந்தவர் என்று உங்களை சந்தித்த போது தான் அறிந்து கொண்டேன். உங்களது வாசிப்பனுபவம் மேலும் வளர வாழ்த்துக்கள்.

என் பக்கம் 3 August 2009 at 1:29 PM  

நன்றி ஜோ

//எழுத்துப் பிழைகளை சரி செய்யவும்!//

கண்டிப்பாக.........

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP