பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 3
Sunday, 11 October 2009
பதிவுலக நபர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கின்றது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்படக் கூடியவை பற்றி அறியும் சிறு முயற்சி தான் இந்த பதிவு.
விவாதத்துக்கான மூன்றாம் கேள்வி.
01. கல்வியின் இன்றையநிலை?
02. சமசீர் கல்வியின் தேவை?
03. தாய் மொழிகல்வியின் தேவை?
கல்வியை/ஒழுக்கத்தை பாதிப்பவை எவை.
01. சினிமா.
02. தொலைகாட்சி.
03. வலையுலகம்
04. சமுகம்.
05. அரசியல்.
உங்க கருத்தை பின்னூட்டம் இடுங்க. கண்டிப்பாக இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக வளர வேண்டுமென்று ஆசை படுகிறேன்.
நன்றி வணக்கம்
ஒரு அரோகியமான விவாதம் தான் அடுத்த கட்டத்துக்கு இட்டு செல்லும்.
7 comments:
பிரதீப்,
நல்ல கேள்விகள் [இது போன்ற கேள்விகளென்றால் அனைவரும் பங்கு கொள்வார்கள் ;) ]
01. கல்வியின் இன்றையநிலை?
இன்றும் சரி, நாம் படிக்கும் பொழுதும் சரி பள்ளி மற்றும் கல்லூரிக்கல்வி மாணவர்களை உலகை எதிர்கொள்ளும் வகையில் இல்லை தான். கல்வி முறையானது வெளியே நம்பிக்கையுடன் செயலாற்ற ஏதுவாக இருக்க வேண்டும். ஏட்டுச் சுரைக்காய் உணவிற்கு உதவாது :)
02. சமசீர் கல்வியின் தேவை?
கண்டிப்பாகத் தேவை தான். கிராமப்புற மாணவர்களின் தரமும் உயரும். அதற்கு முன்பாக கட்டமைப்பு வசதிகள் மேம்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு தங்கள் திறமைகளை வளர்க்கப் பயிற்சி அளிக்க வேண்டும்.
03. தாய் மொழிகல்வியின் தேவை?
தாய் மொழியைப் படிக்க வேண்டியது கட்டாயம். மொழியை இழந்தவன் தன்னை இழந்தான் என்பது தான் என் கருத்து.
கல்வியை/ஒழுக்கத்தை பாதிப்பவை எவை.
01. சினிமா.
02. தொலைகாட்சி.
03. வலையுலகம்
04. சமுகம்.
05. அரசியல்.
நல்ல குடும்பமும், நல்ல கவனிப்பும், வழிகாட்டுதலும் இருந்தால் இவை எவையுமே பாதிக்காது, அரசியலைத் தவிர (அதுவும் கல்வியை மட்டுமே. ஒழுக்கத்தை அல்ல)
கல்வித்திட்டத்தை அரசியல்வாதிகள் தீர்மானிப்பதால்..
பெற்றோரால் குழந்தைகளை கவனிக்க முடியாவிட்டால் என் வரிசை 04, 02, 01, 03.
நன்றி செந்தில்,
//நல்ல கேள்விகள் [இது போன்ற கேள்விகளென்றால் அனைவரும் பங்கு கொள்வார்கள் ;) ]//
???????????
//நல்ல குடும்பமும், நல்ல கவனிப்பும், வழிகாட்டுதலும் இருந்தால் இவை எவையுமே பாதிக்காது, அரசியலைத் தவிர (அதுவும் கல்வியை மட்டுமே. ஒழுக்கத்தை அல்ல)
கல்வித்திட்டத்தை அரசியல்வாதிகள் தீர்மானிப்பதால்..
பெற்றோரால் குழந்தைகளை கவனிக்க முடியாவிட்டால் என் வரிசை 04, 02, 01, 03.//
முழுவதும் உடன்படுகிறேன்.
மீண்டும் நன்றி செந்தில்
செந்தில் சொல்வது தான் சரி, வளரும் சூழல் , அப்பா , அம்மா பழக்க வழக்கங்கள் ... இது பெரிதும் தீர்மான்க்கும்
வணக்கம் பிரதீப்.
வலையுலகம் வந்து கொஞ்சம் நாட்கள் ஆகிவிட்டது.
எனக்கு இப்பொது நீங்கள் கொடுத்துள்ள விவரங்கள் பற்றி அதிகம் தெரியாது ( யோசிக்கவில்லை ) எனவே பின்னூட்டங்களை பார்த்து நானும் தெரிந்து கொள்கின்றேன்
இராஜராஜன்
இந்த கேள்விகளுக்கும் பதிலை பின்னூட்டமாக இடுவதற்கு பதில்
தொடர் பதிவாகவோ,எண்திசைப்பதிவாகவோ இடுதல் நலம் என தோன்றுகிறது ...உங்களுக்கான பதிலை நான் விரைவில் இரு பதிவாக இடுகிறேன் .
கல்வி /ஒழுக்கத்தை பாதிப்பவைகளை வரிசைப் படுத்தினால்:
1.சமூகம்
2.தொலைக்கட்சி/சினிமா
3.அரசியல்
ம்ம்ம்ம்....
நல்ல கேள்வி.
எல்லாருக்கு தெரிந்ததுதான், கல்வி சேவை என்பது மாறி தொழிலாக மாறி விட்டது. இது முதலில் மாறனும். 20 லச்சம் பணம் கட்டி டாக்டருக்கு படிக்கிறவன் எப்படி சேவை செய்வானு எதிர் பாக்கலாம்? சோ, ஆரம்பமே பணமாதான் இருக்கு...
தாய் மொழி கல்வி மட்டும் இருக்க கூடாது, தாய் மொழியும் ஒரு பாடமாகதான் இருக்கனும். மற்ற மொழிகளை கற்று கொள்ள வாய்ப்பு தற வேண்டும்.
சமசீர்: ஹிஹி... அப்படீன்னா? ஏழை பணக்காரன் என்பது ஒழிந்தால்தான் சமசீர் என்பது சாத்தியமாகும். பணம் இருக்குறவன், சிறந்த ஸ்கூல்தான் சேக்க பார்ப்பான்...
01. சினிமா.
02. தொலைகாட்சி.
03. வலையுலகம்
04. சமுகம்.
05. அரசியல்.
எல்லாம் தான்.
Post a Comment