சிரிப்பு வரல...

Wednesday, 7 October, 2009

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் - உண்மைதான்.ஆனா இப்ப எல்லாம் எதுக்கெல்லாம் சிரிக்கிறதுன்னு ஒரு வரையறை இல்லாம போயிடுச்சிங்க.......


ஒருத்தனை அடிச்சா சிரிக்கறது. இழிவு படுத்தினா சிரிக்கறது............


எனக்கென்னமோ துன்பம் வரும்போது சிரிங்கனு வள்ளுவர் சொன்னதை நம்ம மக்கள் துன்ப படுத்தி பார்த்து சிரிங்க நினைச்சிட்டாங்களோன்னு தொனுது.


எப்படி ஒருத்தன் அடிவாங்குறதை பாக்கும்போது சிரிக்க முடியுது. அதுமட்டும் இல்லாமல் இப்பயெல்லாம் யாரையாவது இழிவுபடுத்தினா/அடிச்ச்சாதான் காமடிங்ற நிலை வந்துடுச்சோன்னு தோனுது.


இதுக்கு முக்கியமா சினிமா தான் காரணமுன்னுன் தோனுது. சில காலமா வர பெரும்பான்மையான படங்கள் இந்த மாதிரி அடி உதை காமடியா வருவதால மக்களோட மனசும் கொஞ்ச கொஞ்சமா மாறி யாரையாவது அடிச்சா துன்ப படுவதை பார்த்தா சிரிக்க ஆரம்பிச்சிடுராங்க.


பாருங்க நமக்கு ரொம்ப பக்கத்துல அதுவும் நம்ம இனமே கிட்டதட்ட அழிஞ்சிட்டிருக்கு ஆனா தமிழக தமிழரை முழுமையா பாதிக்கலைனு நினைக்கும்போது ஒரு தமிழக தமிழனா மனசு ரொம்ப வலிக்குதுங்க.


கண்டிப்பா இலங்கை சண்டையின்றது வடிவேலு காமடி கிடையாதுங்க. கொஞ்சமனா நம்ம எதிர்பை தெரிவிக்கனும் இல்லனா மனுசனா வாழறதுக்கு கூட நமக்கு தகுதி இல்லங்க.


அடடா எதோ சொல்ல ஆரம்பிச்சி எங்கையோ போய்டிச்சி. இந்த பதிவை ஏன் போடரேனா சிரிப்புங்கறது சிரிபொலி மற்றும் ஆதித்யால மட்டும் இல்லிங்க நம்ம வாழ்கைல இருக்கு.


என்ன சொல்லவரேன்னா வீட்டில் தொலைகாட்சி மற்றும் கனினிக்கு செலவழிக்குற நேரத்தை குறைத்து குடும்பம் மற்றும் நன்பர்களிடம் அதிக நேரம் மகிழ்ச்சியா செலவிடுங்க.


கண்டிப்பா ஆரோகியத்துக்கு ஒரு குறையும் இருக்காது.


மறக்காம பின்னுடம் போடுங்க.ஒருவகையில் இது மீள் பதிவுதாங்க.

4 comments:

பிரியமுடன்...வசந்த் 7 October 2009 at 9:24 PM  

//என்ன சொல்லவரேன்னா வீட்டில் தொலைகாட்சி மற்றும் கனினிக்கு செலவழிக்குற நேரத்தை குறைத்து குடும்பம் மற்றும் நன்பர்களிடம் அதிக நேரம் மகிழ்ச்சியா செலவிடுங்க.//

சரியா சொன்னீங்க...

raja vamsam 8 October 2009 at 1:19 AM  

இலங்கை
இன்று உலக அலவில் பேச்சப்படும் ஒரு செய்தி இலங்கை தமிழர் பிரச்னை தான் இதை தமிழர்களின் அறிவின்மை என்பதா இல்லை அறிவே இல்லை என்பதா! l t t e அடி வாங்குகிறது என்ரவுடன் பொங்கி எலும் தமிலினம் இதே தமிலனால் இலங்கை அப்பாவி மக்கள் அடி பட்டார்கள் உதை பட்டார்கள் பலர் உயிரயும் விட்டார்கல் அப்போது யாரும் வாய் திறக்கவில்லை நான் நடப்பது சரி என்று சொல்லவில்லை ஏன் இந்த பாகுபாடு என்றுதான் கேட்கிறேன் . தமிழன் என்பதற்க்காகத்தான் நாங்கள் L.T.T.E க்கு ஆதரவு என்றால் மனிதாபிமானம் இல்லாதவர்கள். வலி ரத்தம் உயிர் இழப்பு என்பது எல்லா மனிதர்களுக்கும் ஒன்றுதான் நாம் அடித்தாலும் அடிவாகினாலும் வலி ஒன்றுதான் இதே பக்கத்து நாடான நேபால் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இலங்கை என்று எங்கு பார்த்தாலும் ரத்தம் தான் குரல் என்று கொடுத்தால் எல்லோருக்கும் கொடுக்கவேண்டும் .அதை விட்டுவிட்டு தமிழ் மட்டும் என்றால் காட்டுமிறான்டித்தனம் .நமக்கு எதற்கு ஊர் வம்பு ! ! !

Rathi 8 October 2009 at 6:17 PM  

ஐயா ராஜவம்சம்,

நீங்கள் யாருக்காக வேண்டுமானாலும் மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுங்கள், நேபாள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், ருவாண்டா, சூடான்-டார்பூர், மியான்மார் இன்னும் எத்தனையோ நாடுகள், மக்கள்.

//நமக்கு எதற்கு ஊர் வம்பு//

எங்களை ஈழத்தில் சிங்கள அரசபயங்கரவாதாம் கொன்றுகுவித்த போது ஆரம்பகாலங்களில் யாருமே மனிதாபிமான அடிப்படையில் கூட எங்களுக்காக, தமிழன் என்பதையெல்லாம் விடுங்கள், குரல் கொடுக்கவில்லை. சரி, நமக்கு எதற்கு ஊர்வம்பு என்று ஒதுங்காமல் எங்களுக்காக தங்கள் உயிரை கூட ஒரு பொருட்டாக மதிக்காமல் எங்கள் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக போராடி மரணித்தவார்கள், இன்று, நீங்கள் சொல்வது போல் சர்வதேசமே எங்கள் பிரச்னையை பேச வைத்தவர்கள் புலிகள் தான். அவர்கள் யார், அவர்கள் என்ன செய்தார்கள், அவர்கள் செய்தது சரியா, பிழையா என்றெல்லாம் முடிவெடுக்கும் உரிமை ஈழத்தமிழர்களுக்கு மட்டுமே உண்டு, குறிப்பாக இன்று இலங்கையில் வடக்கில் வதைமுகாம்களில் இன்னல்படுகிறார்களே அவர்களுக்குத்தான் அதிகமாக அந்த உரிமை உண்டு. உங்கள் தமிழகத்தில் ஆறரை கோடி தமிழர்கள் இருந்தும் உங்கள் எந்த அரசியல் வாதியையாவது அல்லது கொள்கைவகுப்பாளரையாவது ஈழத்தமிழர்கள் விடயத்தில் அசைக்கமுடிந்ததா உங்களால்? குறைந்தபட்சம் ஒரு அப்பாவித்தமிழன் உயிரையாவது காப்பாற்றுங்கள் என்று காலில் விழாதகுறையாக பிச்சை கேட்பது போல் கேட்டோமே, மனமிரங்கினார்களா இவர்கள்? இந்தியாவின் புவியியல், கேந்திர முக்கியங்களுக்கும், வல்லரசு கனவுக்கும் இன்னும் எத்தனை ஈழத்தமிழர்களின் உயிர்களை பலியெடுக்கும்? அப்பாவி ஈழத்தமிழனின் இரத்தக்கறை இந்தியாவின் வரலாற்றின் பக்கங்களில் இனி காலம் பூராவும் படிந்திருக்கும். இந்தியாவின் அரசியல் நலன்களை பற்றி மட்டுமே சிந்திக்கும் யாருக்குமே புலிகளைப்பற்றி பேசும் அருகதை கிடையாது. புலிகள் அரசியல் நடத்தி ஈனப்பிழைப்பு நடத்தவில்லை. தங்கள் உயிரை காப்பாற்றுங்கள் என்று யார் காலிலும் விழவும் இல்லை. தாங்கள் கொண்ட கொள்கை எதுவோ அதற்காகவே இறுதிவரை போராடியவர்கள்.

தமிழன் என்று வெறும் வீராப்பு காட்டுபவர்கள் அல்ல ஈழத்தமிழர்கள். எங்களுக்கு எதிராக சர்வதேசமே சதிசெய்தது, இன்னும் சதி செய்துகொண்டிருக்கிறது. இன்று, நாங்கள் சிங்கள ஆட்சியாளர்களுடன் மட்டும் போராடவில்லை. சர்வதேசத்தின் சதிக்கெதிராகவும் தான் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு யாருமே உதவவுமில்லை. எங்கள் உறவுகளின் உயிர்களை யாரும் காப்பாற்றவும் இல்லை. எங்கள் உறவுகளுக்கு நாங்கள் இருக்கிறோம். யாரும் நாங்கள் வெறுமனே தமிழர் என்பதற்காக மட்டும் எங்களுக்காக குரல் கொடுக்கவேண்டாம்.

வலி, ரத்தம், உயிரிழப்பு என்பது எல்லா உயிர்களுக்கும் ஒன்றுதான் ஒத்துகொள்கிறேன். ஆனால், அரசியல் சதுரங்கத்தில் எங்களை சர்வதேசமும் பலியாடுகள் ஆக்கினார்களே, ஐம்பதாயிரம் உயிர்களை ஆறே மாதங்களில் சதைப்பிண்டங்களாய் ஆக்கினார்களே, அவர்களைப்பற்றி ஏன் ஐயா பேசவில்லை நீங்கள்? மறந்துவிட்டீர்களா? அல்லது மறைக்கப்பார்க்கிறீர்களா? அல்லது ஊர்வம்பு நமக்கு எதற்கு என்று நினைக்கிறீர்களா? நாங்கள் அப்படியெல்லாம் ஒதுங்கமுடியாது. பாதிக்கப்படுபவர்கள் நாங்கள். எங்களுக்காக யார் பேசினாலும், பேசாவிட்டாலும் நாங்கள் எங்கள் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும், பறிக்கப்பட்ட இலட்சக்கணகான உயிர்களுக்காவும் நியாயம் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

ரோஸ்விக் 10 October 2009 at 4:49 AM  

இந்த கொடுமையை தட்டிக்கேட்க்க துனிவில்லதவருக்கு எதற்கு தமிழினத் தலைவர் பட்டம்....இதை அவரே சிந்திக்க வேண்டும்....

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP