கட்டிட கலையின் அடுத்த அத்யாயம் - கடலுக்கு அடியில் ஓட்டல் (Underwater Hotel) - 4
Sunday, 11 October 2009
கடலுக்கு அடியில் ஓட்டல். கேட்டதும் வியப்பா இருக்கா ஆனால் உண்மை. துபாய்லா 98% கட்டி முடிச்சுட்டாங்க இன்னும் சில வாரங்களில் திரப்பதாக இருக்காங்க.
கடலுக்கு அடியில என்றால் அதாவது கடற்கரையிலிருந்து 500 மீ கடலுக்குள், நீர் மேல் பரப்பில் இருந்து 66 அடி ஆழத்தில்.
இந்த ஓட்டலில் மொத்தம் 220 அறைகள் உள்ளதாம் அதுமட்டும் இல்லாமல் இதன் திட்ட மதிப்பீடு சுமார் 2000 கோடி ருபாய்.
மேலதிக விவரங்களுக்கு சுட்டி-1, சுட்டி-2 மற்றும் சுட்டி-3 பார்க்கவும்.
கீழே இருக்குற இந்த வீடியோவை பாத்துடுங்க - ரொம்ப தெளிவா எப்படி கட்டுனாங்கன்னு சொல்லியிருக்காங்க.
இது அந்த ஓட்டலோட நுழைவாயில் கடற்கரையில் இருக்கு
நீலநிர வட்டமாக இருப்பதுதாங்க ஓட்டல் அதன் வால் போன்ற பகுதி தரையில் இருந்து ஓட்டலுக்கு செல்லும் சுரங்க பாதை.
இது தாங்க அந்த ஓட்டல்
அந்த ஓட்டலோட இன்னும் ஒரு தோற்றம்
எப்படி இருந்ததுன்னு பின்னூடம் இடுங்க.
2 comments:
நல்ல தகவல் பிரதீப். படங்கள் அருமை. நன்றி
நன்றி செந்தில்
Post a Comment