பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 3

Sunday, 11 October 2009


பதிவுலக நபர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கின்றது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்படக் கூடியவை பற்றி அறியும் சிறு முயற்சி தான் இந்த பதிவு.

விவாதத்துக்கான மூன்றாம் கேள்வி.
01. கல்வியின் இன்றையநிலை?
02. சமசீர் கல்வியின் தேவை?
03. தாய் மொழிகல்வியின் தேவை?




கல்வியை/ஒழுக்கத்தை பாதிப்பவை எவை.
01. சினிமா.
02. தொலைகாட்சி.
03. வலையுலகம்
04. சமுகம்.
05. அரசியல்.

உங்க கருத்தை பின்னூட்டம் இடுங்க. கண்டிப்பாக இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக வளர வேண்டுமென்று ஆசை படுகிறேன்.

நன்றி வணக்கம்

ஒரு அரோகியமான விவாதம் தான் அடுத்த கட்டத்துக்கு இட்டு செல்லும்.
மேலும் வாசிக்க >>

Read more...

கட்டிட கலையின் அடுத்த அத்யாயம் - கடலுக்கு அடியில் ஓட்டல் (Underwater Hotel) - 4

கடலுக்கு அடியில் ஓட்டல். கேட்டதும் வியப்பா இருக்கா ஆனால் உண்மை. துபாய்லா 98% கட்டி முடிச்சுட்டாங்க இன்னும் சில வாரங்களில் திரப்பதாக இருக்காங்க.


கடலுக்கு அடியில என்றால் அதாவது கடற்கரையிலிருந்து 500 மீ கடலுக்குள், நீர் மேல் பரப்பில் இருந்து 66 அடி ஆழத்தில்.


இந்த ஓட்டலில் மொத்தம் 220 அறைகள் உள்ளதாம் அதுமட்டும் இல்லாமல் இதன் திட்ட மதிப்பீடு சுமார் 2000 கோடி ருபாய்.


மேலதிக விவரங்களுக்கு சுட்டி-1, சுட்டி-2 மற்றும் சுட்டி-3 பார்க்கவும்.




கீழே இருக்குற இந்த வீடியோவை பாத்துடுங்க - ரொம்ப தெளிவா எப்படி கட்டுனாங்கன்னு சொல்லியிருக்காங்க.












இது அந்த ஓட்டலோட நுழைவாயில் கடற்கரையில் இருக்கு







நீலநிர வட்டமாக இருப்பதுதாங்க ஓட்டல் அதன் வால் போன்ற பகுதி தரையில் இருந்து ஓட்டலுக்கு செல்லும் சுரங்க பாதை.







இது தாங்க அந்த ஓட்டல்







அந்த ஓட்டலோட இன்னும் ஒரு தோற்றம்







எப்படி இருந்ததுன்னு பின்னூடம் இடுங்க.




மேலும் வாசிக்க >>

Read more...

கடவுளின் தேவை.

Friday, 9 October 2009

இந்த கேள்வி என்ன ரொம்ப நாளா யோச்சிக்க வைத்த கேள்வி.


ரெண்டு மாசத்துக்கு முன்பு கூட இந்த ஒரு பதிவை போட்டு: கடவுளால் மனிதனுக்கு என்ன பயன் அல்லது நன்மை? கேட்டிருந்தேங்க அனா கடவுள்ன்னு பார்த்தவுடன் பெரும்பாண்மையானவங்க கடவுள் இருகாற இல்லையாங்ற விவாதத்துக்கு வந்துட்டாங்க.


கடவுள் இருகிறார் இல்லை என்ற விவாதத்தில் இதுவரை நடுநிலையான முடிவுக்கு வரவும் இல்லை வரவும் முடியாது. அதுமட்டும் இல்லாமல் கடவுள் இருக்கிறார் இல்லை என்று பேசுவதால் எந்த பயனும் இல்லை. அதனால தான் கடவுள் இருகிறார் இல்லைங்ற பிரச்சனையை விட்டுவிட்டு கடவுளின் தேவையும் அவரால் சமுகத்திற்கு ஏற்படும் நன்மை தீமை பற்றி பார்ப்போம். 







எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்ல உண்மையில் கடவுள் இருக்காற எப்படி தெரிந்து கொள்வது இல்ல இல்லையாங்கறதை பற்றியதல்ல இந்த பதிவு. 


கடவுளின் தேவையை பற்றியது. எனக்கு தெரிந்தவரை ஒரு சிலவற்றை பட்டியலிடுகிறேன் அதில் பிழை இருந்தால் பின்னூடமிடவும் திருத்தி கொள்கிறேன்.


கடவுளின் தேவை அவசியமற்றது என்பதற்கான சில காரணங்கள்.

  1. இன்றுள்ள சூழலில் பிறப்பு மற்றும் இறப்பு இவற்றில் கடவுளின் பங்களிப்பு எதுவும் இல்லை.
  2. காத்தல் என்பதும் கடவுளால் நிகழவில்லை - அவரவர் உழைத்தால் தான் சாப்பாடு (நான் அறிந்தவரை எந்த கடவுளும் யாருக்கும் சும்மா சோறு போட்டதில்லை)
  3. நல்ல முறையில் வாழவும் நல்லவனாக வாழவும் எந்த கடவுளின் தேவையும் இல்லை - அதாவது இன்னொருவனுக்கு உதவி செய்ய எந்த கடவுளின் தேவையும் இல்லை மனம் இருந்தால் போதும்.
  4. வாழ்வியல் முறை பயில எந்த கடவுளோ _________ தேவை இல்லை சிறிய விசயத்தை உணர்ந்தால் போதும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு அதுவும் கண்டிப்பாக அனுபவம் கற்று தரும்.
  5. ஒழுக்கத்துடன் வளர்க்கவும் கடவுள் தேவையில்லை. உன்மையான அன்புடன் (செல்லமாக இல்லை) வளர்த்தால் போதும்.

கடவுளின் தேவை அவசியமானது என்பதற்கான சில காரணங்கள்.
  1. ஒரு பொழுது போக்கிற்காக கடவுளையும் கோயிலையும் பயன் படுத்தினால் போதுமானது அதாவது ஒரு பூங்காவிற்க்கோ அல்லது திரை படத்திற்க்கோ செல்வது போல் கோவிலுக்கு சென்றால் போதுமானது.
  2. விழாகளை கொண்டாட மற்றவருடன் பழக மட்டும்.
  3. ....................
நிறைய விசயங்கள் இருக்கு கடவுளின் தேவையை பற்றி விவாதிக்க.

ஒரு அரோகியமான விவாதம்/கலந்துரையாடல் கண்டிப்பாக அடுத்த நிலைக்கு உயர்த்தும்.

- நன்றி

உங்கள் கருத்துகளை மறக்காமல் பின்னூடமிடுங்கள்.
மேலும் வாசிக்க >>

Read more...

சவுதிவாழ் தமிழர்களுக்கு மட்டும் (குறிப்பாக சினிமா விரும்பிகளுக்கு)

அது என்னடா சவுதிவாழ் தமிழர்களுக்கு மட்டுமுன்னு கேட்டீங்கன்னா. என்ன சொல்ல எனக்கு தெரிஞ்சவரை அவங்களுக்குதான் பொழுதுபோக்கு என்பது ரொம்ப கட்டுபடுத்தபட்டிருக்கு எப்படி தெரியுமுன்னா நானும் ஒரு 2 வருடம் அங்கதான் இருந்தேன்.


என்னடா ரொம்ப பில்டப்ன்னு யோசிக்காதிங்க. ரொம்ப சதாரண விசயம் தான்.


இது ஒரு வலைதளத்தை பற்றியது. பெரும்பாண்மையானோருக்கு தெரிந்திருக்கும் தெரிஞ்சவங்க திட்டாம எஸ்கேப் ஆயிடுங்க இது தெரியாதவங்களுக்கு மட்டும். 


அந்த வலைதள முகவரி www.ultimatetamil.com 







இதுல என்ன ஸ்பெஷல்ன்னு கேட்டீங்கன்னா மொத்தம் மூனு தரத்தில் தராங்க அதாவது படம் வந்து ஒருவாரத்தில் cam quality அடுத்தவாரத்தில் good quality 3வது அல்லது 4வது வாரத்தில் DVD quality ல தராங்க.


இந்த வலைதளத்திலிருந்து Live TV தமிழ் நிகழ்சிகளும் பாக்கலாம்.


இதுல தமிழ், இந்தி (தமிழ் வசனம்) மற்றும் ஆங்கிலம் (தமிழ் வசனம்) மொழி படங்கள் இருக்கு.


இதுவரை மொத்தம் 480 படங்கள் தொகுத்திருக்காங்க.


இதுமட்டும் இல்லாமல் தமிழ் பாடல்களுக்கும் நகைசுவைக்கும் தனி லிங்க் உள்ளது.




பின் குறிப்பு: 
01. கண்டிப்பாக திரையரங்கு வசதி இல்லாதவங்க மட்டும் இந்த தளத்தை பயன் படுத்தவும்.
02. இதைவிட நல்ல வலைதளம் இருந்தால் பின்னூடத்தில் தெரிய படுத்தவும்.

மேலும் வாசிக்க >>

Read more...

சிரிப்பு வரல...

Wednesday, 7 October 2009

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் - உண்மைதான்.



ஆனா இப்ப எல்லாம் எதுக்கெல்லாம் சிரிக்கிறதுன்னு ஒரு வரையறை இல்லாம போயிடுச்சிங்க.......


ஒருத்தனை அடிச்சா சிரிக்கறது. இழிவு படுத்தினா சிரிக்கறது............


எனக்கென்னமோ துன்பம் வரும்போது சிரிங்கனு வள்ளுவர் சொன்னதை நம்ம மக்கள் துன்ப படுத்தி பார்த்து சிரிங்க நினைச்சிட்டாங்களோன்னு தொனுது.


எப்படி ஒருத்தன் அடிவாங்குறதை பாக்கும்போது சிரிக்க முடியுது. அதுமட்டும் இல்லாமல் இப்பயெல்லாம் யாரையாவது இழிவுபடுத்தினா/அடிச்ச்சாதான் காமடிங்ற நிலை வந்துடுச்சோன்னு தோனுது.


இதுக்கு முக்கியமா சினிமா தான் காரணமுன்னுன் தோனுது. சில காலமா வர பெரும்பான்மையான படங்கள் இந்த மாதிரி அடி உதை காமடியா வருவதால மக்களோட மனசும் கொஞ்ச கொஞ்சமா மாறி யாரையாவது அடிச்சா துன்ப படுவதை பார்த்தா சிரிக்க ஆரம்பிச்சிடுராங்க.


பாருங்க நமக்கு ரொம்ப பக்கத்துல அதுவும் நம்ம இனமே கிட்டதட்ட அழிஞ்சிட்டிருக்கு ஆனா தமிழக தமிழரை முழுமையா பாதிக்கலைனு நினைக்கும்போது ஒரு தமிழக தமிழனா மனசு ரொம்ப வலிக்குதுங்க.


கண்டிப்பா இலங்கை சண்டையின்றது வடிவேலு காமடி கிடையாதுங்க. கொஞ்சமனா நம்ம எதிர்பை தெரிவிக்கனும் இல்லனா மனுசனா வாழறதுக்கு கூட நமக்கு தகுதி இல்லங்க.


அடடா எதோ சொல்ல ஆரம்பிச்சி எங்கையோ போய்டிச்சி. இந்த பதிவை ஏன் போடரேனா சிரிப்புங்கறது சிரிபொலி மற்றும் ஆதித்யால மட்டும் இல்லிங்க நம்ம வாழ்கைல இருக்கு.


என்ன சொல்லவரேன்னா வீட்டில் தொலைகாட்சி மற்றும் கனினிக்கு செலவழிக்குற நேரத்தை குறைத்து குடும்பம் மற்றும் நன்பர்களிடம் அதிக நேரம் மகிழ்ச்சியா செலவிடுங்க.


கண்டிப்பா ஆரோகியத்துக்கு ஒரு குறையும் இருக்காது.


மறக்காம பின்னுடம் போடுங்க.



ஒருவகையில் இது மீள் பதிவுதாங்க.

மேலும் வாசிக்க >>

Read more...

நான் ரசித்த துபாய் (Dubai Metro) - 6

துபாய் மெட்ரோ பற்றி சொல்வதற்கு நிறைய விசயம் இருக்கு அதுல ஒரு சில மட்டும்.


01. திட்ட மதிப்பீடு 20,150 கோடி ரூபாய் ( 15.5 பில்லியன் திராம்)
02. 100% தானியங்கி அதாவது ஓட்டுனர் இல்லாத ரயில்.
03. மெட்ரோ கட்டுமாணம் ஆரம்பித்த தேதி: 05.05.05 பொதுமக்களுக்கு திறந்த தேதி : 09.09.09.
04. மொத்தம் இருக்குற 49 ரயில் நிலய்ங்களில் (red line & green line) 10 தான் திறந்திருக்காங்க.
05. இருக்குற ரயில் நிலயங்களில் இருந்து 720 பேருந்து இனைக்க பட்டிருக்கு.





இதுதாங்க ஜப்பானிலிருந்து கொண்டுவரபட்ட சுரங்க வழி அமைக்கும் இய்ந்திரம். மொத்தம் 12.6 கி.மி. மற்றும் 11 ரயில் நிலையங்கள் புமிக்கு அடியில் அமைத்துள்ளார்கள் 







கழுகு பார்வை (கலையரசன் இல்லைங்க)







துபாய் மரினா பக்கம். மொத்தம் 5 கம்பார்ட்மெண்ட் தான்.







financial center station இதுதாங்க.







எவ்வளவு அழகா இருக்கு பாருங்க இதை ஓட்டுரத்துக்கு ஓட்டுனர் தேவை இல்லீங்களாம்.







ஒரு ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் இதுதாங்க.







பூமிக்கு அடியில் இருக்குற காலித் பின் வாளித் ஸ்டேஷன் இதுதாங்க. அதாவது 75அடி ஆழம் உள்ள நிலையம் மேல உள்ள போக்குவரத்துக்கு பாதிப்பு வராம செஞ்சிருக்காங்க.







அழகிய ரயில் நிலையத்தின் முகப்பு தோற்றம்




மேலும் வாசிக்க >>

Read more...

இந்த வார படித்த பிடித்த பதிவுகள் - 3


இந்த வார படித்த பிடித்த பதிவுகள் - ஒரு சில பதிவுகளை பார்க்கும் போது அட இத்தனை நாளா மிஸ் பண்ணிடோமேன்னு தோனும் அப்படி தோன்றிய பதிவுதான் - தேவியர் இல்லம் - வரலாறு எனக்கு மிகவும் பிடித்த விசயம் இதில் அவர் கூறியிருக்கும் தகவல்கள் பல ஆச்சிறிய பட வைக்கிறது (இந்த பதிவை எனக்கு அறிமுக படுத்திய நாகாவிற்க்கு நன்றி)

தேவியர் இல்லம். - விடியும் வரை காத்திரு 

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (42)

திட்டப்படி வந்த மொத்த கூட்டமும் காலையில் மன்னர் மாளிகையில் உள்ளே புகுந்து இருந்தால் ஒரு வேளை அன்றே இன்றைய இந்திய காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைந்து இருந்து இருக்கக்கூடும்.


அருமையான பதிவுகள் அறிய தகவல்கள் சுவாரசியமான வரலாற்று தொடர்.




பின்னோக்கி-  பதிவர்களின் பரிணாம வளர்ச்சி: 2
நள்ளிரவில்
கடைதிறப்பு விழா
திருட்டு


சுருக்கமா சொல்லனுமுன்னா சூப்பர்




தமிழா தமிழா - அண்ணாவும்..வினவு பதிவும்
ஒவ்வொருவருக்கு பிடித்த..பிடிக்காத ..தலைவர்களை விமரிசிப்பது தவறில்லை..ஆனால் அப்பதிவுகள் நாகரிகமாக இருக்க வேண்டும்..அப்படி பார்த்ததில் வினவு பதிவில்..எனக்கு ஏதும் வரம்பு தாண்டியதாகத் தெரியவில்லை.அவர் கோணத்தில்..அண்ணாவை விமரிசித்து இருக்கிறார்.


நேர்மையான விமர்சனம்




என் உளறல்கள் - உலகை அச்சுறுத்தும் சீனா
உலகின் பெரிய ரவுடி அமெரிக்காவிற்க்கும், இலங்கை, வங்கதேசம் போன்ற குட்டி நாடுகளுக்குப் பயப்படும் தென்னாசிய ரவுடி இந்தியாவிற்க்கும் சீனா தன் பலத்தைக் காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது போல் தெரிகின்றது.


படங்கள் ஒரு நிமிடம் மெய் சிலிர்க்க வைட்து விட்டது.





பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் கொள்கை என்று சொல்லப் படும் "ஜிகாத்" என்ற வார்த்தையின் அர்த்தம் "புனிதப் போர்" என்பதாகும். உண்மையில் போர் என்பது புனிதமான ஒரு விசயமா???


சொல்லும் கருத்துகளுடன் உடன்பட வைக்குறார்






புத்த தேசத்திற்கு
ஆயுதம் கொடுத்தது
காந்தி தேசம் !
 


அருமையான கவிதை தொகுப்பு




யாழிசை - கறுப்பி
மற்றவர்களிடம் பழகுவதை விட என்னிடம் கறுப்பி சற்று அதிக அன்போடு பழகும்.கருப்பியிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் நிற்காமல் செல்லும் ரயில் வரும்போது அந்த ரயிலின் வேகத்திற்கு பிளாட்பாரம் உள்ள நீளம் வரை துரத்தும் .இது எங்களுக்கு எல்லாம் வேடிக்கையாக இருக்கும்


அருமையான சிறுகதை (கதைன்னா கருத்து சொல்லியே ஆக வேண்டுமா என்ன)


- நன்றி





மேலும் வாசிக்க >>

Read more...

கட்டிட கலையின் அடுத்த அத்யாயம் - கலை கட்டிடம் (art museum) - 3

Tuesday, 6 October 2009

இப்படி ஒரு கட்டிடமா? என ஆச்சரிய பட வைக்கும் கட்டிடம்.

இந்த கட்டிடத்தை இன்னும் கட்ட ஆரம்பிக்கவில்லை இனிகட்டுவாங்களானும் தெரியல.

ஆமாங்க துபாய்ல தான் கட்டுவதாக இருந்தது என்ன செய்ய இந்த பொருளாதர சரிவுக்கு பின் கட்டுவாங்களானு தெரியல. பார்போம்................






கட்டிடத்தின் மைய பகுதி 





மைய பகுதி மற்றும் ஒரு கோனத்தில் இருந்து





இந்த கட்டிடம் தான் துபாயின் art museum ஆக வேண்டியது.....?





வசிகரமான முன்புற தோற்றம். இது துபாய் creek அருகில் cultural villageல் அமைய இருந்தது.











உட்புற தோற்றம் - 1





உட்புற தோற்றம் - 2





உட்புற தோற்றம் - 3





இதுதாங்க பக்கவாட்டு தோற்றம்.






எப்படி இருந்ததுன்னு பின்னூடம் இடுங்க.




நன்றி வணக்கம்.
மேலும் வாசிக்க >>

Read more...

மாமிசத்தால் வந்த பரிணாம வளர்ச்சி

நன்பன் ஒருவரிடம் பேசிகொண்டிருக்கும் போது அவர் சொன்ன கருத்துகள்.


மனிதனின் பரிணாம வளர்ச்சி மாமிசம் சாப்பிட ஆரம்பித்தபின் தான் தொன்றியதென்று கூறினார்.


அதற்கு அவர் கூறிய காரணங்கள்.


மனிதன் குரங்காக இருக்கும் வரை மாமிசம் சாப்பிட்டதில்லை (இன்று வரை குரங்கு மாமிசம் சாப்பிடாது - அதாவது pure veg)


குரங்கின் பரிணாம வளர்ச்சிதான் மனிதன் - மரத்துக்கு மரம் தாவுவதை விடுத்து நிமிர்ந்து நடக்க ஆரம்பித்ததும் தான் மனிதனாக மாறினான். தாவுவதை தவிர்த்ததும் எதிரியிடம் (மற்ற விலங்குகளிடமிருந்து) காத்துகொள்ள வேட்டையாடினான். வேட்டையாடியதை உண்ண ஆரம்பித்தான். அதன் பிறகுதான் படிபடியாக ஒவ்வொன்றாக கண்டுபிடித்தான் (அதாவது நெருப்பு....... சக்கரம்....... ஆயுதம்........ மற்றும் பல...........) என்பது நன்பர் கருத்து.





அந்த கருத்தில் என்னால் 100% உடன்பட முடியவில்லை இருந்தாலும் இதில் மற்றவர் கருத்தையும் அறிய ஆவலாக உள்ளேன்.


உங்க கருத்துகளை மறக்காமல் பின்னூடமிடுங்கள்.


நன்றி.





மேலும் வாசிக்க >>

Read more...
Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP