வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் - உண்மைதான்.
ஆனா இப்ப எல்லாம் எதுக்கெல்லாம் சிரிக்கிறதுன்னு ஒரு வரையறை இல்லாம போயிடுச்சிங்க.......
ஒருத்தனை அடிச்சா சிரிக்கறது. இழிவு படுத்தினா சிரிக்கறது............
எனக்கென்னமோ துன்பம் வரும்போது சிரிங்கனு வள்ளுவர் சொன்னதை நம்ம மக்கள் துன்ப படுத்தி பார்த்து சிரிங்க நினைச்சிட்டாங்களோன்னு தொனுது.
எப்படி ஒருத்தன் அடிவாங்குறதை பாக்கும்போது சிரிக்க முடியுது. அதுமட்டும் இல்லாமல் இப்பயெல்லாம் யாரையாவது இழிவுபடுத்தினா/அடிச்ச்சாதான் காமடிங்ற நிலை வந்துடுச்சோன்னு தோனுது.
இதுக்கு முக்கியமா சினிமா தான் காரணமுன்னுன் தோனுது. சில காலமா வர பெரும்பான்மையான படங்கள் இந்த மாதிரி அடி உதை காமடியா வருவதால மக்களோட மனசும் கொஞ்ச கொஞ்சமா மாறி யாரையாவது அடிச்சா துன்ப படுவதை பார்த்தா சிரிக்க ஆரம்பிச்சிடுராங்க.
பாருங்க நமக்கு ரொம்ப பக்கத்துல அதுவும் நம்ம இனமே கிட்டதட்ட அழிஞ்சிட்டிருக்கு ஆனா தமிழக தமிழரை முழுமையா பாதிக்கலைனு நினைக்கும்போது ஒரு தமிழக தமிழனா மனசு ரொம்ப வலிக்குதுங்க.
கண்டிப்பா இலங்கை சண்டையின்றது வடிவேலு காமடி கிடையாதுங்க. கொஞ்சமனா நம்ம எதிர்பை தெரிவிக்கனும் இல்லனா மனுசனா வாழறதுக்கு கூட நமக்கு தகுதி இல்லங்க.
அடடா எதோ சொல்ல ஆரம்பிச்சி எங்கையோ போய்டிச்சி. இந்த பதிவை ஏன் போடரேனா சிரிப்புங்கறது சிரிபொலி மற்றும் ஆதித்யால மட்டும் இல்லிங்க நம்ம வாழ்கைல இருக்கு.
என்ன சொல்லவரேன்னா வீட்டில் தொலைகாட்சி மற்றும் கனினிக்கு செலவழிக்குற நேரத்தை குறைத்து குடும்பம் மற்றும் நன்பர்களிடம் அதிக நேரம் மகிழ்ச்சியா செலவிடுங்க.
கண்டிப்பா ஆரோகியத்துக்கு ஒரு குறையும் இருக்காது.
மறக்காம பின்னுடம் போடுங்க.
ஒருவகையில் இது மீள் பதிவுதாங்க.
மேலும் வாசிக்க >>
Read more...