இது எங்க ஊரு - வேலூர் (Part-1)
Monday, 22 June 2009
"சொர்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா "
அமாங்க என் ஊரு வேல்லூர். வேல்லூர் பற்றி சில விசயம் உங்க கிட்ட பகிர்ந்துகொள்ள இந்த தொடர் பதிவு.
ஆரம்பிக்கும் போதே ரொம்ப பெருமையான விஷயத்திலிருந்து ஆரம்பிக்கும் இல்லையா அதனால்தான் இந்த வீடியோ.
அதாவது இந்தியவில முதல் முதலாக சிப்பாய் கலக்கம் எங்க ஊரு கோட்டை ல தான் நடந்துருக்குங்க. (இந்த கோட்டை பத்தி தனி பதிவு போடுறேங்க)
எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டு போங்க
Labels:
வேலூர்
ரஜினிகாந்த்............ரசிகர்கள்............
Sunday, 21 June 2009

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்
ரஜினிகாந்த் ஆமாங்க இந்த பேரை சொன்னாலே எல்லோரும் எதவது விமர்சிக்க ஆரம்பிச்சுடுராங்க; நல்லவிதமாகவோ அல்லது திட்டியோ (பெரும்பாலும் நல்லவிதமாக)
ஒரு விசயம் மட்டும் முதல் இருந்தே புரியமாட்டேங்குதுங்க என்னன்னா சினிமாவும் ஒரு தொழில்தானே அதுல இருக்கவங்களும் மனிதர்கள் தானே. அவங்களுக்கு அப்படி என்ன வித்யாசம அல்லது அதிகபடியா இருக்கு (புகழ்ன்னு சொன்னா அது நாம உருவாக்குனது தான்)
சினிமாவை ஒரு பொழுது போக்கா மட்டும் பார்க்க ஏன் முடியல.
ஒரு படம் ரிலீஸ் ஆனா ஏகபட்ட விமர்சனங்கள், ஆய்வு கட்டுரைகள், அலசல்கள், அந்த கலைஞசர்களுக்கு அறிவுரைகள்.............. எதற்க்கு இந்த முக்கியதுவம்.
அதுகாக சினிமாவே வேண்டாமுன்னு சொல்லவில்லை அத ஒரு பொழுதுபோக்க மட்டும் பாப்போமே சினிமா முடிந்ததும் அத மறந்துட்டு அடுத்த வேலையை பாப்போமே. நாம நம்ம வேலையை விட்டுட்டு அவங்க வேலையை பாக்குறதால (அலசல் மற்றும் ......) சினிமாகாரங்க ஜெயிச்சுட்டு நம தோத்துட்டு இருக்கா மாதிரிதான் தெரியுது..............
என்ன இது தலைப்புக்கும் மேட்டருக்கும் சம்மந்தமே இல்லன்னு நினைக்காதீங்க கீழே இருக்குற வீடியோவை பாத்துடுங்க.............
இவரு எதுனால மண் சோறு சாப்பிட்டாருன்னு விவாதம் பன்ன போரதில்லை
அவந்தான் பைத்தியகாரதனமா செய்றான்னா (கண்டிப்பாக இவன் மாதிரியான ஆளுங்களுக்கு மரியாதை தேவையில்லை) அத மீடியா வேற பெரிசு படுத்தினா கண்டிப்பாக இது போன்ற செயல்களை உக்கப்டுத்துவதா தான் அமையுது
அதுமட்டும் இல்லாமல் எந்த நடிகனாவது அவனோட ரசிகன் இது மதிரி செய்றது தப்புன்னு சொல்லி கண்டித்து/தண்டித்து இருக்கானா (இவங்களுக்கும் மரியாதை குடுக்க தோனல) அப்பவே தெரியலையா நம்ம நடிகர்களின் மிக சிறந்த வேசம்(பொது வாழ்வில்)
உங்களோட க்ருத்துக்களை பின்னூடமிடுங்கள்
நன்றி...........
Labels:
சினிமா,
ரஜினிகாந்த்,
விமர்சனம்
ஒரு 5 நிமிசம் waste பன்ன ரெடியா?
Saturday, 20 June 2009
ஒரு சில விசயங்களை முதல்லையே சொல்லிடுறேன் பிறகு திட்டாதீங்க.
ஏன்ன இந்த பதிவு கொஞ்சம் அருவையா கூட தெரியலாம். இதோட தேவையை அல்லது நோக்கத்தை புரிந்தது என்றால் கண்டிப்பாக மிக மிக சுவாரசியமாக இருக்கும்.

கலாச்சாரம்......... (ஹலோ போயிடாதீங்க 5 நிமிசம் இன்னும் முடியல) என்று சொன்ன உடனே அவங்க அவங்க ... ஆகா வந்துட்டாருயா காலாச்சார காவலருன்னோ... இன்னும் எத்தன பேரு கிளம்பிட்டீங்கன்னும்... வேற வேலையே இல்லையான்னும்... சரியானா அருவை டான்னும்... சொல்லிட்டு ஓடிட்டாதீங்க.
விசயம் என்னவென்றால் இதற்க்கு முன் ஒரு பதிவை போட்டேங்க:
முடிந்தால் ஒருவாட்டி படிச்சுடுங்க முக்கியமாக அந்த பதிவுக்கு வந்த பின்னூடங்களை.
அந்த பதிவை முதல்ல யாருமே அங்கிகாரம் கொடுக்க வில்லை. அந்த பதிவு தமிழிஷ் வாங்கிய ஓட்டுகள் 3 (1ஓட்டு நானா போட்டுகிட்டது) தமிழ்மணத்துல ஒரே ஒரு ஓட்டு அதுவும் நானா போட்டுகிட்டது. அதனால பெரும்பாலும் யாருக்கும் போயி சேரலன்னு புரிஞ்சதுங்க.
அந்த பதிவுல பாத்தீங்கன்னா நான் என்னோட கருத்துகள் எதுவுமே சொல்லியிருக்க மாட்டேன். ஏன்னா ஒரு பொதுவானா ஆக்க பூர்வமான விவாதம் உருவாக வேண்டுமென்று.
சரி திரட்டி மூலமாக அதரவு திரட்டலாமுன்னு அந்த பதிவை பிரபல பதிவா ஆக்கும் படி மின் அஞ்சல் அனுப்பியும் பார்த்தேன். அப்பவும் எதுவும் நடக்கல. சரி இத விடகூடாதுன்னு நன்பர்களுக்கும் நன் வாசிக்கும் பெரும்பான்மையான பதிவர்களுக்கு இந்த பதிவை படிக்க சொல்லி அனுப்பினேங்க அப்பதான் ஒரு சில விவாதங்கள் ஆரம்பித்தது. பிறகு google blog searchல் “கலாச்சாரம்” தேடி அதுல கலாச்சாரம் சம்மந்தமாக யார் யார் எல்லாம் பதிவிட்டிருந்தாங்களோ அவங்க எல்லாருக்கும் விவாததில் கலந்துக்க அழைச்சேங்க. பிறகு ஒரு நல்ல விவாதம் தொடங்கியதுங்க.
விவாதத்தில் கலந்து கொண்டவர்கள்:
அனைவருக்கும் என் நன்றி. ஒவ்வொருவரும் மிக அருமையான கருத்துகளை முன் வெச்சாங்க. அனைவருக்கும் மறுபடியும் நன்றிங்க.
இந்த பதிவுல ஒரு சிறப்பு என்னவொன்றால் இவ்வளவு சிக்கலான விசயத்திற்க்கு ஒரு அநானி நன்பர் கூட வரலீங்க. எல்லோரும் அவங்க கருத்துகளை தெளிவா நெர்மையா அழகாக சொன்னாங்க. இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம் என்னன்னா இது இன்னும் முழுமையா எல்லோரையும் போய் சேரவில்லை என்பது தாங்க.
அதனால தான் அந்த பதிவை அதரித்து நானே ஒரு பதிவிட வேண்டியதாகி விட்டது.
இதனால சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னன்னா இன்னும் நிறைய பேர் அந்த விவாதத்துல கலந்து கொண்டு மிக சிறந்த ஒரு வரையறையும் ஒரு அரோகியமான தெளிவானா முடிவையும் எடுக்க உதவி செய்யுங்க.
மற்ற பதிவுலக நன்பர்களும் உங்களின் நன்பர்களுக்கு இதை தெரிய படுத்தி இந்த விவாதத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுங்கள்.
ரொம்ப நன்றீங்க.........
பி.கு/டிஸ்கி:
இந்த பதிவையும் கண்டு கொள்ளவில்லையென்றால் இன்னொரு பதிவு போடுவேங்க.
Labels:
கலாச்சாரம்,
சமுகம்,
சிந்தனை
நான் ரசித்த துபாய் (Dubai Beach) - 5
Thursday, 18 June 2009
துபாய் பீச் - எனக்கு துபாய்ல பிடித்த இடங்களில் இதுவும் ஒன்று.
முதல் காரணம் எந்த குப்பையும் இல்லாம சுத்தமாக இருபதனால்
வெய்யில் அதிகமாக இருக்குறது கூட பெரியதா பாதிக்கலிங்க.
கண்ணுக்கும் மனசுக்கும் குளிர்ச்சியா (சத்தியமா கடலதான் சொல்றேங்க)
இருபதும் இன்னொரு காரணம்.
இப்படி நிறைய பட்டியலிட்டு உங்கள மொக்கை போட விரும்பவில்லை.
அதனால நேராக மேட்டருக்கே போயிடுவோம்.
.jpg)
இதுதான் ஜுமேரியா பீச்சுங்க. என்ன நல்லா இருக்கா.
ஆனா உள்ள போக காசு கேக்குறானுங்க. பரவாயில்ல
குடுத்த காசு வீணா போகல.

இதுவும் ஜுமேரியா பீச் தாங்க. இங்க free.
இது துபாய் மரினா பக்கத்துல இருக்குற பீச்ங்க.
இது சத்துவா பக்கத்துல இருக்கும் பீச்ங்க

இது பணகாரங்க பீச். ஆமாங்க வீட்டுக்கு ஒரு பீச்.
இது பாம் ஜுமேரியாவுல இருக்குற பீச்சுங்க.

என்னட வரிசையா பீச்சை காட்டிட்டு ஓட்டலை காட்டுரானு பாக்குறீங்களா
இவங்க தான் உலகின் முதல் ஏ.சி பீச் (air-conditioned beach) கட்டிக்கிட்டு இருக்காங்க
என்ன ஆச்சரியமா இருக்கா கீழே இருக்குற வீடியோவும் பாத்துடுங்க.
அதவது மதியம் 12 மணிக்கு கூட பீச் மணல்ல படுக்க முடியுமாம்
அதுகாக பெரிய பெரிய கருவிகளை பூமியில புதச்சி மணலோட
சூட்டை குறைக்க போறாங்களாம்
மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டிய பார்க்கவும்
எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
என்னோட முந்தைய பதிவுகளுக்கு கீழே உள்ள சுட்டியை பார்க்கவும்
பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1
Wednesday, 17 June 2009
பதிவுலக நன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.
விவாதத்துக்கான முதல் கேள்வி பதிவுலக்கத்துல பெருபாலும் அலசபட்ட கேள்விதான்.
கலாச்சாரம்/பண்பாடு என்றால் என்ன?
இந்த கேள்விக்கு அனைவரும் ஏற்று கொள்ளும்படி பதிலலிப்பது என்பது கடினம்தான். ஏன்னென்றால் கலாச்சாரம் சமுகத்திற்க்கு சமுகம் இடத்திற்க்கு இடம் மாறுபடுமென்று பெரும்பாலும் சொல்றாங்க. அதனால நாம் முதலில் தமிழ் சமுகத்தின் கலாச்சாரத்தை பற்றி பேசுவோம்.
கலாசரத்தை வளர்க்கும் அல்லது சீர் குலைக்கும் விசயமாக தான் கீழே பட்டியலிட்டவை உள்ளன.
இதுல எது எவ்வளவு எப்படி பாதிச்சிருக்குன்னு உங்க கருத்தை பின்னூடம் இடுங்க. கண்டிப்பாக இது ஒரு ஆரோகியமான விவதமாக வளர வேண்டுமென்று ஆசை படுறேன்.
சினிமா?
தொலைகாட்சி?
மதம்?
சாதி?
கல்வி?
ஒழுக்கம்?
தனிமனித ஒழுக்கம்?
வாழ்வியல் முறை?
சமுக கட்டமைப்பு?
அரசியல்?
வேற ஏதாவது?

Labels:
கலாச்சாரம்,
சமுகம்,
சிந்தனை
UAE வாசகர்களுக்கு மட்டும் - The Surplus Collector
Tuesday, 16 June 2009
உங்களுக்கு தேவைபடாதது இன்னொருவருக்கு பொக்கிஷியமாகவும் இருக்கலாம்
நீங்கள் இருப்பிடம் அல்லது அலுவலகம் மாற்றும் போதும் உங்களூக்கு தேவையில்லாத பொருட்களை ( furniture, kitchenware, toys, cods, stationary, appliances, tv’s, fridges, speakers, desks, tables, chairs, big items, all kind of clothing etc) எடுத்து செல்ல இந்த கைபேசியை அழைக்கவும். 050 197 4045
THE SURPLUS COLLECTOR என்ற அமைப்பு இவற்றை குறைந்த ஊழிய வேலை ஆட்களுக்கு (LOW INCOME LABOURS) வழங்குகிறது.
ஊங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரிய படுத்துங்கள்.
இந்த வலைதலத்தையும் ஒரு முறை பார்த்துடுங்க - THE SURPLUS COLLECTOR
நன்றி வணக்கம்.
விஜயின் வீடு......................
Monday, 15 June 2009
என்ன ஒரு அழகான வீடு
நீங்களும் ஒரு முறை பார்த்துட்டு சொல்லுங்க
பொரும்பாலும் என்னோட பதிவுகளில் ஒவ்வொரு
படத்தின் கீழும் எதாவது எழுதுவேன் ஆனா
இங்க எழுத வார்த்தையே கிடைக்கலங்க.
எப்படி இருந்ததுங்க இது தான்
டாக்டர். விஜய் மல்லய்யா வீடு
வயதான வாலிபர்
எப்படி இருந்ததுன்னு பின்னூடம் போடுங்க
உலகின் பழமையான அபார்ட்மெண்ட் நகரம் (skyscraper city)
ஷிபம் (shibam) என்ற நகரம் ஏமன் நாட்டில் இருக்குங்க.
இந்த நகரத்தோட சிறப்பு என்னவென்றால். முழுக்க முழுக்க
களிமன்னால் கட்டபட்ட நகரம். அமாங்க அதாவது reinforceed concrete
கண்டுபிடிபதற்க்கு 400 வ்ருடங்களுக்கு முன் கட்டபட்ட நகரம்.
(முதன்முதலில் reinforced cocrete பயன் படுத்தியது கிபி. 1874)
இந்த நகரம் 2000 வருடங்களாக இருந்தாலும் இப்ப இருக்குற
கட்டிடம் எல்லாம் 500 முதல் 600 வருட பழமையானவை.
அப்படி என்ன சிறப்புன்னு கேட்டிங்கன்னா இந்த கட்டிடங்கள் 5 முதல் 16
மாடி கட்டங்கள் வரை அந்த காலத்துலேயே கட்டி வாழ்ந்திருக்காங்க.
ஏதோ ஒரு கட்டிடம் ரெண்டு கட்டிடமுன்னு நினைகாதிங்க இதுல
மொத்தம் 500க்கும் மேற்பட்டகட்டிகள் இருக்கு.
அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு தளத்திலும்
குறைந்தபட்சம் 2 அபார்ட்மெண்ட் இருக்குங்க.

இந்த படம் 1950களில் எடுக்கபட்ட படம்.

கிபி 1839லிருந்து 1967வரை britishன் ஆட்சிக்கு உட்பட்டு இருந்ததுங்க
இந்த படம் சுதந்திரம் கிடைத்த பொழுது ந்டுக்கபட்ட படம்.

இதுதாங்க மொத்த நகரத்திம் தோற்றம்.

"Manhattan of the desert"ன்னு சொல்லுங்க.

இந்த கட்டிடங்களின் சுவர்கள் அடியில் 5 - 6 அகலமும்
மேலே போகபோக குறைந்தும் கணபடுதுங்க.

2008 வந்த வெள்ளத்தினால் ரொம்ப சேதம் அடைந்ததுங்க.

இந்த நகரம் UNESCOவால் கலாச்சார
சின்னமாக பாதுகாக்க படுகிறது.
அப்படுயே இந்த வீடியோவையும் பார்த்துடுங்க.
Labels:
கட்டுமாணம்
நான் ரசித்த துபாய் (Dubai Bus) - 4
Saturday, 13 June 2009
துபாயில் வேலை பாக்குறேன்னு சொன்னாலே நம் அனைவருக்கும்
நியாபகம் வருவது வெற்றி கொடி கட்டு படத்தின் பார்த்திபன் வடிவேலு காமடி தான்
அதுல பார்த்திபனை வடிவேலு துபாயில் எங்க இருந்ததாக கேப்பார்.
அதுக்கு பார்த்திபன் துபாய் பஸ்டாண்டு பக்கத்துலன்னு சொல்வார்.
அந்த படம் எடுத்தப்ப துபாயில் பஸ்டாண்டு இருந்ததோ இல்லையோ
இப்போ விதவிதமான நூற்றுகணக்கான பஸ்ஸும் பஸ்டாப்பும்,
பயண செலவை கணிசமாவே குறைச்சிருக்கு.
துபாயில் இந்த பேருந்து பயணமும் என்னை வெகுவாகவே கவர்ந்ததுங்க.

இதுதாங்க பர்துபாய் பேருந்து நிலயம். இது பக்கத்துல தான் என்னோட
இருப்பிடமும். யார் என்னை துபாயில் எங்க இருக்கேன்னு கேட்டாலும்
துபாய் பஸ்டாண்டு பக்கத்துலன்னு சொல்ல வேண்டியத இருக்கு.

இதுதாங்க DUBAI BUS. ஆமாங்க எல்லா பஸ்ஸும் ஏசி பஸ்தாங்க.
இல்லன்னா இந்த வெய்யில்க்கு எந்த வண்டியிலும் ஏற முடியாதுங்க.

அமாங்க DOUBLE DECKER BUSதாங்க. பொரும்பாலும் பக்கத்து
அமிரகமான சார்ஜாவுக்கும் துபாயில் சில ரூட்டுக்கும் போகுதுங்க.
முதல் ஏசி பஸ்டாப் இங்க தான் அமைச்சத சொல்றாங்க.
இந்த ரிசிஷனுக்கு அப்புறம் அவ்வளவா கூட்டம் இல்லாத
மாதிரிதாங்க தெரியுது (விழாயன் மற்றும் வெள்ளி நீங்களாக)

இது அபுதாபி மாதிரி பக்கத்து அமிரகத்துக்கு போற பஸ்ஸுங்க.

லண்டன்ல இருக்குற அதே BIG BUS தாங்க இங்கேயும்
சுற்றுலா பயனிகளை கவர்வதற்காக.

இது AIRPORT BUSங்க சில நேரங்களில் இந்த வண்டி மூலம் தான்
விமானத்தில் ஏற முடியுங்க இதுல உக்காருவதற்க்கு 5 இல்ல 10 சீட்டுதாங்க
இருக்கும். ஏன்னா பயன நேரம் 10 நிமிசத்துக்கும் குறைவுங்க.

இதோட பேரு WONDER BUS இதுவும் சுற்றுலா பயனிகளை
கவர்வதற்காக தாங்க. இதுல் என்ன விசேசமுன்னா
இது நீரிலும் போகும் நிலத்துலையும் போகுங்க.

இதோட பேரு WATER BUS எனக்கு ரொம்ம புடிச்ச பஸ்ஸுங்க ஏன்னா ரோடு
மூலமா நீங்க ஒரு மணி நேரம் ஆகும் தூரம் இதுல 10 நிமிசத்துல போயிடலாங்க.

இது CATMARAN வகையை சார்ந்ததுங்க. அதாங்க கட்டுமரம்
வகையை சார்ந்தது. இந்த வகை படகையும் இந்த வார்தையும்
உலகிற்க்கு குடுத்தது தமிழர்கள் தாங்க.

இந்த மாதிரியான பஸ் இருக்கானு தெரியல
ஆனா நல்லா இருக்கேன்னு போட்டிருக்கேன்
எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.
முந்தைய மூன்று பதிவுகளுக்கு கீழே கிளிக் பன்னுங்க.
அமிரகம்/வளைகுடாவிருந்து குறைந்த செலவில் (Rs.1.35/Min) இந்திய தொலைபேசிக்கு பேசுவது எப்படி?
Friday, 12 June 2009
குறிப்பாக அமிரகத்தில் என்ன பிரச்சினை என்றால் இங்க இருக்குற தொலைதொடர்பு நிறுவனம் (etisalat) பெருபாண்மையான voip தலங்களுக்கு தடை விதித்து இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் பெருபாண்மையானோர் வீட்டில் கனினீ மற்றும் இணைய வசதி/விவரம் இல்லாததால் இந்த தகவல் ரொம்ப உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இதற்க்கு தேவையானவை:
01. Computer with internet, mic and headphone/speakers (இல்லாதவங்க நெட் சென்டர்ல இருந்தும் பேசலாம்)
02. gmail account with gtalk software.
03. பேசபோகும் நபரின் தொலைபேசி/கைபேசி எண்.
04. credit card/debit card. (கடன் அட்டை/ வங்கி அட்டை)
அதெல்லாம் சரி இதுல இந்தியாவுக்கு அழைப்பதால் எவ்வளவு கட்டணம் தெரியுமா - $0.029(அதாவது நிமிடத்திற்க்கு இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் முப்பதி ஏழு காசுகள்)
முதலில் gtalkல் sign-in ஆக வேண்டும்.
அடுத்து gtalkல் உள்ள +Add யை கிளிக் செய்து service@gtalk2voip.com என்ற முகவரியை சேர்கவும்.
அதில் வரும் லிங்கை கிளிக் செய்தால் கீழே உள்ள படம் போன்ற விண்டோ வரும்.
அதில் buy credit யை கிளிக் செய்யவும் அதன் பின் எவ்வளவுக்கு வேண்டுமோ சார்ஜ் செய்து கொள்ளவும்.
உங்கள் வங்கி/கடன் அட்டை மூலம் பணம் செலுத்தவும்.
பிறகு மீண்டும் +add பொத்தானை அழுத்தி நீங்கள் அழைக்கவிருக்கும் தொலைபேசி/கைபேசி எண் @gtalk2voip.com என்பதை add செய்யவும்.
உதரணம்: உங்களுடைய எண் 00919952439355 என்றால் நீங்கள் 00919952439355@gtalk2voip.com என்ற முகவரியை உங்கள் லிஸ்டில் add செய்து கொள்ளவேண்டும்.
Labels:
தகவல்
Subscribe to:
Posts (Atom)