தண்ணீர் தேசம் - கவிஞர் வைரமுத்து.
Monday, 4 May 2009
ரொம்ப நாளைக்கு பிறகு இப்பதான் எனக்கு படிக்க கிடைச்சது
என்னோட நிறைய கேள்விகளுக்கு இதுல விடை கிடச்சது - அவற்றில் சிலவற்றை உங்களோட பகிர்ந்துகளாமுனு ஆசைபடுரேன்.
உன் ஆசைக்கு நான் தானா கிடைச்சனு கேக்றிங்களா? நாம வாழ்கைல எவளவோ நேரத்தை வேஸ்ட் பன்ரோம் அதுல இந்த பதிவை படிக்குற நேரத்தையும் சேர்த்துக்கங்க.
அழகிய காதல் கதையில் வழ்கையின் யாதார்ததையும் நாயகியின் தேவையில்லாத பயத்தையும் எப்படி போக்குகிறான் என்பதே கதை.
ஆனால் இன்றைய உலகில் பெரும்பாண்மையானோர் நாயகியின் ஆரம்பகட்ட மனநிலையை ஒத்தே உள்ளனர். அதாவது நமக்கேன் நாம் தான் நன்றாக உள்ளோமே நாம் ஏன் நம் சந்தோசத்தை இழக்கவேண்டும் என்றே நினைக்கின்றனர்.
உன்மையில் சந்தோசத்தை இழப்பது அல்ல. வெய்யிலில் அளைந்த பின் கிடைக்கும் நிழலை போன்றது கஷ்டத்துக்கு பின் கிடைக்குற சந்தோசம்.
கஷ்டம்னா என்ன கஷ்டத்துக்கான வரையரை யோசிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்குங்க ஏன்னா ஒவ்வொருத்தருக்கும் இது மாறுபடுது. ஒருத்தன் கஷ்டம்ன்னு நினைக்கிறது இன்னொருத்தனுக்கு சுலபம இருக்கு அதனால க்ஷ்டத்தை பத்திவிட்டுட்டு தலைப்புக்கு வருவோம்.
”தேகம் வன்மை செய்து இதயம்
செம்மை செய்யும் பயிற்ச்சிகள் இல்லை”. - எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.
”பனம் ஒரு விசித்திரமான
மாயமான். அது தன்னை
துரத்துபவனுக்குக்
குட்டி போட்டுவிட்டு
ஓடிகொண்டேயிருக்கிறது
குட்டிகளில் திருப்தி அடையாத
மனிதன் தாய் மானைப் பிடிக்கும்
வேட்டையில் தவிக்கத் தவிக்க
ஓடி செத்து போகிறான்” - நாமும் நம் வாழ்நாளில் பொரும் பகுதி பணத்திற்காக ஓடுகிறோம். என்றாவது நின்று திரும்பி பார்த்து நாம் இழந்த தருணங்களை நினைத்தது உண்டா என்றால் பெரும்பாலும் இல்லை.
” பெண்மீது காதலும் வெற்றிமீது
வெறியும் இல்லையென்றால்
இன்னும் இந்தபூமி பிறந்த
மேனியாகவே
இருந்திருக்கும்”. நூற்றுக்கு நூறு நிஜம். காதலும் வெற்றியும் இலாவிட்டால் நாமும் விலங்குகள் போல் இறுந்திருப்போமோ?
” தோல்வியும் எதிர்பாராமல் வருவதால்
மனிதன் அதன் முன்நிமிஷம் வரைக்கும்
முயற்சியில் இருக்கிறான்”. இன்னொரு விசயம் என்னவென்றால் தோல்வி என்பது இல்லாவிட்டால் வெற்றியின் மதிப்பே இருக்காது. ஆனால் ஒரு சிலரால் மட்டும் தான் தோல்வியை வெற்றிக்கான் ஆரம்பமாக ஏற்று கொள்ளமுடிகிறது அது தான் அனுபவமும் பக்குவத்தின் கலவையா இல்லை வள்ர்ந்த சூழலா தெரியவில்லை.
இதுபோல் பல இடங்களில் என்னை கவர்ந்தது இந்த நூல்
4 comments:
வைரமுத்து வின் எல்லா கவிதை புத்தகங்களுக்கும் இதே போல் பதிவு போடவும்.
கண்டிப்பாக முயற்சிக்கிறேன்
இதனை முதன் முதலில் வாசித்த போது நல்ல வரிகளுக்கு அடிக்கோடிடப் போய் கிட்ட தட்ட முழு புத்தகத்துக்குமே அடிக்கோடிட வேண்டியதானது....\
பெண்மீது காதலும் வெற்றிமீது
வெறியும் இல்லையென்றால்
இன்னும் இந்தபூமி பிறந்த
மேனியாகவே
இருந்திருக்கும்
நண்பர்களுக்கு கடிதம் எழுத்தும்போது நல்ல கவி வரிகளாஇ குறிப்பிடுவது என் வழக்கம்..... பலமுறாஇ இந்த வரிகள் குறிப்பிடப்பட்டவை
//இதனை முதன் முதலில் வாசித்த போது நல்ல வரிகளுக்கு அடிக்கோடிடப் போய் கிட்ட தட்ட முழு புத்தகத்துக்குமே அடிக்கோடிட வேண்டியதானது....//
எனக்கும் அதே நிலைதான்.
Post a Comment