இதையும் படிச்சுட்டு போங்களேன் - தொடர் பதிவு.

Friday, 29 May, 2009

இது ஒரு தொடர் பதிவு...


என்ன செய்ய இந்த கொடுமையும் நீங்க அனுபவிச்சிதானே ஆகனும்..........

ஆனா தப்பு என் மேல இல்ல நன்பர் கண்ணாவோடது.
-------------------------------------------------------------------------------------------
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
பெயர் காரணம் தெரியாது. ஆன பிரதீப் என்ற பேர் எனக்கு ரொம்ப பிடிக்கும் (எனக்கே பிடிக்களனா வேற யாருக்கு பிடிக்க போகுது).

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இப்போதாங்க.......... (என்ன பதில் எழுதுறதுன்னு தெடியாம)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு மட்டும் தான் பிடிக்கும்...... (ஏன்னா என் கையெழுத்து அப்படி)

4).பிடித்த மதிய உணவு என்ன?
பிடிகாததுன்னு எதுவும் கிடையாது அதனால எல்லா உண்வும் பிடிக்கும்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அதுவா feel ஆகுங்க............(அதனால குறிபிட்டு சொல்ல முடியாது.)

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
ரெண்டுதாங்க ஏன்னா எங்க ஊர்ல ரெண்டுமே இல்லீங்க.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
யாரு என்பதை பொருத்து...............
எங்கே என்பதை பொருத்து...............

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: பதிவை படிக்க ஆளே இல்லனாலும் பதிவிடறது.
பிடிக்காத விஷயம் : அதிக பிழையொட பதிவிடறது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம்: கொபத்தை உடனே மறந்து விடுவது.
பிடிக்காத விஷயம் : எதுவும் இல்லிங்க.
(பதில்ல எந்த உள்குத்தும் இல்லிங்க)

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
38 நாளே ஆன என் தங்கையின் முதல் பெண் குழந்தை..

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
நீல நிற டீ ஷர்ட், கருப்பு நிற ஷார்ட்ஸ்............

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
//எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்//

சமிபத்தில் நான் அதிக தடவை கேட்ட பாடலும் இதுதான்.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு...........

14.பிடித்த மணம்?
புதிய பத்தகத்தின் வாசம்.

15.நீங்க அழைக்கப் போகும் ஏன் உங்களுக்கு பிடித்த உள்ள. அவரை அழைக்கக் காரணம் என்ன ?
இதுக்கு மட்டும் பிறகு பதில் சொல்றேங்க.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
பதிவுலக அருமை நண்பர் கண்ணாவின் புலிகளின் வெற்றி
என்ற பதிவு.

17. பிடித்த விளையாட்டு?
செஸ்.

18.கண்ணாடி அணிபவரா?
ஆமாங்க.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
காமடி மற்றும் பொழுதுபோக்கு திரைபடம்

20.கடைசியாகப் பார்த்த படம்?
ஜோதா அக்பர்.

21.பிடித்த பருவ காலம் எது?
குளிர் காலம் தாங்க....... எதோ ஒன்னு துனை இருக்கும் அட்லீஸ்ட் போர்வையாவது.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
ஜல தீபம் .......... போனவாரம் தான் ஆரம்பிச்சேன்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
வாரத்துக்கு ஒரு முறை

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சப்தம் : death beat............... அதாங்க பரை
பிடிக்காத சப்தம்: குரட்டை ...................

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
வேற எங்க.. துபாய் மற்றும் ரியாத் தான்!

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அப்படிதான் நம்புறேன்................ என்ன செய்ய யாரும் ஏத்துக்க மாட்டேன்னுராங்களே.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தாயின் கண்ணீர்

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
பிடிவாதமும் கோபமும் தான்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
மைசூர்தாங்க.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
போராளியா அல்லது குறைந்தபட்சம் பள்ளி ஆசிரியரா.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
பின்னூடத்தில் மின்னஞ்சல் முகவரி அனுப்புங்க தனியா சொல்றேன்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
ஒருமுறைதான் வாழ்ந்து பார்................

18 comments:

கடைக்குட்டி 29 May 2009 at 8:01 PM  

//2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இப்போதாங்க.......... (என்ன பதில் எழுதுறதுன்னு தெடியாம)//

யப்பா!! கண்ணில் நீர் வர சிரித்தேன்.... சூப்பர்.. இதுவரைக்கும் யாரும் (நான் பார்த்த வரையில்) சொல்லாத பதில்

கடைக்குட்டி 29 May 2009 at 8:02 PM  

//10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
38 நாளே ஆன என் தங்கையின் முதல் பெண் குழந்தை..
//

கண்டிப்பா வருந்த வேண்டிய விஷயம்..

ஆமா குட்டி பாப்பாக்கு என்ன பேரு ??

கடைக்குட்டி 29 May 2009 at 8:03 PM  

//14.பிடித்த மணம்?
புதிய பத்தகத்தின் வாசம்.//

ஆமாங்க.. நல்லா இருக்கும்ல... நல்ல ரசனை :-)

கடைக்குட்டி 29 May 2009 at 8:05 PM  

//27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தாயின் கண்ணீர்//

கண்டிப்பா...

கடைக்குட்டி 29 May 2009 at 8:07 PM  

2 ரொம்ம்ம்ம்ம்ம்ப ரசிச்சேன் :-)

நல்லா எழுதி இருக்கீங்க.. தொடர வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா 29 May 2009 at 11:04 PM  

நல்ல எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்.

// பிடிக்காத விஷயம் : அதிக பிழையொட பதிவிடறது.//

சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இடுகையைப் (post) எழுதியபின் உங்க பதிவில் (blog) உடனே போட்டு விடாதீர்கள். ஒரு முறைக்கு இரு முறை படித்துப் பாருங்கள் உங்களுக்கு உங்கள் தவறுகள் புரியவரும். பலரின் வலைப்பங்கங்களையும் படியுங்கள் தவறுகள் குறைய வாய்ப்பு உண்டு.

//27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தாயின் கண்ணீர்//

சரியாகச் சொன்னீர்கள். தாயை நேசிப்பவர்களால் மட்டும் தான் இவ்வாறு சொல்ல இயலும்.

நசரேயன் 30 May 2009 at 12:02 AM  

இந்த பின்னூட்டம் பதிவை படிச்சதுக்கு

Kanna 30 May 2009 at 7:04 AM  

பிரதீப். இவ்ளோ ஸ்பீடா..?! நானெல்லாம் 2 - 3 நாள் கழிச்சிதான் போட்டேன்..

//27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தாயின் கண்ணீர்//

உண்மையில் மனதை என்னவோ செய்து விட்டது....

நேர்மையான பதில்கள்...

Kanna 30 May 2009 at 7:07 AM  

//9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம்: கொபத்தை உடனே மறந்து விடுவது.
பிடிக்காத விஷயம் : எதுவும் இல்லிங்க.
(பதில்ல எந்த உள்குத்தும் இல்லிங்க)//

ஹா..ஹா...

பிடிக்காத விஷயத்தை பத்தி சொல்ல அவ்ளோ பயமா..?

ரசித்தேன்

Kanna 30 May 2009 at 7:08 AM  

//எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்//

நல்ல வரிகள்...எனக்கும் பிடித்தமான பாடல்

:)

Kanna 30 May 2009 at 7:09 AM  

//16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
பதிவுலக அருமை நண்பர் கண்ணாவின் புலிகளின் வெற்றி என்ற பதிவு. //

நன்றி..நன்றி..நன்றி. பிரதீப்..

Kanna 30 May 2009 at 7:11 AM  

//30.எப்படி இருக்கணும்னு ஆசை?
போராளியா அல்லது குறைந்தபட்சம் பள்ளி ஆசிரியரா.//

எதிர்பார்க்கவே இல்லை இந்த பதிலை...

அருமை..

Kanna 30 May 2009 at 7:12 AM  

//31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
பின்னூடத்தில் மின்னஞ்சல் முகவரி அனுப்புங்க தனியா சொல்றேன்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
ஒருமுறைதான் வாழ்ந்து பார்................//

ரசிப்பிற்குரிய பதில்கள்..

நன்றி பிரதீப்...

உங்களை பற்றி கொஞ்சம் அறிய முடிந்தது..

கனககோபி 30 May 2009 at 2:30 PM  

//death beat............... அதாங்க பரை//

இதுக்குப் பேர் தான் கொலை வெறி...

கலையரசன் 30 May 2009 at 7:03 PM  

//ஒருமுறைதான் வாழ்ந்து பார்..//
சூப்பர் கலக்கிட்டீங்க போங்க!
வாழ்ந்து பார்த்துடுவோம்!

கலையரசன் 30 May 2009 at 7:05 PM  

//எப்படி இருக்கணும்னு ஆசை?
போராளியா//

இவனுக்குள்ளேயும் என்னவோ இருந்துருக்கு பாரேன்!

கலையரசன் 30 May 2009 at 7:08 PM  

//அவரை அழைக்கக் காரணம் என்ன ?
இதுக்கு மட்டும் பிறகு பதில் சொல்றேங்க.//

இன்னும் சொல்லவே இல்ல?
ரஜினி பட ரீலீஸ் போல வச்சிருக்க...

அது ஒரு கனாக் காலம் 1 June 2009 at 12:27 PM  

பதில் ஷார்ட்டா இருந்தாலும் ...ஷார்ப்பா இருந்தது.

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP