இந்தியன் - அப்படின்னா என்ன அர்த்தம்?
Wednesday, 13 May 2009
எனக்கு இன்னைய வரையிலும் தெரியலிங்க அல்லது புரியிலிங்க.
இந்தியாங்கிறது ஒரு பெரியநாடு. இங்க பிறந்ததால் நாம் அனைவரும் இந்தியர். இனம் மதம் மொழியால் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளுன்னு சொல்றாங்க. இந்தியாவின் பெருமை வேற்றுமையில் ஒற்றுமைன்னு சொல்ராங்க.
உண்மையில் யோசிச்சா ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள் வருது ரொம்ப குழப்பமா இருக்கு யாராவது தெளிவு படுத்துங்களே.....................
ஒரு பள்ளிகூடம் எடுத்துகிட்டிங்கனா எல்லாருக்கும் ஒரே சிருடை ஒரே விதிமுறை ஒரே முதன்மை பயிற்றுமொழி எல்லாம் ஒற்றுமையா இறுக்கும் போதே நம்மால ஒன்றுபட பெரும்பாலும் முடியறது இல்லை. அப்புறம் எப்படி இந்தியனா மட்டும் வேற்றுமையில் ஒற்றுமைகான முடியும்
இரு வேறு மொழியோ இரு வேறு கலாசரமோ இறு வேறு கருத்துள்ளவர்களோ சந்திச்சா அங்கு வாக்குவாதம் தான் தோன்றுமே தவிர வளர்சி இருக்காது. அப்படி அங்க வளர்சி தோன்றிய தென்றால் அதுதான் முற்றிலும் பன்பட்ட நிலை. எனக்கு தெரிஞ்சவரை நம்மில் பெருபாண்மையானவருக்கு சுயமா சிந்திக்கிற திறனும் முதிர்சியும் இல்லனுதான் தோனுது. இல்லனா சினிமால நடிச்சிட்டா மக்களை வழி நடத்திடலாமுன்னு இந்தனை பேர் கிளம்பி இருக்க மாட்டாங்க இல்லை. அப்புறம் எப்படிங்க பல மொழி பல இன பல கலாசார மக்கள் ஒற்றுமையா இருக்க மற்றும் முன்னேறமுடியும்
இப்ப நாடாளுமன்ற தேர்தல் முடிஞ்சிருக்கு கண்டிப்பா எந்த கட்சிக்கும் பெருபாண்மை கிடைக்காது. ஏன்னா உங்களுக்கே தெரியும் பெருபாண்மையான மாநிலத்துல மாநில கட்சிகளின் (மாநில காலாசரத்துக்குகேற்ப வளர்ந்த கட்சி நல்லா கவனிங்க மாநில தேசிய இல்லை) ஆதிக்கமே அதிகமா இருக்கு இன்னும் வருங்காலத்துல ஒரு மாநிலா கட்சியோட வாக்குகள் அளவே இப்ப தேசிய கட்சின்னு சொல்லிக்குற கட்சிகள் பெருமுன்னு நினைக்குறேன். அப்படி இருக்கும் போது தேசிய அடையாளமுன்னு ஒன்னு எதுக்கு?
இந்தியன் அப்படிங்கறதுல என்ன பயன்னு பார்தா ஒன்னும் இல்லனுதான் தோனுது. பக்கத்து மாநிலத்துகாரனே நமக்கு தண்ணி தராதப்ப ஒரு வடக்கத்தியனோ(இந்திய பிரதமர்) வேற்றுநாட்டவளுக்கோ (யாருனு சொல்ல தேவையில்லைன்னு நினைக்குறேன்) எப்படி நம்ம கோரிக்கை (தமிழ்யீழம்) புரியும். முதல் தடவையா நான் இந்தியன்னு சொல்லிக்குறதுல ரொம்ப அவமானமா இருக்குங்க.......................
இந்தியா இந்தியன்னு பொய்யை சொல்லி சொல்லி பிள்ளைகளை வளக்குறதால அவங்களும் குழம்பி பெருபாண்மையானோர் சுயநலவாதியா ஆயிட்டாங்க. எல்லாரும் நமக்கு எதுக்கு ஏன் வம்பு நம்ம வேலையை பார்போமுன்னு இருக்காங்களே. இல்லனா இப்படியொரு கொடுர இன படுகொலை நடக்கும் போது நாம தொலைகாட்சி மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளை ரசிக்க முடியுதுனு தெரியளங்க. தெருவுல இறங்கி போராடலனாலும் பிரச்சனை என்னன்னு தெடிஞ்சுக்க கூட விருப்ப படலன்னு நினைக்கும் போது இளைய தலைமுறையை நினைச்சு மனசு ரொம்ப வலிக்குதுங்க.
இன்னும் பகிர்ந்துக்க நிறைய இருக்கு........................
ஆனா இப்படி புலம்புறதைவிட என்ன தீர்வுன்னு யோசிங்க பிளீஸ்.....................
மறுபடியும் அடுத்த பதிவுல ச்ந்திக்குறேன்....................
நன்றி வணக்கம்.
உங்களோட கருத்து என்னவா இருந்தாலும் பின்னுடமா போடுங்க.
ஏன்னா அரோகியமான விவாதம்தான் நம்மளை அடுத்த நிலைக்கு உயர்த்தும்.
14 comments:
நண்பரே நாமெல்லாம் இந்தியானா அல்லது தமிழனா என்று மிக அருமையாக விளக்கியுள்ளார்கள் சகோதரி தாமரை. அவர்கள் பேசியதை சிவாஜி டிவி . காம் சென்று பார்வையிடுக்கள்.
அன்புடன்
மகாராஜா
தகவலுக்கு நன்றி
சகோதரி தாமரை - ஆண்மையுள்ள பெண்மனி
நம் தலைவர்கள் - ????????????????
நம்மைப் போலவே பலர் இருக்கின்றனர். வாய்ப்புக்காக காத்திருகின்றார்கள்.
கண்டிப்பாக
en manathil ullathai appadiye ezhuthiyirukkireerikal
இந்தியனுக்கு அர்த்தம் ஏதும் இல்லீங்க.
தமிழன் என்ற ஒரு இனம் இருக்குது, இந்தியன் என்ற இனம் இல்லைனு கவிஞர் தாமரை அழகாகச் சொல்லி இருக்கி்ன்றார்.
சரியா சொன்னிங்க
முடிந்தால் இந்த கட்டுரையை அடுத்தவங்களுக்கு தெறிய படித்துங்க.
Please read this: Escape from India
இந்தியா என்பது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது உருவாக்கப் பட்டு ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரநாடு என்று பிரகடனப்படுத்தப் பட்ட நாடு.
நாடு என்று சொல்லப் பட்டாலும் இது உண்மையில் ஒரு கண்டம் --,தென்னாசியக் கண்டம் .
இதன் மக்கள் தொகை ஒரு கண்டமான ஐரோப்பாவை விட அதிகம் .
ஒரு விதத்தில் இந்தியாவை ஐரோப்பாவிற்கு ஒப்பிடலாம்.
ஐரோப்பா மாதிரி இங்கு பல மொழிகள் பேசும் பல கலாச்சாரம் கொண்ட தேசிய இனங்கள் உள்ளன.
ஐரோப்பாவில் வெள்ளை நிறத்தவர்கள் ,இங்கு பிரவுன் நிறத்தவர்கள்.
ஐரோப்பாவில் ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் ஒவ்வொரு நாடு உண்டு.
அத்துடன் கடந்த பல வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பை உண்டுபண்ணி அதில் பல ஐரோப்பிய நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.
இப்படி தனிநாடாக இருப்பதில் உள்ள நன்மைகள் இவைகள் என்று சொல்லலாம்
ஒவ்வொரு இனமும் தமது மொழி ,இனம் என்ற அடையாளங்களை மற்றைய இனத்தவர்களின் மேலாதிக்கத்தில் இருந்து காப்பாற்றி கொள்ள முடிகிறது.
தமது பொருளாதார சமூக நலன்களையும் திட்டம் போட்டு முன்னேற்றம் செய்கிற வாய்ப்பையும் தமக்கென்று ஒரு ராணுவம் ,வெளியுறவுக் கொள்கைகள் என்பனவும் வைத்திருக்க முடிகிறது. .
ஒன்று சேர்ந்து இந்தியா என்று இருப்பதிலும் சில நன்மைகள் உள்ளன.
வர்த்தகம் ,வேலைவாய்ப்பு ,சுலபமாக ஒரு பகுதியில் இருந்து மற்றைய பகுதிக்கு பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்யக் கூடிய ஒரு நன்மை.நயன்தாராவும் நமீதாவும் தமிழ் நாட்டுக்கு வேலைவாய்ப்பு தேடி வந்துள்ள படியால் அவர்களுக்கும் நன்மை ,எங்களுக்கும் நன்மை --நான் சொல்வது குறிப்பாக நமது தமிழ்ப் பெருங்குடியைச் சேர்ந்த ஆண் மக்களுக்கு
ஒரு பெரிய நாட்டின் பகுதியாக இருக்கும்போது மக்களுக்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கிறது.ஆனால் இந்த உத்தரவாதம் நமது தமிழ் மீனவர்களுக்கு கிடைக்கவில்லை.இந்த விஷயத்தில் இந்திய நாடு தனது குடிமக்களுக்கான கடமையைச் செய்யத் தவறி விட்டது.
எதிர்காலத்தில் நாம் ஐரோப்பிய நாடுகள் மாதிரியான ஒரு நிலையை எடுத்து தனி நாடுகளாகப் பிரிந்து ,அதே சமயம் இந்திய ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கலாம் அந்த ஒன்றியம் ,ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மாதிரி பொதுவான பாஸ் போர்ட் வைத்திருக்கலாம் ,ஒரு இடத்திலருந்து இன்னொரு இடத்துக்கு வேலைக்காகவோ வர்த்தகத்துக்காகவோ போகவும் மற்றைய இடங்களின் வாழவும் தடை இல்லாமலும் இருக்கும். அத்துடன் ஐரோப்பாவில் யூரோ என்ற பொது நாணயம் இருப்பது மாதிரி இங்கும் ரூபாய் என்ற பொது நாணயம் இருக்கும்.
அத்துடன் தமக்கு தனி ராணுவம் இருந்தாலும் ,பொதுவான நேட்டோ மாதிரி ஒரு அமைப்பை இந்திய ஒன்றியத்தில் உள்ள எல்லா நாடுகளின் பாதுகாப்புக்கும் உருவாக்கலாம் .ஐரோப்பிய கோர்ட் மாதிரி அதிகாரம் மிக்க சக்தி வாய்ந்த அமைப்பை உருவாக்கி ,காவிரி ,முல்லைப்பெரியாறு மாதிரியான எல்லைத் தகராறுகளை தீர்க்கலாம் ,கட்டுப்படாத நாடுகளுக்கு நஷ்ட ஈடு கேட்டும் வர்த்தக ரீதியுலும் தண்டனை கொடுக்கலாம்.
அத்துடன் இலங்கை,மாலைதீவு நேபாளம் பூடான் போன்ற குட்டித் தென்னாசிய நாடுகளையும் இந்த ஒன்றியத்தில் இணைத்து கொள்ளலாம்
இப்படி செய்தால் தமிழர்களுக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்
தமிழ் நாடு ,தமிழ் ஈழம் என்று இரண்டு நாடுகள் கிடைக்கும்
என்ன எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்கிறீர்களா?
சொல்லமுடியாது.
எதிர்காலத்தில் இது சாத்தியம்தான்.
உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் தான் இனி யார் கேட்டாலும் நான் தமிழன் என்று தான் கூறுவேன்.
நீங்க சொன்ன விசயங்கள் அனைத்தும் நூறு சதவிதம் நான் யோசிச்ச விசயம் தான்.
அதனால உங்களோட கருத்தை (என் கருத்து கூட அதே தான்) என்னோட 25வது பதிவா பதிக்க விரும்புறேன்.
மிக்க நன்றி.
இந்தியா, இந்தியன் எல்லாம் ஒரு போத மாதிரிங்க. இந்த போத தெளியாம இருக்கத்தான், இந்தி தேசிய மொழி (இந்தியாவுக்கு தேசியமொழி அப்படீன்னு ஒன்னுகிடியாதுனாலும், இந்திய அரசோட இணையதளத்துல இந்தி தேசிய மொழின்னு எழுதியிருக்கங்க...!!!), இந்தியாவின் மதம் இந்து மதம் அது, இது எல்லாத்தையும் புகுத்தியிருக்காங்க. மொழிப்பற்றும், இணப்பற்றும் சுத்தமா தொடச்சு இல்லாம பன்ற ஒரு கருவிதான் இந்தியா, இந்துமதம், இந்தி எல்லாம். தான் இந்துன்னு சொல்லிக்கிற பார்ப்பனர் அல்லாத ஒவ்வொருத்தருக்கும் ஒரு கேள்வி: உங்களோட குளதெய்வத்த பத்தி எந்த இந்து சாசுதிரம், தருமம் பேசுது? இது புரிஞ்சாலே இந்தியான்னா என்னானு புரிஞ்சுடும்க!
கொலைகாரன் என்று அர்த்தம்
கரட்டா சொன்னிங்க
Post a Comment