ஒரு சின்ன சர்வே - பெறிய விசயத்துகாக

Friday, 15 May 2009

விசயம் என்னன்னா நமக்கு ஏகபட்ட பிரச்சனைகளிருக்கு அதுல எதை ரொம்ப முக்கியமா நினைக்கறீங்க.


முதல்ல உள்ள பட்டியல் பிரச்சனைகள்.
இரண்டாவது உள்ளது காரணங்கள்.
மூன்றாவது உள்ளது தீர்வுகள்.

இதுல நீங்க என்ன செய்யனும்ன்னா ரொம்ப சுலபம். ஒவ்வொரு பிரச்சனைக்கு, காரணத்துக்கும் மற்றும் தீர்வுக்கும் ஒரு எண் ஒதுக்க பட்டுள்ளது. நீங்க பின்னூடத்தில நீங்க பிரச்சனையா நினைக்குற என்னை முதல்லையும் சிறிது இடம் விட்டு காரணத்துகான எண்னையும் சிறிது இடம் விட்டு தீர்வுக்கான எண்னையும் பதிவு செஞ்சா போதுங்க.


முதல பிரச்சனைகளை பார்போம்.
1. அரசு நிருவனம்/அலுவலகங்கள் பெரும்பாலும் சரியாக செயல்படாமை.
2. கல்வியின் தரம் மற்றும் வியாபரமயமாக்க பட்ட கல்விமுறை.
3. குடிநீர் பிரச்சனை மற்றும் சுகாதாரம் சீர்கேடு.
4. அரசியல் மற்றும் அரசாங்க உள்கட்டமைப்பு.
5. பெருபாண்மையான இளைய சமுதாயத்தினரின் சுயநல போக்கு.
6. இலங்கையில் நடக்கும் இனபடுகொலை.
7. தடம் மாறும் கலாசாரம் மற்றும் மேலைநாட்டு மோகம்.
8. சரியான தலைவர்கள் மற்றும் தலைமை இல்லாமை.
9. அத்யாவசிய பொருட்களின் விலை ஏற்றம்.
10. போதிய வேலை வாய்ப்பு இல்லாமை.


பிரச்சனைகான காரணங்கள்
1. அரசாங்க ஊழியர்களின் மெத்தன போக்கு.
2. ஊடகங்கள் (குறிப்பாக டீவி) பெரும்பாலும் சினிமாவையும் சினிமா பெருபாலும் கவர்சி மற்றும் ஆபாசத்தை சார்ந்திருப்பது.
3. தனியார்மையம் மற்றும் வியாபாரமயமாக்க பட்ட கல்வி.
4. அரசின் நிதி திட்டங்களுக்கு சரியாக சென்றடையாமை.
5. பிள்ளைகளின் விருப்பம் அறியாமல் அவர்களின் மேல் தினிக்கும் தொழிற்கல்வி.
6. அறம் அறியாமல் அரசால வரும் தலைவர்கள்.
7. மக்களிடம் போதிய விழிபுணர்வு இல்லாமை.
8. வாழ்கை முறையும் பொருளதார நெருக்கடியும்.
9. ஒற்றுமை இல்லாத சமுகம் (சாதி மததால் பிளவு பட்டிருப்பது)
10. தொல்வி பயம் மற்றும் நமக்கேன் என்கின்ற மெத்தன போக்கு.


தீர்வுகள்
1. கல்விமுறையில் போதிய விழிபுணர்வு மற்றும் மாற்றம் வரவேண்டும்.
2. சினிமா மற்றும் கேளிக்கைகளின் முக்கியதுவத்தை குறைக்க வேண்டும்.
3. அரசு ஊழியர்கள் மேல் வரும் புகார்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. தாய் மொழி பற்றும் தாய் மொழி கல்விக்கும் ஆதரவு மற்றும் அங்கிகாரம் அதிகரிக்க வேண்டும்.
5. தகுதியான திறமையான மற்றும் ஆளுமை நிறைந்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் மற்றும் அந்தந்த துரை சார்ந்த மற்றும் அனுபவம் (அதே துரையில்) உள்ளவர்கள் மந்திரியாக வெண்டும். உதரணத்துக்கு விவசாய துரை என்றால் ஒரு விவசாயி வர வேண்டும்.
6. வேற ஏதாவது.............


இதுல எதாவது விட்டிருந்தால் பின்னூடத்தில குறிபுடுங்க..........

இந்த சர்வே தேவையில்லாததுன்னு நினைச்சிங்கனா 49ஓ ன்னு பின்னூடம் போடுங்க.

நன்றி

வணக்கம்.

2 comments:

spr 15 May 2009 at 1:34 pm  

8 6 5

வனம் 15 May 2009 at 4:01 pm  

வணக்கம்

1 2 1

நன்றி
இராஜராஜன்

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP