யானை பலம்

Friday, 8 May, 2009

உண்மையும் கர்பனையும் கலந்த கதை.

நானும் என் நன்பனும் ஒரு நாள் கோயில் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது வழியில் பெறிய யானை ஒன்றை கண்டோம் என்ன ஆசிரியம் அவ்வளவு பெறிய யானையை ஒரு சிறு கயிற்றால் முன்னங்காலில் மட்டும் கட்டியிருந்தது. கடினமான சங்கலி இல்லை கூண்டு இல்லை வேறு எந்த தடையும் இல்லை இருந்தாலும் அந்த யானை தப்பிக்க முயற்சிக்காமல் எதோ ஒன்றுக்கு கட்டுபட்டு அங்கையே இருந்தது. என் நன்பன் அருகில் இருந்த யானை பாகனிடம் கேட்டான் இவ்வளவு பெறிய யானை எப்படி இந்த சின்ன கயிற்றுக்கு கட்டுபட்டு இருக்கிறதென்று

அதற்கு யானைபாகன் சொன்ன விளக்கம் எங்கள் இருவரையும் சில நிமிடம் சிந்திக்க மட்டும் அல்ல நிறைய விசயங்கள் உணரவும் வைத்தது. நாமும் பல நேரங்களில் அந்த யானையை போல் தான் உள்ளோம் என்று.

யானைபாகன் பதில்: அந்த யானை சின்ன குழந்தையா இருக்கும் போது இதே அளவுள்ள கயிரால் தான் கட்டியிருந்தோம் அப்ப அந்த யானையால அதை அறுத்தெறிந்து போக முடியாது. யானை வளர வளர அந்த கயிற்றை அறுக்க முடியாது என்ற நம்பிக்கையும் வளர்ந்து விடுகிறது.

அந்த யானை மட்டுமா நம்மில் எத்தனை பேர் அந்த யானையை போல் உள்ளோம் ?????????????

"YOUR ATTEMPT MAY FAIL, BUT NEVER FAIL TO MAKE AN ATTEMPT."

நமது முயற்சி தோற்கலாம், ஆனால் முயற்சிகாமல் மட்டும் இருந்துவிடாதீர்கள்.

மறக்காம பின்னுடம் போடுங்க (வாழ்த்துகள் மற்றும் வசைகள் வரவேற்க்கபடுகிறது)

3 comments:

அறிவே தெய்வம் 8 May 2009 at 6:25 PM  

மனதிற்க்கு யானைபலம் வரக்கூடிய உண்மை

வாழ்த்துக்கள்

அறிவே தெய்வம் 8 May 2009 at 6:26 PM  

kindly remove word verification

விஷ்ணு. 10 May 2009 at 10:54 AM  

எல்லாத்துக்கும் மனதே காரணம். நல்ல பதிவு.

// நமது முயற்சி தோற்கலாம், ஆனால் முயற்சிகாமல் மட்டும் இருந்துவிடாதீர்கள். //

முயற்சிகள் தோற்றால் வசை மொழிகள் வருங்கிற பயம் தான்.

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP