அநானியிடமிருந்து பெற்ற அற்புத தகவல்

Friday, 15 May 2009


நிஜமாலுமே நான் என்ன சொல்லனுமுன்னு நினைச்சேனோ அதை அப்படியே என்னோட இந்தியன் - அப்படின்னா என்ன அர்த்தம்? என்ற பதிவுக்கு பின்னூடமா சொல்லியிருந்தாரு ஒரு வார்த்தைகூட மாறாம..............

அதனால அந்த பின்னூடத்தை நான் 25வது பதிவா உங்களுக்கு சமர்பிகுறேன்.




”இந்தியா என்பது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது உருவாக்கப் பட்டு ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரநாடு என்று பிரகடனப்படுத்தப் பட்ட நாடு.

நாடு என்று சொல்லப் பட்டாலும் இது உண்மையில் ஒரு கண்டம் --,தென்னாசியக் கண்டம் .
இதன் மக்கள் தொகை ஒரு கண்டமான ஐரோப்பாவை விட அதிகம் .
ஒரு விதத்தில் இந்தியாவை ஐரோப்பாவிற்கு ஒப்பிடலாம்.
ஐரோப்பா மாதிரி இங்கு பல மொழிகள் பேசும் பல கலாச்சாரம் கொண்ட தேசிய இனங்கள் உள்ளன.
ஐரோப்பாவில் வெள்ளை நிறத்தவர்கள் ,இங்கு பிரவுன் நிறத்தவர்கள்.

ஐரோப்பாவில் ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் ஒவ்வொரு நாடு உண்டு.
அத்துடன் கடந்த பல வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பை உண்டுபண்ணி அதில் பல ஐரோப்பிய நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.

இப்படி தனிநாடாக இருப்பதில் உள்ள நன்மைகள் இவைகள் என்று சொல்லலாம்
ஒவ்வொரு இனமும் தமது மொழி ,இனம் என்ற அடையாளங்களை மற்றைய இனத்தவர்களின் மேலாதிக்கத்தில் இருந்து காப்பாற்றி கொள்ள முடிகிறது.
தமது பொருளாதார சமூக நலன்களையும் திட்டம் போட்டு முன்னேற்றம் செய்கிற வாய்ப்பையும் தமக்கென்று ஒரு ராணுவம் ,வெளியுறவுக் கொள்கைகள் என்பனவும் வைத்திருக்க முடிகிறது. .

ஒன்று சேர்ந்து இந்தியா என்று இருப்பதிலும் சில நன்மைகள் உள்ளன.
வர்த்தகம் ,வேலைவாய்ப்பு ,சுலபமாக ஒரு பகுதியில் இருந்து மற்றைய பகுதிக்கு பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்யக் கூடிய ஒரு நன்மை.நயன்தாராவும் நமீதாவும் தமிழ் நாட்டுக்கு வேலைவாய்ப்பு தேடி வந்துள்ள படியால் அவர்களுக்கும் நன்மை ,எங்களுக்கும் நன்மை --நான் சொல்வது குறிப்பாக நமது தமிழ்ப் பெருங்குடியைச் சேர்ந்த ஆண் மக்களுக்கு
ஒரு பெரிய நாட்டின் பகுதியாக இருக்கும்போது மக்களுக்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கிறது.ஆனால் இந்த உத்தரவாதம் நமது தமிழ் மீனவர்களுக்கு கிடைக்கவில்லை.இந்த விஷயத்தில் இந்திய நாடு தனது குடிமக்களுக்கான கடமையைச் செய்யத் தவறி விட்டது.

எதிர்காலத்தில் நாம் ஐரோப்பிய நாடுகள் மாதிரியான ஒரு நிலையை எடுத்து தனி நாடுகளாகப் பிரிந்து ,அதே சமயம் இந்திய ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கலாம் அந்த ஒன்றியம் ,ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மாதிரி பொதுவான பாஸ் போர்ட் வைத்திருக்கலாம் ,ஒரு இடத்திலருந்து இன்னொரு இடத்துக்கு வேலைக்காகவோ வர்த்தகத்துக்காகவோ போகவும் மற்றைய இடங்களின் வாழவும் தடை இல்லாமலும் இருக்கும். அத்துடன் ஐரோப்பாவில் யூரோ என்ற பொது நாணயம் இருப்பது மாதிரி இங்கும் ரூபாய் என்ற பொது நாணயம் இருக்கும்.
அத்துடன் தமக்கு தனி ராணுவம் இருந்தாலும் ,பொதுவான நேட்டோ மாதிரி ஒரு அமைப்பை இந்திய ஒன்றியத்தில் உள்ள எல்லா நாடுகளின் பாதுகாப்புக்கும் உருவாக்கலாம் .ஐரோப்பிய கோர்ட் மாதிரி அதிகாரம் மிக்க சக்தி வாய்ந்த அமைப்பை உருவாக்கி ,காவிரி ,முல்லைப்பெரியாறு மாதிரியான எல்லைத் தகராறுகளை தீர்க்கலாம் ,கட்டுப்படாத நாடுகளுக்கு நஷ்ட ஈடு கேட்டும் வர்த்தக ரீதியுலும் தண்டனை கொடுக்கலாம்.
அத்துடன் இலங்கை,மாலைதீவு நேபாளம் பூடான் போன்ற குட்டித் தென்னாசிய நாடுகளையும் இந்த ஒன்றியத்தில் இணைத்து கொள்ளலாம்
இப்படி செய்தால் தமிழர்களுக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்
தமிழ் நாடு ,தமிழ் ஈழம் என்று இரண்டு நாடுகள் கிடைக்கும்

என்ன எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்கிறீர்களா?
சொல்லமுடியாது.
எதிர்காலத்தில் இது சாத்தியம்தான்”




எப்படி இருந்துச்சின்னு சொல்லுங்க....

நன்றி

வணக்கம்

26 comments:

தீப்பெட்டி 15 May 2009 at 1:26 pm  

நல்லாத்தான் சொல்லியிருக்கிறார் அனானி..

ஆனா இது யாருடைய கனவுல நடக்கும்?

Unknown 15 May 2009 at 1:32 pm  

எல்லொரு நினைச்ச கண்டிப்பா நடக்கும்

வால்பையன் 15 May 2009 at 1:34 pm  

இதுக்காகவா இந்தியாவை பிரிக்கோனும்,

இலங்கையை மண்டையில ரெண்டு தட்டு தட்டி இந்தியாவோட இணைச்சி்ர வேண்டியது தானே!

Suresh Kumar 15 May 2009 at 2:01 pm  

வால்பையன் சொன்னது…

இதுக்காகவா இந்தியாவை பிரிக்கோனும்,

இலங்கையை மண்டையில ரெண்டு தட்டு தட்டி இந்தியாவோட இணைச்சி்ர வேண்டியது தானே! //////////

நல்ல ஐடியாவா இருக்கே .

SUBBU 15 May 2009 at 2:22 pm  

//இலங்கையை மண்டையில ரெண்டு தட்டு தட்டி இந்தியாவோட இணைச்சி்ர வேண்டியது தானே!//

இதுதான் எனக்கும் சரியா படுது !

mathan 15 May 2009 at 2:29 pm  

நல்ல ஐடியா
இதனால் தமிழ் ஈழம் ,காஷ்மீர்,வடகிழக்கு மாநிலங்களுக்கும் தனி நாடு கிடைப்பதால் அந்தப் பிரச்சினைகள் தீர்ந்து பொருளாதார மற்றைய முன்னேற்றங்களில் கவனம் செலுத்தலாம் ,அதனால் பாகிஸ்தானிடம் காஷ்மீர் காரணமாக ஏற்பட்டுள்ள பிணக்குத் தீர்ந்து நட்பு நாடாகலாம்.
அப்படியே பாகிஸ்தான் பங்களா தேஷ் நாடுகளும் விருப்பமென்றால் விண்ணப்பம் போட்டு இந்த ஒன்றியத்தில் இணைய விரும்பினால் விண்ணப்பம் செய்து இணைந்து கொள்ளலாம் .

வினோத்குமார் 15 May 2009 at 2:56 pm  

excellent post...it will happen in the future

வனம் 15 May 2009 at 3:57 pm  

வணக்கம்

என்னைப்பொருத்தவரையில் மிகச்சரியான தீர்வு.
ஒரே நாடு எனில், அந்நாட்டின் குடிமக்களுக்கு வாழ்வியல் தேவைகளை நிறைவேற்ற வேண்டும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும், இவை இரண்டுமே இங்கு இல்லை.

1. காவிரி நதி பிரிட்சணை தீர்க்கப்படாமலே இருக்கின்றது (உச்ச நீதிமன்ற தீர்புக்கு பிறகும் கூட)

2.தமிழர்கள் இன்னும் கர்நாடகாவில் பயத்தோடுதான் வாழ்கின்றார்கள்

3.தமிழக மீனவர் பிரட்சணை

4.ஒகனேக்கல் பிரட்சணை
இவை என் ஞாபகத்திர்கு வந்தவை, இவற்றை தீர்க்க மத்திய அரசு சார்பில் குறிப்பிடத்தகுந்த முயற்சிகள் எடுத்ததாக தெறியவில்லை.

என்னைப்பொருத்த வரையில் மவுனமாய் நீ கொடுப்பதை ஏற்றுக்கொள்கின்றேன் என்பது அடிமைத்தனம்தான்

நன்றி
இராஜராஜன்

Unknown 15 May 2009 at 5:10 pm  

//மவுனமாய் நீ கொடுப்பதை ஏற்றுக்கொள்கின்றேன் என்பது அடிமைத்தனம்தான்//

சரியான வார்தைகள்

கடைக்குட்டி 15 May 2009 at 6:03 pm  

கனவு மெய்ப்பட வேண்டும்

Anonymous 15 May 2009 at 6:35 pm  

Good Idea!! but now its not possible because,first Karunanithi should die,jeya too!!

Unknown 15 May 2009 at 6:36 pm  

we will expect that tooooooooooooo

Anonymous 15 May 2009 at 6:39 pm  

எது நடக்கவேண்டுமோ, அது அப்படியே நடக்கும்...

Unknown 15 May 2009 at 6:42 pm  

முயற்சிகள் இன்றி எதுவும் நடகாது.

Unknown 15 May 2009 at 6:45 pm  

இது தான் எதிர்கால இந்தியா என்பது உண்மை. இது பல இரத்தச்சிந்தல்கள் கடந்த பின்தான் நடக்கும் என்பதும் உண்மை.

Unknown 15 May 2009 at 6:48 pm  

நீங்க உங்க ஓட்டையும் போட்டிங்கனா
இன்னும் நிறைய பேரை இந்த கருத்து சென்றடையும்.
நன்றிங்க.

Anonymous 15 May 2009 at 7:34 pm  

some states in usa have issued local currency. may be tamil nadu should issue its own currency in addition to rupee.
http://www.huffingtonpost.com/2009/04/06/communities-print-own-cur_n_183497.html

Sindhu 15 May 2009 at 10:13 pm  

nice :) lets see what happens in future..

நசரேயன் 15 May 2009 at 11:45 pm  

//இலங்கையை மண்டையில ரெண்டு தட்டு தட்டி இந்தியாவோட இணைச்சி்ர வேண்டியது தானே! ////
நல்ல யோசனை

ராகவன் 15 May 2009 at 11:58 pm  

//இலங்கையை மண்டையில ரெண்டு தட்டு தட்டி இந்தியாவோட இணைச்சி்ர வேண்டியது தானே! ////

இது நச் பாயிண்ட்!

Anonymous 16 May 2009 at 7:02 am  

நாடென்பது நாடா வளர்த்தது-ஔவையார்.
இனி நீங்கள் சொன்னவைகளை திருப்பிப் போட்டுப் பாருங்கள்.

எட்வின் 16 May 2009 at 9:31 am  

அந்த புண்ணியவாளன் அனானி யாரோ... நல்ல தான் சொல்லியிருக்கிறார்.
பதிவர் வால்பையன் அவர்கள் கருத்தும் நல்ல யோசனை

கலையரசன் 16 May 2009 at 10:44 am  

வேண்டாம்ணே! ஏற்கனவே இந்த லட்சனத்தில இருக்குக..
அப்புறம், கர்நாடகாகாரன் வரவேனாம், ஆந்திராகாரன் வரவேனாமுன்னு,
அடிச்சிப்பானுங்க.. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!!

Anonymous 16 May 2009 at 10:55 am  

//இலங்கையை மண்டையில ரெண்டு தட்டு தட்டி இந்தியாவோட இணைச்சி்ர வேண்டியது தானே!//
ஒருவேளை இந்த ஏற்பாட்டுக்காகத்தான் சிறீலங்கன்கள் கைவிரல்களை கொண்டே அவனுங்க கண்களை இந்தியா குத்த வைத்து வேடிக்கை பார்த்து வருகிறதா? என்ன புரியலைங்களா? அதாங்க, மிகுந்த நாட்டுப்பற்றும் அதீத போர் குணமும் படைத்த அங்கத்திய தமிழர்களை லங்கன்களையே விட்டு சாகடிக்க‌ செய்து போருக்கு பிறகு மீதமிருக்கும் வெத்துவெட்டு ராஜப்க்சே கும்பல்களை தலையில தட்டி தீவை இந்தியாவோட சேர்த்துவிடறதுக்குதான் இப்போதைய இந்தியாவின் நாடகமோ?

பாரம்படியம் மிக்க ஈழத்து தமிழ் இனத்தின் வல்லமை, பெருமை ஆகியவை போன்ற சக்திகளை தங்கள் தீவின் நன்மைக்கு உந்துகோலாக பாவித்து பெருமை சேர்த்துக்கொள்ள தெரியாத மடையர்களான ல்ங்கன்கள் எந்நாளும் உருப்பட மாட்டான்கள். தங்களைத்தானே அழித்துக்கொள்வது என்று அவர்கள் முடிவு செய்தால் மற்றவர்கள் என்னதான் செய்யமுடியும். லங்கன்களுக்கு ஈழத்து தமிழர்கள் இருந்தாலும் பிரச்சினை, அவங்க இல்லை என்றாலும் பிரச்சினைதான். போரெல்லாம் முடியட்டும் என்று காத்திருந்து சக்திகள் இழந்து சோர்ந்து போயிருக்கும் வேளை பார்த்து சிறீலங்கா தலையில இலேசா ரெண்டு தட்டி தட்டி ... காரியத்தை கப்சிப்னு முடிச்சிட வேண்டியதுதான்.

இறைகற்பனைஇலான் 19 May 2009 at 10:08 am  

தோழர்கல்ளே, நாட்டைபிரிப்பது என்ப்து என்றால் என்ன என்று பலரும் தவறாகப்புரிந்து வைத்துள்ளார்கள். இந்தப்பகுதியை யார் ஆள்வது? எப்படி ஆள்வது [சட்ட்ம்]
என்று முடிவெடுப்பது யார் என்று முடிவு எடுக்க வேண்டும். அவ்வளவே. ம்டிவெடுங்கள்.

Anonymous 26 May 2009 at 5:04 pm  

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP