கட்டிட கலையின் அடுத்த அத்யாயம் - சுழலும் கட்டிடம் - துபாய்
Wednesday, 13 May 2009
சுழலும் கட்டிடம் - கேக்கும் போதே தலைசுத்து இல்ல நிஜமா தாங்க
துபாய்ல இப்படி ஒரு கட்டிடம் கட்டிட்டு இருக்காங்க - கண்டிப்பாக கட்டிட கலையில் இது அடுத்த அத்யாயம்தாங்க.........
இந்த கட்டிடதோட சிறப்பு என்னான்னா இதுக்கு மற்றும் இது போல ஆறு கட்டிடங்களுக்கு தேவையான மின்சாரத்தை அதுவே தயாரிச்சுக்கும். எப்படின்னா இங்க கிளிக் பன்னி இந்த விடியோவை பாருங்க ரொம்ப தெளிவா புரியும்.
மொத்தம் என்பது தளங்கள் கொண்ட இந்த கட்டிடதுல ஒவ்வொரு தளமும் வெவ்வேரு திசையில் சுத்தி கட்டிடத்தோட அழகை மணிக்கொருதரம் மாதிக்குட்டே இருக்குமாம்.
இதுல் இவங்க கழிபிட மற்றும் குடிநீர் வசதி எப்படி செய்ய போராங்கனு ஒரே மர்மமாவே இருக்கு.
இந்த கட்டிடத்துல ஒரே ஜன்னலில் இருந்து சூரிய உதயமும் பாக்கலாம் அஸ்தமனமும் பார்கலாம் வியப்பா இருக்கா கிழே இருக்குற படங்களை பாருங்க..........
இதை வடிவமைச்சது இதாலி நாட்டுகாரர். ஆனா முதல் கட்டிடம் துபாயில் தாங்க.
என்ன அழகா மணிக்கொருதடவை தோற்றத்தை மெருகேத்துக்குது பாருங்க.
முதல் கட்டிடத்துகான பணிகள் நடந்துகிட்டிருக்குறத கேள்வி பட்டேன்.
இதுல இன்னொரு ஆச்சிரியம் என்னன்னா ஒவ்வொரு தலத்துலேயும் ஒரு சின்ன பூங்க்காவும் கார் பார்கிங் வசதியும் அமைக்க போறதா சொல்றாங்க.........
கட்டிடதோட இரவு நேர அழகை பாருங்க எவ்வளவு ரம்யமா இருக்கு.......
நம்ப முடியலிங்களா நம்பாமவும் இருக்க முடியல ஏன்னா கட்டிட வேலை நடந்துட்டிருக்கு...
எப்படி இருக்குன்னு பின்னூடம் போடுங்க.
நன்றி வணக்கம்.
6 comments:
கட்டிடம் அழகா இருக்கு.. துபாயில கட்டிடம் கட்டியே வம்பா போயிடுவாங்க போல...
இவ்வளவு நடந்த பிறகும் இதை கட்டுகிறார்களா? வாங்க ஆள் இருக்கா?
வீடியோ என்னவோ நன்றாக இருக்கு ஆனால் தினமும் சுற்றிக்கொண்டு இருந்தால் அலுப்பு தட்டிவிடும் என்று நினைக்கிறேன்.
நெல்லை தமிழன் கமெண்ட் பாருங்க...
ரொம்ப மெதுவா சுத்தும் சுத்துறதே தெரியாது ஒரு நாளைக்கு அரை சுற்றுதான்
எனக்கு தலை சுத்துதுங்க
சகாதேவன்
கட்டி முடித்தால் சாதனைதான்..
ஆனால் கட்டிட பணி நிறுத்த பட்டதாக கேள்விபட்டேன்..
அந்த கட்டிடம் நிறுத்திவிட்டார்கள்!
எல்லாம் அந்த பாழாபோன ரெசசன்தான்!!
நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
www.kalakalkalai.blogspot.com
Post a Comment