இந்திய தேர்தல்

Sunday 10 May, 2009

அப்பாடா ஒரு வழியா இன்றோடு எல்லா தேர்தல் பிரசாரம் முடியுது.

எத்தனை வாக்குறுதிகள் எத்தனை உறுதிமொழிகள் எத்தனை பொய்கள் எல்லாம் ஒரு வழியா இன்றோடு (தற்காலிக) முடிவுக்கு வருதுன்னு நினைக்கும் போது கொஞ்சம் ஆறுதலா இருக்கு.

ஆனா என்ன பன்றது இன்னும் 5 நாள்ள முடுவுக்கு அப்புறம் ஆட்சி அமைக்க பேரங்களும் சண்டைகளும் காண வேண்டியிருக்கே.

ரொம்ப முக்கியமா இன்னொரு பிரச்சனை என்னன்னா எந்த கட்சிக்கும் பெருபாண்மை கிடைக்காது. இதுல கூட்டணி ஆட்சிதான். எல்லாம் முடிச்சி ஆட்சி ஆரம்பிக்கும் போது எதாவது ஒரு கட்சி கூட்டணில இருந்து கழண்டுக்குனு மறுபடியும் தேர்தல் வந்தா இப்ப இருக்குற பொருளாதர சூழ்நிலைக்கு நாம நம்மை சோமாலியாவோட தான் ஒப்பிட்டுக்கனும்.

ஒரு கட்சி பெருபாண்மையோ இல்ல ஒத்த கொள்கை கூட்டணியோ இனி இந்தியாவில் ஏற்பட வாய்பே இல்லனுதான் தோன்றுது.

ஏன்னு யோசிக்கும் போது நிரைய உண்மைகள் புரியுது.
(தவராகவும் இருக்களாம் ஆனா எனக்கு தோன்றியதை உங்ககிட்ட பகிற்ந்துகிறேன்)

01. வேற்றுமையில் ஒற்றுமை - (பெருபாண்மையான இந்தியருக்கு கிடையாது)

02. இந்திய இறையாண்மை - ? (என்றால் என்ன தெரிய வில்லை)

03. எதாவது ஒரு ஒருமைபாடு - (கண்டிபாக கிடையாது.. இனம் மொழி மதம் எவற்றிலும் கிடையாது)

04. இன்றைய கல்விமுறை - (பெரும்பாலும் வியாபாரமாகவும் சுயநலம் மிக்கதாக மாறிவிட்டது)

05. ஒழுக்கம் கலாசாரம் - (இளைய தலைமுறையினர் (mostly IT people) கேள்வி குறியாக்கி விட்டணர்)

06. ஊடகம் மற்றும் சினிமா - (ஊடகம் பெரும்பாலும் சினிமா சார்ந்து இருக்கிறது - சினிமா பெரும்பாலும் கவர்சி ம்ற்றும் ஆபாசதை சார்ந்து இருக்கிறது.)

07. அரசியல் மற்றும் சமுகம் - (வியாபாரமாகி விட்டது)

இப்படி குறைகளை சொல்லிகிட்டோ போகலாம்.

இதற்க்கு என்னதான் விடிவு கேக்றிங்களா.

உங்கள போல தாங்க நானும் தெரிஞ்சிகனுமுன்னு முழற்சிக்கிறேன் ஆன முழுமையா தெரியல

எனக்கு தெரிஞ்ச வரை சொல்ரேன் தப்புருந்தா தெரிவிங்க விட்டிருந்தா சேத்துகங்க.

01. நாம தான் முதற்காரணம் ஏன் சமுகம்ங்றதே தனிமனிதனின் கூட்டு தான் நாம ஒழுங்க இறுக்கொமுனு ஒவ்வொருத்தனும் பார்த்தா கண்டிப்பா உயர்ந்த சமுகம் உருவாகும்.

02. இளைய சமுதாயம் இப்படினாதற்க்கு காரணம் நாம் தான் ஏன்னா பெருபாண்மையான பெற்றோர்கள் தான் பிள்ளைக்ளை சுயனலவாதியா மாத்துறாங்க. (பட்டுகோட்டை யோட பாட்டு நியபகதுக்கு வருதுங்க “எந்த குழந்தையும் ந்ல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவ்வர் ஆவதும் தீயவர் ஆவதும் அவரவர் அண்னை வள்ர்பினிலே” ஆனா எப்ப இங்க அண்னைக்கு பதில் ஆயானு போட்டுக்கனும்)

03. வாழ்கைமுறையை நாமதாங்க மாத்தனும் - நிறைய நேரத்தை குடும்பத்தோட செலவழிகனும் குடுபத்தொடனா டீவி பக்குறது இல்லிங்க குடுபத்தில் உள்ள எல்லாரும் மனம் விட்டு பேசிக்கனும். தனி குடுதனம் என்றதை தகர்த்து கூட்டு குடும்பமா வாழ முயற்ச்சிக்கனும்.

04. கல்வி முறை பெரும்பாலும் தாய் மொழிகல்வியா இரூக்கனும். ஆங்கிலம்ங்கற்து மொழியே தவிர அறிவு கிடையாதுங்கற்தை உணரனும்.

05. இது போல பல இறுக்குங்க ஆனா இது எல்லாத்தையும் எப்ப எல்லாரும் கடைபிடிக்கறதுனு கேக்றிங்களா. மத்தவங்களை விடுங்க நாம முழற்ச்சிப்போம். மாடிக்குபோனமுன்னா கூட முதல் படியிலருந்து தான் ஆரம்பிக்கனும்.ஏன் அந்த முதல்படியா நாம இருக்ககூடாது.

அதனால் நான் இந்த முழ்ற்ச்சியில இற்ங்கிட்டேன். குறைஞ்ச பட்சம் அடுத்த தலைமுறையில ஒரு 10 பேராவது நல்ல சிந்தனையாளர்களா உருவாக்குவேன்னு நம்பிக்கை தெரிவிக்கிறேன்.

ஏன்னா நம்பிக்கைதாங்க மனிசனை இவ்வளவு தூரம் கொண்டுவந்திருக்கு.

ரொம்ப நன்றிங்க இவ்வளவு தூரம் பொருமையா படிசதுக்கு. மறக்காம உங்க கருத்துகளை பின்னுடமா போடுங்க.

2 comments:

சரவணன் 15 May 2009 at 9:09 am  

உங்கள் கருத்து நன்றாக இருக்கின்றது.
தாய்மொழி வழி கல்விதான் சிறந்தது.

Unknown 15 May 2009 at 9:54 am  

ரொம்ப நன்றிங்க உங்க ஒருதருக்காவது என்னோட கருத்து பிடிச்சிருக்கே.

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP